“அரசியல் சாசனம் மற்றும் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாப்பது” என்னும் தலைப்பில் புதுதில்லியில் காஸ்டிடியூஷன் கிளப்பில் 25-09-2018 அன்று டாக்டர் மன்மோகன் சிங் நிகழ்த்திய, 2 வது ஏ.பி.பரதன் நினைவு உரை.
அன்பிற்குரிய சுதாகர் ரெட்டி, பி.சாய்நாத், அமர்ஜீத் கவுர், பெரியோர்களே, தாய்மார்களே!
ஏ.பி.பரதன் நினைவாக 2ஆவது நினைவு உரை நிகழத்த என்னை அழைத்ததற்கு நன்றி உடையவனாகிறேன். பரதனை நீண்ட காலமாக அறியும் வாய்ப்பு பெற்றிருந்தேன். நாங்கள் இருவரும் வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், அரசியல் சாசனம் மற்றும் குடியரசு விழுமியங்கள் மீது ஈடுபாடு கொண்ட, நாட்டுப்பற்று மிக்க அர்ப்பணிப்பால் அவர் என்னைக் கவர்ந்திருக்கிறார்.
ஒவ்வொரு நாகரிகச் சமுதாயமும் தன்னுடைய சிறுபான்மையினருக்கு, குறிப்பாக மத சிறுபாப்மையினருக்கு வழங்கும் வரையரைகளின் அடிப்படையிலேயே அறியப்பட்டு, வரையறுக்கப்படுகிறது. புதிய சுதந்திர இந்தியாவுக்கான அரசியல் சாசனத்தை உருவாக்க முற்பட்டபோது, நம்முடைய தேசியத் தலைவர்கள் எதிர்கொண்ட முக்கியப் பிரச்சினைகளில் இது ஒன்றாக இருந்தது.
அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சியில், குறிப்பிட்ட சூழல் – சர்வதேசச் சூழல் மற்றும் உள்ளூர்ச் சூழல் – இருந்ததை நினைவில் கொள்வது உதவியாக இருக்கும்.
சர்வதேசச் சூழல்
சர்வதேசச் சூழல் என்பது, உலகம் இரண்டாம் உலகப் போரின் பாதிப்பினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. இந்தப் போரின் மூல காரணத்தை, பாசிசக் கொள்கை மற்றும் அதன் மோசமான விளைவுகளால் உண்டானதாகப் புரிந்துகொள்ளலாம். ஜெர்மனியின் தேசியவாத சோஷலிசமான இந்த கொள்கை, ஒரு இனத்தின் மீதான இன்னொரு இனத்தின் தீவிர ஆதிக்கமாக அமைந்தது. நடைமுறையில், இது ஜெர்மனியின் சிறுபான்மையினர் மீது வெளிப்படையான வன்முறைப் பிரயோகத்தில் பெருமிதம் கொண்டது.
ஐரோப்பாவில் பாசிசக் கொள்கையை முன்வைத்தவர்களால் உலகின் மீது ஏற்பட்ட மோசமான பாதிப்புகள் நம் தேசியத் தலைவர்கள் மீது தீவிர தாக்கம் செலுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சிறுபான்மையினரை மோசமாக நடத்தும் எந்த விதமான எண்ணத்திற்கும் எதிராகச் சர்வதேச அளவில் தீர்மானமான வெறுப்பு இருந்தது. நம்முடைய தேசியத் தலைவர்கள், இனவாதம், சகிப்பற்றதன்மை சார்ந்த விஷயங்களில் ஐரோப்பாவின் பரிசோதனைகளிலிருந்து பொருத்தமான பாடங்களைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
உள்ளூர் சூழல்
பிரிவினைக்குப் பிறகு நடைபெற்ற பரவலான வன்முறையும் மிகவும் மோசமான அனுபவங்களும் நம்முடைய அரசியல் சாசன உருவாக்குநர்களுக்கான உள்ளூர்ச் சூழலாக அமைந்தது. அரசியல் சாசனத்தை உருவாக்கும் முயற்சியில், இன அல்லது மத உயர்வு சார்ந்த எந்த விதமான பொறியிலும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதில் முன் எப்போதையும்விட நம்முடைய தேசியத் தலைமை வலி மிகுந்த விழிப்புணர்வைக் கொண்டிருந்தது. மதவாதங்கள் நிராகரிக்கப்பட்டு, மதச்சார்பற்ற தன்மையில் உறுதிப்பாடு கொள்வது என்பது நம்முடைய தேசியச் சொல்லாடலின் இதயமாக இருந்தது.
