அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு ’விளக்க’மும், அரசு மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்சை அவர்கள் பின்னிய பொய்களால் ஆன வலையில் சிக்க வைக்கிறது. 2018 ஆகஸ்ட் 8 அன்று நாங்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு சுட்டிக்காட்டியவை:
- இரண்டே நாட்களில், மோடியால் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட புதிய ஒப்பந்தம் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்குப் பாதகமானது. இது இந்திய விமானப் படையின் தேவையை அலட்சியம் செய்வதோடு, எச்ஏஎல் நிறுவனம் போர் விமானங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தைப் பெறும் வாய்ப்பை மறுத்துள்ளது. முதலில் செய்யப்பட்ட 126 விமான ஒப்பந்தத்தின்படி, இது இந்தியா மேம்பட்ட விமானங்கள் உற்பத்தியில் தற்சார்பு பெற வழி செய்திருக்கும்.
- பாதுகாப்புத் துறை கொள்முறை செயல்முறைக்காக வகுக்கப்பட்ட கட்டாய வழிமுறைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் முழுவதும் கண்மூடித்தனமாகவும் சட்ட விரோதமாகவும் மீறப்பட்டுள்ளன. ஐஏஎஃப்பின் கருத்துக்கள் மற்றும் தேவைகளை அலட்சியம் செய்து, மோடி, பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஐஏஎஃப்பை கடைசி நிமிடம் வரை, இந்த புதிய ஒப்பந்தம் தொடர்பாக தகவல் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் வைத்திருந்தார். பாதுகாப்பு கொள்முறை நடைமுறைக்கு ஏற்ப பாதுகாப்பு பணியாளர்கள் பல ஆயிரம் மணி நேர உழைப்பை செலவிட்டு உருவாக்கிய நன்கு சிந்தித்து வகுக்கப்பட்ட முதல் ஒப்பந்தத்தை அவர் தன்னிச்சையாக ரத்து செய்து, 36 விமானங்களுக்கான புதிய ஒப்பந்தத்தை தன்னிச்சையாக அறிவித்துள்ளார். இது, ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் வர்த்தக புள்ளிகளை தடுப்பதற்கான வழிமுறைகளை மீறியதோடு, இந்திய விமானப் படையின் தேவைகளை நிராகரித்து தேசிய பாதுகாப்பை சமரசத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
- நாடு இதுவரை கண்டிராத மிகப் பெரிய பாதுகாப்புத் துறை ஊழல் இது. போபர்ஸ் ஊழலைவிடப் பன்மடங்கு பெரியது. விமானத்தின் விலை, ரூ.670 கோடி என அரசு தரப்பில் 2016 நவம்பரில் தெரிவிக்கப்பட்டதிலிருந்து, இப்போது, டசாலட் ஏரோஸ்பேஸ் லிட் செய்தி அறிக்கை மற்றும் டசால்ட்டின் நிதி அறிக்கையில் தெரிய வந்துள்ள விமானம் ஒன்றின் விலை ரூ.1,660 கோடி என்பது விளக்கவே முடியாததாகும். மேலும், விமான விலை ரூ.1,000 கோடி அதிகரித்திருப்பது இந்தியாவுக்கான குறிப்பிட்ட மேம்பாடுகளுக்கானது என்பது அப்பட்டமான பொய்யாகும்.
- 2008 ரகசிய ஒப்பந்தம் காரணமாக ஒப்பந்தத்தின் தொகையைக் குறிப்பிட முடியாது எனும் அரசின் வாதம் தவறானதாகும்.
- எச்ஏஎல்லை வெளியேற்றிவிட்டு, ரிலையன்ஸ் டிபென்ஸை ஒப்பந்தத்தில் கொண்டு வந்திருப்பது ஊழலுக்கான சரியான உதாரணம். பாதுகாப்பு உற்பத்தியில் எந்த வித அனுபவமும் இல்லாத பத்து ஆண்டு நிறுவனம் இது. வேறு துறைகளில் பெரிய அளவிலான திட்டங்களைச் செயல்படுத்துவதில் மோசமான செயல்பாடு கொண்டது. பெருமளவு கடனில் தவிக்கிறது. இத்தகையதொரு நிறுவனத்திற்கு, எந்த பொதுநலனும் இல்லாமல், எச்ஏஎல்லை வெளியேற்றி, ஆயிரக்கணக்கான கோடி அளவில் நியாயமில்லாத பலன் அளிக்கப்பட உள்ளது. ஒரு ஊழல் முடிவு முதலில் எடுக்கப்பட்டு பின்னர் அது சட்டபூர்வமாகப் பார்க்கப்படுகிறது.
- ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசரிக்கப்படும் குற்ற நடவடிக்கைக்கு பிரதமரே இலக்காகியிருப்பதால், அரசு ரகசியத் தகவல் எனும் வாதத்தின் பின் மறைந்துகொள்கிறது. எனவே உண்மையை மறைப்பதும் சொல்லப்படும் பொய்களும் பிரதமரைக் காப்பாற்றுவதற்காகத்தான்.
