வங்கி ரகசியம் தொடர்பான ஷரத்தைக் காரணம் காட்டி, 2015 பிப்ரவரியில், ரகுராம் ராஜன் சமர்ப்பித்த பட்டியல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது என மோடி அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வாராக்கடன் மோசடி தொடர்பாக ரகுராம் ராஜன் சமர்ப்பித்த பட்டியல் தொடர்பான தகவல்களை, பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் சமர்ப்பிக்க மறுத்துள்ளது.
இதற்கு மாறாக, மூத்த அமைச்சர்கள் குழுவின் பணி தொடர்பாக ஜோஷியைத் தனியே சந்தித்துப் பேசுமாறு கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையை மீறிய செயல் என்று அரசியல் சாசன வல்லுனர்கள் கருதுகின்றனர்.
2015 பிப்ரவரி 4ஆம் தேதி, ஒருங்கிணைந்த விசாரணை தேவைப்படும் மோசடிகள் குறித்த பட்டியலை அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பிரதமர் அலுவலகம் மற்றும் ஜேட்லி அலுவலகத்திடம் அளித்ததாக தி வயர் இதழ் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்தது.
நாடாளுமன்றத்திற்கு அரசை மேற்பார்வை செய்யும் அதிகாரம் இருக்கிறது. பெரிய அளவிலான வாராக்கடன் மோசடி தொடர்பான புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உயர்மட்டக் குழுவிடம் தகவல் அளிக்க மறுத்திருப்பது, மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது இந்தப் பட்டியல் பெற்று மூன்று ஆண்டுகள் ஆன நிலையிலும் தன்னிடம் காண்பிக்க எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது.
நாடாளுமன்றக் குழு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதால் ஆவேசம் அடைந்துள்ள ஜோஷி, ராஜனிடம் அவர் வழங்கிய பட்டியலை நிலைகுழுவிடம் வழங்குமாறு கேட்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. தகவல்களை வழங்க மறுப்பதற்கு மோடி கூறிய ரகசியக் காப்பு காரணம், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான ராஜனைக் கட்டுப்படுத்தாது என அவர் கருதுகிறார்.
இதற்கு முன்னர் நிகழ்ந்திராத செயலாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் இரண்டு காபினெட் அமைச்சர்கள், ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் ஜோஷியை அவரது இல்லத்தில் சந்தித்து, மதிப்பீட்டுக் குழுவின் இரண்டு அறிக்கைகள் பற்றி அவருடன் பேசியதாகத் தெரிகிறது. இவற்றில் ஒன்று வாராக்கடன் மோசடி தொடர்பானது மற்றொன்று ஜிடிபி வளர்ச்சி சர்ச்சை தொடர்பானது.
இரண்டு அமைச்சர்கள், நிலைக்குழுத் தலைவரைச் சந்தித்த விதம் நடைமுறையை மீறிய செயலாக உறுப்பினர்கள் கருதுகின்றனர். 2 ஜி மோசடி தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவுக்குத் தலைமை வகித்த ஜோஷியை, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் அமைச்சர்கள் சந்தித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என யோசித்துப்பாருங்கள் என கேட்கிறார் எம்பி ஒருவர்.
பலமுறை முயன்றும் ஜோஷி கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. கோயல் மற்றும் நட்டாவும் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த பட்டியல் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் கேட்டு ஜோஷி மூன்று நினைவூட்டல்களை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். ராஜன் தந்த பட்டியலை நாடாளுமன்றக் குழுவிடம் பகிர்ந்துகொள்ள முடியாமல் இருப்பதற்கு வங்கி ரகசியம் எனும் ஷரத்தை பிரதமர் அலுவலகம் காரணம் காட்டியுள்ளது.
ராஜன் பட்டியலை, அவரை ரகசியப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வைத்து, மொத்தக் குழுவிடம் இல்லாவிட்டாலும், – தன்னிடம் பகிர்ந்துகொள்ள வைக்கலாம் எனப் பிரதமர் அலுவலகத்திற்கு ஜோஷி கடிதம் எழுதியதாகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கும் மோடி அரசு பதில் அளிக்கவில்லை. ராஜன் இந்த குழு முன் ஆஜராகி, பெரிய அளவில் வாராக்கடன் செலுத்தாதவர்கள் பற்றித் தெரிவிக்கலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜன் பட்டியல் மோடி அரசுக்குப் பெரும் சங்கடத்தை அளித்துள்ளது. இந்த பட்டியல் மற்றும் வாராக் கடன்கள் பொதுத்துறை வங்கிகளின் கணக்குகளில் பிரதிபலிக்க வேண்டும் என வலியுறுத்தியதுதான், அவருக்கு மோடி அரசு பதவி நீட்டிப்பு வழங்காததற்கான காரணங்கள் என கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டுத் தன்னாட்சியை ஆட்டம் காணச்செய்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை முதல், பதவி விலகும் நிலையை உரிஜித் பட்டேலுக்கு ஏற்படுத்தியுள்ள அரசுடனான மோதல் வரை மோடி அரசு மத்திய வங்கியின் சுதந்திரம் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.
ஸ்வாதி சதுர்வேதி
நன்றி; தி வயர்
https://thewire.in/political-economy/narendra-modi-pmo-npa-murli-manohar-joshi
குண்டன் மோடி தின்று விட்டு குசு விடத்தான் லாயக்கு . மோடிக்கும் இத்தாலியன் மாபியா சோனியாவுக்கும் இந்தியாவை பற்றி எந்த அக்கறையும் இல்லை. இருந்தால் மேட் இன் என்று சொல்லிவிட்டு சீனா செய்த சிலையை வெட்கமே இல்லாமல் திறந்து வைப்பானா. ரபேல் மூலம் அம்பானிக்கு பணம் வர வழி செய்வானா . சீனாவுக்கு டோக்லாமை தானம் கொடுத்துவிட்டு இந்திய வீரர்களை பாகிஸ்தான் தலை அறுப்பதை பார்த்து எல்லா ஓட்டைகளையும் மூடி பார்த்து கொண்டிருப்பானா
சவுக்கு ஶங்கர் மைண்ட் வாய்ஸ் என்னாளும் என் நாவு கர்த்தரை(மோடி) மட்டுமே ஸ்தோத்தரிக்கட்டும்.
இப்பல்லாம் மோடிய தவிர வேற எதுவுமே எழுதுறது இல்ல போல..அமவுண்ட் ஹெவியா அடிக்கிறாய்ங்களோ!?
உனக்கு சொம்பு தூக்க அதிகமா பணம் தர்ராங்கலா…?