2019 வரும்போது, உறுதி அளிக்கப்பட்ட, தண்ணீர் மற்றும் பாசன வளங்கள் மீண்டும் மாயமாகலாம்.
2014 தேர்தல் அறிக்கையில் பாஜக நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பாசன திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதன் மூலம் பாசன வசதி பெற்ற நிலப்பரப்பை அதிகரிப்போம் என உறுதி அளித்தது. பிரதமரும் 2019 வாக்கில் தனது அரசு 99 பாசன திட்டங்களை நிறைவேற்றித்தரும் என தொடர்ச்சியாக உறுதி அளித்து வந்தார். அதோடு, மத்திய நீர்பாசனத்துறையின் அரைகுறை தகவல்களை கொண்டு, தனது அரசு இவற்றில் பெரும்பகுதியை நிறைவேற்றிவிட்டதாகவும் கூறினார். ஆனால், இந்த 99 திட்டங்களில், 74 திட்டங்கள் இன்னமும், கள கால்வாய் மற்றும் முக்கிய பகுதி முடிக்கப்படாமலே இருக்கின்றன. மற்ற இலக்குகளும் குறைவாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. பட்ஜெட் ஒதுக்கீடும் திட்டமிட்டதைவிட குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் 200 மில்லியன் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் 105 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு எந்தவிதமான பாசன வளமும் இல்லை. இந்தியாவில் பெரிய மற்றும் சிறிய அளவிலான திட்டங்கள் பல ஆண்டுகளாகத் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் நிட்டி ஆயோக் அமைப்பு அண்மையில் வெளியிட்ட ஒருங்கினைந்த நீர் மேலாண்மை குறியீடு, வரலாற்றின் மோசமான நீர் நெருக்கடியை நாடு எதிர்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. கணக்கு தணிக்கையாளர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை ஒன்று, 2017 மார்ச் வரை, 16 தேசியத் திட்டங்களில், 25.10 லட்சம் ஹெக்டேர் பாசன வாய்ப்பு கொண்ட 5 திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுவருகின்றன. 10.48 லட்சம் பாசன வாய்ப்பு கொண்ட எஞ்சிய 11 திட்டங்கள் இன்னமும் துவக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கிறது. மேலும், செயல்பாட்டில் உள்ள 5 திட்டங்களில் ரூ.13,299 கோடி செலவிட்ட நிலையிலும், எந்த திட்டமும் முடியும் தறுவாயில் இல்லை. கடந்த 40 ஆண்டுகளில் இதே நிலையை அறிக்கை குறிப்பிடுகிறது.
இத்துடன் முடிந்துவிடவில்லை. ‘பிரதம மந்திரி கிரிஷி சின்சயி யோஜானா’ (பி.எம்.கே.எஸ்.ஒய்.) திட்டத்தின் கீழ், மழையை நம்பியிருக்கும் விவசாயப் பகுதிகளில் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான ஆற்றுப் பள்ளத்தாக்கு மேம்பாட்டு அம்சம், நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுவருகிறது. இது 10 சதவீதமே முடிக்கப்பட்டிருக்கிறது. விரைவாக்கப்பட்ட பாசன நலத்திட்டம், 1996இல் அறிமுகம் செய்யப்பட்ட 297 பெரிய மற்றும் நடுத்தரப் பாசனத் திட்டங்களில் முடிக்கப்படாத 149 திட்டங்களை முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இவற்றில், பி.எம்.கே.எஸ்.ஒய். துவக்கத்தில் 2015 – 16இல் கண்டறியப்பட்ட 99 திட்டங்கள் 2019 டிசம்பரில் முடிக்கப்பட உத்தேசிக்கப்பட்டது. இவற்றில், 23 திட்டங்களுக்கு 2017 டிசம்பர் கெடுவுடன் முன்னுரிமை அளிக்கப்பட்டன. 31 திட்டங்களுக்கு 2018 டிசம்பரில் மற்றும் எஞ்சிய 45 திட்டங்கள் 2019 டிசம்பரில் முடிக்கப்பட இருந்தன. ஆனால், 2017 பிப்ரவரியில், 3.65 லட்ச ஹெக்டேர் பாசன பரப்பில், முதல் கட்டத்தில் 0.97 லட்சம் ஹெக்டேர் பரப்பு மட்டுமே செயல்பாட்டில் வந்திருந்தன. பி.எம்.கே.எஸ்.ஒய். துவங்குவதற்கு முன்பே மூன்று கட்டங்களிலும் சில திட்டங்கள் முடியும் தறுவாயில் இருந்ததை மறுப்பதற்கில்லை.
பி.எம்.கே.எஸ்.ஒய்.க்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் திட்டங்களின் செயல்பாடு – வளங்களைக் கட்டமைப்பது முதல் ஏற்கனவே அமைக்கப்பட்ட வளங்களை மேம்படுத்துவது வரை – சொற்பமானதாக, திருப்தி அளிக்காமல் இருக்கிறது. திட்ட செலவு உயர்வு, நிலம் கையகப்படுத்தலில் நிர்வாக தாமதம், திட்ட இடங்களுக்கு உரிய அனுமதி, சுற்றுச்சூழல் நெறிமுறைகளை பின்பற்றாதது, பாசன வாய்ப்பு உருவாக்கம், தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தண்ணீர் திருப்பி விடப்படுவது, குடிநீர் வசதி இல்லாதது மற்றும் மோசமான மூன்றாம் தரப்பு ஒப்பந்த நிர்வாகம் ஆகிய, ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்ற காரணங்களும் இருக்கலாம்.
மேலும், கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பாசன வாய்ப்பைப் போதிய அளவுக்கும் உரிய செயல்திறனுடனும் பயன்படுத்தாமல் இருப்பது, இந்தத் திட்டங்களால் சரியாக கருத்தில் கொள்ளப்படவில்லை. நிலத்தடி நீர் குறைவது மற்றும் மாசு படுவது, விரிவாகும் பாசன வசதி காரணமாக, நவமேற்கு இந்தியாவில் பயிர் மிச்சத்தை எரிப்பது ஆகியவை பி.எம்.கே.எஸ்.ஒய். திட்டத்தை நேரடியாக அல்லது மறைமுகமாக பாதிப்பதாக இருக்கிறது.
2022இல் பாசனம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மட்டும் அல்ல, 2019 க்குள் அனைத்து அல்லது தேசிய பாசன திட்டங்களை முடிக்க பிரதமரிடம் மந்திரகோல் தான் இருக்க வேண்டும். குஜராத்தில் தேர்தலுக்குப் பிறகு தண்ணீர் காணாமல் போனது. நதியில் தண்ணீர் இல்லை என்று கூறி, சர்தார் சரோவர் அணையில் இருந்து தண்ணீரை எதிர்பார்த்திருந்த நான்கு மாவட்டங்களுக்கு அரசு தண்ணீரை நிறுத்தியது. பிரதமர் பிரச்சாரத்திற்காக விமானத்தில் பறந்து வந்தபோது அல்லது பிரச்சாரத்திற்கு முன்பும் பின்பும் திட்ட வெற்றி பற்றி பெருமிதம் கொண்ட போதும், இந்தப் பற்றாக்குறை இருக்கவில்லை. 2019 வரும்போது, தண்ணீர் மற்றும் பாசன வளங்கள் மீண்டும் மாயமாகலாம்.
நிலேஷ் ஜெயின்
https://www.telegraphindia.com/opinion/of-99-irrigation-projects-the-bjp-has-promised-by-2019-74-are-still-awaiting-field-canal-construction/cid/1679435