காலை 8 மணி மாமா ஜி ஆமா ஜியை செல் போனில் அழைக்கிறார்
மாமா ஜி : ஹலோ ஜி நம்ம கமலாலயத்துக்கு 9.30 மணிக்கு வந்துடுங்க ?
ஆமா ஜி : கண்டிப்பா வந்துடுரேன் ஜி என்ன மேட்டர் ஜி ?
மாமா ஜி : எல்லாம் விசேஷத்தை பத்தி தான் வந்து சேருங்க
ஆமா ஜி : உடனே கிளம்பறேன் ஜி
மணி 10.30 மாமா ஜி ஆமா ஜியை மீண்டும் செல் போனில் அழைக்கிறார்
மாமா ஜி : 9.30 மணிக்கு வர சொன்னேன் மணி 10.30 ஆச்சு எங்க ஜி போய் தொலைஞ்சிங்க?
ஆமா ஜி : சும்மா திட்டாதீங்க ஜி நான் தான் உங்க மேல கோவமா இருக்கேன்
மாமா ஜி : என் மேல என்ன ஜி கோவம் ?
ஆமா ஜி : பின்ன கமலா தியேட்டருக்கு விஸ்வாசம் படம் பார்க்க வர சொல்லி அசிங்க படுத்திடீங்க, படமே இன்னும் ரிலீஸ் ஆகலாயம். சிலுக்குவார் பட்டி சிங்கத்துக்கு 2 டிக்கெட் கார்னெர் சீட் போட்டிருக்கேன் வந்து சேருங்க
மாமா ஜி : யோவ் நான் உன்னைய கமலயத்துக்கு தானே வர சொன்னேன், இடம் மாத்தி போனதும் இல்லாம கார்னெர் சீட் எதுக்கு ஜி போட்டீங்க ? நம்ம கட்சி வேணும்னா ஒரு மாதிரி கட்சியா இருக்கலாம் நான் அப்படி கிடையாது
ஆமா ஜி : போனில் சிக்னல் சரி இல்ல தப்பாயிடுச்சு ஜி கோவிச்சுக்காதீங்க உடனே வந்துடறேன் ஜி, கமலாலயம் எங்க இருக்கு ஜி ?
மாமா ஜி : நீ எல்லாம் ஒரு கட்சிக்காரனா ? கட்சி ஆபிஸ் கூட எங்க இருக்குனு தெரியாதா ?
ஆமா ஜி : தேர்தல் ஏதாவது ஜெயிச்சிருந்தா பட்டாசு வெடிக்கவாவது அங்க வந்திருப்பேன், நமக்கு தான் அந்த கொடுப்பினை இல்லையே ஜி
மாமா ஜி : கூகிள் மேப் போட்டாவது வந்து சேருங்க ஜி
கமலாலயம் விரைகிறார் ஆமா ஜி
மாமா ஜி : கமலா தியேட்டரில் இருந்து இங்க வர இவ்வளவு நேரமா ?
ஆமா ஜி : நான் அப்போவே வந்துட்டேன் ரெண்டு நாய் வாசலில் படுத்து இருந்துச்சு, மனுஷன் வாசனையே பட்டது இல்ல போல பிராண்டிடுச்சு. நீங்க எப்படி ஜி வந்தீங்க ?
மாமா ஜி : நம்ம கட்சி ஆபிஸில் பின் பக்கம் ஏணி எப்பவும் இருக்கும் வெளிய போறதும் அப்படி தான். உள்ள வரதும் அப்படி தான் ஜி. ராஜா ஜி, அக்கா ஜி வரும் போது மட்டும் நாய் வண்டியை வர சொல்லிருவோம்
ஆமா ஜி : என்ன ஜி சொல்ரீங்க ?
மாமா ஜி : அந்த நாயை புடிக்க ஜி
ஆமா ஜி : புடிச்சிட்டு போனதுக்கு அப்பறம் எப்படி ஜி திரும்ப வருது ?
மாமா ஜி : சென்னையில் ஆள் ஆரவாரம் இல்லாத ஒரே இடம் இது தான்னு அதுக்கும் தெரிஞ்சிருக்கு ஜி, செங்கல்பட்டு தாண்டி விட்டாலும் திரும்ப வந்திட்டுது
ஆமா ஜி : சரி எதுக்கு இவ்வளவு அவசரமா வர சொன்னீங்க ?
