“நம்முடைய பிரச்சினையே இந்தியாவில் அளவுக்கு மிஞ்சிய ஜனநாயகம் இருப்பதுதான் – ஆகவேதான் கடினமான முடிவுகளை இங்கே எடுக்க முடிவதே இல்லை.” -இப்படி அறிவித்திருப்பவர் சந்தை ஆலோசகர் சுனில் அலக். ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர். இந்தியப் பணத்தாள்களில் 86 சதவீதத்தைச் செல்லாது என்று அறிவித்து அதிர்ச்சியளித்த பிரதமர் நரேந்திர மோடியின் முடிவுக்கு எதிராக எழுந்த குமுறல்களுக்கான எதிர்வினையாக இப்படிக் கூறினார் அந்தப் பகட்டுப் பேர்வழி. நாட்டின் மிகப்பெரிய செல்வந்தர்களின், பகட்டான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்போரின் நெடுநாள் உள்ளக்கிடக்கையைத்தான் அலக்கின் ஆரவாரப் பேச்சு வெளிப்படுத்தியது.
சர்வாதிகாரத் தலைமையின் துல்லியமான, ஒழுங்கான சர்வாதிகாரத் தலைமை தேவை என்பதே அவர்களின் ஏக்கம். “சிங்கப்பூரின் லீ குவான் யூ மாதிரியான ஒரு தலைவர்தான் நமக்குத் தேவைப்படுகிறார்,” என்று தில்லியின் பளபளப்பான பல வரவேற்பறைகளில் பேசப்படுவதைக் கேட்கலாம். அங்கே வந்து போகிறவர்கள், இந்தியப் பொருளதாரத்தின் நிலையற்ற தன்மைமைகளால் தீண்டப்படாதவர்கள்; செல்வத்தின் அரவணைப்பில் இருக்கிறவர்கள்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே நாளில்தான், இந்தியாவும் தனது சொந்தச் சீர்குலைவைச் சந்தித்தது. மோடி 500 ரூபாய் நோட்டுகளும் 1,000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவிக்கிறார். உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அவரது இந்த அறிவிப்பால், கிட்டத்தட்ட எல்லா ரொக்கப் பணமும் மதிப்பற்றதாகப் போகிறது. பணப் பரிமாற்றங்களில் 90 சதவீதம் வரையில் ரொக்கமாகவே நடைபெறும் ஒரு நாட்டில், அறிவிக்கப்பட்டு வெறும் நான்கு மணி நேர அவகாசத்தில் இந்த முடிவு நடைமுறைக்கு வந்துவிட்டது.
வரி ஏய்ப்புச் செய்கிறவர்களால் நடத்தப்படும் போட்டிப் பொருளாதாரத்துக்கு முடிவு கட்டுவதே அந்த நடவடிக்கையின் நோக்கம் என்று சொல்லப்பட்டது. ஆனால், நடந்தது என்னவோ குளறுபடிகளும் சீர்குலைவுகளும்தான். கற்றுக்குட்டித்தனமான செயல்பாடுகளும், மேம்போக்கான திட்டமிடல்களும் சேர்ந்துகொள்ள, வங்கிகளின் முன்பாகவும் ஏடிஎம் மையங்களின் முன்பாகவும் நீண்ட தொலைவுக்கு வரிசைகள் நின்றன. ஏடிஎம் இயந்திரங்களில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்பத் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படாததால் ஏற்பட்ட சிக்கல்கள் வேறு. வங்கிகளில் நடுப்பகலுக்கு முன்பே ரொக்கப் பணம் காலியானது. பீதியால் பதுக்கல் அதிகரித்தது. ரொக்கப் பட்டுவாடா இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. குறிப்பாக, கிராமப் பகுதிகளில் தினசரிக் கூலித் தொழிலாளர்களுக்கு அவர்களுக்குரிய ரொக்கக் கூலியை வழங்க முடியாமல் போனது. அவர்கள் நாட்கணக்காகக் கூலி பெற முடியாத நிலைமையும் ஏற்பட்டது.
அன்று கேட்ட குரல்
பணமதிப்பழிப்பு நடவடிக்கை மீது எழுந்த விமர்சனங்களைச் சகித்துக்கொள்ள இயலாத அலக்கின் இந்த எதிர்வினையும், தனது கட்டளைப்படி அனைத்தையும் ஆட்டுவிக்கிற ஆட்சி வேண்டும் என்ற அவரது விருப்பமும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஒரே ஒரு முறை அறிவிக்கப்பட்ட அவசரநிலை ஆட்சியின்போது அதை நியாயப்படுத்தத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட வாசகத்தை நினைவூட்டுகின்றன: “குறைந்தபட்சம் ரயில்கள் சரியான நேரத்துக்கு வந்துகொண்டிருப்பது உண்மைதானே?”
