ரபேல் விமான பேரம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்து யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதியிருக்கும் கட்டுரையின் இறுதிப் பகுதி இது.
VI
விலை தொடர்பாகத் தொடரும் பொய்கள்
2008 ரகசிய ஒப்பந்தம் காரணமாக விமானத்தின் விலையைத் தெரிவிக்க முடியாது என்பது முதல் பொய். 2016 நவம்பரில், மக்களவையில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சரே விமானத்தின் விலை ரூ.670 கோடி எனத் தெரிவித்திருப்பது பற்றி அரசிடமிருந்து பதில் இல்லை.
“இல்லை, இல்லை அந்த விலை என்பது இந்தியாவுக்கான பிரத்யேகக் குறிப்புகள் உள்ளடக்கியது அல்ல” என்பது அடுத்த பொய்யாகும். 2015 ஏப்ரல் 1 அன்று வெளியான கூட்டறிக்கையில் “விமானங்கள் மற்றும் துணை அமைப்புகள், இந்திய விமானப் படையால் தெரிவிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட அதே குறிப்புகளுடன் வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதற்கும் அரசிடமிருந்து பதில் இல்லை.
இந்தியா தொடர்பான மேம்பாடுகள் இருக்கின்றனவா என்பதை அறிய பாகங்கள் தொடர்பான தகவல்களைக் கோரும்போது, அரசு 2008இன் ரகசிய ஒப்பந்தத்தின் பின் ஒளிந்துகொள்கிறது. ரபேல் விமானம் அணு ஆயுதத் தன்மை கொண்டது எனக் கூறப்படுவதால் இந்த விஷயம் மிகவும் ரகசியமானது என்றும் பாகங்களின் விலையை வெளியிட முடியாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா, பிரான்ஸ் நாடுகளிடையிலான 2008 ரகசிய ஒப்பந்தம் என்று சொல்லப்படுவதை மீறி, 2012இல் பாதுகாப்பு அமைச்சகமே, பாகங்கள் அம்சம், அணு ஆயுத அம்சம் உள்ளிட்ட விலை தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டும்போது அரசு மவுனம் சாதிக்கிறது.
பிரெஞ்சு மிராஜ் விமானங்களும் டசால்ட்டால் உற்பத்தி செய்யப்படுகின்றன. “மிராஜ் 20000 விமானங்களை மேம்படுத்துவதற்கான செலவு 1470 மில்லியன் யூரோவாகும். MBDA, பிரான்சிடமிருந்து ஏவுகணை வாங்கும் செலவு 958,980,822.44 யூரோ எனப் பாதுகாப்பு அமைச்சகம்” தெரிவிக்கிறது. நம்முடைய அணு ஆயுதத் திட்டத்தில் தரையிலிருந்து வானுக்குச் செல்லும் பணியை மிராஜ் பூர்த்திசெய்கிறது. 2008 ரகசிய ஒப்பந்தத்தை மீறி, 2012இல் எம்ஐசிஏ ஏவுகணை விலை உள்ளிட்ட, மிராஜ் மேம்பாட்டிற்கான செலவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது எனில், ரபேல் விலை விவரங்களைப் பகிர்ந்துகொள்ள விடாமல் தடுப்பது எது? இதற்கு அரசிடம் பதில் இல்லை.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சகம் வெளியிட்ட விலை விவரம் அடிப்படை விமானத்திற்கானது, விமானத்தின் ஆயுதமாக்கலுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது அடுத்த பொய். முன்னரே விரிவாக விளக்கியது போல, பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறையின் 3ஆவது ஷரத்து, “அனைத்து மூலதனக் கொள்முதல்கள், (மருத்துவ உபகரணம் நீங்கலாக)” இந்தப் பிரிவின் கீழ் செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. 2015 ஏப்ரல் 13இல் ஏஓஎன் (தேவைக்கான ஒப்புதல்) வழங்கப்பட்டது என ஜேட்லி குறிப்பிட்டார். அதன் பிறகு புதிதாக எந்த ஏஓஎன்னும் வழங்கப்படவில்லை. அந்த ஏஓஎன்தான், ஆயுதங்கள் உள்ளிட்ட குறிப்புகளுக்கான கொள்முதல் பற்றி வரையறை செய்கிறது. அதன் பிறகு நவம்பரில், பாதுகாப்பு இணை அமைச்சர், “பிரெஞ்சுக் குடியரசுடனான அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம், தேவையான கருவிகள், சேவைகள் மற்றும் ஆயுதங்களுடன் 36 விமானங்களை வாங்குவதற்கானது. இது 23.09.2016 அன்று கையெழுத்தானது . ஒரு ரபேல் விமானத்தின் விலை ரூ. 670 கோடி. இவை 2022 ஏப்ரலில் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். 2015, மே 13க்குப் பிறகு எந்த மேம்பாடு அல்லது ஆயுதங்களுக்கான எந்த புதிய ஏஓஎன்னும் இல்லை.