1929ஆம் ஆண்டிலேயே, இந்திய தேசிய காங்கிரசின் லாகூர் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய ஜவகர்லால் நேரு, உருவாகிக்கொண்டிருந்த தேசியவாத ஒருமித்த கருத்தைத் தெளிவாக எடுத்துரைத்தார் என்பதை இங்கே நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும். “மதவாதத்தை எந்த விதத்திலும், எந்த வடிவிலும்” வெறுப்பதாக நேரு திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினார். “எந்தப் பெரும்பான்மையும், உறுதியான சிறுபான்மையினரை நசுக்க முடியாது; எந்தச் சிறுபான்மையினரும், சட்ட மன்றத்தில் கிடைக்கும் சில கூடுதல் இடங்களால் முழுவதும் பாதுகாப்பைப் பெற முடியாது” என அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். “அவர்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பாதுகாப்பாக இருக்கும் என நாம் சொல்லாலும் செயலாலும் முழு உறுதி அளிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார் (ஜவகர்லால் நேருவின் தேர்ந்தெடுத்த படைப்புகள், தொகுதி 4, ப. 184-198).
மகாத்மாவின் மகத்தான தலைமையின் கீழ் நடந்த நம்முடைய மகோன்னதமான சுதந்திரப் போராட்டத்தில், தேசிய மனம் எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருந்தது: மத, மொழி, இன, உள்ளிட்ட அனைத்து விதமான சிறுபான்மையினரும் சூரியனின் கீழ் தங்களுக்கான இடத்தைப் பெறுவார்கள் எனும் ஜனநாயக ஒப்பந்தம் கொண்ட, முழுமையான சுதந்திரமான, இறையாண்மை மிக்க தேசத்தை உருவாக்கும் உறுதி கொண்டிருந்தோம். பாகிஸ்தான் உருவான பிறகும்கூட நம்முடைய தேசியத் தலைவர்கள் இந்த நம்பிக்கையில் இருந்து பிறழவில்லை. மதச்சார்பற்ற தன்மைக்கான உறுதி தெளிவாக இருந்தது.
சிறுபான்மையினருக்கான இடம்
பிரிவினையால் தூண்டப்பட்ட மோசமான உணர்வுகளும் அவற்றின் விளைவான இரத்தக் களறிக்கும் மத்தியில், புதிய இந்திய அரசின் மதச்சாரப்பற்ற தன்மையை மீண்டும் உறுதி செய்வது அவசியம் என நேரு உணர்ந்தார். “ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், அவரது மதம் என்னவாக இருந்தாலும் சரி, இந்த நாட்டில் வாழ உரிமையுடயவர்கள்; அரசின் பாதுகாப்பைக் கோர உரிமை உடையவர்கள். இந்தியாவைத் தனது சொந்த நாடாகக் கருதும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ வரவேற்கப்படுகிறார்கள். வெளி அமைப்பின் உதவியை நாடாத முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ வரவேற்கப்படுகிறார்கள். அரசு அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்; அளிக்கும். (ஜவகர்லால் நேரு தேர்ந்தெடுத்த படைப்புகள், (இரண்டாம் வரிசை), தொகுதி 4, ப. 104-105.)
இது 1947, செப்டம்பர் 29ஆம் தேதி தில்லியில் பொதுகூட்டம் ஒன்றில் பேசும்போது அவர் கூறியது. ஒரு நாள் கழித்து மற்றொரு உரையில், இந்த முறை தில்லியில் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பேசும்போது அவர் இன்னும் உறுதியாக குறிப்பிட்டார்: “நான் தலைமைப் பொறுப்பில் இருக்கும்வரை இந்தியா இந்து அரசாக மாறாது.”[அதே புத்தகம் பார்க்க ப. 106)
இந்திய அரசியல் சாசன மற்றும் அரசியல் சார்ந்த சொல்லாடல்களில் மதச்சார்பற்ற அரசு எனும் ஐரோப்பியக் கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தது நேருதான், நேரு மட்டுமேதான் என்று சொல்வது இப்போது புதிய போக்காக இருக்கிறது. நேருவின் மதச்சார்பற்ற எண்ணங்களையும் கருத்துக்களையும் முழுவதும் ஆதரித்த மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் பட்டேல், மவுலானா ஆசாத் மற்றும் பிறர் உள்ளிட்ட தேசியத் தலைமுறைக்கு இழைக்கப்படும் அநீதி இதுவாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டு நாட்கள் கழித்து கொல்கத்தாவில் நிகழ்த்திய உரையில் மகாத்மா காந்தி, சுதந்திர இந்தியா பெற்றிருக்க வேண்டிய சமூகப் படிநிலை குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டார். தனது பாணியில் வெளிப்படையாகப் பேசிய அந்த மாமனிதர் இப்படிக் கூறினார்: “சில இந்துக்கள் இப்போது தங்கள் கை ஓங்கியிருப்பதாக நினைக்கத் துவங்கியிருக்கின்றனர், சில முஸ்லிம்கள் இந்திய ஒன்றியத்தில் தாங்கள் பின்தங்கிய நிலையில் இருக்க வேண்டுமோ என அஞ்சத் துவங்கியுள்ளனர்.”