வேடிக்கை என்னவென்றால் 1975இல் இந்தியாவில் குடிமக்களின் உரிமைகளை இரும்புக் கரத்தால் ஒடுக்கிய தலைவர் அரசியல் அகழியின் அந்தப் பக்கத்தைச் சேர்ந்தவர்; ஒரு முடிவெடுத்துவிட்டால் எதைப் பற்றியும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் செயல்படுத்தியவர் என்று இப்போதும் பலரால் வியந்து பார்க்கப்படுகிறவர். அவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான பிரதமர் இந்திரா காந்தி.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மோடி செயல்படுத்திய அடாவடித்தனமும் அத்துடன் இணைந்த மத்திய அதிகாரக் குவிப்பும் 1970களில் இந்திரா காந்தியின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு இணையானவை. பண நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் நடவடிக்கை, 1969இல் இந்தியாவின் வங்கிகளை இந்திரா காந்தி அரசுடைமையாக்கியதோடு ஒப்பிடத்தக்கதாகும். 2017ஆம் ஆண்டு உதயமானபோது நடைபெற்ற பெரியதொரு அரசியல் கூட்டத்தில் மோடி நிகழ்த்திய உரை, 1971இல் இந்திரா காந்தி நிகழ்த்திய உரையில் ஒலித்த முழக்கத்தை நகலெடுத்ததாக இருந்தது. “இந்திராவை வெளியேற்றுவோம் என்கிறார்கள் அவர்கள், வறுமையை வெளியேற்றுவோம் என்கிறேன் நான்,” என்றார் இந்திரா காந்தி. “மோடியை வெளியேற்றுவோம் என்கிறார்கள் அவர்கள், ஊழலை வெளியேற்றுவோம் என்கிறேன் நான்,” என்றார் நரேந்திர மோடி. தனி மனிதரை மையமாகக் கொண்ட அரசியல் கலாச்சாரத்தைக் கட்டுவது என்பது இரண்டு தலைவர்களுக்குமே பொதுவான செயல்முறைதான்.
70ஆம் ஆண்டுகளுக்கு நிகரான மற்றொரு நிகழ்ச்சிப் போக்கு, அரசுக்குத் தரப்படுகிற நிர்வாக அதிகாரத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே போவதாகும். சோஷலிசம் பேசிய இந்திரா காந்தி காலத்தில் அரசிடமே அனைத்து அதிகாரமும் என்பது இயல்பானதாக இருந்திருக்கலாம். ஆனால், “குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச நிர்வாகம்” என்ற விளம்பர வாசகத்தோடு தேர்தலைச் சந்தித்த ஒரு கட்சிக்கு இது எப்படிப் பொருந்தும்?
பணமதிப்பு ஒழிக்கப்பட்ட பிறகு, நாட்டின் பொருளாதார அமைப்பு இலகுவாக, மறுபடியும் இயல்பானதாக மாற 50 நாட்கள் தருமாறு கேட்டுக்கொண்டார் மோடி. இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நாம் இதைக் கேட்டாக வேண்டும்: “அவரது முடிவால் உண்மையில் சாதிக்கப்பட்டதுதான் என்ன?”
என்னதான் நடந்தது?
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக வாதாடுகிறவர்கள், ரொக்கப் பணமற்ற வங்கி நடைமுறையும், வட்டி விகிதக் குறைப்பும் சேர்ந்து இந்த நடவடிக்கையின் பலன்களை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். இந்த நடவடிக்கையால் வரி வசூல் குறையும் என்று சொல்லப்பட்டது, அதற்கு மாறாக 2016 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான வரி வசூல் அதிகரித்திருக்கிறது என்று அரசு சொல்கிறது. ஆனால், அகில இந்திய தயாரிப்பாளர்கள் அமைப்பு தனது அறிக்கையில், இந்த நடவடிக்கையின் விளைவாக, மொத்த வருவாயில் 50 சதவீதம் விழுந்துவிட்டது, சிறுதொழில்களிலும் குறுந்தொழில்களிலும் வேலை வாய்ப்புகள் 35 சதவீதம் சுருங்கிவிட்டது என்று தெரிவித்திருக்கிறது. கடந்த வாரம் திங்கட்கிழமையன்று (2017 ஜனவரி 16) பன்னாட்டு நிதி நிறுவனம் (ஐஎம்எப்) வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக இறங்கிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐஎம்எப் நிறுவனத்தின் முந்தைய மதிப்பீட்டை விட ஒரு சதவீதம் குறைவான விகிதமாகும். உயர் மதிப்புப் பணத்தாள்களைச் செல்லாததாக்கிய நடவடிக்கையின் விளைவுதான் இது என்றும் ஐஎம்எப் தெரிவிக்கிறது.