2016 நவம்பருக்குப் பிறகு வெளியிட்ட தங்கள் செய்திக் குறிப்புகளில் ரிலையன்ஸ் டிபன்ஸ் மற்றும் டசால்ட் உண்மையான விலையைக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு இந்த ஊழலை மூடி மறைக்கப் பார்க்கிறது. ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும், இந்த வாதங்கள் அனைத்தும், விமானம் ஒன்றுக்கான விலை ரூ.670 கோடியிலிருந்து ரூ.1660 கோடியாக உயர்த்தப்பட்ட ஊழலை நியாயப்படுத்துவதற்காகப் பின்னர் யோசித்துச் சொல்லப்படுபவையாகும்.
ஜேட்லி இன்னொரு கட்டுக்கதையையும் கூறியிருக்கிறார். “2007இல் எல் 1 டெண்டரில் தெரிவிக்கப்பட்ட விமானம் ஒன்றின் விலையை ராகுல் காந்தி அறிவாரா? அதில் விலை அதிகரிப்பு ஷரத்து இருப்பது தெரியுமா? எனவே 2015இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி விலை ஒப்பந்தம் செய்தபோது அது உயர்ந்திருக்கும் அல்லவா? ஒவ்வொரு விமானமும் வழங்கப்படும் வரை விலை உயர்ந்திருக்கும் அல்லவா? இந்தக் காலத்தில் ரூபாய் மற்றும் யூரோ இடையிலான நாணயப் பரிமாற்ற விகிதத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.
2015 ஏப்ரல் 13 அன்று, அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், பராமரிப்பு, ஆயுதங்கள் உள்பட 126 விமானங்களுக்கான மொத்தச் செலவு ரூ.90,000 கோடிக்கும் குறைவு எனக் கூறியதை ஜேட்லி அறிந்திருக்க வேண்டும். இதன்படி ஒரு விமானத்தின் விலை ரூ.715 கோடியாகிறது. மேலும், விலை அதிகரிப்புப் பிரிவு ஐரோப்பாவில் நிலவும் பணவீக்கம் தொடர்பானது. 2015 ஏப்ரல் 15 அன்று மனோகர் பரிக்கர் ஒரு விமானத்தின் விலை ரூ.715 கோடி (அனைத்து வரிகளும் சேர்த்து) என்றார். 2016, செப்டம்பர் 23 அன்று ஐஜிஏ புதிய ஒப்பந்தம் செய்யும்போது ரூ.1,660 கோடியாக உயர்ந்தது. எந்த வகையான பணவீக்க விகிதம் இதை இவ்வாறு உயர்த்தியது?
மேலும், 2015, பிப்ரவர் 19இல், எரிக் டிரேப்பியர், “விலை விவரம் தெளிவாக உள்ளது. குறைந்த டெண்டர் அளவு தெரிவித்த நாள் முதல் எங்கள் விலை அப்படியே இருக்கிறது. எனவே அதில் மாற்றம் இல்லை” எனக் கூறியதாக பிடிஐ தெரிவிக்கிறது. “ஆர்எஃப்பி தொடர்பாக எல்லாவற்றுக்கும் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறோம். இந்த பதிலே எல் 1ஆக ரபேலைத் தேர்வு செய்ய வைத்தது. ஆர்எஃப்பி தொடர்பாக இதே நிலையைத் தொடர உறுதியாக உள்ளோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
VII
மாபெரும் சதி
முழுவதும் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், அரசு ராணுவ வீரர்கள் மீது பழிபோடுகிறது. ரபேல் எத்தனை அழகான விமானம் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாம் ஒப்புக்கொள்கிறோம். நம்முடைய எதிர்ப்பு என்னவெனில், மோடி ஐஏஎஃப்பின் தேவைகளைப் புறக்கணித்து, 126 விமானங்கள் எண்ணிக்கையை 36 ஆகக் குறைத்து, இந்த ஒப்பந்தத்தின் மேக் இன் இந்தியா பிரிவைச் செயலற்றதாக்கினார் என்பதுதான். அப்படி ஆக்கியிருக்காவிட்டால் தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் எச்ஏஎல் இந்த அழகான ரபேல் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கத் துவங்கியிருக்கும்.
பழைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டபோது அதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள் இரண்டு:
(1) 126 விமானங்களை தேசத்தால் வாங்க முடியாது
(2) 36 விமானங்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.
அவசரம் தொடர்பான வாதம் பொய் என நிரூபணமாகியுள்ளது. 216 விமானங்களை வாங்கும் சாத்தியம் தொடர்பான வாதத்தைப் பொறுத்தவரை, இரண்டு ஒப்பந்தங்களிலும் உள்ள செலவு அம்சங்களைப் பார்க்கும்போது ஒவ்வொன்றும் அளிக்கும் அம்சங்கள் தெளிவாக தெரிகின்றன. முந்தைய ஒப்பந்தத்தின் கீழ், பறக்கும் நிலையில் 18 விமானங்கள் கிடைத்திருக்கும். எஞ்சிய 108 விமானங்கள் எச்ஏஎல்லால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்.தொழில்நுட்ப்ப் பரிமாற்றம் இருந்திருக்கும் என்பதால் ரபேல் விமானங்களைத் தயாரித்துப் பராமரிப்பதில் இந்தியா தற்சார்பு பெற்றிருக்கும். இந்தியாவிலேயே அதி நவீன விமானத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் திறனையும் மேம்படுத்தியிருக்கும்.
முந்தைய ஒப்பந்தம் கையெழுத்தான மூன்று நாட்களுக்கு பிறகு மனோகர் பரிக்கர் தெரிவித்த மொத்தச் செலவானது ரூ. 90,000 கோடி. விமானங்கள் உற்பத்தி மட்டும் அல்லாது, உள்கட்டமைப்பு வசதியை நிறுவுதல், சப்ளை செயின் அமைப்பு மற்றும் வியாபாரிகள் உருவாக்கம் ஆகியவையும் இதில் அடங்கும். இவை அனைத்திற்குப் பிறகும்கூட விமானம் ஒன்றின் விலை ரூ.715 கோடிதான். தற்போதைய ஒப்பந்தத்தில் 36 விமானங்கள் பிரான்சில் தயாரிக்கப்பட்டு, அவற்றின் விலை ரூ.60,000 கோடியாக இருக்கும். அதே அம்சங்கள் கொண்ட விமானங்களின் விலையை இது விமானம் ஒன்றுக்கு ரூ.1667 கோடியாக உயர்த்துகிறது. அதாவது கிட்டத்தட்ட 100 கோடி அதிகம். பெரும் பண நெருக்கடி இருக்கிறது எனில் ஒரு விமானத்தின் விலை ரூ.1,000 கோடி உயர்ந்தது ஏன்? 42 பிரிவுகளைப் பராமரிக்க ஐஏப்பிற்கு எஞ்சிய விமானங்களும் தேவை எனும் நிலையில், மற்ற விமானங்களையும் வாங்குவதற்கான செலவு என்ன?
வாங்கக்கூடிய தன்மை தொடர்பான வாதம், பாதுகாப்பு அமைசகர், மீண்டும் 110 விமானங்களுக்கான ஆர்எப்ஐ வெளியிட்டிருக்கிறது என்பதில் அடிபட்டுப்போகிறது. மேலும் கடற்படையையும் ரபேலிடமிருந்து 57 விமானங்கள் வாங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. . “ஆக, 36 விமானங்களுக்கு வழங்கும் விலையை கணக்கிடும்போது, முந்தைய ஒப்பந்தத்தில் இருந்த மேக் இன் இந்தியா அம்சம் இல்லாமல் போயிருக்கும் அம்சத்தின் செலவையும் கணக்கில் கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமாக, மோடி நாட்டை பழைய நிலைக்கே கொண்டு வந்திருக்கிறார். நம்மிடம் நவீன விமானங்கள் உருவாக்கும் திறன் இல்லை; வெளிநாட்டு நிறுவனங்களைத்தான் நம்பியிருக்க வேண்டும். இதன் மூலம் மோடி தேசியப் பாதுகாப்பைச் சமரசத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்.