இந்த நிலை இருக்குமானால், இந்த இந்தியா தான் கனவு கண்ட இந்தியாவாக இருக்க முடியாது என காந்தி கூறினார். தான் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட இந்தியாவில், ஒவ்வொரு மனிதரும் தனது மதம் எதுவாக இருந்தாலும் சமமான அந்தஸ்து பெறுவார் என்றார் காந்தி. “அரசானது முழுவதும் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும்” என்ரார் [ஹரிஜன், ஆகஸ்ட் 31, 1947].
என்றும் மடியாத கருத்து
என்ன நடந்தது என்றால், இந்து அடிப்படைவாதிகள் சிலர், மதச்சார்பற்ற அரசுக்கான உறுதியான அர்ப்பணிப்புகாக மாகாத்மா காந்தியை மன்னிக்கத் தயாராக இல்லை. இந்தியாவின் மகத்தான புதல்வருடான தங்கள் வஞ்சத்தை 1948, ஜனவரி 30இல் அவர்கள் தீர்த்துக்கொண்டனர். ஆனால், மகாத்மா காந்தி படுகொலையுடன் மதச்சார்பற்ற இந்தியா எனும் கருத்தாக்கம் மரணம் அடைந்துவிடவில்லை; அப்படி நிகழ்ந்திருக்கவும் கூடாது. நம்முடைய அரசு சார்ந்த கொள்கையின் மரபில், மதச்சார்பற்ற எண்ணமானது எப்போதுமே இருந்துவந்திருக்கிறது என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். 2001 புத்தாண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாயி குமரகோமிலிருந்து இவ்வாறு கூறினார்:
“மதச்சார்பற்ற தன்மை என்பது சுதந்திரத்திற்கு பிறகு நிர்பந்தம் காரணமாக நாம் வரித்துக்கொண்ட வெளிக் கருத்தாக்கம் அல்ல. மாறாக, நம்முடைய தேசிய கலாச்சாரம் மற்றும் நெறிகளில் உள்ளார்ந்து இருக்கும் இயற்கையான அம்சமாகும்.”[அவுட்லுக், ஜவனரி 2001.]
1950, ஜனவரி 26 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட இந்திய அரசியல் சாசனம், அருமையான புத்தொளி கொண்ட ஆவணமாகும். முற்போக்கான ஏற்பாடாக அமைந்த இந்த ஆவணத்தின் இதயமாக, அனைவருக்கும் வாக்குரிமை, கேபினட் அமைப்பு அரசு, கூட்டாட்சித் தத்துவம், அடிப்படை உரிமைகள், மதச்சார்பற்ற தன்மை ஆகிய நவீன அம்சங்கள் இருந்தன. நம்முடைய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள், இந்தப் பாரம்பரிய மண்ணை, மிகவும் மேம்பட்ட ஜனநாயக நடைமுறைக்கு அழைத்து வந்தனர்.
நமது மதச்சார்பற்ற கட்டமைப்பு
அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில், நம்முடைய மதச்சார்பற்ற கட்டமைப்பின் அம்சங்களை நான் சுருக்கமாக குறிப்பிடுகிறேன்: பிரிவு 25 முதல் 28இல், “மத சுதந்திரத்தைக் கடைப்பிடிப்பதற்கான உரிமைகள்” எனும் தலைப்பின் கீழ் வரும், அடிப்படை உரிமைகள் தொகுப்பு தவிர, பிரிவு 5-ஐ முதலில் குறிப்பிட வேண்டும். இந்தப் பிரிவு, மத வேறுபாடு இல்லாமல், இந்தியாவில் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்ட ஒவ்வொருவருக்கும் குடியிரிமையை உறுதி செய்கிறது.
