2016 நவம்பர் 8 ஆம் தேதி அன்று காலை முதல் சமூக வலைத்தளத்தை ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது, பிரதம மந்திரி இரவு மக்களிடையே உரையாற்ற போகிறார் என்ற செய்தி வெகுவாக பரவியது. எந்த அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மக்களிடையே உரையாற்றுவது இந்தியா போன்ற நாட்டில் ஒரு சாதாரண விஷயம் அல்ல, மேலும் 2 மாதங்களுக்கு முன் தான் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாதி முகாமின் மீது இந்தியப்படை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்திருந்தது. இது போர் அறிவிப்பாக கூட இருக்கலாம் என்று மக்கள் அச்சம் கொள்ள தொடங்கினர், வரவிருக்கும் அறிவிப்பு போருக்கு ஒத்த பொருளாதார சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தும் என்பதை யாரும் அப்போது உணரவில்லை.
சுமார் 8 மணி அளவு தனது உரையை துவங்கிய மோடி, கடந்த ஆட்சியில் ஏற்பட்ட முறைகேட்டால் ஊழல் பெரும் அளவில் பரவி விட்டதாகவும், தீவிரவாதிகள், ஆன்டி நேஷனல் 500/1000 ரூபாய் நோட்டுகளை கொண்டே பணப்பரிவர்த்தனை செய்வதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அன்று இரவு முதல் 500/1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என்று அறிவித்தார். மறுநாள் வங்கிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது, 10 நவம்பர் முதல் 30 டிசம்பர் வரை 50 நாட்களுக்குள் மக்களிடம் உள்ள பழைய 500/1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் தேச துரோகிகள் பதுக்கி வைத்த பணம் அத்தனையும் அன்று இரவுடன் வெறும் செல்லா காகிதங்கள் என்று கூறினார். இந்த நடவடிக்கைக்கான காரணமாக அவர் கூறியது 3 காரணிகள்
- கருப்பு பணம்
- தீவிரவாதம்
- கள்ளநோட்டு
அவரின் முழு பேச்சு இணைப்பு
இந்தியா ஸ்தம்பித்தது, அவர் அறிவிப்பு முடிந்த உடனே கடைகளில், மருத்துவமனைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர். லாரி ஓட்டுனர்கள், பயணிகள், பொருள் வாங்க பணத்துடன் சென்றுகொண்டிருந்த வணிகர்கள் செய்வது அறியாது திகைத்தனர், சுங்கச்சாவடிகளில் பழைய ரூபாய் நோட்டு வாங்க மறுத்து வரிசைகள் நீண்டன, அன்று இரவு வெளியூர் பயணம் செய்தவர்களுக்கு இது நன்றாக நினைவிருக்கும்.
பெரிய பணமுதலைகள் இரவோடு இரவாக நகைக்கடைக்கு பணத்துடன் சென்று 20% முதல் அதிக விலை கொடுத்து 500/1000 ரூபாயை தங்கமாக மாற்றினர், அன்று இரவு முழுவதும் நகைக்கடைகள் திறந்தே இருந்தன. நவம்பர் 7, 9 முகூர்த்த நாள் மொய் பணமாக வரும் 501, 1001 வைத்து சத்திர வாடகை, சமையல் செலவு செட்டில் செய்யலாம் என்று எண்ணியிருந்த திருமண வீட்டாருக்கு இந்த அறிவிப்பு பேரிடியாக இருந்தது.
முதலில் பணமதிப்பிழப்பிற்கு மக்களும், எதிர்கட்சிகளுமே கூட ஆதரவு தான் தெரிவித்தனர். பாபா ராம்தேவ் முதல் ரஜினி வரை, காங்கிரஸ் முதல் தெலுங்குதேசம் வரை அனைவரும் இது கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்று பாராட்டினர்
RBI கவர்னர் அல்லது நிதி அமைச்சர் அறிவிக்க வேண்டிய விஷயத்தை ஒரு பிரதமரே தன்னிச்சையாக அறிவிக்கிறார் என்றால் போதுமான செயல் திட்டம் இல்லாமலா செய்வார்? நிச்சயமாக ஏதாவது ஒரு பலன் கிட்டும் அதன் நற்பெயர் மோடிக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டே அவர் அறிவித்திருக்கிறார் என்று அனைவரும் நம்பினர்.
