துபாயின் இளவரசியும் எமிரேட்டின் ஆட்சியாளரும் யுனைடெட் அரபு எமிரேட்ஸின் பிரதமரின் மகளுமான ஷேக்கா லத்திஃபா தப்பிச் செல்வது குறித்த தகவலை அறிந்த இந்தியா அவரைக் கடந்த மார்ச்சின்போது திரும்பி அனுப்பியது. இந்திய அரசின் இந்த நடவடிக்கை அந்த தேசத்தின் நம்பிக்கையைப் பெற்றது. இதையொட்டியே அதோடு 3600 கோடி அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டதாக சந்தேகத்திற்குள்ளான இடைத்தரகர் கிறிஸ்டியன் மிச்செல் துபாயிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார்
ஆனால், ஒரு காலத்தில் முந்தைய இந்திய ஆட்சி அதன் நட்பு நாட்டிலிருந்து ஒரு ‘இளவரசி’ தப்பிச் சென்றபோது கண்டுகொள்ளவில்லை,
லத்திஃபா தப்பிச் செல்வதை முடக்குவதற்குப் பங்காற்றிய இந்தியா மீது விமர்சனம் வைக்கப்படுகிறது, இது தொடர்பாக நாம் 1960களுக்குச் செல்வோம், ஒரு முந்தைய சர்வாதிகாரியின் மகள் தன்னுடைய இந்திய கணவரை கடைசியாக வழியனுப்ப இந்தியாவுக்கு வந்தார். பின்னர் இங்கிருந்து இன்னொரு நாட்டிற்கு விமானத்தில் சென்றார்,
பனிப்போர் காலகட்டத்தில் காதல்
ஸ்வெத்லானா அலிலுயேவா முந்தைய சோவியத் யூனியன் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள். ஸ்டாலினினுக்கு இரு மனைவிகளும் அவர்களுக்கு 5 குழந்தைகளும் இருந்தனர்-
ஸ்டாலினினால் என்னுடைய குட்டி சிட்டுக்குருவியே என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்வெத்லானா அவருடைய வாழ்நாளில் இந்தியாவுக்கு அடிக்கடி வருவார். ஏனெனில் அவர் சோவியத் கம்யூனிஸ்ட்டும் இந்திய வம்சாவளியுமான பிரஜேஷ் சிங் என்பருடன் காதல் உறவு கொண்டிருந்தார்.
ரஷ்யாவுக்கு அப்பால் என்ற செய்தி இணைய தளத்தில் வெளியிட்டிருந்த செய்தியின்படி அலிலுயேவாவும் சிங்கும் (பின்னவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்த ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்) ஆகிய இருவரின் திருமணத்தை சோவியத் அரசதிகாரிகள் எதிர்த்ததினால் அவர்கள் இருவரும் சொச்சியில் சேர்ந்து வாழ்ந்தனர்.
பின்னர், அலிலுயேவா கூறுகின்றபடி, சிங் மோசமாக நடத்தப்பட்டதால் அது சோவியத் யூனியனிலிருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது என்கிறார்.
1966 அக்டோபரில் சிங் இறந்தபோது அலிலுயேவா இந்தியாவுக்கு வந்து கங்கையில் அவரின் அஸ்தியைக் கரைக்க விரும்பினார்,
அன்றைய சோவியத் பிரதமராக இருந்த அலெசி கோசிஜின் அலிலுயேவாவிடம் இந்தியாவிலிருந்து வெளியேற அவரை நிர்பந்தித்தார். கணவரின் உடலை எரியூட்டும்போது அந்தத் தீயில் பெண்களையும் தீக்குளிக்கச்செய்யும் உடன்கட்டை ஏறுதல் என்னும் தடை செய்யப்பட்ட வழக்கத்தை மேற்கொள்ள அலிலுயோவையும் நிர்பந்திப்பார்கள் என பேசி அங்கியிருந்து இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று நிர்பந்தித்தார்.
இருப்பினும் அவர் 1996 டிசம்பரில் இந்தியாவிற்கு வந்தார், அவர் அலகாபாத்திற்கு (தற்போது பிராயாக்ராஜ்) அருகில் அமைந்துள்ள சிங்கின் கிராமமான காலாகன்கரை நேசிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது, பின்னர் ஒரு முறை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அந்த கிராமம் சொர்க்கத்திற்கு இணையானதாக இருந்தது எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் அவர் சோவியத் தூதருடன் ஒரு விருந்தாளியாக தங்கியிருந்தார், அவர் இந்திய அதிகாரிகளை அணுகித் தனக்கு அரசியல் அடைக்கலம் அளிக்குமாறு வேண்டினார், ஆனால் 3 மாதங்களுக்கு அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை, அந்தக் காலத்தில் சோவியத் ரஷ்யாவும் புது டெல்லியும் வலிமையான கூட்டாளிகளாக இருந்தனர். அதனால் புது டெல்லியானது மாஸ்கோவுடன் கொண்டிருந்த உறவு பாதித்துவிடும் எனத் தயக்கம் காட்டியது.
