ஆமா ஜி : வாங்க ஜி புது வருட கொண்டாட்டம் எல்லாம் எப்படி ஜி போகுது, ஏதாவது புது வருட உறுதி எடுத்திருக்கீங்களா ?
மாமா ஜி : எப்படியாவது தாமரையை தமிழ்நாட்டில் மலர செய்யணும்னு உறுதி எடுத்திருக்கேன் ஜி
ஆமா ஜி : ஜி நீங்க தப்பா நெனச்சுடீங்க நான் உங்க இறுதி ஆசையை கேட்கல புது வருட உறுதியை கேட்டேன்
மாமா ஜி : என்ன நக்கலா ஜி
ஆமா ஜி : பின்ன என்ன ஜி, புது வருஷம் ஆரம்பிக்க போகுது இந்த வருசமாவது நேர்மையா ஓட்டு கேட்டா பரவா இல்ல மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும், இந்த போஸ்ட்டரை பாருங்க
மாமா ஜி : இங்க தான் நம்ம யுக்தியை புரிஞ்சிக்கிடனும் ஜி, ஜனவரின்னு தான் சொன்னோமே தவிர எந்த வருஷம்னு சொல்லை பாருங்க
ஆமா ஜி : சும்மா மழுப்பாதீங்க ஜி அந்த 15 லட்சத்துக்கே நான் இன்னும் முட்டு குடுத்துட்டு இருக்கேன்
மாமா ஜி : என்ன ஜி இப்படி கோவப்படறீங்க, நேத்து சோத்துல உப்பு எதுவும் போடீங்களா ?
ஆமா ஜி : இல்ல ஜி, உப்பு வாங்கறது நிறுத்தி 4 வருஷம் ஆவுது.
மாமா ஜி : பீச்சுக்கு எதுவும் போனீங்களா ?
ஆமா ஜி : ரொம்ப நாள் ஆச்சுன்னு பசங்க ஆடம் பிடிச்சாங்க அதான் போனேன்
மாமா ஜி : அது தான் விஷயம்
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க ஒன்னும் புரியலையே
மாமா ஜி : பீச்சுக்கு போனா உப்பு காத்து மூக்கு வழியா உடம்புக்குள்ள போயி ரத்தத்தோடு மிக்ஸ் ஆய்டும் அதுக்கு தான் நம்ம ஆளுங்க யாரும் அங்க போறதே இல்ல
ஆமா ஜி : என்ன ஜி தினுசு தினுசா சொல்ரீங்க, இப்போ என்ன பண்றது ?
மாமா ஜி : கைவசம் மாத்து மருந்து இருக்கு ஜி , இந்தாங்க இந்த கோமியத்தை கொஞ்சம் குடிங்க
ஆமா ஜி : தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்.
மாமா ஜி : இப்போ தான் ஜி பழைய படி மாறிருக்கீங்க
ஆமா ஜி : என்ன அதிசயம் ஜி இது, குடிச்ச உடனே எபக்ட் தெரியுது. எங்க ரெண்டு திட்டு திட்டுங்க
மாமா ஜி : போடாங்க் @###% கர்ர்ர்… தூ
ஆமா ஜி : இது நல்லா இருக்கு ஜி சுத்தமா உரைக்கவே இல்ல. சரி நம்ம மோடி ஜி இந்தமாசம் அந்தமானுக்கு டூர் போய் 3 தீவுக்கு புது பெயர் வைக்க போறாராமே உண்மையா ஜி?
மாமா ஜி : உண்மை தான் ஜி, மேப்பில் இருக்க எல்லா இடமும் பார்த்தாச்சு. ஏன் போன இடத்துக்கே கூட 3 வாட்டி போயாச்சு. அதான் இந்த வாட்டி போய் பேரை மாத்தி விட்டுட்டு வந்தா, அடுத்த வாட்டி போகும் போது வித்தியாசமா இருக்கும்
ஆமா ஜி : பேரை மாத்தி என்ன ஜி பண்றது ஊரு அதே தானே
மாமா ஜி : உன்னைய மாதிரி ஆளுங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது இல்ல பாருங்க ஜி, இல்லாட்டி மோடி ஜி ஒரே ஊருக்கு எத்தனை முறை போயிருக்காருனு நாளைக்கே எவனாவது ரிப்போர்ட் ரெடி பண்ணுவான்
ஆமா ஜி : சரியா சொன்னீங்க ஜி, வரலாறு ரொம்ப முக்கியம். அது சரி ஜி அங்க போய் செல்லூர் ராஜு கூட சேர்ந்து சவரம் பண்ண போறதா பேசிக்கறாங்களே என்ன மேட்டர் ஜி?
