பீமா கோரேகான் வன்முறை வழக்கு தொடர்பாக செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட வழக்கு. கடந்த செப்டம்பர் 6 அன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான முதல் அமர்வு விசாரணையை நடத்திக்கொண்டிருந்தபோது மூத்த வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே நீதிமன்ற அறைக்குள் நுழைந்தார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு அருகில் போய் அமர்ந்தார்.
மற்ற வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்துக்கொண்டிருந்தனர். முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான சால்வே கொஞ்ச நேரம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு எழுந்து நின்றார். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒருவரான நீதிபதி ஏ.எம். கான்வில்கர் அவரை இந்த “வழக்குக்காக வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
கிடைப்பதற்கு அரிய வழக்கறிஞர் அவர். அவ்வளவு சீக்கிரத்தில் அவரை அமர்த்திக்கொள்ள முடியாது. நாட்டிலேயே அவரைப் போல ஒரு சில வழக்கறிஞர்கள்தான் அத்தகைய உயரத்தில் இருக்கிறார்கள். அவர் சொன்னார்“ நான் மனுதாரருக்காக ஆஜர் ஆகிறேன்”.
அந்த மனுதாரரின் பெயர் துஷார் தாம்குடே. அவரது புகார் மனுதான் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் 10 பேரைக் கைது செய்வதற்குக் காரணமானது. அதன் மீது ஜனவரி 8ஆம் தேதி புனே காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை எழுதப்பட்டது. பீமா கோரேகான் எனுமிடத்தில் ஜனவரி 1 அன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் வன்முறை ஏற்பட்டது. அதற்கு முந்திய நாளில் எல்கர் பரிஷத் எனும் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய மாவோயிஸ்ட் இயக்கத்தோடு தொடர்புடைய இடதுசாரிச் செயல்பாட்டாளர்கள்தான் அந்த வன்முறைக்குக் காரணம் என்றது அந்த அறிக்கை. அதன் பேரில் ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரில் ஐந்து செயல்பாட்டாளர்கள் தற்போது உச்ச நீதிமன்றத் தலையீட்டினால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் மனுதாரர் தாம்குடே ஸ்க்ரோல்.இன் இணையதளத்திடம் பேசினார். “நான் சாதாரணமானவன். பெரிய மனிதன் இல்லை” என்றார். “வீடு கட்டிக்கொடுக்கிற தொழிலைச் சிறிய அளவில் செய்கிறேன்” என்றார்.
ஆனால் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வேறு விதமாகச் சொல்கிறார். புகழ்பெற்ற ஐந்து செயல்பாட்டாளர்களுக்காக வாதாடுகிற வழக்கறிஞர் அவர். அவரது தலையீடுதான் ஐந்து செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அசைத்தது. அவர் கடந்த திங்கள்கிழமை சொன்னார், “பீமா கோரேகான் வழக்கில் பிரதான குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மனோகர் பீடே (அவரை சாம்பாஜி பீடே என்று அழைக்கிறார்கள்) மனுதாரர் தாம்குடேவின் குரு”.
புனே காவல் நிலையத்தில் தலித் சமூக செயல்பாட்டாளர் அனிதா சாவலே ஜனவரி 3 அன்று அளித்த புகார் மனுவில் , பீடேவும் அவரது தொண்டர்களும் இந்துத்துவத் தலைவர் மிலிந்த் எக்போடேவும் பீமா கோரேகானில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தினார்கள் என்பதைத் தான் கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் ஆயுதங்களோடு வந்தார்கள். அம்பேத்கர் இயக்கக் கொடிகளை எரித்தனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டிருக்கிறது. அதில் பீடே, எக்போடே பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆயுதங்களோடு கலவரம் செய்தது, சட்ட விரோதமாகக் கூடியது, புனிதமான சின்னங்களை அசிங்கப்படுத்தியது, சாதிய வன்கொடுமைகள் செய்தது எனும் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது பதியப்பட்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்ற ஆணை இருந்தும்கூட அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மனுதாரர் தாம்குடே பீடேவை “குருஜி” என்று அழைக்கிறார். பீடேவின் தொண்டர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள்.
அவரைப் போன்ற சிறிய அளவில் தொழில் செய்பவரால் எப்படி மிக அதிகமாகக் கட்டணம் வாங்கக்கூடிய சால்வே போன்ற வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ள முடிகிறது, செலவு ஆகுமே என்று கேட்டோம். அவர் பதில் சொல்லாமல் சாமர்த்தியமாக எதிர்க் கேள்வி போட்டார். “வரவர ராவ் போன்றவர்களுக்கு எப்படி பிரசாந்த் பூஷண் மாதிரியான வழக்கறிஞர்கள் கிடைக்கிறார்கள்? 1993 மும்பை குண்டுவெடிப்புகள் தொடர்பாக 2015இல் தூக்கில் போடப்பட்ட யாகூப் மேமனுக்கு எப்படி வழக்கறிஞர் கிடைத்தார்?” என்றார் அவர். “அதே போலத்தான் எனக்கு வழக்கறிஞர் கிடைக்கிறார்” என்றார்.
