சட்டப்பேரவைத் தேர்தல்களில் நரேந்திர மோடியும் ஆதித்யநாத்தும் பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜகவின் வாக்குகள் குறைந்துள்ளன.
நவம்பர்-டிசம்பரில் நடைபெற்ற நான்கு மாநில தேர்தல்களில் (இந்த ஆய்விலிருந்து மிசோராமானது விலக்கப்பட்டுள்ளது) நரேந்திர மோடியும்,யோகி ஆதித்யநாத்தும் பிரச்சாரம் செய்த தொகுதிகளில் பாஜக மோசமான அளவில் வாக்குகளை பெற்றுள்ளது.
மாநில வாரியாக ராகுல் காந்தி, மோடி மற்றும் ஆதித்யநாத்தும் பிரச்சாரம் செய்த பகுதிகளில் பெற்ற இடங்கள்:
பிரச்சாரகர் | சத்தீஸ்கர் | மத்தியப் பிரதேசம் | ராஜஸ்தான் | தெலங்கானா | மொத்தம் |
ஆதித்யநாத் | 23 | 11 | 28 | 1 | 61 |
நரேந்திர மோடி | 8 | 18 | 26 | 3 | 55 |
ராகுல் காந்தி | 19 | 20 | 28 | 8 | 75 |
கீழுள்ள அட்டவணையில் வாக்கு விகிதத்திலுள்ள மாற்றங்கள் 2013/2014இல் பெற்ற இடங்களுடன் ஒப்பீடு
பிரச்சாரகர் | வாக்கு குறைந்த இடங்கள் | வாக்கு அதிகமான இடங்கள் | போட்டியிடாத இடங்கள் |
ராகுல் காந்தி | 12 | 58 | 5 |
நநேரந்திர மோடி | 46 | 7 | 2 |
ஆதித்யநாத் | 50 | 11 |
ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜக பெற்ற வாக்குகள் குறைந்துள்ளதைப் பார்க்க முடியும்.61 இடங்களில் 50 இடங்களில் வாக்குகள் (82%) குறைந்துள்ளன.
மோடி பிரச்சாரம் செய்துள்ள இடங்களில் 55 தொகுதிகளில் 46 தொகுதிகளில் பாஜகவின் வாக்குகளின் பங்கு குறைந்துள்ளது.
ராகுல் காந்தியைப் பொருத்தவரை மொத்தம் 75இல் 58 இடங்களில் காங்கிரசுக்கு வாக்குகள் அதிகரித்துள்ளது பதிவாகியுள்ளது.
கீழ்க்கண்ட அட்டவணை 2013/2014 தேர்தல்களை 2018 தேர்தல்களை ஒப்பிடும்போது பெற்ற வாக்குகளில் சராசரி மாற்றங்கள்
பிரச்சாரகர் | சத்தீஸ்கர் | மத்தியப் பிரதேசம் | ராஜஸ்தான் | தெலங்கானா |
ராகுல் காந்தி | 2.64 | 6.79 | 7.90 | 22,86 |
நநேரந்திர மோடி | -7.20 | -3.6 | -9.69 | -8.64 |
ஆதித்யநாத் | -8.55 | 5.79 | -6.06 | 16.19 |
கீழ்க்கண்ட அட்டவணை ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த இடங்களில் காங்கிரஸ் வெற்றி அல்லது தோல்வி அடைந்த இடங்களின் விகிதத்தைக் காட்டுகிறது.
பெற்ற இடங்கள் என்பது 2014இல் கட்சி தோல்வி பெற்று, 2018இல் வென்ற இடங்களின் விகிதத்தைக் காட்டுகிறது.
இழந்த இடங்கள் என்பது 2013/2014இல் வெற்றி பெற்று, 2018இல் தோற்ற இடங்களைக் குறிக்கிறது.
மாநிலம் | பெற்ற இடங்கள் | இழந்த இடங்கள் |
சத்தீஸ்கர் | 47.37% | 15,79% |
மத்தியப் பிரதேசம் | 35.00% | 0.00% |
ராஜஸ்தான் | 39.29% | 0.00% |
தெலங்கானா | 33.33% | 66.6% |
மொத்தம் | 40.00% | 7.14% |
கீழ்கண்ட அட்டவணை ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜக வெற்றி பெற்ற இடங்கள் அல்லது இழந்த இடங்களின் விகிதத்தை காட்டுகிறது.
மாநிலம் | பெற்ற இடங்கள் | இழந்த இடங்கள் |
சத்தீஸ்கர் | 0.00% | 37.50% |
மத்தியப் பிரதேசம் | 0,00% | 38.89% |
ராஜஸ்தான் | 0.00% | 61.54% |
தெலங்கானா | 0.00% | 0.00% |
மொத்தம் | 0.00% | 0.00% |
கீழ்க்கண்ட அட்டவணை மோடி பிரச்சாரம் செய்த இடங்களில் பாஜக இழந்த இடங்களின் விகிதத்தை காட்டுகிறது. இந்த இடங்களில் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
மாநிலம் | பெற்ற இடங்கள் | இழந்த இடங்கள் |
சத்தீஸ்கர் | 0.00% | 37.50% |
மத்தியப் பிரதேசம் | 0,00% | 38.89% |
ராஜஸ்தான் | 0.00% | 61.54% |
தெலங்கானா | 0.00% | 0.00% |
மொத்தம் | 0.00% | 0.00% |
வருண் கிருஷ்ணன்
நன்றி தி இந்து
https://www.thehindu.com/elections/assembly2014/bjp-vote-share-drops-in-star-campaigner-seats/article25818247.ece