மாமா ஜி : யோவ் செல்லுலர் ஜெயில்க்கு போய் சவார்கர் இருந்த அறையில் தியானம் பண்ண போறாரு ஜி, அதுவும் சாதாரண சவார்கர் இல்ல வீர் சவார்கர் ஜி.
ஆமா ஜி : சவார்கர்னா 9 தடவ மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து ரிலீஸ் ஆனாரே அவரா ?
மாமா ஜி : சோறு தண்ணி இல்லாம உன்னைய கட்டி போட்டு உரிச்சா நீங்களும் தான் ஜி மன்னிப்பு கடிதம் கொடுப்பீங்க
ஆமா ஜி : அதுக்காக என்னைய போய் யாராவது வீர் ஆமா ஜினு கூப்பிடுவாங்களா ? அது சரி அந்த சிறையில் என்ன அவர் மட்டுமா இருந்தார்? எத்தனையோ பேர் இருந்தாங்க ஏன் பகத் சிங் கூட அங்கன தான் இருந்தார் ஆனா இவர் மட்டும் தானே மன்னிப்பு கடிதம் கொடுத்திருக்கார்
மாமா ஜி : என்ன ஜி லாஜிக் எல்லாம் பேசறீங்க? எபெக்ட் கொறஞ்சிடுச்சுனு நினைக்கறேன் இந்தாங்க இன்னோரு ரவுண்டு கோமியத்தை குடிங்க சரியா போகும்
ஆமா ஜி : தாமரை மலர்ந்தே தீரும்.சாவார்கர் பத்தி எவனாவது தப்பா பேசினா என்கிட்ட விடுங்க ஜி செருப்பால அடிக்கறேன்
மாமா ஜி : கூல் டவுன் ஜி
ஆமா ஜி : நாம் ஏன் சாவர்கர் பேரனுக்கு வீர் பட்டம் கொடுக்க கூடாது
மாமா ஜி : அவர் பேரனை எங்க இருந்து ஜி தேடி புடிக்கறது
ஆமா ஜி : என்ன ஜி இப்படி சொல்றீங்க, மாசத்துக்கு ஒரு முறை மன்னிப்பு கேக்கற நம்ம ராஜா ஜி தான் அவரோட உண்மையான வாரிசு, காலையில வாய் சவடால் விட்றது. சாயங்காலம் அன்மின் பேசுனான்னு சொல்றது. நைட்டு மன்னிப்பு கேக்கறது. இதானே நம்ப ராஜா சார் வழக்கம் ? அவரை இனிமேல் வீர் ராஜானு கூப்பிடுவோம்
மாமா ஜி : இது நல்லா இருக்கு ஜி பாருங்க கோமியம் ஒருத்தனை எப்படி தேச பக்தனா மாத்துதுன்னு
ஆமா ஜி : சரி ஜி தியானம் பண்ண போறவரு எதுக்கு ஜி இத்தனை கேமரா மேன கூட்டிட்டு போறாரு?
மாமா ஜி : பெத்த தாயை பார்க்க போன கூட கேமரா மேன் இல்லாம போக மாட்டாரு நம்ம ஜி, கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி மோடி ஜிக்கு கேமரா. போட்டோ மட்டும் எடுக்கல மனுஷன் மூச்சை விட்டுடுவார்
ஆமா ஜி : சரி ஜி ஆக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்னு ஒரு படம் வரப்போகுதாமே ஜி, என்ன கதை ஜி
மாமா ஜி : மன்மோகன் சிங்கை சோனியா காந்தி குடும்பம் எப்படி கைக்குள்ள வச்சிருந்தாங்கனு கதையாமே. செமயா இருக்குமுல ஜி
ஆமா ஜி : அந்த படத்தோட டைரக்டர் 34 கோடி GST பிராடு பண்ணி கைது ஆனவராமே
மாமா ஜி : அதுக்கு என்ன இப்போ ஒரு தேச முன்னேற்றத்துக்கு படம் எடுக்கும் போது செலவுக்கு காசு இல்ல ஏமாத்திட்டான் இத போய் பெருசு படுத்தினா எப்படி. அது மட்டுமில்லாம இப்படியெல்லாம் மொள்ளமாறித்தனம் பண்ணாத்தானே நம்ப கட்சியிலயே சேத்துக்குவாங்க.
ஆமா ஜி : அதுவும் சரிதான் ஜி. என்ன ஜி மோடி அதிரடியா முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்துட்டாரு.