மாமா ஜி : மோடி ஜி நம்ம கூட வீடியோ கான்பரன்சிங் பேச போறாரு அதுக்கான எல்லா ஏற்படும் பண்ணனும்
ஆமா ஜி : ஸ்க்ரீன், ப்ரொஜெக்டர் அவ்ளவ்வு தானே ஜி செஞ்சிடுவோம்
மாமா ஜி : அது மட்டும் இல்ல என்ன கேள்வி கேட்கணும்னு முன்னாடியே குடுத்திடுவாங்க , ரூம்ல அங்க அங்க ஆள் செட் பண்ணி வச்சு அந்த கேள்வியை கேட்க சொல்லணும் ஜி அது தான் முக்கியம்
ஆமா ஜி : எழுதி வச்ச கேள்வியை தான் கேட்கணுமா? அப்பறம் பாண்டிச்சேரி மீட்டிங் மட்டும் எப்படி ஜி சொதப்புச்சு ?
மாமா ஜி : என்ன ஜி செய்யறது அந்த ஆளு பண்ண வேலையில் நமக்கு ரிவிட் அடிக்கறாங்க
ஆமா ஜி : அப்படி என்ன ஜி கேட்டார் அந்த ஆளு ?
மாமா ஜி : வரி வசூலில் காட்டும் அக்கறையை மக்கள் நல திட்டத்துல ஏன் காட்ட மறுக்குறீர்கள்னு கேட்டார் ஜி ?
ஆமா ஜி : அதுக்கு மோடி ஜி என்ன சொன்னார் ஜி
மாமா ஜி : மனுஷன் என்னத்த சொல்லுவார் “சலியே. புதுச்சேரி கோ வணக்கம்” னு சொல்லி கலந்துரையாடலை முடிச்சுக்கிட்டார்
ஆமா ஜி : சுத்தி நம்ம ஆளுங்க தானே ஜி இருக்காங்க ? கேள்வி கேட்ட ஆளை பொளந்து இருப்பாங்களே ?
மாமா ஜி : நீங்க வேற, அந்த ஆளு விவரமா ஹிந்தியில் கேள்வி கேட்டுட்டார், சுத்தி இருந்தவன் எவனுக்கும் புரியல.
ஆமா ஜி : அப்போ நம்ம ஆளுங்க ஒரு பயலுக்கும் ஹிந்தி தெரியாதா ? சும்மா தான் உதார் உட்டுட்டு சுத்தறானுகளா?
மாமா ஜி : உண்மை தான் ஜி, பேப்பரில் எழுதி குடுத்த கேள்வியை கேட்க மட்டும் தெரியும் மோடி ஜி பதிலுக்கு என்ன சொல்லறார்னு கூட தெரியாது. கை மட்டும் தட்டணும்
ஆமா ஜி : நம்ம நிலைமையை பாருங்க ஜி இப்படி ஆயிடுச்சு. சரி நான் முடிஞ்சா 2 சேட்டு பசங்களையும் கூட்டிட்டு வந்துடறேன் எதுக்கு வம்பு.
மாமா ஜி : நல்ல யோசனை ஜி அப்படியே செய்யுங்க
ஆமா ஜி : சரி ஜி நம்ம மோடி ஜி சென்னைக்கு வேற வாறாராம்?
மாமா ஜி : என்னத்த ஜி சொல்றது? வராதீங்கன்னு யாரு போய் அவர்கிட்ட சொல்றது ? போனவாட்டி செவுரை உடைச்சிட்டு ஓடுனது இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு
ஆமா ஜி : இன்னும் இந்த செவுரு எத்தனை தடவை நம்மல காவு வாங்க போகுதோ தெரியலையே ஜி. நாமளும் GoBackSonia னு ட்ரெண்ட் பண்ணினோம் ஆனா இந்த அளவு அசிங்கப்படுத்த முடியலையே ஜி ஏன் ?
மாமா ஜி : ஜி நாம அமெரிக்காவுல உக்காந்து நோகாம ட்வீட்டிட்டு இருந்தோம் அவனுக களத்தில் இறங்கி கருப்பு பலூன், கருப்பு கொடி, தர்ணானு திரும்பின இடமெல்லாம் அடிச்சானுக.
ஆமா ஜி : அதுவும் சரி தான் ஜி இதெல்லாம் அவருக்கு எங்க புரிய போகுது, தமிழிசை அக்காவாவது எடுத்து சொல்லணும்
மாமா ஜி : அடுத்தவன் சும்மா இருந்தாலும் அக்கா சும்மா இருக்காது ஜி
ஆமா ஜி : அதுவும் சரி தான், மேடைக்கு மேடை மோடி ஜி சாடிஸ்ட்னு சொல்லிட்டாங்கனு பேசறாங்களே ஜி. சரக்குக்கு தொட்டுக்கற சைடு டிஷ் தெரியும் அது என்ன ஜி சாடிஸ்ட் புது மேட்டரா இருக்கு ?