ஒரு குரல் மட்டும் ஆரம்பம் முதலே இதை எதிர்க்க தொடங்கியது. மிக மிக துல்லியமாக இது சாமான்ய மக்களுக்கு எதிரான போர் என்று அறிவித்தார்.
மறுநாள் அனைத்து முன்னணி செய்தித்தாளிலும் மோடியை பாராட்டி Paytm நிறுவனம் முதல் பக்கவிளம்பரம் வெளியிட்டது.
பாஜக தகவல் தொழில்நுட்ப அணி 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெட்ரோல் 35 ரூபாய் காஸ் 218 ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டு விடும் என்று பிரச்சாரம் செய்ய தொடங்கியது. இந்த ஒருநடவடிக்கை போதும் அடுத்த 2 தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் செய்து விடலாம் என்று பாஜகவினர் சந்தோஷப்பட்டனர்.
நவம்பர் 10 வங்கி துவங்கியதும் வங்கிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது, அனைவரும் பணத்தை அன்றே டெபாசிட் செய்து விடவேண்டும் என்று முண்டியடித்தனர். போதிய பணம் கிடைக்காமல் அதிருப்தி நிலவுவதை தொடர்ந்து, 4000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம் என்று இருந்த விதியை மாற்றி 4500 ஆகவும், ATM லிமிட் 2000 இல் இருந்து 2500 ஆக மாற்றம் செய்யப்பட்டது .
கருப்பு பணம் வைத்திருக்கும் முதலாளிகள் தங்களிடம் உள்ள 500/1000 ரூபாய் நோட்டை சம்பள முன் பணமாக கொடுக்கத் தொடங்கினர், ரூபாய் நோட்டுகளை வரிசையில் நின்று மாற்றித்தர ஏஜென்ட்கள் கமிஷன் பெற்று நாடு முழுவதும் கருப்புப்பணத்தை தடையின்றி வெள்ளையாக மாற்றத்தொடங்கியதை யாரும் எதிர்பார்க்க வில்லை. இதை தடுக்க உடனடியாக KYC அடையாளமாக ஆதார் அட்டை இருந்தால் தான் பணம் பெற முடியும் என்று புதிய விதி அமலுக்கு வந்தது, ஆதார் அட்டை இல்லாத எண்ணற்ற மக்கள் பணம் பெறமுடியாமல் கதறத் தொடங்கினர்.
ஒரு புறம் மக்கள் 4000 ரூபாய்க்காக வீதி வீதியாக ஏடிஎம்களை தேடி அலைந்து கொண்டிருக்கையில் சேகர் ரெட்டி போன்றோர், புதிய 2000 ரூபாய் தாள்களை கோடிக் கணக்கில் மாற்றிக் கொண்டிருந்தனர். சேகர் ரெட்டியிடம் வருமான வரித் துறை நடத்திய சோதனைகளில், 170 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதில் 34 கோடி புதிய 2000 ரூபாய் தாள்கள். சேகர் ரெட்டி மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது.
அந்த விசாரணை நடந்த பிறகுதான் மோடி அரசு எத்தகைய கையாலாகத அரசு என்ற விபரமும் வெளிவந்தது. புதிய 2000 தாள்கள் எந்த வங்கியிலிருந்து சேகர் ரெட்டிக்கு சென்றது என்பதை சிபிஐ அதிகாரிகள் விசாரித்தபோதுதான், எந்த வங்கிக்கு எந்த நோட்டுகளை அனுப்பினோம் என்ற விபரம் ரிசர்வ் வங்கியிலேயே இல்லை என்ற விபரம் தெரிய வந்தது. இணைப்பு. சேகர் ரெட்டி போதிய விபரங்கள் இல்லாத காரணத்தால் அனைத்து வழக்குகளிலும் சேகர் ரெட்டி விடுதலையாக உள்ளார். இந்த அளவுக்கு ஒரு துப்புக் கெட்ட அரசுதான் மோடி அரசு.