பெரிய சதி என்னவெனில், நாட்டில் விமானத் தயாரிப்பில் அனுபவம் மிக்க எச்ஏஎல் மொத்தக் கொள்முதல் மற்றும் தயாரிப்புச் செயல்முறையிலிருந்து, 36 விமானங்கள் ஒப்பந்தம் மற்றும் 110 மற்றும் 57 எனப் பரிசீலனையில் உள்ள எஞ்சியவற்றிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இப்போது இந்தப் பரப்பானது, பாதுகாப்பு உற்பத்தியில் எந்த அனுபவமும் இல்லாத மோடியின் நண்பர்களுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. அவர்கள் தாங்கள் சிறந்து விளங்கும் விஷயத்தில், பிரதமரை நைச்சியம் செய்து, தங்கள் கூட்டு நிறுவனத்திற்கு (ரிலையன்ஸ் மற்றும் டசால்ட், அடானி மற்றும் சாப்) புதிய கொள்முதல் ஒப்பந்தத்தை வழங்கச்செய்கின்றனர். பழைய ஒப்பந்தத்தில் 126 விமானங்களுக்கு வழங்கியிருக்கக்கூடிய விலையைவிட இதற்கான விலை அதிகமானது. எச்ஏஎல் வெளியேற்றப்பட்டுவிட்டது. இனி எல்லாம் மோடி ஆதரவு முதலாளிகளுக்குச் சாதகமானது.
முடிவு
ஒட்டுமொத்தமாகப் பணி ஒப்பந்தம் ரிலையன்ஸ் – டசால்ட் கூட்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது, அம்பானி மோடிக்குச் செய்யும் சேவைகளுக்கான கமிஷன் என்பதையே ரிலையன்ஸ், ஜேட்லி, அரசு ஆகியோரின் பதில்கள் காட்டுகின்றன.
பிரதமரால் தேசியப் பாதுகாப்பு சமரசம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது.
216 விமானங்களிலிருந்து 36 விமானங்களாகக் குறைக்க, எச்ஏஎல் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றம் வாயிலாக மேக் இன் இந்தியா தயாரிப்பை விலக்க, கொள்முதல் தொடர்பான ஓவ்வொரு விதிமுறையும் மீறப்பட்டுள்ளது.
ஐஏஎஃப், டி.ஏசி, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை, நாட்டின் நீண்ட காலத் தேவை மற்றும் பாதுகாப்பிற்கு மேக் இன் இந்தியா கீழ் 126 விமானங்கள் தேவை எனத் தகுந்த காரணங்களோடு தீர்மானித்தும் இது நிகழ்ந்துள்ளது.
எந்தப் பணியும் செய்யாமல் ரிலையன்ஸ் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது, அவர்கள் கமிஷன் பெறும் இடைத்தரகர் மட்டுமே என உணர்த்துகிறது.
இந்திய அரசின் அனுமதி இல்லாமல் ரிலையன்ஸ் கொண்டுவரப்பட்டது எனக் கூறப்படுவது தவறானது. பாதுகாப்புப் படையினரை முட்டாளாக்கும் வகையில், அவசரத் தேவை காரணமாக இந்த ஒப்பந்தம் செய்யப்படுவதாக அரசு கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்பது மட்டுமல்ல; விரிவான பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதும் ஆகும்.
முற்றும்
எழுதியவர்கள்: யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன்
தமிழில்: சைபர்சிம்மன்
Both Modi and Nirmala are known to be blatant liars. Modi lied the fact that he was married to his existing wife, while filing his nomination papers in the 2014 election and Nirmala
in a media interview in Chennai over the NEET exam introduction, lied that the Government will give one year exemption for the Tamilnadu students and then did a U-turn.
So there’s nothing surprising over the cover-ups and lies after lies the Modi and his bhakathas are indulging right now..it’s high time the Government comes out with a white paper
and a JPC enquiry..
6. பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே, மோடி அரசை குற்றம் சாட்டுவது ஏன்?