புகார் மனு கொடுத்ததற்காக ஊடகத்தினர் அவரைக் கேள்விகள் போட்டு துளைத்து எடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். “எக்போட் மற்றும் பீடே மீது வழக்குகள் போட்டுள்ள அனிதா சாவலே உள்ளிட்ட மற்றவர்களிடம் இதேபோன்ற கேள்விகள் கேட்கின்றனவா ஊடகங்கள்?” என்கிறார்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு நெருக்கமான நண்பரான முன்னாள் அட்டர்னி ஜெனரலான ஹரிஷ் சால்வே தாம்குடே வழக்கில் தேவான்ஷி சிங் மூலமாக உதவுகிறார். முகுல் ரோகாட்கி எனும் வழக்கறிஞரோடு தேவான்ஷ் சிங் பணிபுரிகிறார். கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பது தொடர்பான வழக்கில் நடு இரவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது உள்ளிட்ட முக்கியமான வழக்குகளிலும் முகுல் ரோகாட்கியுடன் தேவான்ஷ் சிங் இணைந்து பணிசெய்துள்ளார். அவரோடு அரியானா மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலான அனில் குரோவரும் உதவுகிறார்.
ஹரிஷ் சால்வே இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக 1999 முதல் 2002 வரையில் வாஜ்பாய் அரசாங்கம் பதவியிலிருந்தபோது பணியாற்றினார். இவர் இந்த வழக்கில் எந்த கட்டணமும் வாங்காமல் சேவை செய்யும் முறையில் பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறாரா, அவரை இந்த வழக்கில் வாதாட வேண்டும் என்று யார் அணுகியது எனும் கேள்விகளை சாவலேவுக்கு ஸ்க்ரோல்.இன் இணையதளம் சார்பாகக் கேள்விகள் அனுப்பியிருக்கிறோம். அவர் பதிலளித்த உடன் இந்த கட்டுரையின் அடுத்த கட்ட கூடுதல் விவரமாக அது இணைய தளத்தில் ஏற்றப்படும்.
எதிர்த் தரப்பில் உள்ள வழக்கறிஞர் பூஷண், தானும் வழக்கறிஞர் சிங்வியும் மனுதாரர்களுக்கு கட்டணம் வாங்காமல் பணியாற்றுகிறோம் என்கிறார்கள். பொதுநலனுக்குத் தேவையானது என்று தான் நம்புகிற வழக்குகளில் கட்டணம் இல்லாமல் பணியாற்றுவதில் ஒரு பெரும் சாதனை படைக்கும் அளவுக்கு பூஷண் செயலாற்றியிருக்கிறார்.
சிங்வி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர். அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளரும்கூட. ஆரம்பத்தில் அவர் ஸ்க்ரோல். இன் இணையதளத்தின் கேள்விகளுக்கு நீதிமன்ற விசாரணை முடிந்ததும் பதில் அளிப்பேன் என்றார்.
ஆனாலும் கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவில் அவர் பதிலளித்தார். அவரும் கட்டணமில்லாமல் பணியாற்றுவதை உறுதி செய்தார். “இதற்காக நான் பணம் வருகிற பல காரியங்களை தவறவிட்டேன். கடந்த இரண்டு நாட்களாக மற்ற வழக்குகளின் தேதிகளைத் தவறவிட்டேன். நாளையும் தவறவிடுவேன்” என்று புதன்கிழமை என்ன என்ன வழக்குகளில் விசாரணைகள் வருகின்றன என்கிற காலஅட்டவணை தொடர்பாக அவர் சொல்கிறார்.
ராஜீவ் தவன், பிருந்தா குரோவர் உள்ளிட்டோர் மனுதாரர்களுக்கும் செயல்பாட்டாளர்களுக்கும் ஆஜர் ஆகின்றனர். ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட ஐந்து செயல்பாட்டாளர்களுக்காக ஆனந்த் குரோவர் ஆஜர் ஆகிறார். மத்திய அரசும் மாநில அரசும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக இருக்கிற துஷார் மேத்தாவையும் மணிந்தர் சிங்கையும் இந்த வழக்குக்காக ஆஜர் ஆகுமாறு பணித்திருக்கின்றன.
நன்றி: ஸ்க்ரோல்.இன் (https://scroll.in/article/894873/bhima-koregaon-case-it-is-harish-salve-versus-abhishek-manu-singhvi-in-high-profile-legal-battle)
ஸ்ருதிசாகர் யமுனன்
தரவுகள் : அரேஃபா ஜோஹரி
தமிழாக்கம்: த.நீதிராஜன்
இந்த சிங்கி பய யாரு தெரியுமா ????
பஞ்சாப் நேசனல் வங்கியை சூறையாடிய ராகுல் மோடி , மெகுல் சோக்ஷி யின் அதிகார பூர்வ வழக்கறிஞர்..இந்த நாய் அவனிடமிருந்து வைரங்களை பரிசாக பெற்ற புகைப்படம் உள்ளது.
இதனால் தான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பப்பு பேசும் பொழுது ராபேல் டீலை பற்றீ பேசினான்
ஆனால் பஞ்சாப் வங்கி ஊழலை பற்றி பேசவில்லை.
இந்த சிங்கி பய காங்கிறஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், பெரும் முதலாளிகளின் வழக்கறிஞர்,
அப்படியே நகர்புற நக்சகளின் வழக்கறிஞர்
இந்த கூட்டணியின் பின் புலத்தில் இருப்பது ‘மோடி எதிர்ப்பு ‘ என்ற ஒன்றுதான்
இதற்கு ஆணிவேராக இருப்பது பணம் இந்த இடத்தில்தான் அரசியல் கூலிப்படையான
சவுக்கு, நக்கீரன் கோபால் போன்ற கும்பல் வரும்.