மக்கள் பெருமளவு கொந்தளிப்பதை உணர்ந்த மோடி தனது 96 வயது தாயை வங்கிக்கு அனுப்பி அதை பெரிதாக விளம்பரப்படுத்தி மக்களின் துயரத்தில் தாமும் பங்கெடுப்பதாக காட்டிக்கொண்டார்.
ஒரு நல்ல மகன், தாயை வங்கிக்கு அனுப்பாமல் தான்தானே சென்று மாற்றித் தர வேண்டும். மோடிக்கு இதிலும் விளம்பரம் தேடும் ஒரு அற்ப குணம் இருந்தது.
நாளுக்கு நாள் புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வந்து மக்களையும் குழப்பியது மட்டும் அல்லாமல், வங்கி அதிகாரிகளும் குழப்பத்தில் ஆழ்த்தினர் , மொத்தம் 42 நாளில் 54 முறை விதிகளை மாற்றியிருந்தனர். இணைப்பு
நவம்பர் 10 புதிய 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்பட்டது, இனி நிலைமை சீரடையும் என்று கணக்கு போட்டனரோ என்னவோ சில்லறை தட்டுப்பாடு பெருகியது. புதிய 500 ரூபாய் நோட்டின் அளவு வேறுபடுவதால் ATM மெஷினை மாற்றி அமைக்க அவகாசம் தேவைப்பட்டது, நாடு முழுவதும் சுமார் 1.8 லட்சம் ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.
இந்த குளறுபடிகளை திசை திருப்ப புதிய 2000 ரூபாய் நோட்டில் GPS சிப் பொருத்தப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் 2000 நோட்டுகளாக கருப்புப்பணத்தை பதுக்கி வைத்தால் அதை சாட்டிலைட் உதவியுடன் கண்டுபிடித்து கைப்பற்ற முடியும் என்றும் ஒரு புரளியை பாஜக IT விங் கிளப்பியது. இதை பணமதிப்பிழப்பின் மூளையாக கருதப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி ட்விட்டரில் பகிர்கிறார்
இதனிடையே பாஜக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் பணமதிப்பிழப்பு செய்வதற்கு சில வாரங்களுக்கு முன் வாங்கியதாக கேட்ச் நியூஸ் செய்தி வெளியிட்டது. டெல்லியை சேர்ந்த பாஜக MLA சஞ்சீவ் கூறுகையில், தலைமையில் இருந்து அனைவருக்கும் பணம் கொடுத்து அமித் ஷா, லால் பாபு பிரசாத் ஆகியோர் பெயரில் மனை வாங்குமாறு வற்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்ந்த மோடி நவம்பர் 13 அன்று கோவாவில் விமானநிலையம் அடிக்கல் நாட்டும் விழாவில் கண்கலங்கி நா தளும்ப பேசிய பேச்சு
“ஊழல் பணம் சம்பாதித்தவர்கள் தான் இன்று பணத்தை மாற்ற வரிசையில் நின்று கொண்டு சிரமப்படுகிறார்கள். 50 நாட்கள் அவகாசம் மட்டும் எனக்கு தாருங்கள், பணமதிப்பிழப்பின் பலனை நான் உங்களுக்கு தருகிறேன் அப்படி இல்லையென்றால் எந்த தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்”
மெல்ல மெல்ல அனைவரும் இது ஒரு அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவு என்று நம்பத்தொடங்கினர், எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் இதை உடனடியாக நிறுத்தவேண்டி வழக்கு தொடுத்தனர். மத்திய அரசு சார்பில் வாதாடிய மூத்த அரசு வழக்கறிஞர் முகுல் ரோகத்கி கூறியது. இணைப்பு
“புழக்கத்தில் இருந்த 17 லட்சம் கோடி ரூபாயில் 15 லட்சம் கோடி ரூபாய் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது, அரசாங்கத்தின் கணக்குப்படி 11 முதல் 12 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வங்கிக்கு திரும்ப வரும். டெபாசிட் செய்யப்படாத தொகை 3 முதல் 4 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணமாக கருதப்படும். அந்த தொகையை அரசாங்கம் பயன்படுத்தி அதன் கடனை அடைத்துக்கொள்ளும் ஆகையால் இந்த முடிவை மாற்றும் அவசியம் இல்லை” என்றார்
