2014 தேர்தலில் சுவிஸ் வங்கிகளிலிருந்து கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அது தொடர்பாக எந்தக் குறிப்பிட்ட தகவலையும் அளிக்கவில்லை. உண்மையில், 2017இல் சுவிஸ் கணக்குகளில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
2014 பொது தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்தபோது, நரேந்திர மோடி, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பல ஆயிரம் கோடி பணத்தை மீட்டுக் கொண்டுவருவேன் என்றும், ஒவ்வொரு இந்தியர்கள் கணக்கிலும் ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால் 2014 முதல் இப்போது வரை, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்கள் பணம் எவ்வளவு, இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ள அல்லது கொண்டுவர முயற்சிக்கப்படும் பணத்தின் அளவு அல்லது வரிகள் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்து எந்த தகவலையும் அளிக்கவில்லை. பிரதமர் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் பரிதாபமாகத் தோல்வி அடைந்துள்ளார். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
அரசு கையெழுத்திட்டுள்ளதாக, பெருமைப்பட்டுக்கொள்ளும், பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சி தலைமையிலான, வங்கிக் கணக்குத் தகவல்கள் தொடர்பாக நாடுகளுக்கு இடையிலான தானியங்கிப் பரிமாற்றத்திற்கான பொதுவான வெளியீட்டு தர நிர்ணய ஒப்பந்தம் ஒன்றும் வரி ஏய்ப்பை தடுப்பதற்கான மந்திர கோல் இல்லை. மத்திய நிதி அமைச்சகத்திற்கு இது தெரியும். முதலில், சி.ஆர்.எஸ். கீழ் பெறப்படும் தகவல்கள் வரி அல்லாத விஷயங்களுக்காகப் பல்வேறு உள்நாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. எனவே ஊழல் மற்றும் பணம் பதுக்கலில் இதைப் பயன்படுத்த முடியாது. இரண்டாவதாக, வரி ஏய்ப்பிற்காக வசிக்கும் நாட்டைக் குறுக்கு வழியில் பயன்படுத்திக்கொண்டு சி.ஆர்.எஸ்.ஐச் சமாளித்துவிடலாம். மேலும் ஒரு சில நிறுவனங்கள் முக்கிய தகவல்கள் கசியாமல் இருப்பதற்காக சி.ஆர்.எஸ்.ஐச் சமாளிக்கும் வழிகளை நாடலாம். இறுதியாக, அதிக நிகர மதிப்புள்ள பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் இணையாத அமெரிக்காவுக்கு தங்கள் கணக்குகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. பாரின் அக்கவுண்ட் டாக்ஸ் கம்ப்லயன்ஸ் சட்டத்தின் கீழ், பதில் தகவல் அளிப்பதாக உறுதிமொழியை அமெரிக்கா இன்னமும் நிறைவேற்றாத நிலையில், அமெரிக்க வங்கிகளில் பதுக்கி வைக்கப்படும் இந்தியர்களின் பணத்தை திருப்பி கொண்டு வருவது எப்படி சாத்தியம்?
வெளிநாட்டு வரி அமைப்புகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ள பெரும்பாலான வரி உடன்பாடுகள், பங்குதாரர்களிடையே தகவல்களைக் கோரிப் பரிமாறிக்கொள்வதற்கு வழி செய்கிறது. கோரிக்கை மூலம் தகவல்களைப் பெறுவது தொடர்பாக அரசு இந்தியாவின் சில வரி உடன்பாடுகளில் திருத்தம் செய்துள்ளது. ஆனால், கோரப்படும் தகவல்கள் வரி உடன்பாடு அல்லது வருமான வரி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இருக்க வேண்டும் என்பதை நிதி அமைச்சகம் அறியும். வரி செலுத்துபவர் தொடர்பான குறிப்பிட்ட குற்றவியல் தகவல்கள் இல்லாமல் இருப்பது தான், தகவல் பரிமாற்ற ஏற்பாட்டை ஏற்க வைக்கிறது. பெரும்பாலான வழக்குகளில், வெளிநாட்டு வரி அமைப்புகள் பலவித காரணங்களுக்காக கோரிக்கைகளை தாமதப்படுத்தலாம் அல்லது நிராகரிக்கலாம்.
அரசு, வரி செலுத்தாமல் இருப்பதை கறுப்புப் பணத்துடன் தவறுதலாக குழப்பிக்கொள்கிறது. இந்தியா ஆண்டுதோறும் வர்த்தக வரி ஏய்ப்பால் கோடிக்கணக்கான டாலர்களை இழக்கிறது. ஆனால் வர்த்தக வரி செலுத்தாமல் இருப்பது மற்றும் கறுப்புப் பணம் வேறு வேறு தீர்வுகளை நாடும் வேறு பிரச்சனைகள். வரி சலுகையை பெற வரி உடன்பாடுகளை தவறாக பயன்படுத்திக்கொள்வதை வருமான வரி சட்டம் தெரிவிக்கும் வரி தவிர்ப்பு பிரிவு மூலம் எதிர்கொள்ளலாம். இந்திய வர்த்தக வரி தொடர்பான அண்மைக்கால மாற்றங்கள் வர்த்தக வரி ஏய்ப்பு தொடர்பாக உள்ளனவே தவிர, நாடுகளுக்கு இடையிலான வரி ஏய்ப்பு அல்லது சட்டவிரோத நிதிப் பரிமாற்றம் தொடர்பாக இல்லை.
சுவிஸ் தேசிய வங்கி தகவல்படி, 2017இல் இந்தியர்கள் சுவிஸ் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்த பணம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இவை எல்லாம் கறுப்புப் பணம் அல்ல ஆனால், இவை வெள்ளை பணமும் அல்ல. (சுவிஸ் வங்கி கவர்ச்சியான வட்டி அளிப்பதில்லை). உண்மை என்னவெனில், இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்குவதை தடுக்க நான்கு ஆண்டுகளில் அரசு அதிகம் செய்யவில்லை என்பது தான். கணிசமான கறுப்புப் பணம் கொண்ட வழக்குகளை, குறிப்பாக வெளிநாட்டு வங்கி மற்றும் கணக்கில் வராத பணம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மோடி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தார். இந்தக் குழு என்ன கண்டுபிடித்தது? நான்கு ஆண்டுகளில் எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டு கறுப்புப் பணம் எவ்வளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த நாடுகளிடம் இருந்து எந்த தகவல்கள் பெறப்பட்டன. எந்த பதிலும் இல்லை.
உலக பசி பட்டியலில் 119 நாடுகளில் இந்தியா 103ஆவது இடத்தில் உள்ளது. வரி வருவாயில் கோடிக்கணக்கான டாலர்களை இழக்கிறது. இந்த பணம் வறுமையால் ஏற்படும் மரணங்களை தடுத்து நிறுத்தும். மோடி அரசு மக்களுக்கு நல்ல நாள் என்ற வாக்குறுதி அளித்தது. அந்த நாள் இன்னும் வராமலே இருக்கிறது.
ஆசிஷ் கோயல்
நன்றி: தி டெலிகிராஃப்
https://www.telegraphindia.com/opinion/modi-s-achhe-din-remains-a-distant-dream/cid/1674777#.W-k-vjK3j1w.twitter