கனிமொழியின் முன் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப் பட்டு, உடனடியாக கனிமொழி மற்றும் சரத் குமாரை கைது செய்யுமாறு, டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. நீங்களும் என்னென்னவோ தில்லு முள்ளுகளைச் செய்து பார்த்தீர்கள். காவல்துறை அதிகாரி ஷகீல் அக்தர் மூலமாக சிபிஐ வழக்கறிஞருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தீர்கள். முடியவில்லை. இறுதியாக, உங்கள் கட்சியின் எம்.பி செல்வகணபதி மூலமாக, சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனிக்கு, 100 கோடி வரை கொடுக்கலாம் என முயற்சி செய்தீர்கள் முடியவில்லை. இறுதியாக இன்று இரவு உங்கள் மகள் திஹார் சிறையில் இரவு உணவு உண்ணப் போகிறார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, கனிமொழி கைது செய்யப் பட்டதை அடுத்து, உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்திற்காக அவள் சிறை சென்றால் உங்களது மனது எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது எனது மனது” என்று கூறினார்.
மனதைப் பற்றி கருணாநிதி பேசலாமா ? என்ன தகுதி இருக்கிறது கருணாநிதிக்கு ? இதே கருணாநிதிதான் ஒரு முறை, “சிலருக்கு உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறது” என்று சொன்னார். இவருக்குத் தான் பள்ளம் இருக்கிறது. இதயமே இல்லாதவர் இந்தக் கருணாநிதி என்றால் அது மிகைச் சொல் அல்ல.
சென்னை சங்கமம் எப்படி நடத்தறதுன்னு தெரியலையே…
எத்தனை பேரை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார் கருணாநிதி ? சீமான் அப்படி என்ன பேசி விட்டார் ? தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் வந்து, எமது மீனவனை சிங்களக் காடையன் சுட்டுக் கொல்கிறான், மீண்டும் இது தொடர்ந்தால், சிங்கள மாணவர்கள் இங்கே நடமாட முடியாது என்று பேசியதில் என்ன குற்றம் உள்ளது ? தொடர்ந்து ஒருவன் சுட்டுக் கொண்டே இருப்பான், கருணாநிதியைப் போல கடிதம் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா ? இதற்காக, பெருங் கொள்ளையன் போல சீமானை நூற்றுக் கணக்கான போலீசை வைத்து கைது செய்தீர்களே கருணாநிதி….. ….. சீமானின் பெற்றோர் மனது அப்போது எப்படி இருந்திருக்கும் ?
குமுதம் இதழில், இரண்டு பங்குதாரர்களுக்குள்ளே தகராறு. குரங்கு ஆப்பத்தை பங்கு வைத்த கதையாக, (உதாரணத்திற்காக குரங்கு என்று குறிப்பிடப் படுகிறது. குரங்கு இனம் வருத்தப் பட வேண்டாம்) இந்த விவகாரத்திற்குள் புகுந்து வரதராஜனை, ஒரு பொய்ப்புகாரின் அடிப்படையில் கைது செய்தார் கருணாநிதி. கைது செய்ய உத்தரவிட்டு, காவல்துறையினர் வரதராஜனை 4 மணி நேரம், காரிலேயே சென்னை நகரை சுற்றி வலம் வந்த பிறகு, ஜாமீனில் அவர் விடுவிக்கப் பட்டார். இதைத் தொடர்ந்து சட்டசபையில், கண்ணீர் வடித்த முதலை கருணாநிதி (முதலைகள் வருந்த வேண்டாம்)
“குமுதம் புகழ்பெற்ற வார இதழ்களில் ஒன்று. இந்த இதழை ஆரம்பித்து அதை நல்ல நிலைக்கு கொண்டு வந்த செல்வாக்கு மிக்க மூத்தவர்கள் மறைந்து விட்டார்கள். அவர்களின் பிரதிநிதியாக நடத்த முன்வந்த ஜவஹர் பழனியப்பன், வெளிநாட்டில் இருந்து அதை ஒருவரிடம் ஒப்படைத்து நடத்தி வந்தார். சமீபத்தில் நாடு திரும்பிய அவர் யாரிடம் ஒப்படைத்தாரோ அவரிடம் சில விளக்கங்களை கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறு குறித்து ஞானசேகரன் இங்கு குறிப்பிட்டார். அந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் துறையினர் முயன்று வரதராஜன் என்ற நண்பரை கைது செய்து இருக்கிறார்கள். பொதுவாக பத்திரிகைகளை ஒடுக்குவது, வழக்கு தொடர்வது, சட்டசபை கூண்டில் நிறுத்துவது போன்றவற்றை திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்கட்சியாக இருந்தபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. பத்திரிகைகள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதற்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகைகளுக்கு நீதி தேடி தருவதில் ஆளுங்கட்சி முனைப்பாக இருக்கிறது. வரதராஜன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வந்ததும் அவரை உடனடியாக விடுதலை செய்யும் நிலைமை இல்லை என்றாலும் அவர் சிறை புக வேண்டும் என வற்புறுத்த வேண்டியதில்லை என்று அரசு வக்கீல்களை நான் கேட்டுக் கொண்டு அவர் ரிமாண்ட் செய்யாமல் சில நிபந்தனைகளோடு வெளியே அனுப்பப்பட்டுள்ளார். வழக்கு பற்றி தெரியாது.” என்று முகாரி ராகம் படித்தார் கருணாநிதி.