பிரிவு 14, “சட்டத்தின் முன் சமம்”, “அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பு” ஆகியவற்றை உறுதி செய்கிறது;
பிரிவு 15 (1), “அரசு, எந்தக் குடிமகனையும், மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் பாகுபாட்டு காட்டாது” எனத் தெளிவுபடுத்துகிறது.
அதே நேரத்தில் பிரிவு 15 (2), “எந்த ஒரு குடிமகனும், மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்று காரணமாக, பொதுச்சேவையை அணுகுவதில் எந்த வித பாதிப்புக்கோ பொறுப்புக்கோ உள்ளாகக் கூடாது” எனத் தெரிவிக்கிறது.
பிரிவு 16(2), “எந்த ஒரு குடிமகனும், மதம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த இடம், வீடு அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்று காரணமாக அரசின் கீழ் ஏதேனும் வேலைவாய்ப்பு அல்லது பதவிக்காகத் தகுதியின்மை அல்லது பாரபட்சத்திற்கு உள்ளாக மாட்டார்” என வலியுறுத்துகிறது.
பிரிவு 29(2), “எந்த ஒரு குடிமகனும், மதம், இனம், சாதி, மொழி அல்லது இவற்றில் ஏதோ ஒன்றின் காரணமாக அரசு நடத்தும் கல்வி நிலையங்கள் அல்லது அரசு நிதி உதவி பெறும் கல்வி நிலையங்களில் சேர்க்கை மறுக்கப்படக் கூடாது” என வலியுறுத்துகிறது.
“எந்த ஒரு நபரும், மதம், சாதி, இனம் அல்லது பாலினம் காரணமாக, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருக்க அல்லது சிறப்புப் பட்டியலில் சேர்க்கப்படக் கூடாது’ என அறிவுறுத்தும் பிரிவு 325-ஐயும் மறந்துவிடக் கூடாது.
மொத்தத்தில், தேசத்தை உருவாக்கியவர்கள், மதங்கள் மற்றும் மத மோதல்கள் நிறைந்த நாட்டில் மதச்சார்பற்ற அரசை உருவாக்கத் துணிந்தனர். இதன் பொருள் என்னவெனில், புகழ்பெற்ற அரசியல் சாசன வல்லுனர் கூறுவதுபோல, “எந்தக் கட்டத்திலும் இந்தியா மதச்சார்புள்ள அரசாகக் கருதப்படவில்லை”. [வி.என்.சுக்லாவின் இந்திய அரசியல் சாசனம், (மகேந்திர பி. சிங் திருத்திய பதிப்பு), பத்தாம் பதிப்பு, (லக்னோ: ஈஸ்டர்ன் புக் கம்பெனி, 2001).ப. அ-26-27.]
நம்முடைய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் விரிவான ஜனநாயாக ஆவணத்தை உருவாக்கினார்கள் என்பது முக்கியமான விஷயம்தான். ஆனால், சிவில் உணர்வுப் போதாமையும் சமூகப் பிளவுகளும் கொண்ட இந்தப் பாரம்பரிய நாட்டை ஜனநாயகப் பண்பு என்னும் நோக்கத்திற்கு ஏற்பச் செயல்படச்செய்வது என்பது பெரிய சவாலாகும். நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த நிலையில் நேரு, ஜனநாயக இந்தியாவுக்குப் பத்தாண்டுகளுக்கு மேல் தலைமை வகித்த அனுபவத்தின் சோர்வில், தான் தேர்வு செய்தவற்றை மீண்டும் வலியுறுத்த வேண்டியதன் தேவையை உணர்ந்திருந்தார்: “…அனைத்து நம்பிக்கைகளையும் சமமாகக் கருதி, அனைத்தும் சம வாய்ப்புகளை வழங்கும் அரசு; ஒரு அரசாக அது தன்னை ஒரு மதம் அல்லது நம்பிக்கையுடன் இணைத்துக்கொண்டு, அந்த மதம் அரசு மதமாக மாற அனுமதிக்காத அரசு” என இந்திய அரசை அவர் வரையறுத்தார். “ஒரு நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்தவராக இருக்கும்போது, இந்த அம்சம் மட்டுமே நாட்டின் பண்பாட்டுச் சூழல் மீது தாக்கம் செலுத்தும். இருப்பினும் அரசு, ஒரு அரசு என்ற முறையில் எந்தக் குறிப்பிட்ட மதமும் சாராமல் இருக்க வேண்டும்” என்றார் [நேரு, ரகுநாத் சிங் எழுதிய தர்ம்நிர்பகேஷ் ராஜ், முன்னுரை; தி எசன்ஷியல் ரைட்டிங்ஸ் ஆஃப் ஜவகரலால் நேரு, எஸ்.கோபாலந்த் உமா ஐயங்கார் தொகுப்பு; தொகுதி 1; புதுதில்லி ஆக்ஸ்போர்ட் பல்கலை பிரஸ், 2003; ப. 194-195]
புதிய சவால்கள்
நேருவின் மறைவுக்குப் பிறகு, நம்முடைய மதச்சார்பற்ற திட்டம் பல்வேறு தரப்புகளிலிருந்து புதிய சவால்களுக்கு இலக்கானது. தேர்தல் நடைமுறைகள் மற்றும் பழக்கங்கள் மத உணர்வுகள் மற்றும் துவேஷத்தைத் தூண்டக்கூடியவையாக இருந்தன என்பது வேதனையானதாகும்.