முன் தீர்மானிக்கப்பட்ட முடிவு ஒன்றைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக, வாங்கும் எண்ணிக்கை மற்றும் கொள்முதல் முறை தொடர்பான ஐஏஎஃப் மற்றும் பிற துறைகளின் உரிமைகளைப் பிரதமர் எப்படி மீறினார் என்பதை முதலில் விவரிக்கிறோம். இப்போது செய்தி வெளியாகியிருப்பது போல, முன்னர் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்தது தவிர இந்தியா தொடர்பான குறிப்பிட்ட மேம்பாடு எதுவும் இல்லை என்பதை உணர்த்த இருக்கிறோம். . எனவே, இந்தியா தொடர்பான குறிப்பிட்ட மேம்பாடுகள் அல்லது ஆயுத மேம்பாடு, புதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது முழுப் பொய்யாகும். அதன் பிறகு, பிரதமரைக் காப்பாற்ற அரசு, ஜேட்லி அம்பானி ஆகியோர் கூறிவரும் பொய்களை கவனிக்கலாம். பின்னர், விமானத்தை வாங்குவதில் உள்ள அவசரம், விலை ஆகியவை தொடர்பான வாதங்கள் ஆதாரமில்லாதவை என உணர்த்துவோம்.
I
இரண்டு நாட்களில் பழைய ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டு புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்படுகிறது!
முதல் ஒப்பந்தம், இந்திய விமானப் படையின் தேவை மற்றும் குறிப்புகளுக்கு ஏற்ப அமைந்தது. அதன்படி பிரான்சிடமிருந்து 18 விமானங்கள் வாங்கப்படும்; தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் எஞ்சிய விமானங்கள் எச்ஏஎல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும். . 2014 மார்ச்சில் எச்ஏஎல்லுடனான பணி பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. . 2015, மார்ச் 25இல், புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு 17 நாட்களுக்கு முன், டசால்ட் சிஇஓ எரிக் டிரேப்பியர்[1], ஐஏஎஃப் மற்றும் எச்ஏஎல் தலைவர் முன், தங்கள் பங்குதாரராக எச்ஏஎல்லைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், சில நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அதாவது, புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு 17 நாட்களுக்கு முன், ஐஏஎஃப் தலைவர், எச்ஏஎல் தலைவர் மற்றும் டசால்ட் சிஇஓவுக்குப் புதிய ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரியாது. 2015, ஏப்ரல் 8இல், புதிய ஒப்பந்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன், இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர்[2] ஒப்பந்தம் செயல்முறையில் இருப்பதாகவும், எச்ஏஎல் அதில் அங்கம் வகிப்பதாகவும் தெரிவித்தார். . அதாவது புதிய ஒப்பந்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்புகூட, எச்ஏஎல் அங்கம் வகிப்பதற்கான ஒப்பந்தம் செயல்முறையில் இருந்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்திற்குப் புதிய ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரியாது. 2015, ஏப்ரல் 10 காலையில்கூட, பிரெஞ்சு அதிபர் ஹாலெண்டே பழைய 126 விமானங்கள் தொடர்பான ஒப்பந்தம் தொடர்பான விவாதம் நடைபெறுவதாகவும், விவாதம் மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்[3]. ஆக, புதிய ஒப்பந்தம் பற்றி பிரெஞ்சு அரசுக்கு கூட எந்தவித புரிதலும் இல்லை மற்றும் பழைய ஒப்பந்தத்தை ஒரேடியாக ரத்து செய்யும் மோடியின் தன்னிச்சையான முடிவால் வியப்புக்குள்ளானது. “அவசரமான எந்த அறிவிப்பும் விரும்பிய இலக்கிறகு எதிராக அமையும்” என்றுகூட அதிபர் ஹாலண்டே தெரிவித்தார்.
ஐஏஎஃப்பிற்கும் வெளியுறவுத் துறைக்கும் தெரியாதபோதும், ஏன் பிரெஞ்சு அதிபருக்குக்கூடத் தெரியாதபோதும் இந்த ஒப்பந்தத்தில் பயன்பெறும் நிறுவனத்தை, ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு 12 நாட்களுக்கு முன் நிறுவக்கூடிய தொலைநோக்குப் பார்வை அம்பானிக்கு மட்டும் இருந்தது. இந்தத் தகவல்கள் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகின்றன:
- இரண்டு நாட்களில் பழைய ஒப்பந்தம் மூடப்பட்டு, மறக்கப்பட்டது எப்படி? பழைய ஒப்பந்தம் ஐஏஎஃப்பின் தேவைக்கேற்ப அமைந்திருந்தது. அந்த ஒப்பந்தம் நவீன விமானங்கள் தயாரிப்பில் இந்தியாவைத் தற்சார்பு பெறவைத்திருக்கக் கூடியது. ஐஏஎஃப் குறிப்பிட்ட செயல்முறைத் தேவைகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளும் நிறைவேற்றித் தரக் கூடிய ஒப்பந்தம் அது. நன்கு வகுக்கப்பட்ட இத்தகைய ஒப்பந்தத்தைக் கிடப்பில் போடுவதை நியாயப்படுத்த இரண்டு நாட்களில் என்ன நடந்தது?
- பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்யப் பரிந்துரைத்தது யார்? பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு முன் ஐஏஎஃப்பின் கருத்துகள் முறையான வழியில், நிறுவப்பட்ட வழிமுறைகளுக்கு ஏற்பக் கோரப்பட்டனவா? ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போது அதில் ஐஏஎஃப் பங்கேற்கவில்லை என்பதைத் தகவல்கள் தெளிவு படுத்துகின்றன. எனவே புதிய ஒப்பந்தம் பற்றி ஐஏஎஃப் கருத்துக்கள் எப்போது கோரப்பட்டன? இரண்டு நாட்களுக்குள் ஐஏஎஃப் நன்கு ஆய்வு செய்த கருத்துக்களை வழங்கியதா?
- ஆயிரக்கணக்கான மணி நேர உழைப்பின் பயனாக ஒப்பந்தத்தைத் தானாக முன்வந்து ரத்து செய்ய முடிவு எடுக்க, ஐஏஎஃப், பாதுகாப்புஅமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகிய அமைப்புகளைவிடத் தன்னை தகுதிவாய்ந்தவர் என நினைத்தது யார்? புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்படும் முன், அதற்கானநெறிமுறைகள் பின்பற்றப்பட்டனவா?
- யார் நலனுக்காகப் பழைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது? யார் பலனடைய? எதற்குப் பிரதிபலனாக?
பிரெஞ்சு அதிபர் ஹாலண்டே, 2016 ஜனவரி 26இல், குடியரசு தின விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்து, 36 ரபேல் விமானங்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியுடன் கையெழுத்திடுவதற்கு 2 தினங்களுக்கு முன், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டெர்டெயின்மன்ட் ஹாலண்டேயின் பார்ட்னரும் நடிகையுமான ஜூலி கெயத்துடன் இணைந்து திரைப்படம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துகொண்டது என இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தற்போது வெளியாகத் துவங்கியிருக்கும் தற்செயல்களில் ஒன்று மட்டும்தான். முதல் தற்செயல் சம்பவம் என்னவெனில், பழைய ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதற்கு 12 நாட்கள் முன் தனது நிறுவனத்தை நிறுவுவதற்கான அனில் அம்பானியின் தொலைநோக்கும் புதிய ஒப்பந்தம் பற்றி ஐஏஎஃப் தலைவருக்குக்கூடத் தெரியாத நிலையில் அந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதும்தான். ஒப்பந்த விவரங்கள் தெரியாது என அரசு கூறிவரும் நிலையில் அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதை அம்பானி எப்போதும் அறிந்திருந்தார். இந்த விவகாரத்தை மேற்கொண்டு விசாரிக்கும்போது இது போன்ற பல தற்செயல்கள் வெளிவந்தாலும் வியப்பதற்கில்லை.
தொடரும்
[1] “2012இல் ரபேலுக்கான தேர்வு கடும் போட்டிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டது. ரபேல்தான் அடுத்த இயல்பான தேர்வு. அசாதரணமான பணி மற்றும் சில விவாதங்களுக்குப் பிறகு எனது திருப்தியைப் புரிந்துகொள்ளலாம். ஒரு பக்கத்தில் ஐஏஎஃப் தலைவர் போர்த்திறன் கொண்ட விமானம் தேவை என்றும் அது ரபேலாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அடுத்த இயல்பான நடவடிக்கையாக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கலாம். இன்னொரு பக்கம் எச்ஏஎல் தலைவர் பொறுப்புணர்வு மிக்க பகிர்வு என குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்தம் இறுதி செய்வது மற்றும் கையெழுத்தாவது விரைவில் நடக்கும் என 2015,மார்ச் 25 செய்தியாளர் சந்திப்பில் எரிக் டிரேப்பியர் கூறியுள்ளார். (https://youtu.be/J_xcQtPetdM)
[2] On the 8th of April, 2015, India’s Foreign Secretary, S. Jaishankar briefed journalists regarding the forthcoming visit of the Prime Minister to France. During this briefing he stated, “In terms of Rafale, my understanding is that there are discussions under way between the French company, our Ministry of Defence, the HAL which is involved in this. These are ongoing discussions. These are very technical, detailed discussions. We do not mix up leadership level visits with deep details of ongoing defence contracts. That is on a different track. A leadership visit usually looks at big picture issues even in the security field.”, Annexure 4
[3] On the morning of 10th of April, 2015, in an interaction with press, Hollande stated, “You know that it has been discussed for months, even years, so we shouldn’t cut corners. Any hasty announcement would go against the goal desired. We are not far; we [intend to] review certain modalities which had initially been fixed in a certain framework – [but] we can imagine (sic) them in another framework. I’ll discuss them with the Indian Prime Minister. But, if he’s coming here, it is also to speak about other things, [not only] about the Rafale [fighters], because we’ve got a partnership between India and France which goes far beyond the sale of that material. It is true that, if they made an announcement, in such a way that they could tell us a deadline, it would be good news both for India and France”. ( http://video.lefigaro.fr/figaro/video/vente-de-rafales-a-l-inde-nous-ne-sommes-pas-loin-assure-francois-hollande/4165227116001/ ) Last accessed on 11.09.2018