மாமா ஜி வீட்டுக்கு விரைகிறார் ஆமா ஜி
மாமா ஜி : முக்கியமான நாள் அதுவுமா லேட்டாவா வருவீங்க?
ஆமா ஜி : ரொம்ப நாள் கழிச்சு வெற்றிவிழா கொண்டாட போறோம் அதான் facebookல கெத்தா 4 போஸ்ட் போட்டுட்டு வரேன்
மாமா ஜி : எதுக்கு ஜி அவரச படறீங்க? எனக்கே ஒரே பதட்டமா இருக்குனு bp மாத்திரை போட்டுட்டு இருக்கேன்
ஆமா ஜி : எதுக்கு ஓய் பயப்படறீங்க நாம தான் ஜெயிக்க போறோம்.
மாமா ஜி : பயப்படாம என்ன ஜி பண்றது, இந்த போட்டோவை பாருங்க
ஆமா ஜி : என்ன ஜி பாண்டா கரடி படுத்து கெடக்குது
மாமா ஜி : நம்ப அமித் ஷா விழுந்து கிடக்கறாருங்க. அமித் ஜிய பார்த்தா பாண்டா கரடி மாதிரியா இருக்கு ? இந்த வீடியோவை பாருங்க
ஆமா ஜி : என்ன ஜி சகுனமே சரி இல்ல
மாமா ஜி : இப்போ தெரியுதா நான் ஏன் பயப்படறேனு? இத விடுங்க ஜி கருத்து கணிப்பு எல்லாம் என்ன சொல்லுது ?
ஆமா ஜி : கருத்து கணிப்பு எல்லாம் காறி துப்புது ஜி
மாமா ஜி : இது கருத்து கணிப்பு இல்ல ஜி கருத்து திணிப்பு
ஆமா ஜி : என்ன ஜி எதுகை மோனையா பேசறீங்க ?
மாமா ஜி : இப்போ தான் ஒரு 10 நிமிஷம் தமிழிசை அக்கா கூட பேசிட்டு இருந்தேன் ஒட்டிக்கிச்சு. அத விடுங்க இந்த கருத்து கணிப்பை பாருங்க
ஆமா ஜி : ஜி இவன் பெரிய பிராடு பையன் ஜி இவன் போடற நியூஸ் நான் நம்ப மாட்டேன்
மாமா ஜி : என்னய்யா இப்படி சொல்லிட்டே? பக்தாள் எல்லாம் விரும்பி படிக்கும் ஒரே நியூஸ் இது தான் ஜி
ஆமா ஜி : இந்த பத்திரிகை ஆசிரியர் போட்ட ட்வீட் பாருங்க, டிசம்பர் 8 எல்லா இந்தியர்களும் சந்தோசப்படும் படி மோடி ஒரு அறிவிப்பு விடபோறார்னு நியூஸ் போட்டான்
மாமா ஜி : அப்படி ஒன்னும் மோடி ஜி அறிவிச்ச மாதிரி தெரியலையே
ஆமா ஜி : உண்மை தான் ஜி இவனை நம்பி நானும் புது 2000 செல்லாதுனு சொல்லிடுவாரோன்னு நெனச்சு, இருந்த 1 லட்சம் ரூபாய் கட்டையும் பாதி விலைக்கு வித்துட்டேன் ஜி
மாமா ஜி : அளவுக்கு அதிகமா மாட்டு மூத்திரம் குடிக்காதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா. அந்த ஆளை விடுங்க நம்ம ராஜா ஜி போஸ்ட பாருங்க
ஆமா ஜி : இப்போ தான் ஜி கொஞ்சம் நிம்மதியா இருக்கு. ஆமா ராஜா ஜி பூத் ஏஜென்ட்டா எங்கயும் போகலையா ?