நல்ல பலன்கள் விளையுமானால் இப்படிப்பட்ட சிரமங்கள் ஏற்கத்தக்கவைதான். ஆனால் அப்படி நடந்ததா? பணமதிப்பு ஒழிப்பு நடவடிக்கையின் உண்மையான நோக்கம் இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை. பொருளாதார அமைப்பைப் பீடித்துள்ள சட்டத்துக்குப் புறம்பான செல்வக் குவிப்பை – அதாவது மக்கள் மொழியில் ‘கறுப்புப் பணம்’ என்று சொல்லப்படுவதை – அப்புறப்படுத்துவதுதான் நோக்கம் என்றால், அது தவறான இலக்கை நோக்கிக் குறிவைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கணக்குக்கு வராத பணத்தில் 6 முதல் 10 சதவீதம் வரையில் மட்டுமே ரொக்கமாக இருக்கிறது. வரித்துறையினருக்கு வக்கனை காட்டிவிட்டுப் பணத்தைக் கையாளுகிறவர்கள் பெரும்பாலும் அதைத் தங்கமாகவோ, மணை வணிகத்திலோ, வரியில்லா ஸ்விஸ் வங்கிகளிலோதான் முதலீடு செய்கிறார்கள். இரண்டாவதாக, தடை செய்யப்பட்ட பண நோட்டுகள் எல்லாமே வங்கிகளிடம் திரும்பி வந்துவிட்டன என்ற நிலையில், ஒரு இடைஞ்சலான கேள்விக்கு மோடி அரசு பதில்சொல்லியாக வேண்டியுள்ளது: நாட்டில் எவ்வளவு “கறுப்பு” ரொக்கம் புழங்குகிறது என்பதை அரசு தப்பாகக் கணக்குப் போட்டுவிட்டதா? அல்லது, வரித் திருடர்கள் தங்கள் பணத்தை வெள்ளையாக்குவதற்கு வழி கண்டுபிடித்துவிட்டார்களா?
புழக்கத்திலிருந்து தடுக்கப்பட்ட 15.4 டிரில்லியன் (15 லட்சத்து 40 ஆயிரம் கோடி) ரூபாய் பணத்தில் சுமார் 90 சதவீதத்தை மக்கள் வங்கிகளில் செலுத்திவிட்டனர். கணிசமான தொகை வங்கிக்கு வராது என்று அரசு சொல்லிக்கொண்டிருந்ததுடன் இந்தப் புள்ளிவிவரம் முரண்படுகிறது. ஆக, பணத்தைப் பதுக்கி வைப்பவர்களை வெளியே கொண்டுவருவதே நோக்கம் என்பதாக அறிவிக்கப்பட்ட மூல இலக்கு மிகப்பெருமளவுக்குத் தோல்வியடைந்துவிட்டது. அதன் பிறகு, இலக்குக் கம்பம் அவசர கதியில் நகர்த்தி வைக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தை டிஜிட்டல்மயமாக்குவதே உண்மை நோக்கம் என்று அறிவித்தார்கள். ஆனாலும் இந்திய மக்களிடமிருந்து கண்கூடான எதிர்ப்போ ஆவேசமோ வெளிப்படவில்லை. அதற்குக் காரணம் அரசியல் செய்திகளைக் கொண்டுசெல்வதில் மோடியின் தனித்திறமைதான். தனது நடவடிக்கை “ஊழலுக்கு எதிரான, கறுப்புப் பணத்துக்கு எதிரான, கள்ளப் பணத்திற்கு எதிரான, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டமே” என்று சித்தரித்ததன் மூலம், பணமதிப்பழிப்பை நெஞ்சுரமிக்க தேசப்பற்றுக்கான பரிசோதனைக் களமாக முன்னிறுத்தினார் மோடி.
