உதய்பூரைச் சேர்ந்த நிழல் உலக தாதா எனக் கருதப்படும் அசாம் கான், சோராபுதின் ஷேக், அவரது சகா துளசிராம் பிரஜாபதி ஆகியோர் தொடர்பான போலி என்கவுண்டர் வழக்கில் கடந்த வாரம் சாட்சியாக ஆஜரானபோது, குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை பற்றிய தகவல்களை அளித்தார். ஹரேன் பாண்டியாவைக் செய்யும்படி தன்னிடமும் இன்னும் இருவரிடமும் கூறப்பட்டதாகவும், அப்படியே கொலை செய்ததாகவும் தன்னிடம் சோராபுதின் தன்னிடம் கூறியதாக அசாம் கான் தெரிவித்தார்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன் சாட்சியம் அளிப்பதற்கு முன், உதய்பூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட அசாம் கான், “நான் சோகமானேன், ஒரு நல்ல மனிதரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள் சோராபுதினிடம் சொன்னேன். வன்ராஜாதான் பாண்டியாவைக் கொலை செய்யச் சொன்னதாக சொராபுதீன் கூறினார்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் குஜராத் காவல்துறை உயர் அதிகாரியான வன்ஜரா என்கவுண்டர் வழக்கில் விடுவிக்கப்பட்டார்.
குறுக்கு விசாரணையின்போது, சிபிஐயிடம் அளித்த வாக்குமூலத்தில் ஏன் இந்தத் தகவல் இடம்பெறவில்லை எனக் கேட்கப்பட்டபோது, அப்படி இடம்பெற்றால் பெரும் பிரச்சினையாகிவிடும் என அதிகாரி ஒருவர் கூறியதாக அசாம் கான் தெரிவித்தார். நீதிமன்றம் இதைப் பதிவு செய்துகொள்ளவில்லை. “சோராபுதீனின் உத்தரவின் பேரில் துளசிராம் பிராஜாபதி மற்றும் இன்னொருவரால், ஹரேன் பாண்டிய கொலை செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரியிடம் கூறினேன். சிபிஐ பதிவு செய்த வாக்குமூலத்தில் இது இடம் பெறாமல் போக எந்தக் காரணமும் இல்லை” என அவர் மேலும் கூறினார்.
2003, மார்ச் 26இல், ஹரேன் பாண்ட்யா, அகமதபாத்தில் உள்ள லா கார்டன் அருகே தனது காரில் சுடப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார். 2002 கலவரத்திற்குப் பழிதீர்க்க முஸ்லிம் இளைஞர்கள் அவரைக் கொலை செய்ததாக சிபிஐ வழக்கு தெரிவித்தது. 2011 ஆகஸ்ட்டில், குஜராத் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்தது. 2011 டிசம்பரில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது.
விசாரணையின்போது, சோராபுதினை 2002இல் சந்தித்ததாகத் தெரிவித்தார். கூலிப்படையைச் சேர்ந்த ஜுபைர் என்பவர் மூலம் அவர் அறிமுகமானதாக கான் தெரிவித்தார். நாளடைவில் சோராபுதினுடன் மிகவும் நெருக்கமானதாகவும், கவுசர் பியை அவர் திருமணம் செய்துகொள்ளத் தான் உதவி செய்ததாகவும் கூறினார். சோராபுதினிடம் ஐதராபாத் செல்வதற்கான காரணம் பற்றி கேட்டபோது, தாவூத் இப்ராஹிமைப் பார்க்க விரும்பிய நிழல் உலக தாதா நயீம் கானைப் பார்க்கப் போவதாகக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். நயீமிடம் அவர், தாவூத் நாட்டுக்கு வெளியே இருப்பதாகவும், யாருடனும் பேசுவது இல்லை என்றும் கூறி, சோட்டா ஷகிலிடம் பேச ஏற்பாடு செய்வதாகக் கூறியதாகவும், அதற்கு நயீம் ஒப்புக்கொள்ளவே சோராபுதின் அதற்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
