2019 தேர்தலில் வெல்ல, மோடிக்கான புதிய ஆதரவு அலை, மக்களைக் கவரும் புதிய கோஷம் ஆகியவற்றைத் தேடுகிறது பாஜக
பாஜக, 2014இல் நிலவியதுபோன்ற உற்சாகத்தைத் தூண்டிவிட முயற்சித்துக்கொண்டிருக்கிறது. நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை வீசவில்லை எனில், 2019இல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என கட்சியின் முக்கியஸ்தர்கள் உணர்கிறார்கள். இந்நிலையில், பிரதமர் மீண்டும் ஒரு முறை பொதுமக்கள் மனதைக் கவர்வதற்கான பிரச்சாரத்தை துவக்கியிருக்கிறார்.
பெரும்பாலான மாநிலங்களில் முதல் கட்ட சர்வே முடிவுகள் உற்சாகம் அளிப்பதாக இல்லை எனக் கட்சிக்குள் நிர்வாகிகள் பேசிக்கொள்கின்றனர்.
மக்களவையில் 272 இடங்களுக்கு மேல் கட்சி பெற, ஒரு அலை தேவை என சர்வே அடிப்படையிலான கள நிலவரம் உணர்த்துவதாகக் கட்சியின் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
“மோடியின் பிரபலம் அப்படியே இருந்தாலும், இன்னமும் ஒரு அலை தேவைப்படுகிறது. எதிர்கட்சி ஒற்றுமை தவிர பல்வேறு மாநிலங்களில் வேறு விதமான தடைகள் உள்ளன. மோடிக்கான ஆதரவு அலை மட்டுமே இந்த எதிர்ப்புகளை வெல்ல முடியும்” என்கிறார் இந்த சர்வேக்களுடன் தொடர்புடைய கட்சி நிர்வாகி ஒருவர்.
பேரணிகளில் பங்கேற்பது உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் மோடி ஏற்கனவே பிரச்சாரத்தைத் துவக்கிவிட்டார் என்கின்றனர் நிர்வாகிகள். கவர்ந்திழுக்கும் காட்சி விளம்பரங்களை உருவாக்கும் பொறுப்பும் தொழில்முறை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளை ஒட்டி மோடி பேரணிகளில் பங்கேற்றுவருகிறார். அண்மையில் கேரளா மற்றும் ஒடிசாவுக்குப் பிரதமர் சென்றிருந்தார். இரண்டுமே அரசு முறை பயணம் என்றாலும், மோடி கூட்டங்களில் பேச இவற்றைப் பயன்படுத்திக்கொண்டார். தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன், அவர் 543 தொகுதிகளையும் சுற்றி வர விரும்புவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
2014இல் நிலவியதுபோன்ற அலையை உருவாக்குவதற்கான திட்டத்தைக் குறிக்கும் வீடியோ ஒன்றை கட்சி தலைவர் அமித் ஷா டிவிட்டரில் பகிர்ந்துகொண்டார். “அதே உற்சாகத்தை மீண்டும் உண்டாக்குவோம், மீண்டும் மோடி ஆட்சியை உண்டாக்குவோம்” என்று சொல்கிறது அந்த வீடியோ.
பிரச்சாரத்திற்காக புதிய கோஷத்திற்கான தேடுதலும் நடைபெற்று வருவதாகக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் கூறினார்.
இந்தத் தேர்தல் 2014போல இருக்காது என்பதைக் கட்சி தெள்ளத் தெளிவாக உணர்ந்திருப்பதையே இந்த முயற்சிகள் காட்டுகின்றன.
ஜே.ஜே.யாதவ்
நன்றி; தி டெலிகிராப் இந்தியா
https://www.telegraphindia.com/india/hunt-on-for-a-new-modi-wave-and-slogan/cid/1681907?ref=india_home-template
இந்த மோடி இப்போது போய் தொலைந்து பிறகு வேறு ஒரு கேடி இந்த இந்திய நாட்டின் ஆட்சியை கைப்பற்றி இதுவரை செயல்படுத்திய கார்ப்பரேட் நலனை பாதுகாத்த திட்டங்களை தொடருவான். எவன் வந்தாலும் இதே நிலைதான் இருக்கும்.