ரபேல் விமான பேரம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்து யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதியிருக்கும் கட்டுரையின் இரண்டாம் பகுதி இது.
II
படுகொலை செய்யப்பட்ட பாதுகாப்புக் கொள்முதல் நெறிமுறை
2018, ஆகஸ்ட் 28 தேதியிட்ட அறிக்கையில் பேஸ்புக்கில், அருண் ஜேட்லி, “2007இல் எல் 1 கோரிக்கையில் டசால்ட்டால் வழங்கப்பட்டதைவிடச் சிறந்த அம்சங்களுடன் 36 ரபேல் விமானங்களைக் கொள்முதல் செய்ய 2015, ஆகஸ்ட் 10 அன்று இந்தியா முடிவு செய்துள்ளது என்பது, இந்திய அரசு மற்றும் பிரெஞ்சு அரசு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 2015, மே 13 அன்று இது டிஏசியால் ஏற்கப்பட்டு, விரிவான வழிமுறைகளுக்குப் பிறகு 2016, செப்டம்பர் 23இல் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது” என்கிறார். . பாதுகாப்புக் கொள்முதல் குழு, 2015 மே 13இல்தான் தனது ஒப்புதலை வழங்கியது என்பது ஜேட்லி அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. அதாவது, பிரதமர் புதிய ஒப்பந்தத்தை அறிவித்த ஒரு மாதத்திற்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டது. நெறிமுறைகளின்படி, டிஏசி ஒப்புதல் கட்டாயமானதாகும். பறக்கும் நிலையில் 36 விமானங்களை வாங்க பிரதமர் அரசியல்ரீதியில் முடிவு எடுத்ததாக அரசு உணர்த்துகிறது. பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறையின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை அவர் செய்திருக்கிறார். இது முற்றிலும் பொய்யானது. இத்தகைய அதிகாரம் அவருக்கு இல்லை.
இதற்கு மாறாக, நன்கு வகுக்கப்பட்ட பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறை, இந்தியாவை தொடர்ந்து உலுக்கிய பாதுகாப்பு ஊழல்களைத் தடுக்கும் வகையில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த அதிகாரத்தை வழங்கவில்லை. வேறு விதமான பலன்கள் மற்றும் சட்ட விரோதப் பலன்களுக்காக, ஆயுதப் படைகளின் தேவைகள் மற்றும் குறிப்புகளை அலட்சியம் செய்து அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் கூட்டணி தங்கள் முடிவைத் திணிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த நடைமுறையின் நோக்கம் அமைந்துள்ளது. பிரதமரும் அவரது அரசும் இந்த நடைமுறையைத் தலைகீழாக மாற்றிவிட்டது. நாம் உணர்த்த இருக்கும் வகையில், அரசு அதிகாரத்தின் கீழ் அரசியல் முடிவு என்பது, இந்திய விமானப் படை,. பாதுகாப்பு அமைச்சகம், நிதி அமைச்சகம், டி.ஆர்.டி.ஓ. மற்றும் பிற அமைப்புகளின் பரிந்துரைகள் மற்றும் டிஏசி ஒப்புதலுக்குப் பிறகே மேற்கொள்ள முடியும். இந்த விஷயத்தில் பரிந்துரைகள் செய்யப்படும் முன், அனுமதி வழங்கப்படும் முன், முடிவு எடுக்கப்பட்டது. அரசியல் முடிவு மேற்கொள்ளப்பட்டு, முன்னர் மேற்கொள்ளப்பட்டதாக உணர்த்தப்பட்டு, டிஏசியின் பின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் மொத்தப் புனிதத்தன்மையும் அழிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு 3 நாள் கழித்து அபோதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் வெளியிட்ட அறிக்கையிலிருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலற்ற தன்மையைப் புரிந்துகொள்ளலாம். “மோடி முடிவெடுத்தார். நான் அதை ஆதரித்தேன்” என்று அவர் கூறினார்.”[1]. பிரச்சினை என்னவெனில் அவர் வெளிப்படுத்திய அதிகாரத்தைப் பயன்படுத்தும் உரிமை மோடிக்கு இல்லை என்பதுதான். பல்வேறு அமைப்புகளின் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் உரிமை அவருக்கு இல்லை என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
III
மோடி செய்த பெரும்பிழைகள்