ப: 2016ம் ஆண்டு ஜனவரியில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்க ஹாலண்டே இந்தியாவிற்கு வந்த போது தான் ரபேல் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து ஹாலண்டேவின் தோழி ஜூலி கேய்ட் நடத்தி வரும் திரைப்பட நிறுவனத்துடன், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டது. இதன் மூலம் ஒரு திரைப்படம் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது என கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
இந்த செய்தி, இந்தியாவில் மட்டுமல்ல பிரான்ஸ் நாட்டிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதாவது திரைப்பட தயாரிப்புக்கு நிதி உதவி அளிப்பது என்பது ஹாலண்டே பெற்ற லஞ்ச பணமா என்ற கேள்வி பிரான்ஸ் நாட்டில் எழுந்தது. அப்போது தான் இந்திய அரசு பரிந்துரையின் பேரில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அதை விட்டால் எங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை என ஹாலண்டே விளக்கம் அளித்தார்.
அதாவது தன் மீதான ஊழல் புகாரை மறுக்கும் வகையில், மோடி அரசு மீது பழியை சுமத்தினார். அவது குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசும், டசால்ட் நிறுவனமும் மறுத்து விட்டன. இதன் பிறகே தான் முன்பு தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மாறாக, ‘இந்த விஷயத்தில் டசால்ட் நிறுவனம் தான் கருத்து தெரிவிக்க முடியும்’ என, ஹாலண்டே ‘பல்டி’ அடித்தார்.
இத்துடன், இந்திய அரசு போட்டுள்ள ஒப்பந்தத்தில், விமான சப்ளை மட்டும் அல்லாது அதற்கான பராமரிப்பு உதவி, ஆயுதங்கள், பயிற்சி மற்றும் கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. விமான படை கேட்ட கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால் விமானத்தின் விலை சற்று அதிகமாகி விட்டது. கத்தார் மற்றும் எகிப்து நாடுகள் வாங்கிய விமானங்களில் இந்த கூடுதல் அம்சங்கள் இல்லை. கூடுதல் அம்சங்களுடன் அந்த நாடுகளை விட குறைந்த விலைக்கு இந்தியா வாங்க உள்ளது.
இத்துடன் விமான விற்பனை மூலம் டாசல்ட் நிறுவனத்திற்கு கிடைக்க கூடிய வருவாயில் 50 சதவீத தொகை அதாவது ரூ.59 ஆயிரம் கோடியை இந்தியாவில் அந்த நிறுவனம் மறுமுதலீடு செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் ஒரு பிரிவு இடம் பெற்றுள்ளது. இது உள்நாட்டில் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும்.
பாதுகாப்பு துறை நிபுணர் அபிஜித் அய்யர் மித்ரா என்பவர்,’ கத்தார் நாடு ஒரு ரபேல் விமானத்தை ரூ.2,044 கோடி என்ற விலைக்கு வாங்கி உள்ளது. எகிப்து நிறுவனம், அதே விமானத்தை ரூ.1,722 கோடி என்ற விலைக்கு வாங்கி உள்ளது. ஆனால், இந்திய அரசு ரூ.1,701 கோடி என்ற விலைக்கு தான் வாங்க உள்ளது’ என்று கூறியுள்ளார். எனவே, மற்ற நாடுகளை விட குறைந்த விலைக்கே இந்திய அரசு வாங்குகிறது என்பது தெளிவாகிறது.
ராபேல் விவகாரத்தில் விலை அதிகாமாக கொடுக்கபட்டதா என்பதை பற்றி சிஏஜி முடிவு செய்யட்டும்.
ஆவடியில் தயாரிக்கபட்ட வைஜெயந்தா , மற்றும் விஜய் டாங்கிகள் கள பரிசோதனையில்
நிறைய அளவுகளில் தோல்வி அடைந்திருக்கிறது. எனவே புது தொழிட் நுட்ப தயாரிப்புகளில்
அரசு துறை போட்டி போடும் அளவிற்கு இருக்காமுடியாது.
திவால் ஆகும் நிலையில் இருக்கும் அம்பானி கம்பெனியை தேர்வு செய்தது தனிப்பட்ட முறையில்
என்க்கு ஏற்புடையதில்லை
இதில் போட்டியாளராக பங்கு பெற்றவர்களில் நம்மர் லக்ஷ்மி மில்ஸ்ம் ஒன்று.
ஆயுத தளவாட தயாரிப்பில் இவர்காளுக்கு எந்த பின்புலம் கிடையாது.
எல் அண்ட் டி, கோத்ரெஜ் போன்றவர்கள் ஒரளவு அனுபவம் கொண்டவர்கள்.