மாமா ஜி : ராஜா ஜி வாங்க வாங்க
ராஜா ஜி : என்ன கொஞ்ச நாளா உங்களையும் பாக்க முடியல நம்ம ஆமா ஜியையும் பாக்க முடியல எங்க போய்ட்டிங்க ?
மாமா ஜி : தமிழிசை அக்கா என்ன தான் உருண்டு புரண்டாலும் யாரும் கண்டுக்கவே மாட்டேன்றாங்க அதுனால ஏதாவது செய்யுங்கன்னு கேட்டாங்க, அதுக்கு தான் ஊர் ஊரா சுத்தி “வளர்ந்து வரும் நட்சத்திரம்”னு ஒரு அவார்ட் ரெடி பண்ண போயிருந்தோம்.
ராஜா ஜி : நானும் கேக்கணும்னு இருந்தேன், இன்னுமா வளர்றாங்க ? யாரு ஜி இந்த அவார்டை குடுத்தது ? எப்படி ஜி குடுத்தாங்க ?
மாமா ஜி : சர்வதேச மனித உரிமை மற்றும் சமாதான அமைப்புனு ஒண்ணை தேடி கண்டுபிடிச்சு இந்த அவார்டை வாங்கி குடுத்திருக்கோம் ஜி சும்மா இல்ல
ராஜா ஜி : என்ன ஜி சொல்றீங்க, இப்படி ஒரு அமைப்பை நான் கேள்வி பட்டதே இலையே அதுவும் இல்லாம சமாதான அமைப்பு இவங்களுக்கு அவார்ட் குடுக்கற அளவு இவங்க அப்படி என்ன செஞ்சாங்க. இவங்களுக்கு சமாதானம்னாலே புடிக்காதே. எப்பயும் ஏதாவது சண்டை இழுத்துக்கிட்டே இருப்பாங்களே.
மாமா ஜி : மாணவர்கள் கத்தி கத்தி படிக்கலாம் ஆனா கத்தியோடு படிக்க கூடாதுனு அக்கா ஒரு அறிக்கை விட்டாங்க, அதை காட்டி கெஞ்சி கூத்தாடி வாங்கிருக்கோம் ஜி
ராஜா ஜி : நானும் இது மாதிரி பல விஷயம் சொல்லிருக்கேன் ஜி எனக்கும் ஏதாவது அவார்ட் ஏற்பாடு பண்ணக்கூடாதா ?
மாமா ஜி : ம்க்கும் கிழிஞ்சுது, நீங்க இப்படி சொன்னீங்கன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ள நான் சொல்லவே இல்ல அட்மின் தான் சொன்னான்னு எத்தனை முறை எங்களை மூத்திர சந்துல விட்டுருப்பீங்க. ட்வீட் போட்டா அட்மின் போட்டான்னு சொல்றது. ஏதாவது பேசுனா டப்பிங் பண்ணிட்டாங்கன்னு சொல்றது. அதையும் மீறி, நீதிமன்றம் கால்ல விழுந்து கதறி அழறது. உங்க அட்மினுக்கு கூட அவார்ட் வாங்கி தரலாம் உங்களை நம்ப முடியாது ஜி
ராஜா ஜி : ஜி அது எல்லாம் ரொம்ப காலம் முன்னாடி இப்போ எல்லாம் அப்படி இல்ல, சமீபத்துல நான் சொன்ன சொல்லையோ, போட்ட ட்வீட்டையோ திரும்பி எடுக்கவே இல்ல
மாமா ஜி : இது நீங்க போட்ட ட்வீட்டா பாருங்க
ராஜா ஜி : இது அந்த அட்மின் பயலோட வேலை தான், தீபவாளிக்கு லீவு கேட்டான் , நான் கொடுக்கல அதுனால சிக்க விட்டுட்டான்
மாமா ஜி : ஜி இது தான் சொன்னேன் உங்கள நம்பி எதுவும் செய்ய முடியாதுன்னு
ராஜா ஜி : சரி ஜி ஒத்துக்கறேன் இது நான் போட்டது தான். டெல்லினதும் கெஜிரிவால் மேல பாஞ்சுட்டேன் அப்பறம் தான் தெரிஞ்சுது போலீஸ் நம்ம கைல தான் இருக்குனு அதான் உடனே டெலீட் பண்ணிட்டேன்.
