இந்திய தனியார்துறை நிறுவனங்களில் இயங்கும் நிறுவனங்களும், இயங்கா நிறுவனங்களும், வினோதமான பெயருடன் தன் துறை தொடர்பாக ஒன்றுமே செய்யாத, அர்த்தமற்ற பல நிறுவனங்களும் அடங்கும். சட்டவிரோதமான பல விவகாரங்களில் அவை ஈடுபட்டிருந்தாலும் (அர்த்தமற்ற விதத்தில் இயங்கி) அவற்றின் அர்த்தமற்ற தன்மை காரணமாக அவற்றைப் பற்றி அவ்வளவாக நாம் கேள்விப்படுவதில்லை.
கரஞ்ஜா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் என்பது இத்தகைய ஒரு நிறுவனமாகும். இந்நிறுவம் தொடர்பான சில உண்மைகள் பின்வருமாறு:
- நிகில் காந்தி, அனில் அம்பானி உட்பட தனியார் பாதுகாப்புத்துறையில் இருக்கும் நிறுவனங்களுடன் எவ்வித உறவும் இதற்கு இல்லை;
- மௌரீஷியஸில் இருக்கும் ‘ப்ளாக்ஸ்டோன் கேபிடல் லிமிடெட்’ நிறுவனத்தால் இந்நிறுவனம் நடத்தப்படுகிறது. நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு அவ்வப்போது அந்நிய முதலீடு வருகிறது;
- எவ்வித சொத்துக்களும் இல்லாமல் மிகக் குறைந்த வருவாயுடன் (சில ஆண்டுகளில் ஒரு ரூபாய்கூட நிகர லாபம் இல்லையாம்) இருக்கிறது;
- ரூ.380 கோடி விளக்கப்பட முடியாத, பாதுகாப்பற்ற, பெரும் கடன்கள் நிறுவனத்தின் பேரில் உள்ளன; இதற்கு வட்டியும் கட்டப்படவில்லை;
- பெருமளவு கேபிடல் முன்பணத்தைப் (கிட்டத்தட்ட ரூ.260 கோடி) பல நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளது;
- கடனில் மூழ்கியிருக்கும் நிறுவனங்களுக்கு அவற்றின் சொத்துக்களின் மீட்து (மதிப்பு: ரூ.63 கோடி) வங்கிகளிடமிருந்து நூற்றுக்கணக்கான கோடிகளை கடனாக வாங்கித் தந்திருக்கிறது.
இதைப் படிக்கும் பல்வேறு தரப்பினருக்கு இது வெவ்வேறு அபாய எச்சரிக்கை மணிகளை ஒலிக்கச்செய்யும். அக்கவுண்டண்டாக இருப்பவர் நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டைப் பார்த்து எப்படித்தான் நிறுவனம் பிழைத்திருக்கிறதோ என ஆச்சரியப்படுவார். வழக்கறிஞராக இருப்பவர் பாதுகாப்பற்ற கடனைப் பார்த்தால் வட்டியில்லாக் கடனை அனுமதிக்காத சட்டங்களை நிறுவனம் எப்படி மீறாமல் இருக்கிறது என ஆச்சரியப்படுவார். அமலாக்கத் துறை அதிகாரியாக இருந்தால் கடன் கொடுத்தல், நிறுவனத்தின் வாங்குதல்-விற்றல் முறை, நிதி முறைகேடு, ஆகிய வேடிக்கையான விஷயங்கள் மீது விசாரணை நடத்தலாமா என்று யோசிக்கலாம்.