2004இல் பிராஜாபதி மற்றும் மேலும் ஒருவர், சோராபுதின் சொல்லி நிழல் உலக தாதா ஹமீத் லாலாவைக் கொலை செய்ததாகவும் கான் கூறினார். அந்த வழக்கில் 2005இல் தன்னையும் காவல் துறையினர் கைதுசெய்தார்கள் என்றும் 2009இல் தான் விடுவிக்கப்பட்டதாகவும் கூறினார். 2005 டிசம்பரில் போலீஸ் என்கவுண்டரில் சோராபுதின் கொல்லப்பட்டதாக நாளிதழ்களில் பார்த்துத் தெரிந்துகொண்டதாக அவர் கூறினார். ஹமீத் லாலா வழக்கில் கைதான பிரஜாபதி உதய்பூர் மத்தியச் சிறையில் தன்னைப் பார்த்தபோது, தன்னுடைய தவறு காரணமாக சோராபுதினும் கவுசர் பியும் கொலை செய்யப்பட்டதாக அழுதுகொண்டே கூறியதாகவும் அவர் தெரிவித்தார். ஹமீத் லால் கொலை வழக்கு மற்றும் பாபுல பில்டர் துப்பாக்கிச் சூடு வழக்கு தொடர்பான அரசியல் நெருக்கடி காரணமாக சோராபுதினைக் கைது செய்ய வேண்டிய சூழல் இருப்பதாக குஜராத் போலிஸ் மற்றும் வன்ஜரா கூறியதால் அவர்கள் இருப்பிடம் (2005 டிசம்பரில் சங்கலியிலிருந்து ஐதராபாதுக்கு பஸ்ஸில் சென்றனர்) பற்றித் தகவல் அளித்ததாக பிராஜபதி கூறியதாகவும் கான் மேலும் தெரிவித்தார்.
4 அல்லது 6 மாதங்கள் கழித்து சோராபுதின் ஜாமினில் வெளியே வந்துவிடுவார் என்றும், அகமதாபாத்தில் இருவரும் பெரிய தாதாவாக இருக்கலாம் என்றும் தனக்கு உறுதியளிக்கப்பட்டதாக பிராஜாபதி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. வன்ஜரா மற்றும் மேலும் இருவரால் பஸ்ஸில் கைது செய்யப்பட்ட பிறகு சோராபுதின், கவுசர் பி ஆகியோர் அகமதாபாத் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பிராஜபதி தன்னிடம் கூறியதாக கான் தெரிவித்தார். தன் கணவரைத் தாக்கியபோது கவுசர் பி குறுக்கிட்டதாகவும், அவர் வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு துப்பாக்கி சத்தம் கேட்டது, அதன் பிறகு கவுசர் குரல் கேட்கவில்லை என்றும் பிராஜபதி தன்னிடம் கூறியதாகவும் கான் தெரிவித்தார். “சோராபுதின் கொலை செய்யப்பட்ட துப்பாக்கி சத்தமும் கேட்டதாக பிராஜபதி கூறியதாகவும் கான் தெரிவித்தார். வன்ஜரா மற்றும் இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட இன்னொரு காவல் அதிகாரி அபை சுடசாமாவைத் தான் கொலை செய்ய விரும்புவதாக இன்னொரு கைதியிடம் பிரஜாபதி கூறினார் என்றும் கான் தெரிவித்தார்.
ஒருமுறை, அகமதாபாத்தில் தானும் பிராஜபாதியும் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது, தங்கள் உயிருக்கு ஆபத்து என நீதிபதியிடம் கூறியதாகவும் கான் தெரிவித்தார். உதய்பூர் கொண்டு செல்லப்படும்போது கைவிலங்கு மாட்டிக் கொண்டுசெல்லுமாறு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டதாகவும் இல்லை எனில், தப்பியோட முயன்றதாக என்கவுண்டர் செய்துவிடுவார்கள் என்று நீதிபதியிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு முறை, தான் ராஜஸ்தான் காவலர்களால் அழைத்துச்செல்லப்பட்டதாகவும். பிராஜாபதி அகமதாபாத்திற்குத் தனியே அழைத்துச்செல்லப்பட்டதாகவும் கான் கூறினார்.
“காவலர்களிடமிருந்து பிராஜாபதி தப்பிச் செல்ல முயன்றதாக காவலர் ஒருவர் என்னிடம் கூறினார். பின்னர் குஜராத் போலீஸ் என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாக அறிந்தேன். எங்களில் ஒருவர் சிறைக்குத் திரும்பி வர மாட்டோம் என்பதுதான் நாங்கள் கடைசியாகப் பேசியது” என்று கான் தெரிவித்தார்.
ரெபெக்கா சாமுவேல்
நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா
https://m.timesofindia.com/india/sohrab-said-vanzara-ordered-hit-on-haren-pandya-gangster-tells-court/amp_articleshow/66494293.cms?