தூத்துக்குடி விமான நிலையத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் முன்னிலையில் அக்கட்சிக்கு எதிராகக் கோஷமிட்ட 28 வயது ஆய்வு மாணவி லூயிஸ் சோஃபியா செப்டம்பர் 3 அன்று கைது செய்யப்பட்டது இந்தியாவெங்கும் உள்ள பலருக்கு அதிகார துஷ்பிரயோகமாகத் தெரிந்தது. ஆனால் தூத்துக்குடிவாசிகள் பலரைப் பொறுத்தவரை, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் புதிய போராட்டம் எதுவும் தொடங்கிவிடும் சாத்தியங்களைத் தவிர்க்கும் காவல் துறையின் செயல்திட்டத்தில் மற்றுமொரு நடவடிக்கைதான். இது.
தூத்துக்குடியின் வேதாந்தா குழுமத்தில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான செய்திகள் சமூக உடகங்களில் பரவுவதைத் தவிர்க்க, ஆகஸ்ட் மாதம் முதல் தினமும் 10-15 பேராவது தெற்கு காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் சொல்கின்றனர். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இதைச் சட்ட விரோதமான நடவடிக்கை என்கிறார்கள்.
மே 22 அன்று போராட்டக்காரர்கள் மீது காவல் துறை நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாநில அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர்மாக மூடிவிட்டது. ஆலையை விரிவாக்கும் வேதாந்தாவின் திட்டத்துக்கு எதிராக பிப்ரவரி மாதம் தொடங்கிய போராட்டத்தின் உச்சக்கட்டம்தான் அந்த 13 பேரின் மரணம். ஆலையை விரிவாக்குவது தூத்துக்குடியில் மாசின் அளவை பெருமளவு உயர்த்தும் என்று உள்ளூர் மக்கள் கருதுகின்றனர். ஆனால் ஆலையை மூட மாநில அரசு உத்தரவிட்டிருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் ஆலைப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளைச் செய்துவருவதாக வேதாந்தா கூறியுள்ளது.
இந்தச் செய்தி தூத்துக்குடியில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை உசுப்பிவிட்டுள்ளது. அவர்களில் ஒருவர்தான் லூயிஸ் சோஃபியா. ஊடகங்களில் ஸ்டெர்லை பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கும் சோஃபியா, போராட்டக்காரர்கள் சுட்டு வீழ்த்திய காவல் துறை நடவடிக்கையாலும் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான வேதாந்தாவின் முயற்சிகளாலும் “உணர்ச்சிபூர்வமாக பாதிக்கப்பட்டுள்ளார்” என்று அவரது தந்தை சொல்லியிருக்கிறார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்கள் முளைவிடாமல் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக காவல் துறையினர், ஆலை குறித்த தகவல்களைப் பரப்பும் வாட்ஸ்ஆப் குழுக்களிலிருந்து வெளியேற வற்புறுத்துவதாக மனித உரிமைப் போராளிகள் குற்றம்சாட்டுகின்றனர். காவல் துறையோ, வன்முறைக்கு வித்திடும் போராட்டங்களைத் தூண்டிவிடும் பதிவுகளைப் பரப்புவர்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்கிறது.
“வன்முறையைத் தூண்டும் தகவல்களைத் பரப்புவதாக சந்தேகிக்கப்பட்டும் 10-15 பேரிடமாவது தனமும் விசாரணை நடத்துகிறோம்” என்கிறார் தூத்துக்குடி காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா. ”எங்கள் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தகவல்களின் தோற்றுவாயை அடைக்க முயல்கிறோம்” என்றார் அவர்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 300 பேர் மீது பிரிவு 107இன் கீழ் அழைப்பாணைகள் (சம்மன்கள்) தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் பின்விளைவுகளுக்கு அஞ்சி அவை அனைத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பவில்லை என்றும் பெயர் கூற விரும்பாத காவல் துறை அதிகாரிகள் சிலர் சொல்கின்றனர். பிரிவு 107 என்பது, ‘பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியவர் என்று நிர்வாக மேஜிஸ்ட்ரேட் ஒருவரைக் கருதினால் அந்த நபரை ஒரு ஆண்டுவரை பிணைக் கைதியாக வைத்திருக்க உத்தரவிட அதிகாரம் உண்டு’ என்று சொல்லும் சட்டப் பிரிவாகும்.