இக்குற்றச்சாட்டுக்களை நாம் நமக்கெதிராகக் கூறிக்கொள்ளப் போவதில்லை. மாறாக, இந்நிறுவனத்தைப் பற்றிய உண்மைகளைக் கூறி, என்ன செய்யலாம் என்று உங்களை சிந்திக்கச் சொல்கிறோம். இந்நிறுவனம் ஏன் இயங்குகிறது? இதை நடத்துவது யார்? என்ன வேலை நடக்கிறது? இத்துடன் யாருக்கும் ஏன் எவ்வித சம்பந்தமும் இல்லை? நிறுவனத்தைப் பற்றிய இக்கேள்விகளைப் போதுமானவர்கள் எழுப்பி அவை பிறருக்குப் பிடித்துப்போனால் மர்மங்கள் மிகுந்த இந்திய தனியார் பாதுகாப்புத் துறை பற்றிய பதில்கள் கிடைக்கலாம்.
மர்மமான, ஏமாற்றும் சொத்துக்கள்
கரஞ்ஜா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (பி) லிமிடெட் (சுருக்கமாக KIPL) நிறுவனம் 18.3.2004இல் தொடங்கப்பட்டது. ரூ.1 லட்சம் பங்கு முதலீட்டுடன் தொடங்கப்பட்ட அவ்வளவாக அடையாளம் தெரியாத இந்நிறுவனத்தில் தெளிவற்ற 2 தனிநபர் முதலீட்டாளர்கள் இருந்தனர்.
2006-07 நிதியாண்டில் சுவாரசியமாக ஒன்று நிகழ்ந்தது. ப்ளாக்ஸ்டோன் கேபிடல் லிமிடெட் எனப்படும் அந்நிய நிறுவனம் கரஞ்ஜாவை விலைக்கு எடுத்தது. சர்வதேச நிதி, முதலீடு பற்றி தெரிந்தவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சர்வதேச முதலீடு நிறுவனங்களில் முன்னணியில் உள்ள ப்ளாக்ஸ்டோன் குழுமம் உலகின் சில மாபெரும் நிறுவனங்களில் முதலீடு செய்து நம்பத்தகுந்த திறமை, எதிர்காலம் உள்ள நிறுவனங்களைக் கையகப்படுத்தி வருகிறது. இக்குழுமம் ஏன் KIPL போன்ற ஒரு நிறுவனத்தை வாங்க வேண்டும்? நிறுவனத்தின் 99.56% பங்குகள் தன் வசம் வரும்வரை ஒரு பங்கு ரூ.990 என்ற விலையில் 2015இல் ஏன் வாங்க வேண்டும்? இதற்கான பதில் எளியது: அவர்கள் வாங்கவே இல்லை.
ப்ளாக்ஸ்டோன் கேபிடல் லிமிடெட்டில் எவ்வித முதலீடும் செய்யவில்லை என ப்ளாக்ஸ்டோன் குழுமம் மறுத்துள்ளது, இம்மாதிரி ஒரு நிறுவனம் இருப்பதே அதற்குத் தெரியாதாம். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் KIPLஐ நடத்துபவர்கள் தம் உண்மையான அடையாளத்தை மறைக்க ப்ளாக்ஸ்டோன் என்ற பெயரை புகைத்திரை போல் பயன்படுத்துகின்றனர்.
மொரீஷியஸ் தீவுகளில் 2006இல் துவங்கப்பட்ட ப்ளாக்ஸ்டோன் கேபிடல் லிமிடெட் அதே ஆண்டில் KIPLஇல் பெரும்பாலான பங்குகளை வாங்கியது; இதற்காகத்தான் இந்நிறுவனம் துவங்கப்பட்டதென்பது தெளிவாகிறது. உலக அளவில் தொழில் நடத்தும் முதல் பிரிவு நிறுவனமாக பதிவாகியுள்ளதால், நிறுவனம் பற்றிய தகவல்கள் மக்களுக்கு கட்டணத்தை செலுத்தினாலும் தெரியவராது. இதன் விளைவாக, KIPLஐ நடத்துபவரை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. யார் நடத்தினாலும், அவர்கள் ப்ளாக்ஸ்டோன் குழுமத்தை சேர்ந்தவர்கள் அல்ல; இதைத்தான் பிறரும் நம்பவேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள், எனவே நம்பகத்தன்மையை அதிகரிக்க (அ) நிறுவனத்தை ஆராயும் எவரையும் வேறுவழியில் திசைதிருப்ப யாரும் எதுவும் செய்யவில்லை. KIPLஇன் கணக்குகளில் இது ஒரு அந்நிய நிறுவனம் என்று எதிலும் குறிப்பிடப்படவில்லை. நிறுவனச் சொந்தக்காரர் பற்றி இத்தகைய ஒரு குழப்பம் நிலவுவதால் நிறுவனத்தில் தொழில் விவகாரங்கள் பற்றி அவ்வளவாக நம்பிக்கை ஏற்படுவதில்லை.