அந்த நேரத்தில், இந்தியா சோவியத் ரஷ்யா சார்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தது எனவே அவருக்கு இந்தியாவில் எந்த வித அடைக்கலமும் அளிப்பதற்குச் சாத்தியம் இயலாத நிலை இருந்தது என்று கூறுகிறார் வெளியுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர். அவர் ரஷ்யாவிற்கு அப்பால் என்னும் செய்தி இணையதளத்திடம் கூறுகையில் சோவியத்திடம் கொண்டிருந்த உறவு பாதிக்கப்படக் கூடாது எனத் தெரிவித்தார்,
தனது வேண்டுகோளானது நிராகரிக்கப்படலாம் என்பதை உணர்ந்த ஸ்வெத்லானா அமெரிக்காவின் தூதரகத்தை அணுகுவது என்ற சர்ச்சைக்குரிய முடிவை எடுத்தார். அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் உலகின் பெரிய சக்திகளாக இருந்தன. அப்போது இரு நாடுகளும் பனிப்போரில் சிக்கியிருந்தன,
அப்போதைய இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செஸ்டர் பவ்ல்ஸ் இந்த வேண்டுகோளிலுள்ள ராஜதந்திர உறவுச் சிக்கல்களை அறிந்திருந்தார். அவர் ஸ்வெத்லானாவிடம் அவருடைய விருப்பத்தை எழுத்துபூர்வமாகக் கோரிப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது, இதனைத் தொடர்ந்து ஒரு வரலாற்று நடவடிக்கையாக அமெரிக்கா அவருக்கு அடைக்கலம் அளித்தது,
ஸ்வெத்லானா 2011இல் காலமானார். அப்போது அவருக்கு நியூயார்க் டைம்ஸ் அஞ்சலி செலுத்தி எழுதும்போது, ஸ்டாலின் மகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டது. 1961இல் பாலே டான்சர் விர்டுசோ ருடோல்ப்ஃ சோவியத் ரஷ்யாவை விட்டு வெளியேறிய பின்னர் ஸ்வெத்லானா அமெரிக்காவில் மிகவும் உயர்ந்த ஆளுமை கொண்டவராக மதிக்கப்பட்டதை உலகம் ஆச்சரியமாகப் பார்த்தது எனவும் குறிப்பிட்டது,
அவர் தப்பித்துச் சென்றது ஜேம்ஸ் பான்ட் படத்தில் வருவதுபோன்றே அமைந்திருந்தது. ஸ்வெத்லானா ஒரு சிஐஏ ஏஜண்ட்டால் வேகமாக ரோமுக்கும் பின்னர் அங்கிருந்து அரசியலில் நடுநிலை வகித்த சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவாவுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்,
அந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் இந்தியாவுக்கு முக்கியமானவையாகும். 1967இல் ஜவஹர்லால் நேரு இன்றி நாடு முதல் தேர்தலை நடத்தியது. காங்கிரஸ் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தல், இந்திரா காந்தியையும் கட்சியையும் முதல் முறையாக அரசியல் அரங்கத்திற்கு முன் கொண்டுவந்தது.
இரண்டு போர்கள் (1962இல் சீனாவுக்கு எதிராகவும் 1965இல் பாகிஸ்தானுக்கு எதிராகவும்) இந்தியப் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கின, அந்த நேரத்தில் இந்திரா காந்திக்கு நேச சக்திகள் தேவைப்பட்டன. முரண்பாடுகள் அல்ல. இந்நிலையில் சோவியத் ரஷ்யாவைப் பகைத்துக்கொள்ள முடியாது. இருப்பினும், அரசு ஸ்வெத்லானாவை சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்புவதற்கு எதிராகவே முடிவு எடுத்தது.
‘ரஷ்யாவிற்கு அப்பால்’ இணையதளத்திடம் பேசிய அந்த ஓய்வு பெற்ற அதிகாரி, “சோவியத் ரஷ்யாவிடம் கொண்டிருந்த உறவில் சேதத்தைத் தவிர்க்க, அவர் புறப்பட்டுச் சென்றது குறித்து நாங்கள் கண்டுகொள்ளாத போக்கைக் கடைப்பிடித்தோம், அதே சமயம் நாங்கள் அவரை சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்பவுமில்லை” என்றார்.
அவர் நாடு மாறிச் சென்றது ரேடியாவில் அறிவிக்கப்பட்டவுடன் சோவியத்திடமிருந்து எதிர்பார்த்தது போன்று சிறிது காலத்திற்குக் கண்டனங்கள் பொழிந்தன. உறவில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், செக்கோஸ்லேவேகியா மீது சோவியத் ஆக்ரமித்தபோது இந்தியா கண்டனம் செய்ய மறுத்ததனால் அந்தப் பதற்றங்கள் குறைந்தன,
ஸ்வெத்லானா, தன் ஆயுள் காலம் வரை அமெரிக்காவில் வாழ்ந்தார், இருப்பினும், அவர் இந்தியாவிற்கு அடிக்கடி வருகை தந்தார், காலாகான்கரில் பிரஜேஷ் சிங்கின் நினைவு மருத்துவமனையை தொடங்கி நடத்தினார்.
1970களின் இறுதி வரை அந்த மருத்துவமனையானது செயல்பட்டது. பின்னர் ஸ்வெத்லானா வெளிநாட்டிலிருந்து நிதி அனுப்ப சிரமப்பட்டதால் அந்த மருத்துவமனையானது தனியார் பள்ளியாக மாற்றப்பட்டது.
நன்றி: தி ப்ரின்ட் (https://theprint.in/politics/modi-govt-sent-back-dubai-princess-but-indiras-india-didnt-deport-stalins-daughter/161177/)
What a turn of character of great Nation …feel sickening …