1990களின் துவக்கத்தில் பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் இணைந்து வாழ்வது தொடர்பான விதிமுறைகள் குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் இடையிலான மோதல்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஆகிவிட்டன. நம்முடைய மதச்சார்பற்ற குடியரசு தொடர்பான அரசியல் சாசன சாத்தியங்கள் குறித்த விஷயங்களில் தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றத்தை நாடுவது அதிகரித்திருப்பது இயல்பானதாகிறது. பாபர் மசூதி தொடர்பாக அரசியல்வாதிகள் சண்டையிட்டதால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. இதன் விளைவாக நீதிபதிகள் நம்முடைய அரசியல் சாசனத்தின் மதச்சார்ப்பற்ற தன்மையை மறுவரையறை செய்து மீண்டும் வலியுறுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது வேதனைக்குரிய நிகழ்வாகும். இது நம்முடைய மதச்சார்பற்ற உறுதிக்குக் களங்கத்தைக் கொண்டுவந்தது. வழிபாட்டுத் தலத்தைக் காக்கத் தவறியதற்காக ஒட்டுமொத்த அரசியல் தலைமையும் விமர்சனத்திற்கு இலக்கானது. குறிப்பாக, மசூதி இடிப்புக்கு முன்பான நிகழ்வுகள் தொடர்பான நீதித்துறை நிலைப்பாட்டின் மீது குடிமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 1992, டிசம்பர் 6 நம்முடைய மதச்சார்பற்ற குடியரசுக்குச் சோகமான நாளாகும். எனவே, பொம்மை வழக்கில், 9 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சம் மதச்சார்பற்ற தன்மை என்பதை மீண்டும் உறுதி செய்வதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டது கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாகும்: “..அரசானது, அனைத்து மதங்கள் மற்றும் மதப் பிரிவுகள் உள்பிரிவுகளைச் சமமாக நடத்த வேண்டும். மத சகிப்புத்தன்மை மற்றும் அனைத்து மதப் பிரிவுகளையும் சமமாக நடத்துவது மற்றும் அவர்கள் உயிர், சொத்து மற்றும் வழிபாட்டுத் தலங்களைக் காப்பாற்றுவது ஆகியவை நம்முடைய அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள மதச்சார்ப்பற்ற தன்மையின் முக்கிய அம்சங்களாகும்” என நீதிமன்றம் தெரிவித்தது. [ஓ.சின்னப்ப ரெட்டியின் மேற்கோள், தி கோர்ட் அண்ட் கான்ஸ்டிடியுஷன் ஆஃப் இந்தியா [புதுதில்லி ஆக்ஸ்போர்ட் பல்கலை பிரஸ், 2010], ப 157-158.]
பொம்மை வழக்கின் தீர்ப்பு நம்மில் பலரால் மதச்சார்பற்றத்தன்மை மீதான உறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நம்முடைய அரசியல் சொல்லாடலில் ஒருவித அரசியல் சாசனப் புனிதம் நிலைநிறுத்தப்பட்டது.