இதுபோன்ற விசாரணை நடவடிக்கைகளும் சம்மன்களும் சட்ட விரோதமானவை என்று வழக்கறிஞர்களும் செயற்பாட்டாளர்களும் சொல்கின்றனர். “ஒன்று கூடுவதற்கும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் எதிராக மக்களை மிரட்டவே இதுபோன்ற நடவடிக்கைகள்” என்கிறார் மக்கள் கண்காணிப்பகம் என்ற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன்.
காவல் துறை சம்மன்கள்
ஸ்டெர்லை எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் மே மாதம் நடந்த காவல் துறை துப்பாக்கிச் சூட்டின் மீது சிபிஐ விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது. இது நடந்த சில நாட்களில் காவல் துறை இந்த உத்தியைக் கையாளத் தொடங்கிவிட்டது. தினமும் தெற்கு காவல் நிலையத்துக்கு வருமாறு தொலைபேசி அழைப்புகள் மற்றும் நோட்டீஸ்கள் மூலமாக மக்கள நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்த காவல் நிலையத்தில் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளைக் கண்காணிப்பதற்கே ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகப் பெயர் வெளியிட விரும்பாத மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் சொல்கிறார்.
காவல் நிலையத்தில் தங்கள் கைபேசிகள் சோதிக்கப்பட்டு அவற்றில் ஸ்டெர்லைடுக்கு எதிரான வாட்ஸ்ஆப் தகவல்கள் இருந்தால் அவற்றின் உரிமையாளர்கள் அவர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கோரும் கேள்விப் படிவத்தை நிரப்பச் சொல்லப்படுவார்கள் என்று உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். இதில் அவர்களது கைபேசியின் மாடல், சமூக உடகங்களைக் கையாளும் திறன், ஏதாவது வாட்ஸ்ஆப் குழுவில் உறுப்பினராக இருக்கிறார்களா என்பது போன்ற தகவல்களைப் பகிர வேண்டியிருக்கும்.
இதுபோல் தெற்கு காவல் நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்றுவந்தவர்களில் ஒருவர் மட்டக்கடையைச் சேர்ந்த 34 வயது வணிகர் ஒருவர். பெயர் வெளியிட விரும்பாத அவர் சொன்னவை இவை: இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு பின் மதிய நேரத்தில் மாலை ஐந்து மணிக்கு வருமாறு காவல் துறையிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. கைபேசியையும் எடுத்துவரச் சொல்லப்பட்டிருக்கிறார்.
காவல் நிலையத்தில் அவரது கைபேசியை எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர் பதிவுகள் மற்றும் வாட்ஸ்ஆப் தகவல்களைக் காவல் துறையினர் சோதித்துப் பார்த்துள்ளனர். “நான் உறுப்பினராக இருந்த வாட்ஸ் ஆப் குழுக்களில் ஒன்றில் மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் புகைப்படமொன்றைப் பார்த்த காவல் துறை அதிகாரிகள் என்னை அந்தக் குழுவிலிருந்து வெளியேறச் சொன்னார்கள். அந்த வாட்ஸ் ஆப் குழுவுடைய நிர்வாகியின் தகவல்களையும் குழு உறுப்பினர்களின் பெயர்களையும் குறிப்பெடுத்துக்கொண்டார்கள்” என்கிறார் அந்த வணிகர்.
இந்த வணிகர் காவல் நிலையத்துக்குச் சென்ற அதே நேரத்தில் வேறு பலரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள், புகைப்படக்காரர்கள், மீனவர்கள், துறைமுகத்தில் பணியாற்றுவோர் ஆகியோரும் இருந்ததாகச் சொல்கிறார்.