எண்ணிக்கை தொடர்பாக: பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறைகளின்படி (டிபிபி) அனைத்துப் பெரிய கொள்முதல்களும், கொள்முதல் செய்யப்படும் சாதனங்கள், அவற்றுக்கான குறிப்புகள், மிகவும் முக்கியமாக எண்ணிக்கை அனைத்தும் தொடர்புடைய சேவைகள் தலைமை அமைப்பால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும். ரபேல் விவகாரத்தில் இந்த அமைப்பு ஐஏஎஃப் ஆகும். எத்தனை விமானங்கள் வாங்க வேண்டும், அவற்றின் குறிப்புகள் என்ன என்பதை ஐஏஎஃப் மட்டுமே தீர்மானிக்க முடியும். தேவையான எண்ணிக்கை மற்றும் குறிப்புகள் தொடர்பான கோரிக்கையை ஐஏஎஃப் மட்டுமே முன்னெடுக்க முடியும். பிரதமர், என்எஸ்ஏ, ஐஏஎஃப் தலைவர்,
பாதுகாப்பிற்கான கேபினட் குழு, மற்றும் டி.ஏசிகூட எந்தப் புதிய ஒப்பந்தத்தையும் முன்னெடுக்க முடியாது. இதற்கான அதிகாரம், சேவைகள் தலைமையகத்திற்கு மட்டுமே உண்டு. கடந்த காலங்களில் நாட்டை உலுக்கிய ஊழல்களைத் தடுக்கவே இந்த அதிகாரம் இந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. 126 விமானங்கள் எப்படி திடீரென 38 விமானங்களாகக் குறைந்தன என்றோ, தொழில்நுட்பத்தைப் பெற்று இந்தியாவில் விமானங்களைத் தயாரிக்கும் முக்கிய நோக்கம் ஓரிரவில் கிடப்பில் போடப்பட்டது எப்படி என்றோ விளக்க முடியாததால். அரசு இதைப் புதிய ஒப்பந்தம் என்றது. எனில், முன்னெடுப்புக் கோரிக்கைச் சேவைகள் தலைமை நிலையத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும். “அனைத்து மூலதனக் கொள்முதல்களும் சேவைகள் தரத் தேவைகளுக்கு ஏற்பவே செய்யப்பட வேண்டும்” என டிபிபி குறிப்பிடுகிறது. சாதனங்களின் குறிப்புகள் மற்றும் எண்ணிக்கை சேவைகளின் தரம் சார்ந்த தேவைகளில்தான் (எஸ்.கியூ.ஆர்) குறிப்பிடப்படுகின்றன.
பல அமைப்புகள் மற்றும் வல்லுனர்களுடனான ஆலோசனை மூலம் எஸ்கியூஆர் தயார் செய்யப்படுவதைப் புரிந்துகொள்ளலாம். (பார்க்க அடிக் குறிப்பு 1). எனவே, இரண்டு நாட்களில், ஐஏப்ஃபிற்கு 36 விமானங்கள் வாங்கப் பிரதமர் தீர்மானித்தபோது, அவருக்கு அதற்கான அதிகாரம் இல்லை. எண்ணிக்கை தொடர்பான அதிகாரம், அவரது அல்லது அவரின் என்எஸ்ஏ அல்லது அவரது குழுவின் அதிகாரம் அல்ல.
வகைப்படுத்தல் தொடர்பாக: எஸ்கியூஆர் தயார் செய்யப்பட்ட பிறகு ஒரு வகைப்படுத்தல் குழு, எந்த வகை பொருத்தமான வகையின் கீழ் கொள்முதலை மேற்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கும்: அதாவது எஸ்கியூஆரில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு ஏற்ப சாதனங்கள், மேக் இன் இந்தியாவின் கீழா அல்லது இந்திய வெண்டரிடமிருந்து வாங்குவதா அல்லது குளோபல் வெண்டரிடமிருந்து வாங்கிப் பின்னர் தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் மேக் இன் இந்தியா அல்லது மிகவும் குறைவாக விரும்பபடும். அதாவது, எல்லாவற்றையும் குளோபல் வெண்டரிடமிருந்து வாங்குவது, எது எதற்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பரவலான ஆலோசனைக்குப் பிறகு குழு இதைத் தீர்மானிக்க வேண்டும். மேலும், மிகவும் விரும்பப்படும் வாய்ப்பு எனில், வகைப்படுத்தல் குழு முன்னுரிமை வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டதற்கான விரிவான காரணங்களை அளிக்க வேண்டும்.
பொருத்தமான பிரிவைப் பரிந்துரைக்கும் அதிகாரம், உரிமை கொண்டதாக இந்த குழு விளங்குகிறது (பார்க்க அடிக் குறிப்பு 2).
பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் அல்லது என்எஸ்ஏ அல்லது ஐஏஎஃப் தலைவர், இவ்வளவு ஏன் சிசிஎஸ்ஸுக்குக்கூட மேற்கொள்ள வேண்டிய பிரிவு குறித்துத் தீர்மானிக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது. எனவே, இரண்டு நாள் கால அவகாசத்தில் பிரதமர், தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் கீழ் வாங்கி அதன் பிறகு எச்ஏஎல் மூலம் இந்தியாவில் தயாரிக்கும் பிரிவைக் கைவிடத் தீர்மானித்தபோது, அதற்கான அதிகாரம் இல்லாமலே செய்திருக்கிறார். மிகவும் குறைவாக விரும்பப்படும் பிரிவை ஐஏஎஃப் ஒப்புக்கொள்ளச்செய்யும் அவரது தன்னிச்சையான முடிவு அதிகாரம் இல்லாதது. அவர் பயன்படுத்திய வகைப்படுத்தல் தொடர்பான அதிகாரம் அவரிடம் இல்லாதது.