மாமா ஜி : அவார்ட் எல்லாம் ஒரு மேட்டர் இல்ல ஜி, அக்கா வாங்கினதையே ஒரு பய மதிக்க மாட்டேன்கிறான்.
ராஜா ஜி : அதுவும் சரி தான், ஆமா ஜி எங்க?
மாமா ஜி :சபரிமலை நடை திறக்கறாங்க, 10 ஆம்பளை ஆள், 5 பொம்பளை ஆள் வாங்க பிரச்னை பண்ணனும்னு கூப்பிட்டாங்க. நான் தான் பாவம் அனுப்பி வச்சேன், புடிச்சு உள்ள வச்சுட்டாங்க ஜி
ராஜா ஜி : எப்படி ஜி கண்டுபிடிச்சாங்க ?
மாமா ஜி : இருமுடி கட்டாம, செருப்பு போட்டுட்டு சுத்திகிட்டு இருந்திருக்கார் கழுத்துலயே அடிச்சு உக்கார வச்சுட்டாங்க ஜி
ராஜா ஜி : இந்த உண்டியல் குலுக்கி கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு சபரிமலையை வச்சே முற்றுப்புள்ளி வைப்போம் ஜி கவலைப்படாதீங்க
மாமா ஜி : இப்போ எல்லாம் நம்மல தான் ஜி உண்டியல் குலுக்கினு கூப்பிடறானுக அதுவும் டிஜிட்டல் உண்டி குலுக்கியாம். நம்ம கிட்ட இல்லாத காசா ஜி இவர் எதுக்கு தேவை இல்லாம 5கும் 10கும் இப்படி பண்றார்?
ராஜா ஜி : புரியாம பேசாதீங்க ஜி எல்லாம் டேட்டா, எவன் எவன் குடுக்கறான் எந்த ஊருல இருந்து குடுக்கறான் அப்போ எவ்வளவு ஓட்டு நிச்சயம் வரும்னு ஒரு கணக்கு தான் ஜி
மாமா ஜி : இதுக்கு தான் ஜி உங்கள மாதிரி படிச்ச நாலு பேரு விளக்கம் குடுக்கறதுக்கு இருக்கணும்ன்றது ஆனா பாருங்க இந்த ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டில உங்க பேரு அடிபடுதே ஜி ஆனா நான் நம்பல
ராஜா ஜி : அய்யோ நம்புங்க ஜி நான் போட்ட பிளான்லயே ஒர்க் அவுட் ஆன ஒரே விஷயம் இது தான்
மாமா ஜி : என்ன ஜி இப்படி செஞ்சுட்டிங்க உங்களால மோடி ஜிக்கு எவ்வளவு கெட்ட பேரு தெரியுமா
ராஜா ஜி : சும்மா இருங்க ஜி அன்னைக்கு பூரா இதை பத்தி தான் பேசினானுவளே தவிர 3000 கோடி தண்ட செலவை பத்தி யாராச்சும் பேசினாங்களா ?
மாமா ஜி : ஜி இதுக்கே உங்களுக்கு ஒரு அவார்ட் குடுக்கலாம் போலவே, அதை விடுங்க அடுத்ததா யோகி ஜி ராமருக்கு 150 மீட்டர் உயரத்துக்கு சிலை போடுறாராமே ஜி, நீங்க என்ன நினைக்கறீங்க
ராஜா ஜி : ராமருக்கு 150 மீட்டர்க்கு சிலை செய்வதை நான் வன்மையா கண்டிக்கிறேன்
மாமா ஜி : என்ன ஜி இப்படி சொல்றீங்க ?
ராஜா ஜி : சாமி சிலை எப்படி இருக்கனும் ?
மாமா ஜி : கோவப்படாம நீங்களே சொல்லுங்க ஜி எப்படி இருக்கணும் ?
ராஜா ஜி : சும்மா அம்சமா ஐம்பொன்னில் செஞ்சு, 3 அடி அல்லது 4 அடி கைக்கு அடக்கமா இருக்கணும். சுருக்கமா சொன்னா, தூக்கி கக்கத்துல வைக்கிற மாதிரி இருக்கணும்..
150 மீட்டருக்கு செஞ்சா எப்படி தூக்கறது ?
மாமா ஜி : என்னது தூக்கறதா?