நிலைக்காத நிம்மதி
துரதிர்ஷ்டவசமாக இந்தத் திருப்தி நிலைக்கவில்லை. பொம்மை தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் புகழ்பெற்ற ஆனால், சர்ச்சைக்குரிய, “இந்துத்துவம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகும்” என்னும் தீர்ப்பு அமைந்தது. நீதிபதி வர்மா இவ்வாறு கருத்துரைத்தார்: “ஒருவரது பேச்சில், இந்துத்துவம் அல்லது இந்துயிசம் தொடர்பாக வரும் குறிப்பு, மற்ற மதங்களுக்கு எதிரான வகையில் இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட பேச்சாக அமையும் என்னும் அனுமானத்தில் செயல்படுவது; இந்துத்துவம் அல்லது இந்துயிசம் எனும் வார்த்தைப் பயன்பாடு இந்து மதம் தவிரப் பிற மதங்களைக் கடைப்பிடிப்பவர்கள் மீதான துவேஷமாக அமைந்துவிடும் எனக் கருதுவது ஆகியவை தவறு என்பதோடு சட்டப்படி பிழையானவை ஆகும்” என நீதிபதி வர்மா கூறினார். [அதே புத்தகம், ப. 161]
நம்முடைய குடியரசில் மதச்சார்பற்ற செயல்முறை மற்றும் கோட்பாடுகள் தொடர்பான அரசியல் கட்சிகளின் தொடரும் விவாதத்தின் மீது இந்தத் தீர்ப்பு தீர்மானமான தாக்கம் செலுத்துகிறது. இந்தத் தீர்ப்பு நம்முடைய அரசியல் விவாதத்தை ஒரு விதத்தில் ஒரு தலைப்பட்சமானதாக ஆக்கியது. பலரும், “இந்த முடிவு மாற்றப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை” எனக் கருதினர்.” [அதே புத்தகம், ப. 162]
நீதித்துறை மட்டும் போதாது
நீதிபதிகள் எத்தனை விழிப்புடன், ஞானத்துடன் செயல்பட்டாலும் சரி, எந்த ஒரு அரசியல் சாசன ஏற்பாட்டையும், நீதித்துறையால் மட்டுமே பாதுகாத்து, பேணிக் காக்க முடியாது. அரசியல் சாசனம் மற்றும் அதன் மதச்சார்பற்ற உறுதிகளைக் காக்கும் பொறுப்பு, இறுதியாக அரசியல் தலைமை, சிவில் சமூகம், அறிவுஜீவிகள் ஆகியோரைச் சார்ந்தது. சமத்துவம் மிக்க பெரிதான அரசியல் சூழலின் ஒரு அங்கமாக, இந்த மதச்சார்பற்ற அம்சங்களை நம்முடைய அரசியல் சாசன முன்னோடிகள் கருதினர் என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. இது சுலபமான செயல் அல்ல: குறிப்பாக சமத்துவமின்மை மற்றும் பாரபட்சம் மிக்க நூற்றாண்டு காலப் பழக்கங்களைக் கொண்ட பாரம்பரிய நாட்டில் இது சுலபம் இல்லை.
எந்த வகையிலும் பாரபட்சம் கூடாது
மேலும், மதம் மட்டுமே பாரபட்சத்திற்குக் காரணமாக அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் சாதி பாரபட்சத்திற்கான காரணமாக அமைகிறது. சில நேரங்களில் பாலினம், அநீதியை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் மொழியையும், சில நேரங்களில் இனத்தையும் அடிப்படையாக கொண்டு, நிர்க்கதியானவர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது.
நம்முடைய குடியரசின் மதச்சார்பற்ற இழையை மாற்றுவது என்பது, பெரிதான சமத்துவத் திட்டத்தை, மதச்சார்பற்ற முற்போக்கான ஜனநாயகச் சமூகத்தைத் தகர்ப்பதற்கான முயற்சி என்பதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு, நம்முடைய குடியரசின் மதச்சார்பற்ற துடிப்பான தன்மையைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு நம்முடைய அரசியல் சாசன அமைப்புகளுக்கு இருக்கிறது.
முதலில், ஒரு நிறுவனமாக நீதித்துறை அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாப்பதற்கான முதன்மைக் கடமையிலிருந்து ஒருபோதும் தனது பார்வையைத் தவறவிடக் கூடாது. அரசியல் மோதல்கள், தேர்தல் மோதல்கள் மதத் தன்மை, அடையாளங்கள், தவறான அபிப்ராயங்கள், தனிப்பட்ட சார்புகள் ஆகியவற்றால் மதச்சார்பற்ற தன்மை அதிக அளவில் தாக்கம் செலுத்தப்படுவதால், இந்தப் பணி மிகவும் கடினமானதாக ஆகிறது.