KIPLஇன் மர்மத் தொழில்
ஏனென்று நீங்கள் கேட்கலாம். KIPLஇன் தொழில் பற்றி ஏன் சந்தேகிக்கிறீர்கள்? உலகம் தழுவிய முதலீட்டுக் குழுமத்தின் ஒரு அங்கம் என தவறாக அது சொல்லிக்கொள்வதால் எதுவும் எல்லை மீறாது என்று அர்த்தமில்லை. இது ஒரு நம்பமுடியாத நிலை, எனவே KIPL பற்றி நமக்குத் தெரிந்தவைகளைப் பார்ப்போம். நிறுவனத்தின் விதிமுறைப்படி அதன் இலக்கும் தெளிவாக சொல்லப்படவில்லை; கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பாக அனைத்தும் செய்வதாக அதில் சொல்லப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தந்த முகவரியில் KIPLக்கு 2 வாரத்துக்கு முன் அனுப்பிய மின்னஞ்சல் கேள்விகளில் க்விண்ட் நிறுவனத்தின் தொழில் விவரம், நடைபெறும் திட்டங்கள் குறித்து கேட்டதற்கு இதுவரை பதிலெதுவும் கிடைக்கவில்லை. நிறுவனத்தின் பதிவுசெய்த முகவரியான கடை எண்.23, தக்கா பான்வெல், பன்வெல், ராய்கர், நவிமும்பைக்கும் நாம் சென்றோம். கடையின் ஷட்டர் மூடிக்கிடந்தது, கடை எண்.22-ம் KIPL-க்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது; ஆனால் அங்கிருந்தோர் நிறுவனம் பற்றிய கேள்விகட்கு பதில் சொல்லாமல் நிறுவனம் ஜவஹர்லால் நேரு துறைமுகப் பகுதியில் ஏதோ வேலை செய்து வருவதாகக் கூறினர்.
முதலாளிகளிடம் பேசுமாறு எங்களிடம் சொன்ன அவர்கள் முதலாளிகள் யாரென்றோ எப்படித் தொடர்பு கொள்வதென்றோ சொல்லவில்லை. எப்போதாவது வரும் அந்த முதலாளியின் தொலைபேசி எண் அருகில் கடை வைத்திருந்த ஒருவரிடமிருந்து கிடைத்தது; ஆனால் அந்த எண்ணுக்கு போன் செய்தபோது ‘அவுட் ஆஃப் ரீச்’ ஆக இருந்தது.
அமைச்சகத் தகவல்படி நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவரைத் தொடர்பு கொண்டபோது நிறுவனத் தொழிலைப் புரிந்து கொள்ள எங்களுக்கு உதவ முடியாது என்றும் 2016 பிப்ரவரியில் தாம் வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறினார். ஆனால், அமைச்சகத்திடம் உள்ள நிறுவனத்தின் 30.9.2017 தேதியிட்ட ஆண்டறிகையில் அவரது கையெழுத்து இருக்கிறது. இது குறித்து கருத்துக்கூற அவர் மறுத்து விட்டார்.
