விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, வரும் செவ்வாயன்று காலை, சென்னை மெமோரியல் ஹால் அருகே, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த அனுமதி கோரி, சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் கடிதம் ஒன்று வழங்கப் பட்டிருந்த்து.
இது குறித்து, நேரில் விளக்கம் அளிக்க வேண்டுமேன்று, ஆணையாள்ரின் சார்பாக அறிவிக்கை ஒன்று அனுப்ப்ப் பட்டிருந்த்து. இந்த அறிவிக்கைக்கு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, உரிய பதில் வழங்கி, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்த்து.
இன்று காலை, சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து வந்த கடித்த்தில், புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க்க் கோரி சட்ட ரீதியாக அணுகி தீர்வு காணலாம் (அது எங்களுக்கு தெரியாதா… ?) அதைவிடுத்து மேற்படி கோரிக்கைக்காக பொது இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுவது உகந்த்து அல்ல (அப்போ கண்ணாயிரம் அடிக்கடி போகும் இடங்களில் போராட்டம் நடத்தலாமா ) எனவே மனுதார்ரது விளக்கம் ஏற்புடையதாக இல்லை. எனவே கிடைத்துள்ள ஆவணங்கள் மற்றும் தகுதியின் அடிப்படையில் ஆணை வழங்கப் படுகிறது. பொதுமக்கள் நலன் கருதியும் (எந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாதுன்னு உங்ககிட்ட சொன்னார் ?) சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதி காத்திட வேண்டியதாலும் (துவைக்காத சாக்ஸ் செக்கர்ஸ் ஹோட்டலில் காத்த மாதிரியா ?) இந்திய இறையாண்மைக்கும், பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் எவ்வித களங்கம் ஏற்படாவண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தினாலும், மனுதார்ர் 19.10.2010 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை, பூங்கா நகர், நினைவரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது என்று அக்கடித்த்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த தடையாணையை மதிக்காமல், தடையை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது.
நாளை திட்டமிட்ட படி, காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.