மாமா ஜி : அடுத்தவன் துன்பத்தை பாத்து இன்பம் அடையறவன்னு அர்த்தம் ஜி
ஆமா ஜி : சொன்ன விஷயம் சரினாலும் அதை நாமளே ஒத்துக்க கூடாது ஜி ?
மாமா ஜி : ஸ்டாலினாவது சொல்லிட்டு விட்டுட்டார் இந்த அக்கா தன் புலமையை காட்டறேன்னு மோடி சாடிஸ்டுனா ஸ்டாலின் சாடெஸ்ட்னு பேசிட்டு திரியறாங்க.
ஆமா ஜி : அப்புறம் அக்கா தமிழகத்துல காவி மண்ணில் தாமரை மலரும்னு சொல்லிருக்காங்களே ஜி. இங்க எங்க காவி மண்ணு இருக்கு ?
மாமா ஜி : என்ன ஜி இப்படி கேட்டுட்டீங்க. வடநாட்டுல மட்டும் எங்க இருக்கு. அங்க இருக்கவனுங்க நல்லா பான் பராக்கை மென்னுட்டு, புளிச்சி புளிச்சின்னு துப்பி வைச்சிருக்கானுங்க. அதைத்தான் அக்கா காவி மண்ணுன்னு சொல்றாங்க.
ஆமா ஜி : அப்படியே பாத்தாலும் தமிழ்நாட்டுலதான் பான்பராக்கை தடை பண்ணிட்டாங்களே
மாமா ஜி : டிஜிபி டிகே ராஜேந்திரன் ரிட்டையர் ஆன அன்னைக்கு நைட் 11.5க்கு அவருக்கு எக்ஸ்டென்சன் குடுத்தோம் ஞாபகம் இருக்கா ?
ஆமா ஜி : ஆமா ஜி. குடுத்தோம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?
மாமா ஜி : அவருதான் ஜி தமிழ்நாட்டுக்கு குட்கா டிஸ்ட்ரிப்யூசன் எடுத்துருக்கார். அவர் அந்த கம்பெனியில ஒரு பார்ட்னர். அவரு திடீர்னு ரிட்டையர் ஆகி போயிட்டா, அப்புறம் தமிழ்நாடு எப்படி காவி மண்ணா மாறும் ? அதுக்குத்தான் அவருக்கு எக்ஸ்டென்சன்.
ஆமா ஜி : புரிஞ்சுது ஜி. அப்போ விஜயபாஸ்கர் ?
மாமா ஜி : அவரும் டீலர்தான். ஆனா முன்ன மாதிரி ஒழுங்க சப்ளை பண்றது இல்ல. அதனாலதான் போன வாரம் சிபிஐயில கூப்புட்டு வார்ன் பண்ணி அனுப்புனாங்க. இப்போ சப்ளை ஒழுங்கா வருது. இது வரைக்கும் சென்னையில சவுகார்பேட்டை முழுக்க காவி மண்ணா மாத்திட்டோம். அடுத்த ஏரியாவுக்கெல்லாம் இனிமேதான் போகணும்.
<<மோடி சாடிஸ்ட் >>
ஆமா ஜி : சரி ஜி பிஹாரில் கூட்டணி எல்லாம் அறிவிச்சுட்டாங்களாம் ?
மாமா ஜி : அட போங்க ஜி 2014ல நாம மட்டும் 22 சீட் ஜெயிச்சோம்
ஆமா ஜி : ஆமா ஜி
மாமா ஜி : இந்த தேர்தலில் கூட்டணி கட்சிக்கு கொடுத்தது போக நாம போட்டி போடறதே 17 சீட்டில் தான்
ஆமா ஜி : இப்போவே 5 சீட்டில் தோத்துட்டோம்னு சொல்லுங்க, எதுக்கு ஜி கூட்டணி கட்சிக்கு இவ்வளவு சீட் கொடுக்கணும். முடியாதுனு சொல்ல வேண்டியது தானே ?
மாமா ஜி : அப்படி தான் சொன்னோம்
ஆமா ஜி : பயந்திருப்பானுகளே ஜி
மாமா ஜி : ம்க்கும் பதிலுக்கு பணமதிப்பிழப்பு கொடுத்த பயன் என்னனு பட்டியல் கேட்டானுக
ஆமா ஜி : பணமதிப்பிழப்பில் பயன் இருந்தா நாம ஏன் ஜி இப்படி 5கும் 10கும் கூட்டணிக்கு பிச்சையெடுக்குறோம் ?
