செயலற்றுப் போய்விட்ட இந்திய நிதித்துறையை சரிசெய்ய ஒரு புரட்சியே கூட தேவைப்படலாம்
பதவிக் காலம் முடிந்து மிண்ட் ஸ்ட்ரீட்டிலிருந்து ராஜன் வெளியேறியது யாருக்கும் தெரியமலே நடந்தேறிவிட்டது. வங்கி ஊழியர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தான் வெளியேறுவது பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். 2013இல் பதவியேற்றபோது இந்தோனேசியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளோடு ‘பலவீனமான நிலையில்’ இந்தியப் பொருளாதாரம் இருந்ததாகவும் அந்நிலையிலிருந்து நாட்டை விடுவிக்க தனது முதல் அறிக்கையிலேயே குறிப்பிட்ட, கவனத்துடன் தயாரிக்கப்பட்ட ஒரு திட்டத்தை உருவாக்கியதாகவும் அக்கடிதத்தில் கூறியிருந்தார். அத்திட்டத்துக்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து, ருட்யார்ட் கிப்ளிங்கின் பின்வரும் வார்த்தைகளில் ஆதரவு கண்டதாகவும் கூறுகிறார்:
“சுற்றிலுமுள்ள பிறர் தோற்று நீங்கள் ஜெயிக்கும்போது உங்கள் மீது பழி போட்டாலும், பிறர் உங்களது திறமையை சந்தேகித்தபோதிலும் உங்களுக்கு அதில் நம்பிக்கை இருந்து, காலவிரயம் செய்யாமல் பணிபுரிந்தால், இவ்வுலகம் உங்களுக்கே; உங்களை அனைவரும் நிமிர்ந்து பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை!”
இவை மிகப்பொருத்தமான சொற்கள்தாம். ராஜன் பதவியேற்ற ஓராண்டுக்குள் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. அந்நிய நாட்டு அறிவை விட உள்ளூர் அறியாமை சிறந்தது என்று நம்பிய அக்கட்சி வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தனது பதவிக் காலம் முடிவதற்குள் திட்டமிட்ட அனைத்துச் சீர்திருத்தங்களையும் அமல்படுத்தினார் என்றே சொல்லலாம். இரண்டாவது முறை கவர்னர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர் இருக்க, அவரை அவமானப்படுத்தும் விதமாக பதவி காலி என்ற அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. குறிப்பறிந்து கொண்ட ராஜன், மூட்டையைக் கட்டிவிட்டார். இந்தியப் பொருளாதார நிலை குறித்து அவரை விட யாருக்கு அதிகம் தெரிந்திருக்க முடியும்; 2 ஆண்டுகள் கழிந்த பின் ராஜன் நாடாளுமன்றத்தின் மதிப்பீட்டுக் குழுவுக்கு பதில் தந்து தன் மௌனத்தைக் கலைத்திருக்கிறார்.
செயல்படாத சொத்துக்கள் (வாராக் கடன்கள் முதலானவை) உருவானது பற்றிய கேள்விக்கு இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்யவில்லை என்ற அவர், சில காரணைங்களையும் பட்டியலிட்டுள்ளார்: 2006-08 ஆண்டுகளில் காணப்பட்ட வளர்ச்சி வங்கிகளை அதிக கடன் தரத் தூண்டியது; பின்னர் நிகழ்ந்த பொருளாதாரத் தொய்வால் பல கடன்கள் வாராக் கடன்களாகின. மன்மோகன் சிங் அரசின் மெத்தனமும் முடிவெடுக்காத நிலையும் கட்டமைப்புத் திட்டங்களை தாமதப்படுத்தி திட்டச்செலவினங்களை அதிகரித்து, முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, வங்கியாளர்களிடையே ஊழலை அதிகரித்து விட்டது.
வாராக் கடன்களைத் திரும்பப் பெறுவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த ராஜன் இது மிகப் பழைய பிரச்சினை என்றும் 1993ஆம் ஆண்டின் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் சட்டம் மற்றும் 2002ம் ஆண்டின் செக்யூர்ட்டி இண்ட்ரஸ்ட் சட்டப்படி ரிசர்வ வங்கி முயற்சி மேற்கொண்டதாக கூறுகிறார். எல்லா இந்திய நீதிமன்றங்கள் போலவே ரிசர்வ் வங்கியின் (RDBFIA) கடன் வசூலிக்கும் தீர்ப்பாயமும் (DRT) ஆமை வேகத்தில் பணி புரிந்தது: ஆறு மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும், ஆனால் ஆண்டு முடிந்த பின்பும் கால்வாசி வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டிருந்தன. SARFAESI சட்டப்படி நீதிமன்றம் போகாமலேயே கடன் வாங்கியவர் சொத்துக்களை வங்கிகளால் முடக்க முடியும். ஆனால் பெரும் பணமுதலைகள் இதை சட்டரீதியாகத் தடுத்து, கடன் கொடுத்த வங்கிகளிடையே மோதலையும் தூண்டி விட்டனர். ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் இதைக் காட்ட விரும்பாத வங்கிகள் கடன் வாங்கியவருக்குக் கடனைத் திரும்பத் தர நீண்ட காலம் தந்தன.