ப்ளாக்டோன் கேபிடல் லிமிடெட் கையகப்படுத்திய பின் KIPL நிறுவனம் மஹாரஷ்டிராவின் ராய்கர் மாவட்டத்தில் நவி மும்பைக்கு அருகில் நேரு துறைமுகத்தின் அருகாமையில் நிலத்தை வாங்கியது. நிறுவனத்தின் கணக்கு அறிக்கைப்படி, இந்நிலம், மற்றும் இதர சொத்துகளின் மதிப்பு ரூ.49 கோடி; அந்த நிதியாண்டில் நிறுவனத்தின் லாபமோ ரூ.62.6 லட்சம்தான்.
நிறுவனத்தின் லாபம் கடந்த சில ஆண்டுகளாகவே குறைவாகத்தான் இருந்தது; அதன் செயல்பாடுகளின் மூலம் லாபமே கிட்டவில்லை. பல ஆண்டுகளாக அதன் லாபமானது வைப்புநிதி மூலம் கிடைத்த வட்டிதான்; இந்நிலை திடீரென மாறி பங்குச் சந்தை மூலம் 2016-17ல் லாபம் கிடைத்தது.
2014-15இல்தான் KIPL அதிகலாபமான ரூ.4.7 கோடியை ஈட்டியது; ஆனாலும் ரூ.52.3 லட்சம் இழப்பும் ஏற்பட்டது 2012-13, 2013-14 நிதியாண்டுகளில் எவ்வித லாபமும் இல்லை. ஒட்டுமொத்தமாக, நிறுவனத்திற்கு எந்த வேலையும் (அ) முறையான வருமானம் வர எந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை.
நிறுவன ஆவணங்களின்படி நிறுவனத்திற்கு இருக்கும் ஒரே சொத்து நவி மும்பையில் இருக்கும் நிலத்தில் அமையப்போகும் இலவச வர்த்தகக் கிடங்கு மண்டலம் (FTWZ) எனத் தெரிகிறது. 15.4.2019 ஆம் தேதியிட்ட பங்கு மதிப்பீடு அறிக்கையைப் பொறுத்தவரை FTWZஐ அமைக்க இந்திய அரசிடம் முறையான அங்கீகாரத்தை KIPL பெற்றது, துறைமுகம் வளர்ச்சி பெற்றல் இதற்குத்தான் பாம் கிடைக்கும். இந்த FTWZதான் வரும் ஆண்டுகளில் நிறுவனத்தில் இலாபத்திற்குப் பொறுப்பு, என்கிறது பங்கு மதிப்பீட்டு அறிக்கை.
இயங்கும் நிலையிலுள்ள SEZ-களீலோ 01.12.2017 வரை அரசிடமிருந்து கொள்கை அளவிலான அங்கீகாரம் பெற்ற SEZ-களீலோ KIPL-FTWZ பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இதனால் இருக்கும் ஒரே முக்கியமான திட்டமும் சந்தேகத்திற்கிடமாகிறது. இதெல்லாம் ஒரு விஷயமா எனக் கேட்பீர்கள். KIPL வெற்றிகரமாக இல்லவே இல்லை; எல்லாத் தொழிலும் வெற்றி பெறாதுதான். KIPL எப்படி வித்தியாசமானது? இதிலும் தெளிவற்ற நிலை உண்டு. சொத்துகள் குறைவாக இருப்பது (அ) வணிகரீதியான வருவாய் இல்லாமல் இருந்தலும் KIPL நிறுவனமனது கடன் தொலையில் உழலும் பிற தனியார் பாதுகாப்புத்துறை நிறுவனங்களுக்கு உறுதுணையாக எப்படியோ ஆகிவிட்டது.