வரதராஜன் கைது செய்யப் பட்ட போது, வரதராஜனின் 80 வயது தாயார் மனது என்ன பாடு பட்டிருக்கும் ?
ஜெயந்தன் என்ற ஈழத் தமிழர் ஒருவர். அவர் லண்டன் குடிமகன். சென்னையில் நண்பரின் திருமணத்திற்காக வருகிறார். வருகையில், சென்னையில் உள்ள நண்பர் ஒருவர் எனக்கு ஒரு லேப்டாப் வாங்கி வாருங்கள் என்று கேட்டதற்காக ஒரு லேப்டாப் வாங்கி வருகிறார். அவர் இந்தியா வந்த போது, அவரது மனைவி 3 மாத கர்ப்பம். கண்ணி வெடியில் சிக்கி ஒரு காலை இழந்தவர்.
திருமணத்திற்கு வந்த நபரை, கருணாநிதியின் காவல்துறையினர் சேட்டிலைட் போன் வைத்திருந்தார் என்று கைது செய்தனர். அவரோடு மேலும் 4 நபர்களை கைது செய்தனர். இவர் கைது செய்யப் பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. முதலில் செங்கல்பட்டு முகாமிலும், பிறகு பூந்தமல்லி முகாமிலும், அடைத்து வைக்கப் பட்டார். பிறகு தமிழக மக்கள் உரிமைக் கழகம் எடுத்த தொடர்ந்த நடவடிக்கைகளாலும், நீதிமன்ற நடவடிக்கைகளாலும், அவர் சிறப்பு முகாமிலிருந்து வெளி வந்து தற்போது திருவெல்லிக்கேணியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். தினமும், திருவெல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும். தற்போது அவரது குழந்தைக்கு 2 வயது. தன் குழந்தையின் முகத்தைக் கூட அவர் பார்க்கவில்லை.
இரண்டு ஆண்டுகளாக எந்த வேலையும் இல்லாமல், புதிதாக பிறந்த பிள்ளையின் முகத்தைக் கூட பார்க்காமல், திருவெல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் சும்மாவே இருப்பது என்பது என்ன நெருக்கடி என்பது உங்களுக்குத் தெரியுமா கருணாநிதி ?
இரண்டு ஆண்டுகளாக கருணாநிதியின் காவல்துறை இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. விசாரணையையும் முடிக்கவில்லை. அவரால் லண்டனுக்கும் செல்ல முடியாது.
சவுக்கின் வழக்கையே எடுத்துக் கொள்ளுங்கள். கருணாநிதியின் தலைமைச் செயலாளர், தற்போது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா மீது, ஒரு பொய் வழக்கை பதியச் சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு நெருக்கடி கொடுக்கிறார். அவர் முடியாது என்று மறுத்தும், மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுக்கிறார். கருணாநிதியின் அமைச்சரான நாடார் இனக் கொழுந்து, கனிமொழியின் உற்ற தோழி பூங்கோதை லஞ்ச வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்றுவதற்காக, சட்டத்தை வளையுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு நெருக்கடி கொடுக்கிறார். இந்த உரையாடல்களை வெளியிட்டால் என்ன தவறு ? நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா ? இது போன்ற உரையாடல்கள் வெளியானதால் தானே, உங்கள் குடும்பத்தின் பதவி ஆசையும், பணம் மற்றும் அதிகாரி வெறியும் நாட்டு மக்களுக்குத் தெரிய வந்தது. இல்லையென்றால் நல்லவன் வேஷம் அல்லவா போட்டுக் கொண்டு திரிந்திருப்பீர்கள் ?