நம்முடைய அரசியல் சமூகத்தில் மதவாதக் கிருமியை நுழைப்பதில் எந்த வருத்தமும் இல்லாத பொறுப்பில்லாத, சுயநலம் மிக்க அரசியல்வாதிகளை மீறி, அரசியல் சாசன பாதுகாவலர்களாக நீதித்துறை தனக்கான ஒளி பொருந்திய பார்வையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நம்முடைய முப்படைகள் தொடர்பாகவும் இதே எதிர்பார்ப்பைத் தெரிவிக்க வேண்டும். நம்முடைய முப்படைகள் நம்முடைய மதச்சார்பற்ற திட்டத்தின் அருமையான பிரதிபலிப்பாக இருக்கின்றன. அரசியல்வாதிகளின் நடைமுறை உத்திகள், அரசியல் நுணுக்கங்கள் ஆகியவற்றிலிருந்து நம்முடைய முப்படைகள் மிகவும் பாராட்டத்தக்க விதத்தில் விலகி நிற்கின்றன. அற்புதமான சாதனை இது. எந்த விதமான பிரிவினை எண்ணத்தினாலும் முப்படைகள் பாதிக்கப்படாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.
குடியரசின் மதச்சார்பற்ற இழையைப் பாதுகாப்பதில் தேர்தல் ஆணையத்தின் பங்கை என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியாது. தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையின் பொறுப்பாளர் என்ற முறையில், தேர்தல் சொல்லாடலில், மதம், மத உணர்வுகள், சார்பு நிலைகள் ஆகியவை தாக்கம் செலுத்தாத வகையில் உறுதிசெய்வது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். மதம் சார்ந்த காட்சிப் படிமங்களையும் குறியீடுகளையும் அதிகமாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையை ஆணயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஊடகம். ஜனநாயக நிறுவனமாக, மதச்சார்பற்ற தன்மையை அதன் நோக்கம் மற்றும் செயலுக்கு ஏற்பத் தக்க வைப்பதில் ஊடகம் சமமான பங்கு வகிக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேல், மதச்சார்பற்ற விழுமியங்களையும், நம்முடைய அரசியல் சாசனத்தின் மையமான உயர்ந்த குடியரசின் தன்மைகளையும் பாதுகாப்பதில், குடிமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை ஈடுபட வைப்பது அரசியல் கட்சிகளின் கடமையாகும்.
டாக்டர் மன்மோகன் சிங்
ஜெய் ஹிந்த்
INDIA’S concocted reasons for cancelling the foreign ministers meeting in New York, rather than revealing Imran Khan’s “true face”, as the external affairs ministry statement asserted, exposed the ugly face of India’s BJP-RSS regime.
Imran Khan was charitable in alluding to Narendra Modi as a “small man” in a “big office”. The Indian prime minister’s origins as an RSS (Rashtriya Swayamsevak Sangh) enforcer and the instigator of the massacre of 2,000 innocent Muslim children, women and men in Gujarat are well recorded. He escaped conviction for this crime through manipulation and intimidation of India’s judicial system. He secured election to India’s premiership by running a campaign of racist propaganda, false economic promises and claims to great power status.
Since assuming office, the BJP-RSS combine, not unlike the Nazis, has been on a systematic programme of coercion, intimidation and propaganda to impose racist (Hindu) supremacy in India and transform India’s 150 million Muslims, Christians and other minorities, and lower-caste Hindus, into second-class citizens.
In a press conference on Aug 30, 2018, the Indian human rights activist and author, Arundhati Roy, summed up the main features of BJP-RSS rule: the “re-Brahminisation of education”; the “lynching of Muslims” and attacks on the Adivasis and Dalits; incarceration of millions of poor people, deprived of homes; the brutal suppression of the Kashmiris; the intimidation and physical elimination of dissenting journalists, epitomised by the murder of Gauri Lankesh; the existence of a “shadowy, full-blown terror network” targeting adversaries; the dismantling of educational institutions, “falsification of history” and persecution of liberal students and student bodies; enrichment of corporations close to the BJP, such as the award of the Rafale contract to Reliance Industries; allowing capitalists, like Vijay Mallya and Nirad Modi, to decamp with “thousands of crores”; and a “regime which its own police calls fascist”.