ஏழைகளின் ரட்சகராகக் காட்டிக்கொண்ட இந்திரா காந்தியின் மந்திரத்தைத் தானும் உச்சரித்த மோடி, பண நோட்டுத் தடை நடவடிக்கையை நவீன கால அறநெறிச் செயலாகப் புத்திக்கூர்மையோடு நிலைநாட்டிக்கொண்டார். அந்த நவீன அறநெறியில், நல்ல குடிமக்களாகத் திகழ வேண்டுமானால் ”தியாகம்” செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று போதிக்கப்படுகிறது. பண நோட்டு முடக்கத்திற்கு வேதகால முத்திரை ஒன்றை மோடியே பதித்தார். இந்தியாவைத் தூய்மைப்படுத்துகிற “யாகம்” அது என்று வர்ணித்தார். இதற்காக ஏற்றுக்கொள்கிற சிரமங்கள் மாண்புமிக்கவை, பொதுநன்மை என்ற ஹெகலிய லட்சியத்தை அடைவதற்கான தியாகமே அந்தச் சிரமங்கள் என்று போதிக்கப்படுகிறது. இந்தியாவைச் சீர்குலைக்க “அந்நியக் கைகள்” சதி செய்கின்றன என்று இந்திரா காந்தி பேசினார் என்றால், மோடி அதிலே உணர்ச்சியைக் கலந்து, ரொக்கப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைக்காக “என்னை வாழ விட மாட்டார்கள்,” என்று பேசுகிறார். கறாரான தேசிய உணர்வுகள் மிதமிஞ்சிக் கிளப்பிவிடப்படுகிற இன்றைய காலகட்டத்தில், பணமதிப்பு ஒழிப்பு நடவடிக்கையை எதிர்க்கிறவர்கள் கொழுத்துப்போன துரோகிகள் என்றும், ஒரு மகத்தான தேசிய இயக்கத்தில் சிறிதும் அக்கறையற்றவர்களாக அதில் பங்கேற்பதற்கு மறுக்கிறார்கள் என்றும் சித்தரிக்கிற வேலையை பாஜக மிக நுட்பமாகச் செய்துவருகிறது.
மோடினமிக்ஸ் என்னும் விபரீதம்
சீர்குலைவான தனிமனித ஆளுமை, வலுத்தவரே வென்றவர் என்ற அரசியல், பழைய பாணியிலான நலவாழ்வுப் பொருளாதாரம் ஆகியவற்றைக் கலந்து கொடுக்கிறார் மோடி. இந்தக் கலவை, மாற்றத்துக்கான வாகனமாக, அரசாங்கத்தைக் குறைவாகச் சார்ந்திருக்கிற நிலைமைக்கு மாறாக, மிக அதிகமாகச் சார்ந்திருக்கிற நிலைமையைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. ‘70ம் ஆண்டுகளில் ஏற்கெனவே பார்த்ததுதான்’ என்ற இந்த அனுபவம் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துகிறது. “மோடினாமிக்ஸ்” எனப்படுகிற மோடி பாணி பொருளாதாரம், அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்கக்கூடிய, பிரிட்டனில் தாட்சர் கையாண்டது போன்ற ‘வலது மைய’ வகைப் பொருளாதாரம் அல்ல. மாறாக, இந்தியாவில், நாம் எதிர்காலம் என்ற பெயரில் கடந்த காலத்திற்குள்தான் நுழைந்துகொண்டிருக்கிறோம்.
பர்க்கா தத்
நன்றி: வாஷிங்டன் போஸ்ட் (2017, ஜனவரி 23 அன்று வெளியான கட்டுரை))
https://www.washingtonpost.com/news/global-opinions/wp/2017/01/23/narendra-modi-is-pulling-india-back-to-the-1970s/?utm_term=.b254d56d9436
தமிழில்: அ. குமரேசன்
குண்டன் மோடி தின்று விட்டு குசு விடத்தான் லாயக்கு . மோடிக்கும் இத்தாலியன் மாபியா சோனியாவுக்கும் இந்தியாவை பற்றி எந்த அக்கறையும் இல்லை. இருந்தால் மேட் இன் என்று சொல்லிவிட்டு சீனா செய்த சிலையை வெட்கமே இல்லாமல் திறந்து வைப்பானா. ரபேல் மூலம் அம்பானிக்கு பணம் வர வழி செய்வானா . சீனாவுக்கு டோக்லாமை தானம் கொடுத்துவிட்டு இந்திய வீரர்களை பாகிஸ்தான் தலை அறுப்பதை பார்த்து எல்லா ஓட்டைகளையும் மூடி பார்த்து கொண்டிருப்பானா
Desh-daaz
1/27/2017 11:31 PM GMT+0530 [Edited]
Dear WaPo,
First and foremost, since this biased article with overwhelmingly obvious negative perception of sincere efforts by our PM was approved by your editor, you may have some vested interest in painting us(Bharat/India) and our efforts black.
Second, IF you decide to take most liked comments below seriously (highly unlikely) and do some fact finding on this tainted, power-broker journalist, this link might be a good start. This clearly demonstrates how Barkha Dutt has preached and practised yellow journalism in India for over 2 decades.
http://deshdaaz.blogspot.com/2010/02/ndtv-lies-exp…
She is ALSO accused of putting lives of soldiers at forward posts in jeopardy back in 1999 Kargil War. At one point a VERY VERY senior army officer critisized her publicly without naming her. There are AMPLE of articles and video material available about that on Google.
But again, you have (your) reasons to hire such a crook so all I can do is write this comment here and alert fellow readers. Hopefully you will publish my comment!
LikeShare