பிறகு இந்த வணிகரை. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான செய்திகள் எதையும் பகிர மாட்டேன் என்று எழுத்துபூர்வ உறுதிமொழி அளிக்கச் சொல்லியிருக்கிறது காவல் துறை. “நான் சட்ட விரோதமாக எதுவும் செய்ததில்லை என்றாலும் பயமாக இருக்கிறது” என்கிறார் அவர். “என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. நான் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனவே காவல் துறையால் சந்தேகிக்கப்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்கள் எல்லாவற்றிலிருந்தும் உடனடியாக விலகிவிட்டேன்” என்று மேலும் சொல்கிறார். .
“தெற்கு காவல் நிலைய அதிகார எல்லைக்குள் வராத பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் காவல் நிலையத்துக்கு வருமாறு சம்மன் அனுப்பபடுகிறது. “வாட்ஸ் ஆப்பில் சோதனை நடத்தியதிலிருந்து நீங்கள் சட்ட விரோதமான தகவல்களைப் பகிர்ந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. எனவே நீங்கள் விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு நேரில் வர வேண்டும்” என்கிறது ஒரு சம்மன்.
சில செயற்பாட்டாளர்களுக்கும் வழக்கறிஞர்ளுக்கும்கூடக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 107இன் கீழ் சம்மன் அனுப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை என்ற வணிகர் அமைப்பைச் சேர்ந்த எஸ்.ராஜா, தனக்கு ஜூலை 15இல் தொடங்கி இதுவரை 12 சம்மன்கள் அனுப்பபட்டிருப்பதாகச் சொல்கிறார். “காவல் நிலையத்தில் கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதிலளிக்கச் சொன்னார்கள்” என்கிறார் ராஜா. இவர் பெற்ற சம்மன்களில் ஒன்று பிரிவு 107இன் கீழ் அனுப்பட்டது. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான தேவாலய நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்ல ராஜா திட்டமிட்டிருந்தார். அது தொடர்பானதே இந்த சம்மன். “நான் செப்டம்பர் 5 அன்று உயர் நீதிமன்றத்தை அணுகி இந்த சம்மனுக்குத் தடை ஆணை பெற்றேன்” என்கிறார் அவர். சோஃபியாவின் பிணை மனுவைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் இ.அதிசய குமாருக்கும் பிரிவு 107இன் கீழ் சம்மன் அனுப்பபட்டுள்ளது. ஆகஸ்ட் 15 அன்று சமூக ஜனநாயகக் கட்சி ஒருங்கிணைத்த நினைவேந்தல் கூட்டத்தில் அவர் பங்கேற்றதற்காக இந்த சம்மன் அனுப்பட்டுள்ளது.
‘காவல் துறை அதன் வேலையைத்தான் செய்கிறது’
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி, காவல் துறை அதன் வேலையைத்தான் செய்கிறது என்கிறார். மே மாதம் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பல்வேறு வீடுகள், அரசு மற்றும் தனியார் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் காயமடைந்தனர் என்கிறார் அவர். “குற்றவாளிகள் என்ற சந்தேகத்துக்குரியவர்கள் யார் என்பதற்கான காணொளி ஆதாரங்கள் இருக்கின்றன” என்கிறார் நந்துரி. ”இதன் அடிப்படையில் தான் காவல் துறை விசாரணை நடத்திவருகிறது. அனுமதி இல்லாமல் ஒரு இடத்தில்கூட மக்களுக்கு அழைப்பு விடுக்கும் தகவல்களைப் பகிர்வோரால் மீண்டும் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள்” என்றும் சொல்கிறார் அவர்.
மே 24க்குப் பிறகு தூத்துக்குடியில் எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் நந்துரி. எந்த “அசம்பாவிதமும்” நடக்காமல் தடுப்பதற்காகவும் மக்கள் அனைவரையும் நன்னடத்தையுடன் இருக்கச் செய்யவுமே பிரிவு 107இன் கீழான சம்மன்கள் அனுப்பப்டுகின்றன என்கிறார். “வாட்ஸ் ஆப் குழுக்களை சோதிக்கச் சொல்லி நான் எந்த உத்தரவும் அளிக்கவில்லை” என்கிறார்.