பெருங்கடன் பற்றி ரிசர்வ் வங்கி உருவாக்கிய தகவல் வங்கி மூலம் வாடிக்கையாளர்கள் வேறு யாரிடமிருந்தெல்லாம் கடன் வாங்கியுள்ளனர் என வங்கிகளால் அறிய முடிந்தது. ரிசர்வ் வங்கி உருவாக்கிய வியூகக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் (Strategic Debt Restructuring scheme) வாயிலாக தான் கொடுத்த கடனை ஈக்விட்டியாக மாற்றி போதுமான ஈக்விட்டி இல்லாத கடனாளிகளின் நிறுவனங்களை பறிமுதல் செய்ய வங்கிகளால் முடிந்தது. 5-ஆண்டுக் கடனை 25-ஆண்டுக் கடனாக நீட்டித்தன. வங்கிகள் நீதிமன்றம் போகமல் கடன் வசூலிக்கும் கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உருவாக்கியது. துரதிருஷ்டவசமாக, இக்கட்டமைபு தோல்வியடைந்தது: அரசுடைமை வங்கிகள், வங்கி மேலாளர்களுக்கு கடன் வசூலித்தாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. அதனால் 2015இல் அனைத்து வங்கிகளின் வாராக் கடன்களைப் பரிசீலித்த ரிசர்வ் வங்கி தன் சொத்துத்தர மறுபரிசீலனையில் அனைத்தையும் சுட்டிக்காட்டியது.
இக்கடன் மீதான செயல்பாட்டை விரும்பாத வங்கிகளும் கடனாளிகளும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் கடன் வாங்கும் செயலையும், ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் அழித்துவிடும் எனப் பிரசாரம் மேற்கொண்டனர். பாராளுமன்றக்குழு இக்கேள்வியைக் கேட்டபோது, அதை மறுக்க ராஜன் மிக விரிவான பதிலைத் தந்தார். அரசுடைமை வங்கிகள் விவசாயம், தொழில் துறைக்குத் தரும் கடன்கள் 2014-லேயே குறைய ஆரம்பித்ததை குறிப்பிட்டார்; அதேசமயம் தனியார் வங்கிகளின் கடன் (தரும் அளவு) குறையவில்லை எனவும் அவர் கூறினார். அரசுடைமை வங்கிகள் வாராக்கடனை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்காததால்தான் கடன் (தரும் அளவு) குறைந்ததே தவிர ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அல்ல என்று அவர் வாதிட்டார்.
ரிசர்வ் வங்கியின் சொத்துத்தர மறுபரிசீலனைக்குப் பின்னரும் வங்கிக் கடன் வசதிகள் மேம்படாதது ஏன் என்ற கேள்விக்கு தான் பதவி விலகிய பின்னர் இருக்கும் நிலைமையை ஊடகம் மூலம் மட்டுமே தெரிந்து கொண்டதாக அவர் பதிலளித்தார். பிரசினை பெரிதான பின்னரும் கடனை வசூலிக்க அரசு வங்கிகள் பெரிய அளவு முயற்சி மேற்கொள்ளவில்லை என்றும், கடன் திரும்ப வராவிட்டால், பழிபோட ஆள் இருப்பதால் நீதிமன்றம் அல்லது பெரும்புள்ளீ அங்கீகரித்தால் கடன் தர அவைகள் தயாராக இருந்தது என்றும் தெரியவந்தது. பெருங்கடனாளிகள் பழைய கடனைத் தராததால், புதுக்கடன் பெறவில்லை; ஆனால் போலிகள் மூலம் அக்கடனை தள்ளுபடி முறையில் அவர்கள் திரும்பத்தர முயன்றனர். நீதிமன்றத் தாமதங்கள் அவர்களுக்குப் பேருதவியாக இருந்தன. வங்கிகளின் மெத்தனமும் வங்கி முதலீடுகளை (கடன் மூலம்) திரும்பப்பெற உதவியாக இல்லை.
தீர்வு பற்றிக் கூறிய ராஜன், வங்கி நிர்வாகம் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என்றார்; அரசுத் தலையீடு இருக்கக் கூடாது என்பது அவர் வாதம். கடன் (தருவதற்கான) இலக்கு நிர்ணயிக்காமல், வங்கிகளைக் கடன் வசூலிக்க அலையவிடாமல் இருக்க வேண்டும் என்றார். தற்போதைய பாஜக அரசு வாரி வழங்கியுள்ள ‘முத்ரா’, ‘கிசான் க்ரெடிட் கார்டு’ கடன்களும், சிறு / குறு / நடுத்தரத் தொழிலகங்களுக்கு இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கொடுத்துள்ள கடன்களும் வெகு சீக்கிரமே வாராக் கடனாக ஆகலாம். கடன் தரும் / வசூலிக்கும் திறனுக்கேற்ப வங்கி அதிகாரிகளுக்கு தண்டனை / பரிசு / பதவி உயர்வு தர வேண்டும் என்றார்.
ராஜன் சொல்லாமல் விட்டது என்னவென்றால் செயலற்றுப் போய்விட்ட இந்திய நிதித்துறையை சரிசெய்ய ஒரு புரட்சியே – அரசுத் தலையீட்டை விடுவிப்பது, ஈக்விட்டியை விரிவாக்குவது, பாண்டுகள், பில்கள், ஈக்விட்டி, தேர்வுகளில் பரபரப்பான சந்தையை உருவாக்குவது உள்ளிட – கூட தேவைப்படலாம் என்ற உண்மையே. அவர் சொன்னதையோ (அல்லது அவருக்குப் பின் பதவியேற்றவர் சொல்வதையோ) நிதி அமைச்சகம் புரிந்து கொள்ளவில்லை, அல்லது கேட்கவில்லை.
அசோக் வி தேசாய்
நன்றி: தி டெலிகிராஃப்
https://www.telegraphindia.com/opinion/what-former-rbi-governor-raghuram-rajan-said-and-did-not-say-about-india-s-financial-and-banking-sector/cid/1677478