புகழ்பெற்ற ஒரு பஞ்சாப் பழமொழி அனைவருக்கும் பொருந்தும்: ‘லாகூரில் வேலைக்கு ஆகாதவன் பெஷாவரிலும் அப்படித்தான் இருப்பான்’.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இன்றைய அரசியல் சூழலில் இப்பழமொழி கச்சிதமாகப் பொருந்துகிறது. பாஜகவின் பெரும் தேசியப் ‘பிரிவினைவாதி’ போல அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அவர் வன்முறையை விதைத்துவருகிறார். விசுவாசிகளின் கற்பனைக்குத் தீனி போட்டு பின்னர் மலிவான குயுக்திகளால் அவர்களுக்குக் கேளிக்கை வழங்குகிறார். இதெல்லாம் செய்யாவிட்டாலும் அவர்களது வாக்கு பாஜகவுக்குத்தான்; தனது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி பிறரை ஒப்புக்கொள்ள வைக்க அவரால் முடியவில்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது.
பிரதமராக நரேந்திர மோடியின் மாபெரும் தவறு பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று இதுவரை சொல்லிவந்தேன், ஆனால் இப்போது என் எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டேன்.
பணமதிப்பிழப்பு என்பது தொடர்ந்து மாபெரும் தவறாக இருந்து வருகிறது. அதன்பின் நடைபெற்ற உ.பி. தேர்தல்களில் பாஜக வென்றாலும், யோகி ஆதித்யநாத்தைத் தேர்வு செய்ததன் மூலம் மோடி அவ்வெற்றியைப் பாழாக்கிவிட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது; யோகி ஆதித்யநாத்தால் மோடியில் அரசியல் எதிர்காலமே நாசமாகிவிடலாம்.
ஆதித்யநாத்தின் பிரச்சினை, கொடுத்த வேலையை ஒழுங்காக்கச் செய்யவில்லை என்பதல்ல. உ.பி. மட்டுமன்றி நாட்டின் இதர பகுதிகளிலுள்ள இந்துக்களை ஓரணியில் சேர்ப்பது அவரது வேலை, அதை அவர் அருமையாகச் செய்துவருகிறார்.
கட்சித் தலைமையின் அனுமானங்களை அவர் பொய்யாக்குவதே பிரச்சினை: தங்களால் அவரைக் கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் நினைத்தார்கள். நாடு முழுதும் ஒரு சர்வாதிகார அதிரடிப்படை வீரனைப் போல் சுற்றி வந்து. உ.பி. யில் நல்லாட்சி நடத்தி, (மக்களவை) தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உருவாக்க வேண்டும். உ.பி. யில் குறைந்தது 50 பாராளுமன்றத் தொகுதிகள் கிடைக்காவிட்டால் தேசிய அளவில் 250 தொகுதி கிடைப்பதே பாஜகவுக்கு மிகவும் கடினமாகிவிடும்.
ஈந்த இரண்டு அனுமானங்களும் இப்போது அடி வாங்குகின்றன. உ.பி.யில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் அவரால் கட்சியை ஜெயிக்கவைக்க முடியவில்லை, வேறெங்கிலும் அவரது பிரசாரத்தால் பெரும் மாற்றமும் ஏற்படவில்லை. ‘லாகூரில் வேலைக்கு ஆகாதவன் பெஷாவரிலும் அப்படித்தான் இருப்பான்’ என்பது போல்தான் இவரது நிலை.
தேசிய அளவில் பிரசாரம் செய்துகொண்டே மோடியால் குஜராத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்போது, யோகியாலும் அப்படிச் செய்ய முடியும் என்று சொல்லப்பட்டது. ஆனால் மோடி குஜராத்தில் 12 ஆண்டு ஆட்சி நடத்தியிருக்கிறார்; யோகியால் மோடியாகிவிட முடியாது. இந்துத்துவக் கொள்கைகளை குஜராத்தில் 2013-14இல் மூட்டை கட்டி வைத்துவிட்டு வந்த மோடி குஜராத்தின் சீரமைக்கப்பட்ட, வளர்ச்சி பெற்ற மாதிரியை நாட்டுக்குக் காட்ட முனைந்தார். யோகியோ தனது கோரக்பூர் பாணியிலான பசு பக்தர் வகை இந்துத்துவத்தைப் பரப்ப முனைகிறார், உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பிரிவினைவாதம் ஓங்கிவிட்டது. அவர் வளர்ச்சியால் மூளையற்ற, அரைகுறையாகப் படித்த, வேலையற்ற காவிப் படையினர் நாடெங்கிலும் முளைக்க ஆரம்பித்துவிடுவர். பிறர் மீது அவர் ஏவிவிடும் அபாயமான உணர்வுபூர்வ, உடலியல் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது கடினம்.
காங்கிரஸ் அற்ற ஒரு பாரதத்தை உருவாக்கி அதில் வாழும் தம் கனவை நனவாக்க மோடியும் ஷாவும் முயல்கின்றனர். உ.பி.யில் முஸ்லிம்கள் அற்ற அதிகார மையத்தை யோகி உருவாக்கிவருகிறார். இதையே பிற மாநிலங்களுக்கும் பரப்புவதே அவரது திட்டமாகும்.