‘சட்ட விரோத சம்மன்கள்’
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிட்டவர்களில் ஒருவர் என்று அரசால் குற்றம்சாட்டப்படும் வழக்கறிஞர் ஜி.ஹரிராகவன், குறைந்தது ஐந்து, ஆறு பேர் கடந்த வாரத்தில் அழைத்து சட்ட ஆலோசனை கேட்டதாகச் சொல்கிறார். அவர்களுக்கு அனுப்பபட்ட சம்மன்கள் சட்டவிரோதமானவை என்கிறார். இந்தக் காவல் துறை குறிப்புகள் (சம்மன்கள்) லெட்டர்ஹெட்டில் எழுதப்படவில்லை. எந்த சட்டத்தின் கீழ் அந்தச் சம்மன் அனுப்பப்படுகிறது என்றும் குறிப்பிடப்படவில்லை” என்கிறார்.
மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி டிஃபேனும் இதை உறுதிசெய்கிறார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ தமிழகக் காவல் துறைக்கான நிலை ஆணைகளிலோ காவல் துறையினர் மக்களின் வாட்ஸ் ஆப் தகவல்களை சோதித்துப் பார்க்க எந்த அனுமதியும் இல்லை என்கிறார். “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 160இன் கீழ் காவல் துறையினர் சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கலாம், பிரிவு 91இன் கீழ் ஒரு நபரைக் குறிப்பிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்யக் கூறி சம்மன் அனுப்பலாம். அல்லது காவல் துறை ஒருவர் தெளிகுற்றம் தெளிவாகத் தெரிந்துணரக்கூடிய குற்றம் – Cognisable offence) செய்திருப்பதாக சந்தேகப்பட்டு ஆனால் அவரைக் கைது செய்வதற்கான தேவை இருக்கவில்லை என்றால் பிரிவு 41-ஏவின் கீழ் அவரை வரவழைத்து ஆவணங்களை சரிபார்க்கலாம்” என்றார்.
தூத்துக்குடியின் காவல் துறை நடவடிக்கைகள், 2011-12இல் கூடங்குள அணு உலை எதிர்ப்புப் போராட்டம் செய்த மக்களைக் காவல் துறை நடத்திய விதத்தை நினைவுபடுத்துவதாகச் சொல்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் எம்.ஏ.பிரிட்டோ. கூடங்குள அணு உலையாவது மத்திய அரசின் திட்டம். “ஆனால், தூத்துக்குடியில் மக்கள் ஒரு தனியார் பெருநிறுவனத்தின் ஆலையை எதிர்த்துத்தான் போராடிக்கொண்டிருக்கின்றனர்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். “ஒரு பெருநிறுவனத்துக்கு ஆதரவாக அரசு இப்படி ஒரு அடக்குமுறையை நிகழ்த்துவதை எந்த விதத்திலும் புரிந்துகொள்ளவே முடியவில்லை” என்கிறார் அவர்.
கடந்த ஒரு ஆண்டாக ஸ்டெர்லைட் அல்லது வேதாந்தாவுக்கு எதிராகப் பேசும் எவரும் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாகச் சொல்கிறார் அவர். “தூத்துக்குடியில் நடப்பது எங்களது அடிப்படை உரிமைகளை மீறும் செயல்” என்றார். “இது அச்ச உளவியலை உருவாக்குகிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. சர்வதேச அமைப்புகளின் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. நமது அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் எங்கே போயின?” என்று அவர் கேட்கிறார்.
எஸ்.செந்தளிர்
Dear sankar, what kind of observation is this? A girl can shout against a political leader in a public place and whether is it not the duty of the police to take action. Only ( except some exceptions) police is being probe in depth can bring out the truth. If this kind of action is allowed can anyone walk move in public. The author and yourself( sankar) justified it. If this kind of behaviour is allowed tomorrow a leader of one community can abuse other community and subsequently police can be blamed. It is Very shame on your part sankar bby publishing such kind of rubbish.
the girl should be punished under defence india act
“ஒரு பெருநிறுவனத்துக்கு ஆதரவாக அரசு இப்படி ஒரு அடக்குமுறையை நிகழ்த்துவதை எந்த விதத்திலும் புரிந்துகொள்ளவே முடியவில்லை” – Doubted with the govt. how much amount they got from the Vedhantha group for reopening the Environment killing factory???