கடனில் வீழும் பாதுகாப்புத் துறை நிறுவனங்களைத் தாங்கும் மர்மத் திறன்
தனியார் பாதுக்காப்புத் துறையில் YES Bank, IDBI கொடுத்த கடன்களுக்கு உத்தரவாதம் தந்து 2013 முதல் சொத்துக்களை குறைந்தது 6 முறை KIPL அடகு வைத்துள்ளது. KIPLஇன் சொத்தின் மீது பாதுகாப்பாக/உத்தரவாதத்துடன் தரப்பட்ட கடனின் மொத்த மதிப்பு (கடன் திரும்பச் செலுத்தப்படாவிட்டால் இச்சொத்துக்கள் வங்கிகளுக்குச் சொந்தமாகி விடும்) ரூ.1452 கோடியாகும். இரு கடன் தொகைகள் இடையிலேயே முடிந்து விட்டதால், KIPL வாங்கித் தந்துள்ள (அடகு மூலம் அல்லது வங்கி உத்தரவாதம் மூலம்) கடனின் மொத்த தொகை குறைந்தது ரூ.905 கோடியாகும்.
‘குறைந்தது’ என ஏன் சொல்கிறோமெனில் அமைச்சகத்துக்கு KIPL தந்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டது. KIPL போர்டின் சில தீர்மானங்களை நாங்கள் (‘க்வின்ட்’ ஊடகம்) பார்வையிட்டது; இதில் யெஸ் வங்கியில் பெறப்பட்ட ஒரு கடனுக்கு இந்நிறுவனம் உத்தரவாதம் 2015இல் கொடுத்த ரூ.135 கோடி அமைச்ச இணையதள விவரங்களில் சேர்க்கப்படவைல்லை என தெரிகிறது.
இந்த உத்தரவாதங்களின் பயனாளர்கள் யார்? E-காம்ப்ளக்ஸ் பிரைவேட் லிமிடெட், ஃபாஸ்ட்லேன் டிஸ்ட்ரிபார்க்ஸ் & லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், ஹொரைஸான் கண்ட்ரிவைட் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், பிபாவாவ் டிஃபன்ஸ் & ஆஃப்-ஷோர் இன்ஜினீயரிங் கம்பெனி லிமிடெட் போன்ற சில நிறுவனங்கள். இவை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்கள் மேல் குற்றமில்லை – ஏனென்றால் இந்திய தனியார் பாதுகாப்புத் துறையானது ஒளிவுமறைவின்றியும் இல்லை; புகழுடன் பணிபுரியவும் இல்லை.
இந்நிறுவனங்களுக்குப் பொதுவான விஷயம் குஜராத் தொழிலதிபர் நிகில் காந்தி என்பவர். துறையில் 1990களில் நுழைந்த காந்தியின் நெட்வொர்க்கின் நேரடியான / மறைமுகமான அங்கம்தான் இந்நிறுவனங்கள். KIPLக்கும் காந்தியின் நெட்வொர்க்குக்கும் தொடர்புண்டு; உ-ம் இந்நிறுவனம் பங்கு வைத்துள்ள SKIL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்.
KIPLன் உத்தரவாதம் தந்த இரு நிறுவனங்கள் இப்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்புத்துறை நிறுவனங்களுடன் சேர்ந்து விட்டன. மேற்சொன்ன 2 பிபாவாவ் நிறுவனங்களை ரிலையன்ஸ் குழுமம் 2015இல் வாங்கியது. 2016இல் கடனுக்கான தன் சொத்து விவரத்தை KIPL மாற்றியது. KIPLஇல் 0.22% பங்கு வைத்துள்ள மிலன் மந்தானி SKIL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் மேலாளராக (கட்டமைப்புத் துறை) பணியாற்றுகிறார்; மார்ச், 2017 வரை ரிலையன்ஸ் நேவல் & இன்ஜினீயரிங்கிலும் ஒரு பதவியில் இருந்து வந்தார். ஓய்வுபெற்ற கடற்படை கமாண்டர் ஷாந்தனு சுகுல் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் KIPLக்கு சமீபகாலம் வரை இன்னொரு தொடர்பும் இருந்தது. சமீபத்தில் நாங்கள் குரிப்பிட்டபடி, ரிலையன்ஸ் இன்ஜினீயரிங்கில் சுகுல் ஆலோசகராக 2015 செப்டம்பர் முதல் 2018 செப்டம்பர் வரை பணிபுரிந்தார்; அதற்கு முன் பிபாவாவ் நிறுவனம் ஒன்றில் அவன் பொதுமேலாளராகவும் இருந்தார். ரிலையன்ஸ் டிஃபன்ஸ் லிட்.-இல் அவர் துணைப்பொதுமேலாளராகவும் இருந்திருக்கிறார்.