இவரது அலி Vs பஜ்ரங்பலி, ஹனுமானும் ஒரு தலித்தே, ஒவைஸி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், காங்கிரஸுக்கு திப்புவைப் பிடிக்கும்; ஹனுமானைப் பிடிக்காது, ஹைதராபாத் சீக்கிரமே பாக்யநகராகி விடும், போலீஸ் அதிகாரி ‘விபத்தில்’ இறந்ததும் பசுவை யார் கொன்றது என்று கேட்பது ஆகியவை கட்சித் தலைவர்களை தர்மசங்கடமாக்காம
ல் இருக்கலாம். மற்றவர்கள் சொல்லாததைச் சொல்வதுதான் அவரது இயல்பு. ஆனால், இம்முயற்சியில் அவர் நீண்ட தூரம் கடும் வேகத்தில் தனியாகப் பயணித்துவருகிறார்.
அவர் பேசும் பாணி கட்சித் தலைவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கவில்லை எனில், அவர்களுக்கு இவரால் என்னதான் பிரச்சினை? இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இத்தகைய பேச்சுக்களால் ஓட்டுகள் கிடக்கவில்ல. ஆனால், அவர் கட்சியின் மிக முக்கியப் பிரசாரகராக ஆகிவிட்டார். தேர்தல் நடந்த மாநிலங்களில் அவரது சமீபகாலப் பயணங்களின்போது வேட்பாளர்கள் அவரது பிரசாரத்தை மிகவும் விரும்பியது தெரிந்தது. மக்களைப் பிரித்து வைப்பதில் இந்தியாவிலேயே மிகவும் திறமையானவர் இவர்தான் என்ற முறையில், தலைவர்களை விடவும் அவர் வளர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலேயே பெரிய மாநிலம் அவரது கைவசம் இருப்பதால் அவரை ‘பாஜகவின் நவஜோத் சித்து’ என நிராகரித்துவிட முடியாது. கட்சியின் சித்தாந்தம் என்று வரும்போது, மோடி, ஷாவை விட இவர் ‘அசலானவர்’.
பிரவீண் தொகாடியா இம்மாதிரி நடந்துகொண்டபோது அவரை அடக்கியது இதே மோடிதான். ஆனால் யோகியை அவ்வளவு எளிதாக அடக்க முடியாது. யோகி ஒன்றும் மொட்டை அடித்துக் காவி உடை தரித்த தொகாடியா அல்ல. அயோத்தியில் கோயில் கட்ட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் ஒரு பிரிவினருக்கு அவர்தான் தற்போதைய ஆன்மிகத் தலைவர். கட்சித் தொண்டர்களிடையே அவருக்கு ஆதரவு பெருகிவருகிறது. தனது வருங்காலக் கனவு எது என்று அவர் அவ்வளவாகச் சொன்னதில்லை. தைனிக் ஜாகர்ன் நடத்திய மாநாட்டில் தனக்கு அதிகாரமிருந்தால், (ராமர்) கோயில் பிரச்சினைக்கு 24 மணிநேரத்தில் தீர்வு கண்டுவிட முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
யோகியால் இப்போதைக்கு மோடிக்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனால் அவர் பெரிய பிரச்சினையாக வளர்ந்து கொண்டிருக்கிறார். குஜராத்தை விட்டு மோடி வெளியே வந்தபோது இருந்த நிலைமை போலன்றி, யோகியின் சொந்த மாநிலமே அவரது கையை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. மோடியின் பிரசாரத்தால் உண்டான ஆக்கபூர்வ உணர்வை வேலையில்லாத் திண்டாட்டம், வெறுப்பு ஆகியவை அழித்து விட்டன, கோரக்பூர் தவிர யோகிக்கு வேறெங்கும் வாக்கு கிடைக்கவில்லை. பசு தொடர்பான வன்முறையை அவரது கட்சி வேண்டுமானால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். ஆனால் குறைந்துவரும் அவரது அரசியல் ஆளுமை / கட்டுப்பாடு கட்சிக்கு கவலை தரும் ஒரு விஷயம்தான். சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைக்கவில்லை என்றாலும் ஐந்து மாதங்களுக்குள் நடக்கப்போகும் பொதுத்தேர்தலில் (உ.பி.யில்) பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?
சாணக்கிய தந்திரங்களில் வல்லவர்களான மோடியும் ஷாவும் சேர்ந்து ஒரு ‘அரக்கனை’ உருவாக்கிவிட்டனர் என்பதே நிஜம். தன் மாநிலத்தையும் நாட்டின் இதர பகுதிகளையும் அவரால் பிரிக்க முடியும், ஆனால் தேர்தல் வெற்றியை ஈட்ட முடியாது. ஆயினும், 2019இல் கட்சிக்கு மக்களவையில் தேவையான தொகுதிகள் கிடைக்கத் தவறினால், யோகி கட்சியில் மிக முக்கியமானவராக ஆகிவிடுவார். அடுத்த ஆறு மாதங்களுக்கு அவரை சுதந்திரமாகச் செயல்படவிட்டால், நாடு முழுதும் சமூகக் கட்டமைப்பை அழித்து சிறுபான்மையினரை வெறுக்கும் கட்சி விசுவாசிகளுக்கு அவர் மிக நெருக்கமானவராக ஆகிவிடுவார். மோடியைப் பொறுத்தவரை தேர்தல் ஆண்டில் இப்போது யோகியால் எந்தப் பலனும் இல்லை. அவர் தருவதெல்லாம் இதுதான்: தவறான பார்வை, மோசமான ஆட்சி, மோசமான அரசியல்.
அதனால்தான், கட்சியின் மூன்றாவது பெரிய தலைவராக இருக்கும் யோகியை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையைவிட மோடி புரிந்த மாபெரும் தவறு என்கிறோம்!
சேகர் குப்தா
Savukku really savukku …. please send your posting to my mail too. Thank you