ராஜா ஜி : அட எப்படி தூக்கி நிறுத்தறது, கஷ்டமாச்சேனு சொன்னேன் நீங்க வேற
மாமா ஜி : சரி ஜி பணமதிப்பிழப்பு நடந்து 2 வருஷம் ஆச்சு இன்னும் மறக்காம நம்மள வச்சு செய்யறானுங்க ஜி தாங்க முடியல
ராஜா ஜி : விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ஜி, இப்போ 2000 ரூபாய் நோட்டுல சிப் இருக்குனு கிளப்பி விட்ட ஆடிட்டர் ஜி RBI டைரக்டர் ஆனார் பார்த்தீங்களா ? இது மாதிரி ஏதாவது நடக்கும் ஜி கூச்ச படக்கூடாது. நான் கூட பட்டேல் சிலையில் ரேடார் இருக்குனு சொல்லலாம்னு இருக்கேன்
மாமா ஜி : நம்புவாங்களா ஜி
ராஜா ஜி : நான் தேசிய செயலாளர்னு சொன்னாலே நம்பறானுக இதை நம்ப மாட்டானுகளா? சொல்லற மாதிரி சொன்னா நம்புவானுக ஜி. ரொம்ப அடிச்சானுகனா இருக்கவே இருக்கான் நம்ம அட்மின்
மாமா ஜி : பாவம் யாரு பெத்த புள்ளையோ. சரி ஜி இந்த பொதுவா விஜய் படத்துக்கு ப்ரோமோஷன் எல்லாம் நாம தானே ஜி பண்ணுவோம் இந்த சர்க்கார் படத்துக்கு ஏன் அதிமுககாரங்க பண்றாங்க ?
ராஜா ஜி : நம்ம கிட்ட தான் காண்ட்ராக்ட் வந்துச்சு, 25 லட்சம் பேசி 1 லட்சம் அட்வான்ஸ் கூட வாங்கிட்டேன்
மாமா ஜி :அப்பறம் என்ன ஆச்சு ஜி
ராஜா ஜி : எவனோ கதையை திருடிட்டானு கேஸை போட்டு அந்த 25 லட்சத்தை வாங்கிட்டு போய்ட்டான்
மாமா ஜி : இன்னொரு 25 லட்சம் ரெடி பண்ணி தர சொல்ல வேண்டியது தானே ஜி
ராஜா ஜி : யாரு மாறன் கிட்டயா? கேடி பசங்க ஜி அவங்க. நானே பாத்துக்கறேன்னு கோமளானு பேரு வரும் போது எக்ஸ்ட்ரா சவுண்ட் ஏத்தி விட்ருக்கானுக பாருங்க. அப்படியே பத்திகிச்சு
மாமா ஜி : அதுக்காக இப்படியா ஜி டைரக்டரை அரெஸ்ட் செய்யற அளவுக்கு போறது ?
ராஜா ஜி : தொழில் சுத்தம் வேணும் ஜி, நாமளும் எத்தனை படத்துக்கு ப்ரொமோஷன் பண்ணிருப்போம். ஒரு பேனரை கிழிச்சிருப்போமா? இல்ல ஒரு சொட்டு ரத்தமாவது சிந்தி இருக்குமா ?
மாமா ஜி : அதானே, பத்மாவதி பிரச்னை அப்போ கூட, எங்க மண்டையை உடைச்சிடுவானுகன்னு பயந்து பாகுமதி தியேட்டர்ல போய் தானே பிரச்னை பண்ணினோம்
ராஜா ஜி : இப்போ தெரியும் ஜி அவனுகளுக்கு நம்மள பத்தி. அடுத்த படத்துக்கு வந்து நிப்பானுக பாருங்க
மாமா ஜி : முடியாதுனு சொல்லிடுவீங்களா ?
ராஜா ஜி : பேமென்ட் ஏத்திட வேண்டியது தான்.
.மாமா ஜி : அதானே, சரி ஜி நீங்க போட்ட இந்த டீவீட்டை மாத்தி போட்டு எல்லாம் உங்கள ரொம்ப கலாய்க்கறாங்களே ஜி ?
ராஜா ஜி : என்ன சொல்றானுக?
மாமா ஜி : “சிலையை திருடறதுனு முடிவு பண்ணிட்டா நல்ல சிலையா திருடுங்கடா” னு போட்டிருக்கானுக ஜி
ராஜா ஜி : அத்தனை பேரும் ஆன்டி இந்தியின்ஸ் ஜி , எல்லாரையும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தணும் ஜி
மாமா ஜி : நீங்க டென்ஷன் ஆவாதீங்க ஜி கூல் டௌன்
ராஜா ஜி : மூட் அவுட் பண்ணிடீங்க நான் கிளம்பறேன் .