KIPLஇன் இயக்குநராகவும் ஏப்ரல், 2014 முதல் சுகுல் இருந்திருக்கிறார்; அதன் பின் தன் சொத்துக்கள் மீது KIPL மூன்று மாற்றங்கள் செய்தது. நிறுவனத்தின் போர்டிலிருந்து ராஜினாமா செய்து விட்டதாக சுகுல் கூறுகிறார்.
உத்தரவாதம் தருவதால் இந்நிறுவனங்கள் லாபமடைந்தது மட்டும் பிரச்சினை அல்ல. எதற்குமே நிதிநிலைமை சரியில்லை: உதாரனமாக, IDBIயால் நிதியின்மை காரணமாக நீதிமன்றம் இட்டுச் செல்லப்பட்ட ரிலையன்ஸ் நேவல் & இன்ஜினீயரிங் லிமிடெட்டை எடுத்துக் கொள்வோம். திரும்பக் கட்டாது என்று தெரிந்துள்ள ஒரு நிறுவனத்துக்கு KIPL கடன் வாங்கித் தந்துள்ளது என்றுதான் இதற்கு அர்த்தம். இதனால் வேறு நிறுவனங்கள் இந்நிறுவனத்துக்கு கடன் உத்தரவாதம் தரக்கூடாது என்றோ கடன் தரக்கூடாது என்றோ அர்த்தமல்ல. ஆயினும், சொத்து மதிப்பாக ரூ.62 கோடி மட்டுமே வைத்துள்ள KIPL போன்ற ஒரு நிறுவனம் இதர நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் தருவது எவ்விதத்தில் நியாயமாக இருக்க முடியும்?
இந்த உத்தரவாதங்களை வங்கிகள் ஏற்றுக்கொண்டது ஆச்சரியம்தான் – KIPLஇன் பிற சொத்துக்கள் நீண்டகாலத் தன்மையுடன் நீண்டகால இழப்பிற்கு ஈடு செய்ய முடியாதவை. 2013க்கும் 2014க்கும் நடுவில் 4 உத்தரவாதங்கள் தரப்பட்டுள்ளன; ஆயினும் 2012-13 மற்றும் 2013-14 நிதியாண்டு அறிக்கையில் KIPL தன் வருவாய் ‘பூச்சியம்’ என்று சொல்லியிருக்கிறது. இதிலிருந்தாவது வங்கிகள் சுதாரித்துக் கொண்டு இந்நிறுவனத்தின் உத்தரவாத/கடன் விவரங்களை அப்போதே நிராகரித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வுத்தரவாதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மர்மமான நீண்டகாலக் கடன்கள்
நீண்டகாலக் கடன்களைப் பொறுத்தவரை, KIPLஇன் ஆண்டறிக்கைகள் மிக சுவாரசியமான தகவலைத் தருகின்றன. 31.3.2015 வரையான நிலவரப்படி, நிறுவனத்திடம் பாதுகாப்பற்ற கடன்கள் இல்லவே இல்லையாம்: அதாவது எக்கடனுக்கும் இந்நிறுவனம் எவ்விதமான உத்தரவாதமும் தரவில்லையாம்.
கார்ப்பரேட் உலகில் கடன் தருபவர் கடன் திரும்ப வராவிட்டால் தொகையை தெரும்பப்பெற வழியின்றி கடன் தரமாட்டார்கள் என்பதால் ஒரு நிறுவனம் இவ்வளவு அதீதமான அளவில் பாதுகாப்பற்ற கடன் பெறுவது மிகவும் அசாதாரணமான ஒன்றாகும். உத்தரவாதங்களைக் கடன் பெறுபவர் சொத்தை அடகுவைப்பதன் மூலமோ அல்லது வெளிப்புற உத்தரவாதம் (தருபவர்) மூலமோ தருவார்கள். இரண்டாவது சொன்னதை KIPL பல நிறுவனங்கள் சார்பில் செய்து வந்துள்ளது.