மாமா ஜி : இந்த விஷயம் எல்லா பயலுக்கும் தெரிஞ்சிருக்கு ஜி அதான் இதை சொல்லியே நம்மல ப்ளாக் மெயில் பன்றானுக. இப்படி தான் போன வாரம் தெருமுனை பிரச்சாரத்துல ஒருத்தன் என்னை பாத்து பணமதிப்பிழப்பின் பயன் என்னனு கேட்டான் ?
ஆமா ஜி : என்ன ஜி சொன்னீங்க ?
மாமா ஜி : பைல்ஸ் பிரச்னைக்கு பஞ்சு மிட்டாயின் பயன் என்னனு பதிலுக்கு கேட்டேன்
ஆமா ஜி : அவன் என்ன சொன்னான் ஜி ?
மாமா ஜி : ஒன்னும் இல்லைனு சொன்னான், அதே தான் இதுக்கும்னு சொன்னேன்
ஆமா ஜி : மெரண்டு இருப்பானே
மாமா ஜி : கட்டி வந்து சாகப்போறேன்னு சாபம் விட்டுட்டு போய்ட்டான் ஜி
ஆமா ஜி : ஊர் வாயில் விழுறது நமக்கு என்ன புதுசா ஜி விடுங்க இதுக்கெல்லாம் பீல் பண்ணீட்டு. மோடி ஜி, காலி ட்ரெயினுக்கு டாட்டா காட்டுனாராமே என்ன மேட்டர் ஜி ?
மாமா ஜி : காலி ட்ரெயினுக்கெல்லாம் டாட்டா காட்டல ஜி. ராகுல் மாதிரி நெறய்ய ஆளு இருந்தாத்தான் ட்ட்டா காட்டுறவரு இல்ல ஜி மோடி ஜி. அந்த ரயில்வே ட்ராக்குல ஒருத்தன் உக்காந்து ஆயி போயிட்டிருந்தான். மோடிஜிக்குதான் ஸ்வச் பாரத்ன்னா உயிராச்சே. ஏய் போகாத. அப்படியே நிப்பாட்டுன்னு சொன்னார்.
ஆமா ஜி : அப்புறம் ? நிப்பாட்டுனானா ?
மாமா ஜி : அவன் எங்க நிப்பாட்டுனான். மோடி ஜியை பாத்தே ஒன்னுக்கு அடிச்சிட்டு ஓடிப் போயிட்டான்.
ஆமா ஜி :கண்டிப்பா அவன் தேச விரோதியாத்தான் இருப்பான் ஜி. என்ன ஜி. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிங்க திரும்ப உள்ள நுழைஞ்சுட்டானுங்க.
மாமா ஜி : அதான் என்னாலயே நம்ப முடியல ஜி. மோடி ஜி இருக்காருன்னு தெரிஞ்சும் வந்துருக்கானுங்க பாருங்க. ஆனா டக்குன்னு புடிச்சிட்டாரு பாத்தீங்களா.
ஆமா ஜி : மோடி ஜியை கொலை பண்ற திட்டத்தோட வந்துருக்காங்கன்னு சொல்லிருப்பாளே.
மாமா ஜி : எப்படி ஜி கரெக்டா கேக்கறீங்க.
ஆமா ஜி : இதைத்தானே ஜி பல வருசமா சொல்லிக்கிட்டு இருக்கோம். அது இருக்கட்டும். தீவாளி பட்டாசை வைச்சி எப்படி ஜி மோடி ஜியை கொல்ல முடியும் ?
மாமா ஜி : காலேஜ் படிச்சிக்கிட்டு இருக்குற இஷ்ரத் ஜஹான் மோடி ஜியை கொல்ல குஜராத் வரலையா. உலகத்துலயே இல்லாத எம்ஏ Entire Political Science பாடத்தை படிச்சி மோடி ஜி பட்டத்தை வாங்கலையா ? அது மாதிரிதான் இதுவும்.
ஆமா ஜி : ஹேப்பி நியூ இயர் ஜி.
மாமா ஜி : என்னத்த ஹேப்பி நியு இயர். அடுத்த வருசம் பொதுத் தேர்தல். அதை நெனைச்சாலே கெதக்குன்னு இருக்கு.
ஆமா ஜி : அதெல்லாம் கவலைப்படாதீங்க ஜி. இந்த நாட்டை காப்பாத்த மோடி ஜியை விட்டா வேற யாரு இருக்கா. சலியே புதுச்சேரி கோ வணக்கம். அடுத்த வாரம் சந்திக்கலாம் ஜி.
Ithai poondra oru arputhamana website anaivarukum reach aaganum