அடிக் குறிப்பு 1
ஷரத்து 13, 14, & 17:அனைத்து மூலதனக் கொள்முதல்களும் சேவைகளின் தரம்சார்ந்த தேவைகளுக்கு (எஸ்.கியூ.ஆர்.) ஏற்பவே அமைய வேண்டும். சேவைகள் தலைமை நிலையத்தில் உள்ள பயனர் இயக்குனரகத்தால் இது வகுக்கப்பட வேண்டும். வரைவு எஸ்கியூஆரானது, எச்.கியூ ஐடிஎஸ், டிஆர்.டிஓ, டிடிபி, டிஜிகியூஏ, டிஜிஏ கியூஏ ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். எஸ்கியூஆர்களை அங்கீகரிக்க இந்த அமைப்புகள் அனைத்தும் பணியாளர் சாதனக் கொள்கைக் குழுவின் (எஸ்.இ.பி.சி) பிரந்திநித்துவம் பெற்றிருக்க வேண்டும்.
எஸ்கியூஆருக்கு ஒப்புதல் அளிக்கும் முன், எஸ்இபிசி இது பல வெண்டார் சூழலில் முடிய வேண்டும் என அலச வேண்டும். ஒரே வெண்டார் உருவாகும் சூழல் இருந்தால் இத்தகைய எஸ்கியூஆருக்கான காரணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இது போன்ற நிகழ்வுகள், ஏஓஎன் கோரப்பட்டு, டிஏசி அல்லது டிபிபி அனுமதி அளிக்கும்போது, சேவைகள் மூலதனக் கொள்முதல் திட்ட உயர் மட்டக் குழுவில் விவாதிக்கப்படும்.
திட்டத்திற்கான ஏஓஎன் (தேவைக்கான ஒப்புதல்) கோரும் முன் எஸ்கியூஆர் இறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இதன் நகல், தொடர்புடைய தலைமை நிலைய அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டு, ஏஓஎன் கோரிக்கையுடன் வழங்கப்பட வேண்டும். அதன் பிறகு எஸ்கியூஆர் மாற்றம் அனுமதிக்கப்பட மாட்டாது.
அடிக் குறிப்பு 2
ஷரத்து 18, 20: ஏஓ. எண்ணைக் கோர, எஸ்எச்கியூ (சர்வீஸ் ஹெட் குவார்டர்ஸ்) கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையில், வழக்கிற்கான அறிக்கையை (எஸ்ஓசி) தயார் செய்ய வேண்டும். இதன் நான்கு நகல்கள் டிடிபி, டிஆர்டிஓ, பாதுகாப்பு அமைச்சக\ம் (நிதி), மற்றும் நிர்வாகப் பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேவைப்படும் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுத் திட்டத்தின் அடிப்படையில் பகுதி விவரங்கள், அடுத்த 2 ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்பட உள்ள எண்ணிக்கையை எஸ்ஓசி கொண்டிருக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதிப் பிரிவுடன் கலந்தாலோசித்து எண்ணிக்கை தொடர்பான சரிபார்த்தலை நிர்வாகப் பிரிவு மேற்கொள்ளும். சரிபார்க்கப்பட்ட எண்ணிக்கை, டிஓடியால் எஸ்எச்கியூவிற்கு அனுப்பி வைக்கப்படும். பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதிப் பிரிவு தனது இறுதிக் கருத்துக்களைத் தெரிவிக்கும்.
அதன் பிறகு, எஸ்ஓசி துறைகளுக்கு இடைப்பட்ட தன்மையை ஆய்வு செய்வதற்காக எஸ்எச்கியூ ஐடிஎஸ்ஸுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு இது வகைப்படுத்தல் குழுவின் பார்வைக்கு வைக்கப்படும். உரிய பரிசீலனைக்குப் பிறகு வகைப்படுத்தல் குழு, ரூ. 300 கோடிக்கு மேலானவற்றை டிஏசியின் இறுதி அனுமதிக்கு அனுப்பி வைக்கும்.
கொள்முதல் வழக்குகளை ஆய்வு செய்யும்போது, வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்து பெறுவது, நாட்டில் உற்பத்தி செய்வதற்கான நேரம், தேவையின் முக்கியத்துவம், அவசரத்தன்மை ஆகியவை வகைப்படுத்தலைத் தீர்மானிக்கும் முன் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும். இதற்கேற்ப வகைப்படுத்தல் குழு, டிபிபியின் கீழ் அனைத்து மூலதனக் கொள்முதல்களைப் பரிசீலிக்கும்போது, கீழ்கண்ட வகைப்படுத்தல் வரிசையை, அதே முன்னுரிமை வரிசையில் பின்பற்றும்.
(1) வாங்குவது (இந்தியா) (2) வாங்குவது- தயாரிப்பு (இந்தியா) (3) தயாரிப்பு (இந்தியா) (4) வாங்குவது – தயாரிப்பு (5) வாங்குவது (உலகம்l).
(தொடரும்)