2015-16 நிதியாண்டில் KIPL ரூ.374.7 கோடி பாதுகாப்பற்ற கடனை திடீரென வாங்கியது. இப்பணம் எங்கிருந்து வந்தது? அவர்கள் சொல்லவில்லை. எதற்காகப் பணம் தேவைப்பட்டது? யாருக்கும் தெரியாது. அப்பணத்தை எதற்கு பயன்படுத்தினார்கள்? அதுவும் தெரியாது; அந்த ஆண்டு அவர்கள் செலவு செய்தது வெறும் ரூ.1.5 கோடிதான்; மீதமிருந்த பணம் எங்கே?
இன்னொரு குழப்பம் என்னவெனில் பாலன்ஸ் ஷீட்டைப் பொறுத்தவரை 2015க்கு முன் பாதுகாப்பற்ற எந்தக் கடனும் நிறுவனத்தின் பெயரில் இருந்திருக்கக் கூடாது; நீண்டகால கடன் என்ற பெயரில் இம்மதிப்பில் பல கடன்கள் இருந்து வந்தன. இவற்றை 2008 வரை பின்சென்று ஆராய்ந்தபோது இரு நிறுவனங்கள் – ஈக்விடி ஓவர்ஸீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆரஞ்ச் லைஃப்ஸ்டைல் பிரவேட் லிமிடெட் ஆகியவை – KIPLக்கு ரூ.366 கோடிகளைக் கடனாகத் தந்துள்ளது தெரியவந்தது.
இப்போது இரண்டு நிறுவனங்களுமே இயங்கவே இல்லை; அவை இந்திய நிறுவனங்கள் போலவும் தெரியவில்லை. ஆனால் இக்கடன்கள் தொடர்ந்து KIPLஇன் கணக்கில் வருகின்றன; இயல்பான நடைமுறையைப் போல் இப்பணம் யாருக்குத் தரப்பட வேண்டும் என்ற விவரத்தையும் தரவில்லை.
இவ்வளவு குறைந்த ஷேர் கேபிடல் (செலுத்தியது ரூ.15 கோடி, அதிகாரபூர்வ தொகை ரூ.50 கோடி) உடைய ஒரு நிறுவனத்துக்கு மேற்சொன்னவை நம்ப முடியாத அளவு தொகைகளாகும்; வணிகரீதியான எப்படி சாத்தியமானது என்பதும் அர்த்தமற்ற ஒரு செயலாகும். இவ்வளவு தொகையிலான கடன்கள் ஒரு நிறுவனத்துக்கு 2 வகையில் மட்டும் சட்டரீதியாக வரலாம்: வங்கிகள், அல்லது அதே குழுமத்தின் பிற நிறுவனங்கள் மூலம்.
2016-17க்கான KIPLஇன் ஆடிட்டர் அறிக்கையில் பெருங்கடன் மூலம் தொகை எதுவும் வரவில்லை, செலுத்த வேண்டிய தேவையுமிலை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் கடன் பற்றி மேலும் பல கேள்விகள் எழுகின்றன: 2013-ஆம் ஆண்டின் கம்பெனிகள் சட்டம் வந்தது முதல், வட்டி செலுத்தாத கடன்களை நிறுவனங்கள் பெறுவது சட்டவிரோதமானதாகக் கருதப்படும். இன்னும் தேவையா? இது எப்படி: 2015-16 இல் பாதுகாப்பற்ற இக்கடன்கள் பெறப்பட்டன, பழைய கடன்கள் திடீரென பாதுகாப்பற்ற கடன்களாகக் குறிப்பிடப்பட்டன. ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வாண்டு வருமானவரி அறிக்கையை KIPL தாக்கல் செய்யவில்லை, 2018இல்தான் தாக்கல் செய்தது. 2018இல் தாக்க செய்யப்பட்ட ஆவணங்களில் 2016, 2017ஆம் ஆண்டுகளுக்கான விவரங்களீன் கீழே எந்தக் கையெழுத்தும் இல்லை.