ARTICLE CONTINUES AFTER AD
Modi and the BJP have failed spectacularly to improve the lives of the majority of the Indian people.
‘Incredible India’, the jingle heard globally in ubiquitous TV advertisements, assumes a contrary meaning when the ‘nasty, brutish and short’ lives of the vast majority of Indians are brought to light. Some statistics: India is the most dangerous place to be born a girl. Three million girls are lost each year to infanticide; it has the highest number of
suicides; it ranks third in the number of rape cases; 60 per cent of Indians live on two dollars a day or less; 14m live in slavery; 600m practise open defecation; it is ranked as the second-most racist country and has 13 of the 20 most polluted cities.
Modi and the BJP have failed spectacularly to improve the lives of the vast majority of the Indian people. The Indian government and its pet media boast of their country’s rapid growth and the growing ranks of billionaires. These billionaires are the creatures of crony capitalism and extensive official credit, with their wealth built on the exploitation of India’s poor and deprived. India is more unequal now than ever, with islands of prosperity coexisting in an ocean of poverty and misery.
The BJP government’s failure to deliver on its tall promises of jobs and prosperity has eroded Modi’s popularity dramatically. Arundhati Roy believes this loss of popularity presages dangerous times. Modi and the BJP-RSS will try to divert attention from their failures by a “continuous circus of arrests, assassinations, lynchings, bomb attacks, false flag attacks, riots (and) pogroms”.
Some Indian analysts are convinced that Modi’s major diversion will be the intensification of tensions with Pakistan. This could be generated through ‘false flag’ terrorist attacks in occupied Kashmir or India itself, justifying nationalist hysteria and threats against Pakistan. New Delhi may even consider an actual ‘surgical strike’ across the LoC or the international border, as the Indian army chief has threatened. If they can get away with limited military ‘success’ against Pakistan, it would play extremely well with current Indian jingoism and assure a Modi/BJP electoral victory.
Yet, this would be a high-risk operation, militarily and politically. The action may not remain ‘limited’ if Pakistan retaliates forcefully and the ‘surgical strike’ escalates into a general conflict with the ever-present nuclear dimension. Politically, if an Indian incursion is visibly defeated by Pakistan, it could lead to the BJP’s defeat at the polls.
The abrupt cancellation of the foreign ministers New York meeting is an indication that India wishes to keep the escalation option open. Any engagement with Pakistan now would constrain this option. The joint statement against Pakistan-based ‘terrorist’ groups, extracted by India from the US at the 2+2 talks last month, also fits into New Delhi’s possible aggressive plans.
Despite its desire for regional cooperation, the new Pakistani government cannot afford to ignore the brewing threat from India. A determined effort is required to prevent the execution of such a strategy. Any sign of Pakistani weakness will intensify and encourage Indian belligerence. Modi is a classic bully; he feeds on weakness; he will be deterred only by strength and determination.
Pakistan should stop asking for a dialogue with India. It should launch a diplomatic and media campaign, at the UN and other international forums and major capitals, to reveal the narrow motives for India’s hostility, illustrate the threat this poses to regional and global security and secure political support for Pakistan’s positions from China and as many other countries as possible.
Second, as Clausewitz wrote: “To secure peace is to prepare for war.” Pakistan’s armed forces should enhance their readiness to deter and repel a possible Indian incursion across the LoC or the international border. It should be made clear to the US and others that any Indian military adventurism will lead to Pakistani retaliation not only on the eastern front but also against Indian-sponsored terrorist sites in Afghanistan.
Modi’s multiplying mistakes, the growing disenchantment of India’s masses and Pakistan’s resolute resistance may well combine to defeat this ugly regime at India’s 2019 polls.
The writer is a former Pakistan ambassador to the UN.
Published in Dawn, September 30th, 2018//////
பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டேன் நாளிதழில் இருந்து வெளிவரும் கட்டுரை
பாகிஸ்தானின் முன்னாள் துதரால் எழுதப்பட்டது,
நமது தேசத்தின் எதிரிகளும் இங்கு இடதுசாரி எச்சபயலுவளவும் , சவுக்கு போன்ற பிரியாணி
அலைகிற நாய்களும் ஒரே குரலில் குரைக்கிறார்கள்.ச்
You want to start a war against Pak and ruin economy of the nation ? Except some last paragraphs in Don’s Article, most of them are true.
Modi has made India as laughing stock. Accept this. Talk about your achievements, don’t keep talk ever about Cong failures and Pak to garner votes.