மேலும், அந்த உரையாடலை வெளியிட்டது கூட இவன்தான் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாமலேயே, திமுகவின் அல்லக்கையாக இருந்த சண்முகம் என்ற நீதிபதி கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலும், ஜாபர் சேட்டின் ஜால்ராவாக இருந்த, கபில் குமார் சரத்கர் சிந்துராவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலும் கைது செய்ய உத்தரவிட்டீர்களே கருணாநிதி …. !!!
இன்று உங்கள் மகள் கனிமொழியை டெல்லி போலீசார் கவுரவமாகவே நடத்துவதை தொலைக்காட்சியில் காண முடிகிறது. கைது என்று முடிவு செய்தாலும், எதற்காக சவுக்கின் தாய் முன்பாக போலீசார் அடிக்க வேண்டும் ? அரசு ஊழியராக 18 ஆண்டுகள் கவுரவமாக பணியாற்றிய ஒரு மகனை காவல்துறையினர் தன் கண் முன்பாக அடிப்பதைக் கண்ட அந்த தாயின் மனது என்ன பாடு பட்டிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா கருணாநிதி ? அன்று பலவீனமான சவுக்கின் தாயின் உடல்நிலை இன்று வரை சரியாகவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா கருணாநிதி ?
இதையெல்லாம் விட்டு விடுங்கள். இந்தப் படங்களைப் பாருங்கள் கருணாநிதி.
இதயம் உறையவில்லை ? இதயம் இருப்பவர்களுக்கு உறையும். இதயத்தில் ஈரம் இருப்பவர்களுக்கு உறையும். உங்களுக்கு உறையாது.
இந்தப் படங்களில் உள்ள பெண்களும் குழந்தைகளும் என்ன பாவம் செய்தார்கள் கருணாநிதி ? 214 கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்று டிவி சேனல் தொடங்கினார்களா ? சென்னை சங்கமம் என்ற பெயரில் ஸ்பெக்ட்ரம் நிறுவனங்களில் இருந்து லஞ்சம் வாங்கினார்களா ? டாடா நிறுவனத்தை மிரட்டி, வோல்டாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடத்தை லஞ்சமாக வாங்கினார்களா ? மக்கள் சொத்தைக் கொள்ளையடித்தார்களா ? இவர்கள் குற்றுயிரும், குலை உயிருமாக செத்துக் கொண்டிருந்த போது, அவர்களுக்கு மருந்து கடத்தியவர்களைக் கூட, கைது செய்து இன்று வரை சிறையில் வைத்திருக்கிறீர்களே கருணாநிதி ? உங்களுக்கு மனது இருக்கிறதா என்ன ? நீங்கள் ஒழுங்காக நடவடிக்கை எடுத்திருந்தால், எதற்காக முத்துக்குமார் தீக்குளிக்கப் போகிறான் ? அவனது தாயின் மனது என்ன பாடு பட்டிருக்கும் ? போராட்டத்தின் வீச்சைக் குறைக்க, கடற்கரையில் உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் ஆடினீர்களே கருணாநிதி ? உங்களுக்கா இதயம் இருக்கிறது ?
நம் மண்ணைச் சேர்ந்த மீனவன் தினந்தோறும் சுட்டுக் கொல்லப் பட்ட போது, அவனுக்கும் மனைவி, பெற்றோர்கள் இருந்திருப்பார்கள் தானே….. ? அவர்கள் மனது என்ன பாடு பட்டிருக்கும் கருணாநிதி ?
உயிர்களை இழந்த மக்கள் கதறும் போது, பாராட்டு விழாவில் கலந்து கொண்டீர்களே கருணாநிதி…. நீங்கள் இதயத்தைப் பற்றிப் பேசலாமா ? உங்களுக்கு இந்தத் துன்பம் போதாது. உங்கள் மனைவி தயாளுவும், துணைவி ராசாத்தியும் கூட, திஹாரில் அடைக்கப் பட வேண்டும். ஈழத்தில் அனாதையாக சாலையில் தமிழ்ப் பிணங்கள் கிடந்தது போல, நீங்கள் தள்ளுவண்டியைத் தள்ள ஆள் இல்லாமல் அனாதையாக இருக்க வேண்டும்……. இது ஈழத் தமிழன் மட்டுமல்ல…. அத்தனை தமிழனின் விருப்பம்.