மாமா ஜி :அதான் ஜி மோடியோட அதிரடி. ஒரே ஒரு நடவடிக்கையில எப்படி எல்லார் ஓட்டையும் வாங்க ஏற்பாடு பண்ணிட்டாரு பாத்தீங்கள்ல ?
ஆமா ஜி : அதெல்லாம் சரிதான் ஜி. இல்லாத வேலைக்கு இட ஒதுக்கீடு எதுக்கு. அதுவும் வருசம் 70 ஆயிரம் சம்பாதிக்கிற குடும்பத்துக்கு எதுக்கு இட ஒதுக்கீடு ?
மாமா ஜி : அங்கதான் மோடி ஜியோட தந்திரமே அடங்கியிருக்கு.
ஆமா ஜி : இதுல என்னங்க ராஜதந்திரம் அடங்கியிருக்கு ?
மாமா ஜி : இப்போ யாருக்கும் வேலை குடுக்கலன்னு சொல்ல முடியாதுல்ல ?
ஆமா ஜி : இப்போ மட்டும் எங்க வேலை குடுத்தோம் ?
மாமா ஜி : அதான் வேலையில இட ஒதுக்கீடு குடுத்தாச்சுல்ல ?
ஆமா ஜி : இட ஒதுக்கீடுதானே ஜி. வேலை எங்க ?
மாமா ஜி : இட ஒதுக்கீடே குடுத்தாச்சு வேலை குடுக்க மாட்டாரா மோடி ஜி ?
ஆமா ஜி குழப்பமாக பார்க்கிறார்.
மாமா ஜி : நீங்க கொஞ்சம் கன்ப்யூஸ் ஆயிட்டீங்க. மொதல்ல இட ஒதுக்கீடு. வேலை வேணும்னா 2019ல மோடிக்கு வாக்களிங்கன்னு எவ்வளவு எளிதா தேர்தலை சந்திக்கலாம்.
ஆமா ஜி : பிரமாதம் ஜி. இப்போதான் எனக்கு ஓரளவு புரியுது. அப்போ கடைசி வரைக்கும் எதுவுமே செய்யமாட்டோமா ஜி ?
மாமா ஜி : என்ன இப்படி சொல்லிட்டீங்க. இது வரைக்கும் செஞ்சது எல்லாத்தையும் மோடி ஜி பத்தி எடுக்குற படத்துல சொல்லப் போறோம்.
ஆமா ஜி : என்ன சொல்லப் போறோம் ?
மாமா ஜி : வேற என்ன வழக்கம் போல பொய்தான்.
ஆமா ஜி : நம்ப நிம்மி ஜி கூட பொய் சொல்லி பாராளுமன்றத்துல மாட்டிக்கிட்டாங்க போல இருக்கு ?
மாமா ஜி : அதெல்லாம் இல்லையே. மோடி ஏழைத் தாயின் மகன். நான் ஒரு ஏழைத் தந்தையின் மகள். எங்க வளர்ச்சி காங்கிரசுக்கு பிடிக்கலன்னு கரெக்டாதானே பேசுனாங்க ?
ஆமா ஜி : ரபேலுக்கும் இதுக்கும் என்ன ஜி சம்பந்தம் ?
மாமா ஜி : சம்பந்தா சம்பந்தமே இல்லாம நேருவை எல்லா பிரச்சினைக்கும் திட்டலையா. அது மாதிரிதான் இதுவும்.
ஆமா ஜி : திருவாரூர் இடைத் தேர்தலை என்ன ஜி திடீர்னு ரத்து பண்ணிட்டாங்க.
மாமா ஜி : எந்த தேர்தல் நடந்தாலும் நோட்டாதானே ஜி. தேர்தல் நடந்தா என்ன. நடக்கலன்னா என்ன.
ஆமா ஜி : மோடி ஜி என்ன திடீர்னு பரீட்சை எழுதுற மாணவர்களுக்கெல்லாம் ஆலோசனை சொல்றாரு.
மாமா ஜி : ஒழுங்கா படிக்காம, படிச்ச மாதிரி பொய்யா ஒரு டிகிரி பேரை சொல்லிக்கிட்டு, டீ வித்தேன், பொறை வித்தேன்னு சொல்லி, நானெல்லாம் பிரதமர் ஆகலையா. அது மாதிரி ஒழுங்கா படிப்பு வரலன்னு கவலைப்படக் கூடாதுன்னு சொல்லி மாணவர்களை உற்சாகப்படுத்தறாரு ஜி.
ஆமா ஜி : மோடி ஜி மாதிரி ஒரு பிரதமர் கிடைக்க நாம கொடுத்து வைச்சிருக்கணும். அடுத்த வாரம் பாப்போம் ஜி.