மர்மம் நமக்குச் சொல்வதென்ன?
நமது முதல் கேள்விக்கே திரும்பவும் வருவோம்: KIPL ஏன் இயங்குகிறது? எந்தத் தொழிலையும் அது செய்வதாகத் தெரியவில்லை, அதற்கு லாபமும் கிட்டவில்லை. கணக்கில் காட்டப்படும் இவ்வளவு கடன்களை அது ஏன் வாங்கியது? இத்தனை தனியார்துறை பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கடன் வாங்கித்தர வேண்டிய அவசியம் KIPLக்கு ஏன்? நாம் மேலே சொன்னபடி, KIPLஇன் தொழில் பற்றிய எந்த கேள்விக்கும் விடையளிக்க யாருக்குமே விருப்பமில்லாதது போல்தான் தெரிகிறது.
நிறுவனம் இயங்கக் கூடது என நமது அறிவு கூறினாலும் KIPL தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இயங்கும் வட்டத்தில் யாருக்கோ அது லாபத்தைத் தருகிறது: அப்படியானால் இத்துறை பற்றியும் KIPL போன்ற நிறுவனங்கள் அங்கு என்ன செய்கின்றன என்பது பற்றியும் நமக்கு பல யோசனைகள், கேள்விகள் வந்துகொண்டுதான் இருக்கும்.
KIPL பற்றி சிறப்பாக என்னதான் இருக்கிறது? அதற்கு எங்கிருந்துதான் பணம் வருகிறது? அது தரும் உத்தரவாதத்தின் பேரில் பிற நிறுவனங்களுக்கு வங்கிகள் ஏன் கடன் தருகின்றன? இம்மாதிரி நிறுவனங்களுடன் வங்கிகள் எப்படி தொழில் புரிகின்றன?
KIPL போல நமக்குத் தெரியாமல் எத்தனை நிறுவனங்கள் இத்துறையில் இயங்கிவருகின்றன?
(அங்கிதா சின்ஹா மற்றும் சஞ்ஜாய் டேப் ஆகியோரது தகவல்களை ஒட்டி இக்கட்டுரை எழுதப்பட்டது)
இக்கட்டுரை தொடர்பான கருத்து கோரி ப்ளாக்ஸ்டோன் குழுமம், கரஞ்சா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட், ஷாந்தனு சுகுல், யெஸ் வங்கி, IDBI ட்ரஸ்டிஷிப் சர்வீஸஸ் லிமிடெட், அனில் அம்பானி ரிலையன்ஸ் டிஃபன்ஸ் குழுமம் மற்றும் நிகில் காந்தியுடன் ‘க்விண்ட்’ தொடர்பு கொண்டது. ப்ளாக்ஸ்டோன் கேபிடல் லிமிடெட்டில் முதலீடு செய்ததை ப்ளாக்ஸ்டோன் குழுமம் மறுத்தது தவிர, சுகுலிடமிருந்து மட்டும்தான் பதில் கிடைத்தது. அதுவும் மேலே தரப்பட்டுள்ளது. கிடைக்கும் பிற பதில்களையும் அவ்வப்போது உங்களுடன் நாங்கள் நிச்சயம் பகிர்ந்துகொள்வோம்.
வகாஷா சச்தேவ்
நன்றி: தி க்வின்ட் (https://www.thequint.com/news/india/anil-ambani-reliance-defence-karanja-blackstone-capital)
நாடு கண்ட மிக பெரிய ஊழல் அரசு மோடியினுடையது ….