மாமா ஜி : பூத் பக்கம் காலடி எடுத்து வச்சா கண்டம் ஆய்டுவேன்னு கட்சிக்காரனுக எல்லாம் திட்டிட்டானுக ஜி
ஆமா ஜி : கர்நாடகா தேர்தலில் இவர் ஏஜண்டா போன பூத்தில் நோட்டா நம்மள ஓவர் டேக் அடிச்ச காண்டா இருக்கும் ஜி . ஆனா ஜி இவர் எல்லா தேர்தலுக்கும் பூத் ஏஜண்டா போறதே அங்க இருக்க கோவிலுக்கு போய் சிலையை ஆராய்ச்சி செய்ய தான்னு சொல்ராங்களே உண்மையா
மாமா ஜி : இருக்கும் ஜி படேல் சிலை ஏன் பெருசா செஞ்சாங்கன்னு சண்டைக்கு போய்ட்டாராம் ஜி. சிலைன்னா கையடக்கமா இருக்க வேண்டாமான்னு கேட்டாராம். சிலைன்னாலே நினைவுக்கு வர்ற அளவுக்கு எவ்வளவு பெரிய ஆளு நம்ம ராஜா ஜி ?
இந்த ஆன்டி இந்தியன்ஸ் எப்படி அசால்ட்டா அசிங்க படுத்தறானுக பாருங்க ஜி
ஆமா ஜி : இயக்கத்தில் தான் பாண்ட் போட சொல்லியாச்சே இவரு ஏன் ஜி இன்னும் இந்த அரை டவுசர் போட்டுட்டு சுத்தறார்?
மாமா ஜி : காக்கி டவுசர் மத்திய அமைச்சர் நித்தின் கட்கரிக்கு தான் நல்லா இருக்கும்னு எவனோ சொல்லிருக்கான் அது தான் வீம்புக்கு இவரு லைன் மேன் டவுசரை புடுங்கி போட்டிருக்கார்
ஆமா ஜி : வாவ் என்ன ஜி இது பதினோரு மணி காட்சி மாதிரி கிளாமர் பின்னுது
மாமா ஜி : ஜி. ஆம்பளை ஜி அது. இப்படி காஞ்சு போய் கிடக்கறீங்க ? அவரை விடுங்க, இன்னைக்கு எப்படியும் ஜெயிக்க போறோம், ராஜஸ்தானில் கக்கூஸ் காண்ட்ராக்ட் எதுவும் வேணுமா ஜி ? சொல்லுங்க செஞ்சிடுவோம்
ஆமா ஜி : கர்நாடகா தேர்தலில் நீங்க செஞ்சதே போதும் ஜி
மாமா ஜி : சரி சரி விடுங்க நான் சொன்ன மாதிரி மாலை, வேட்டு, ஸ்வீட் எல்லாம் ரெடி தானே
ஆமா ஜி : எல்லாம் வாங்கிட்டேன் ஜி இது போக ரஜினி ஜி கிட்டயும் சொல்லி வச்சுட்டேன். மதியத்துக்கு மேல பிரஸ்ஸை மண்டபத்துக்கு அனுப்பறேன் ஹாட்ஸ் ஆப், நியூ இந்தியா இஸ் பார்ன் னு ஏதாவது சொல்லுங்கன்னு சொல்லிருக்கேன்
மாமா ஜி : ஜி அவரை நம்பலாமா? அவர் பாட்டுக்கு “தேர்தலா? எனக்கு எதுவும் தெரியாதேனு” சொல்லப்போறார்
ஆமா ஜி: ஏர்போர்ட்ல வச்சு கேட்டா தான் ஜி நம்ம ஆளு உளறுவார். மத்த எடத்துலயெல்லாம் உசாராத்தான் பேசுவாரு. இருங்க ஜி கவுன்டிங் போட ஆரம்பிச்சுட்டாங்க நாம முன்னணினு நினைக்கறேன்