மாமா ஜி : அவசரப்படாதீங்க ஜி. ஏன் கோவப்பட்றீங்க. இதுக்கெல்லாம் கவலைப்படுற ஆளா நீங்க ? ட்விட்டர்லயும், ஃபேஸ்புக்குலயும், எவ்வளவு கேவல கேவலமா கழுவி ஊத்தறானுங்க. அப்படி நீங்க ரோசப்பட்டா 2014லயே செத்துருக்கணும்.
ராஜா ஜி : அதுவும் சரிதான் ஜி. பிஜேபி யில இருந்தா நாறப் பொழப்புதானே பொழைக்கணும்.
மாமா ஜி : நாலு மாநிலத்துல தேர்தல் வருதே ஜி. கருத்துக் கணிப்பையெல்லாம் பாத்தா, மண்ணை கவ்விடுவோம் போல இருக்கே ஜி.
ராஜா ஜி : அவசரப்படாதீங்க ஜி. மோடி ஜி இன்னும் புல் ஃபார்முக்கு வரல. வந்தார்னா…. வந்தார்னா…
மாமா ஜி : வந்தார்னா ?
ராஜா ஜி : என்ன வழக்கம் போல ஒப்பாரி வைப்பாரு. ஏழைத் தாயின் மகன்னு சொல்லுவாரு. டீ வித்தவன்னு சொல்லுவாரு. காங்கிரஸ் கட்சியின் பூர்விகமே பாகிஸ்தான்னு சொல்லுவாரு.
மாமா ஜி : அப்போ இந்த வளர்ச்சின்னு சொன்னதெல்லாம் ?
ராஜா ஜி : என்ன ஜி லுச்சாத்தனமா பேசறீங்க ? ஒரே வருசத்துல நம்ப தேர்தல் நிதி 1000 கோடிக்கும் அதிகமா வளந்திருக்கு. உலகத்துலயே மிகப் பெரிய கட்சி அலுவலகத்தை 1.70 லட்சம் சதுர அடியில 1100 கோடி செலவுல கட்டியிருக்கோம். கட்சி வளந்திருக்கு. நம்ப அமித் ஷா ஜி தொப்பை வளந்திருக்கு. மோடி ஜி சொட்டை தலயில முடி வளந்திருக்கு. இதை விட என்ன வளர்ச்சி வேணும் ?
மாமா ஜி : அருமையா சொன்னீங்க ஜி. தமிழ்நாட்டுல யாரோட கூட்டணி ஜி ?
ராஜா ஜி : வேற யாரு ஜி. நம்ப அடிமைங்க கட்சிதான் ஜி.
மாமா ஜி : திராவிட கட்சிகள் நாட்டை சீரழிச்சிடுச்சின்னு நாம அடிக்கடி பேசுனோமே ஜி.
ராஜா ஜி : அலகு குத்தி, மொட்டை போட்டு, மண் சோறு சாப்புட்டு, டயரை நக்குறவனுங்க இருக்குற கட்சி எப்படி ஜி திராவிட கட்சியாகும். அது இல்லாம நில்லுன்னா நிப்பானுங்க. உக்காருன்னா படுப்பானுங்க. எந்திரிங்கடான்னா, வானத்தை பாத்து கும்புடுவானுங்க. இவனுங்களை மாதிரி விசுவாசமான கட்சியை நாம பாக்க முடியுமா ? அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியலன்னா, தமிழ்நாட்டுலயே கட்டுவோம் னு நம்பளை விட அதிகமா கூவுவானுங்க. இதை விட என்ன வேணும் ஜி நமக்கு ?
மாமா ஜி : அருமையா சொன்னீங்க ஜி. அடுத்த வாரம் பாக்கலாம் ஜி.
Super..
Nice one👍👍👍
மாமாஜி-ஆமாஜி…!
எங்கேயா போநீரு… எதிபார்த்து எதிபார்த்து கண்ணு பூத்து போய்விட்டதய்யா…!
இனிமே வாரம் வாரம் வாருமய்யா.
Current affairs la connectedடா இருக்கனும்ன்னா….சவுக்கு தளத்துக்கு வந்தா போதும்… 😇😇👏👏