கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் என்ற ராதாகிருஷ்ணன் நாயுடு, கடந்த திமுக ஆட்சியில் அத்தனை பதவிகளும் செல்வாக்கான பதவிகளே கிடைத்தன. சிவில் சப்ளைஸ் சிஐடியின் கூடுதல் டிஜிபியாக இருந்தார். அப்போதே, ஒரு பெரிய அரிசிக் கடத்தல் வழக்கில் ஒரு பெரும் தொகையைப் பெற்றதாக இவர் மீது புகார் கூறப்பட்டது. அதையடுத்து, சென்னை மாநகர ஆணையர் பதவி. வழக்கறிஞர் மீதான தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவி. கடந்த ஆட்சியில், எப்படி இவரும் இவர் சகோதரர்களும் சேர்ந்து பெரும் கொள்ளை அடித்தார்கள் என்ற விபரங்கள் சவுக்கில் விரிவாகவே பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல், கருணாநிதியோடும், அவர் குடும்பத்தினரோடும் மிகுந்த நெருக்கமாக இருந்தவர் தான் ராதாகிருஷ்ணன். அதிமுக ஆட்சி வந்ததும், மின் வாரிய விஜிலேன்ஸ் அதிகாரி என்ற டம்மியான போஸ்டில் போடப்பட்டார். ஒரு வாரம் முடிவதற்குள்ளாகவே, சிவில் சப்ளைஸ் சிஐடியின் கூடுதல் டிஜிபி என்ற பதவிக்கு மீண்டும் செல்வாக்கோடு வந்துள்ளது ராதாகிருஷ்ணனின் தனித் திறமை என்றால் மிகையாகாது.