மாமா ஜி : அது கிரிக்கட் ஸ்கோர் ஜி கொஞ்சம் சும்மா இருங்க, அய்யயோ என்ன ஜி எல்லா இடத்துலயும் காங்கிரஸ் முன்னணினு வருது
ஆமா ஜி : போஸ்டல் ஓட்டு தான் ஜி அதை நாம ஒன்னும் பண்ண முடியாது வெயிட் பண்ணுங்க மெஷின் ஓட்டு வரட்டும்
மாமா ஜி : ஜி மெஷின் ஓட்டும் எண்ண ஆரம்பிச்சுட்டானுக போல ஒரு எடத்துல கூட முன்னணி இல்லையே ஜி
ஆமா ஜி : ஜி பக்கு பக்குன்னுது இப்போ என்ன ஜி பண்றது
மாமா ஜி : இருங்க ஜி facebookல என்ன பேசிக்கறானுகன்னு பாப்போம்
ஆமா ஜி : நினைச்ச மாதிரியே கழுவி ஊத்த ஆரம்பிச்சுட்டாங்க ஜி, இங்க பாருங்க மோடி ஜிய டெட் பாடி மாதிரி தூக்கிட்டு போறானுக
மாமா ஜி : இங்க பாருங்க ஜி நம்ம கமலாலயத்தை எழவு வீடு ஆக்கிட்டானுங்க
ஆமா ஜி : அய்யயோ இங்க பாருங்க பிரியாணி அண்டா மாதிரி தாமரைக்கு அடியில தீ வைக்கறானுக.
ஆமா ஜி : ஜி அங்க பாருங்க தமிழிசை அக்கா பேட்டி
மாமா ஜி : வெற்றிகரமான தோல்வியா? என்ன ஜி இது அக்கா பாட்டுக்கு மீம் கன்டென்ட் குடுத்துட்டு இருக்காங்க
ஆமா ஜி : கில்லி படத்துல ஜோசப் விஜய் கபடி போட்டியில் செமி பைனல்ல தோத்து போனதுக்கு அப்பறம், பைனல்ஸ்ல பார்த்துக்கலாம்னு கெத்தா சொல்லுவாரு. அத வச்சு ஒரு வருஷம் கலாய்ச்சானுக இப்போ என்ன பண்ண போறானுகளோ தெரியலயே ஜி
மாமா ஜி : பொளந்துட்டானுக பாருங்க
மாமா ஜி : மோடி ஜி யோட அனைத்து ராசதந்திரங்களும் வீணாகி விட்டதே ஜி.
ஆமா ஜி : பின்ன என்ன ஜி. எவ்வளவு நாளைக்குதான் டிவி சீரியல் மாதிரி ஏழைத்தாயின் மகன்கு பீலா விட்டுட்டு சுத்தறது ? ஏழைத்தாயின் மகன்தான் லட்சக்கணக்கான ரூபா மதிப்புள்ள கோட் போட்டுக்கிட்டு சுத்துவானா ? வாயைத் தொறந்தா ஒரே பொய்யி. ஜனங்க எவ்வளவு நாள்தான் பொறுமையா இருப்பாங்க.
மாமா ஜி : யோகி ஜியை பிரச்சாரத்துக்கு அனுப்பியும் எப்படி தோல்வி அடைஞ்சோம்னு தெரியலையே ஜி
ஆமா ஜி : அந்த ஆளு பிரச்சாரம் செஞ்ச 60% இடத்துல தோல்வியாம் ஜி
மாமா ஜி : ரெண்டு சட்டை தான் என்கிட்ட இருக்குனு பெருமையா சொல்லிட்டு இருப்பாரு ஜி இப்போ அதையும் உருவி அம்மணக்கட்டை ஆக்கி விட்டுட்டானுக.