அதற்குள் கருப்பு பணம் பெருமளவில் வெள்ளையாக மாற்றப்பட்டுவிட்டது , இதை உணர்ந்து நவம்பர் 27 ஆம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி பணமதிப்பிழப்பிற்கான புது நோக்கத்தை தெரிவித்தார். அதாவது நாட்டை பணமில்லா பரிவர்த்தனை செய்வதை நோக்கி எடுத்து செல்வதே நோக்கம் என்றார், போலி பணத்தை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஏற்றுக் கொள்ளாத எவ்வளவோ கிராமங்கள் இந்தியாவில் இருக்கிறது, போதாக்குறைக்கு தமிழ்நாட்டை வர்தா புயல் தாக்கியதில் தகவல் தொடர்பு பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்த கூற்றும் ஏமாற்று வேலையே என்று உணர்ந்தவுடன், வீட்டில் முடங்கி இருக்கும் பணத்தை வங்கிக்கு கொண்டு வந்து அதன் மூலம் குறைந்த வட்டி கடன் கொடுக்கப்படும் என்று புது விளக்கத்தை தந்தார்.
டிசம்பர் 27, 2016 அன்று டெஹ்ராடூனில் உரையாற்றிய மோடி, பணமதிப்பிழப்பின் மூலம் மாவோயிஸ்ட் , தீவிரவாதிகள், போதை பொருள் கடத்துவோர் முற்றிலுமாக அழிக்கப்பட்டதன் மூலம் இந்த நடவடிக்கை வெற்றி அடைந்ததாகவே கூறுகிறார் .
இப்படி ஒவ்வொரு முறையும் எதற்காக பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது என்பதற்கான காரணத்தை மாற்றி மாற்றி கூறி வந்தார், அவர் மட்டும் அல்ல அவர் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களை தனித்தனியாக கேட்டால் ஆளுக்கு ஒரு காரணம் கூறுவார்கள். அருண் ஜெட்லீ, வரிஏய்ப்பதை தடுக்க என்பார், ரவிசங்கர் பிரசாத் விபச்சாரம் ஒழிந்துவிட்டது என்பார்.
ஒரு வழியாக வங்கிக்கு வந்த பணத்தை எண்ணிமுடித்து ரிசர்வ் வங்கி அறிக்கை சமர்ப்பித்து விட்டது அதில் கூறியுள்ள முக்கிய அம்சத்தை பார்ப்போம்
1) 99.3% பணம் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது இதன் மதிப்பு 15.31 லட்சம் கோடி. மோடியின் கூற்றுப்படி பார்த்தால் கறுப்புப்பணம் மொத்தமும் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. அதிக தொகை டெபாசிட் செய்யப்பட்டவர்களுக்கு வருமான வரி துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்று சொல்வதெல்லாம் வெறும் சமாளிப்பு தான். திருப்பதி, வேளாங்கன்னி போன்ற பணப்புழக்கம் அதிகம் உள்ள கோவில்கள் உண்டியல் பணம் கருப்பு பணம் கொண்டு மாற்றப்பட்டது, தங்கமாக, தொழிலாளர்களின் முன் பணமாக, ஏஜென்ட் மூலமாக எல்லாம் மாறியது.
2) மார்ச் 31, 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி புழக்கத்தில் உள்ள ரூபாயின் மதிப்பு 18.29 லட்சம் கோடி இது 2016ஆம் ஆண்டை விட 1.8% அதிகம். கேஷ் லெஸ் பரிவர்த்தனை என்பதும் பொய் என்று நிரூபணம் ஆனது
3) 500,1000 ரூபாய் நோட்டுகள் தான் கறுப்புப்பணமாக பதுக்கி வைக்கப்படுகிறது என்று கூறிக்கொண்டு, 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்து வைத்த அதி மேதாவி வேறு யாராக இருக்க முடியும் ? புழக்கத்தில் உள்ள 79% பணம் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
4) சிப் இருக்கும் நோட்டு, பாதுகாப்பு அம்சம் உள்ள நோட்டு என்று விளம்பரப்படுத்தப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்த ஒரு சில மாதத்திலேயே போலி நகல் எடுத்து புழக்கத்தில் விடப்பட்டது. 2016-17 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கள்ளநோட்டு 2016ஆம் ஆண்டை விட 20% அதிகம்.