ஆமா ஜி : அனுமார் தலித்துன்னு சொல்லும் போதே நெனச்சேன் ஜி மொட்டைக்கு நடு மண்டையில் ஆணி அடிக்க போறானுகன்னு
மாமா ஜி : மத்திய பிரதேசத்துல பாகுபாலினு பில்ட்அப் எல்லாம் கொடுத்தோமே ஜி அதுவும் இப்படி போய்டுச்சே
ஆமா ஜி : பக்கவாதம் வந்த மாதிரி இருக்கார் இவர் தான் பாகுபலியா ? இதுக்காகவே எவனும் ஓட்டு போட்டிருக்க மாட்டான் ஜி
மாமா ஜி : அய்யையோ ரஜினியை யாரு ஜி இப்போ எழும்பி விட்டது? அவரு பாட்டுக்கு போய் ஹாட்ஸ் ஆப்னு சொல்லப்போறாரு
ஆமா ஜி : அங்க பாருங்க மோடி ஜி செல்வாக்கு குறைஞ்சிருச்சுனு சொல்லறாரு ஜி
மாமா ஜி : கேள்வியை உள்வாங்காம சொல்லறாருனு நினைக்கறேன்
ஆமா ஜி : சும்மா லூசு தனமா பேசாதீங்க ஜி, அந்த ஆளு நம்மள கிறுக்கன் ஆக்கறார். நம்மள வச்சு அரசியலுக்கு வரேன்னு சொல்லி படம் தான் நடிக்கிறார். இந்த ஆளு பேச்சை நம்பி, அந்த மைலாப்பூர் மாமா, நாந்தான் ரஜினிக்கு அட்வைசர்னு பீலா விட்டுக்கிட்டு சுத்தறான்.
மாமா ஜி : சரி சரி விடுங்க ஆனா இந்த தோல்வியிலும் ஒரு நன்மை இருக்கு ஜி
ஆமா ஜி : இவ்வளவு கேவலத்துலயும் நன்மை கண்டுபிடிக்கறது பக்தாளால மட்டும் தான் ஜி முடியும். மேல சொல்லுங்க
மாமா ஜி : இத்தனை நாளா ஓட்டு மெஷின்ல முறைகேடு செஞ்சுட்டோம்னு சொன்னவன் வாயை அடச்சிட்டோம்
ஆமா ஜி : அப்போ உண்மையாவே ஓட்டு மெஷினில் சூடு வைக்கலயா?
மாமா ஜி : சூடு வச்சதுனால தான் ஜி மத்திய பிரதேசத்துலயும், ராஜஸ்தானிலும் இவ்வளவு இடமாவது கெடச்சுது
ஆமா ஜி : அப்போ பொது தேர்தலில் எறங்கி அடிக்கலாம்னு சொல்லுங்க
மாமா ஜி : பின்ன இவனுக ஓட்டா போட போறானுக ?
ஆமா ஜி : நாம வேற நாலு வருசமா வாயில வடை சுடுறதும் இல்லாம போற வர்றவனையெல்லாம் நாலு எத்து எத்திட்டு இருந்திருக்கோமே ஜி.
மாமா ஜி : கவலைப்படாதீங்க ஜி. பப்புவை வைச்சிக்கிட்டு அவங்களால ஒன்னும் பண்ண முடியாது.
ஆமா ஜி : அதுக்குத்தான் அந்த ஆளு வாயி மேலயே அப்பியிருக்காரு. நம்ப ஆளுங்களாப் பாத்துதானே ஜி தேர்தல் கமிஷன்ல போட்டோம். அப்புறம் எப்படி ஜி ?
மாமா ஜி : இல்ல ஜி. முன்ன மாதிரி இப்போ இல்ல. ஆளாளுக்கு எதுத்து பேச ஆரம்பிச்சிட்டானுங்க. மோடி ஜி ஒன்னும் கேக்கலங்க. ரிசர்வ் வங்கியில அவ்வளவு பணம் வைச்சிருக்கீங்களே. அதுல முக்காவாசி பணத்தை நாட்டு வளர்ச்சிக்காக குடுங்கன்னு கேட்டாரு. அதுக்கு கோச்சிக்கிட்டு ரிசைன் பண்ணிட்டு போயிட்டாருங்க உர்ஜித் பட்டேல்.
ஆமா ஜி : ரிசர்வ் வங்கியோட எல்லா பணத்தையும் குடுத்துட்டா நம்ப ரூபாய்க்கு மதிப்பு குறைஞ்சிடுமே ஜி ?
மாமா ஜி : நமக்கே மரியாதை இல்ல. ரூபாய்க்கு எதுக்கு மதிப்பு. அதுனாலதான் கோவப்பட்டு சக்திகாந்தா தாஸை கவர்னரா போட்டுட்டாரு.
ஆமா ஜி : ஜி. அவரு பொருளாதாரம் படிச்சவரு இல்லையாமே. ஹிஸ்டரி படிச்சவராமே….
மாமா ஜி : படிச்சவரை போட்டுருக்காரேன்னு சந்தோசப்படுங்க. மோடி டீ வித்து பிரதமரானாரு. அதனால இந்தியாவை வளர்க்க இன்னொரு டீ விக்கிறவனை ஆர்பிஐ கவர்னரா போட்றேன்னு சொன்னா என்ன பண்ண முடியும் ஜி ?
ஆமா ஜி :ஒன்னும் பண்ண முடியாது ஜி. பத்தாவது படிச்ச ஸ்மிருதி இராணியை ஐஐடி ஐஐஎம் நிர்வாகம் பண்ண போடலயா ?
மாமா ஜி : நம்ப ஆளுங்க கோபேக் சோனியான்னு ட்ரெண்ட் பண்ணதை பாத்தீங்களா ஜி ?
ஆமா ஜி : பாத்தேன் ஜி. திடீர்னு ஈழ ஆதரவாளர்கள் வேசம் போட்டுட்டு பட்டையை கிளப்பிட்டாங்க.
மாமா ஜி : கிழிச்சானுங்க ஈழம் னா என்ன, விடுதலை புலிகள்னா என்னன்னு கொஞ்சமாச்சும் தெரிஞ்சா பரவாயில்ல. ஒருத்தன் பார்வதி அம்மாளை பிரபாகரனோட மனைவின்னு போட்றான். இன்னொருத்தன் என்னடான்னா ட்ரென்ட் பண்றேன்னு ஒரே வாக்கியத்தை மாத்தி மாத்தி காப்பி பண்றான்.
ஆமா ஜி : இந்த ட்விட்டர் பேஸ்புக், போட்டோ சாப் இதை வைச்சுத்தானே ஜி நாம பொழப்பை ஓட்டிக்கிட்டு இருந்தோம். போச்சா
மாமா ஜி : மொத்தமா நக்கிட்டு போச்சு ஜி. நாம காலையில இருந்து கஷ்டப்பட்டு, ட்ரெயினிங் குடுத்து, கோபேக் சோனியாவை ட்ரெண்ட் பண்ண வைச்சா, ஒரு மணி நேரத்துல #SadistModi யை ட்ரெண்ட் பண்ணிட்டானுங்க ஜி.
ஆமா ஜி : இப்போ 2019ல நாம எப்படிதான் ஜி ஜெயிக்கிறது ?
மாமா ஜி : கவலைப்படாதீங்க ஜி. மோடி ஜி யும் அமித் ஷா ஜி யும் கண்டிப்பா ஏதாவது ஐடியா வைச்சிருப்பாங்க. கலக்கிடுவோம். 2054 வரைக்கும் மோடி ஜிதான் பிரதமர்.
ஆமா ஜி : நீங்க சொல்றதால நம்பிக்கையோட போறேன் ஜி.
சவுக்கு ஷங்கர் அவர்களே , முதலில் தங்களை பார்த்து கொள்ளுங்கள் , அரசையோ , மோடியையோ விமர்சிப்பவர்கள் ஆன்டி இந்தியன்ஸ் , இரண்டாவதாக மோடி கடவுளுக்கு சமமானவர் என்ற தோற்றத்தை கொடுக்கும் பத்திரிகைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு உண்டு , சர்வ ஜாக்கிரதை. வாழ்த்துக்கள
Hahahaha!
Arumai!