5) வங்கிக்கு திரும்ப வராத தொகை வெறும் 10,700 கோடி ரூபாய் மட்டுமே, அது அனைத்தும் கருப்புப்பணமா என்பதை உறுதியாக கூறமுடியாது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம் உள்ள சொற்ப பணமாக இருக்கலாம், உரிய ஆவணம் இல்லாமல், அவகாசம் இல்லாமல் கடைசி வரை மாற்ற முடியாத ஏழைகளுடையதாக இருக்கலாம், நேபால் பூட்டான் போன்ற நாடுகளில் புழங்கும் இந்திய ரூபாய் நோட்டுகளாக கூட இருக்கலாம்.
தீவிரவாதிகள், மாவோயிஸ்ட் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது என்று வீர உரையாற்றிவிட்டு இன்று எந்த ஒரு எதிர்ப்பு கிளம்பினாலும் தேச விரோதிகள், நக்சல் அமைப்பினர் தான் காரணம் என்று கூறுவது எத்தகைய மோசடி ? எத்தகைய அயோக்கியத்தனம் ?
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் தடுப்பு சட்டமான, யுஏபிஏ மூலம் நாடு முழுவதும் அரசை எதிர்த்துப் பேசுவோரை கைதுசெய்யப்படும் நடவடிக்கை நடந்து வருகிறது கடத்தல். ஜம்மு காஷ்மீரில் கல் எறிதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் பாஜக மற்றும் அதன் நண்பர்களின் கஜானா நிரம்பி விட்டது மட்டும் தெளிவாக தெரிகிறது.
அமித்ஷா தலைவராக இருந்த அஹமதாபாத் கூட்டுறவு வங்கியில் நாட்டிலேயே அதிகமான மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் டெப்பாசிட் செய்யப்பட்ட விபரமும் தெரியவந்தது. இணைப்பு
2016-17ல் அதானி, அம்பானியின் சொத்து 124% உயர்ந்து உள்ளது. இணைப்பு, பாஜக சொத்து 81% பெருகி இருக்கிறது. இணைப்பு
50 நாட்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் உயிரை இழந்தனர், திருமணங்கள் தடை பட்டது, எண்ணற்ற சிறு குறு தொழில்கள் மூடப்பட்டது, 35% பேர் வேலை இழந்தனர், 50% வருமான இழப்பு ஏற்பட்டதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.
ஆனால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்று சொன்ன நபரோ, மேலும் பல பொய்களை தங்கு தடையின்றி அவிழ்த்து விட்டபடி இருக்கிறார்.
சுமார் 2 லட்சம் கோடி நேரடி மட்டும் மறைமுக செலவு செய்து சம்பாதித்தது வெறும் 10 ஆயிரம் கோடி. இதை தான் வெண்கல பூட்டை உடைத்து விளக்குமாரை திருடியது என்ற சொல்லாடல் உணர்த்துவது.
இப்பொழுது சொல்லுங்கள் இது நவீன இந்தியாவின் மாபெரும் ஊழல் தானே?
நாட்டை திருத்தனும்னு எடுத்த நல்ல முடிவு. சட்டத்திற்கு கப்பட்டவர்களுக்கு இனிக்கிறது. சட்டத்திற்கு புறம்பாக உள்ளவர்களுக்கு கசக்கிறது
வாய் சவடால் ஊர் சுற்றி மோடி குண்டன் தின்று விட்டு வாயு விடத்தான் லாயக்கு
டோக்லாம் மாதிரி இன்னும் எதை தொலைக்க போகிறானோ
GDP is 8.2%, we are one of better growing country, Savukku don’t spread false news. You days are not long.
😁😁
Super
Adei chennai naxalite
muzhukka muzhukka demonisation failure seythadil communist bank union played big role…congress agents played hwala money to white….