டீ கடையில் மாமா ஜி மிகவும் சோர்வாக அமர்ந்திருந்தார்
ஆமா ஜி : என்ன ஆச்சு ஜி இப்படி இடிஞ்சு போய் உக்காந்து இருக்கீங்க?
மாமா ஜி : ரஜினி ஜியை நம்பி பிரயோஜனம் இல்லைனு அமித் ஜிக்கு நல்லா தெரிஞ்சிடுச்சு.
ஆமா ஜி : அதனால என்ன பண்ண போறோம்?
மாமா ஜி: நாம என்ன தான் மேக் அப் போட்டு அவரை ரெடி பண்ணி வச்சாலும், எவனாவது பேட்டி எடுத்து ஆப் பண்ணி விட்டுடறானுக. திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டியதா இருக்கு
ஆமா ஜி : உண்மை தான் ஜி பேட்டை படத்துல கூட காவி அரசியல்வாதி தான் எதிரியா காமிச்சிருக்காங்க, கடைசியில் ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லனு பாட்டு வேற பாடறார் ஜி
மாமா ஜி : ரஜினி வேலைக்கு ஆகாது, கமல் பேசறதே புரியாது, ஜோசப் விஜய் நம்ம கொள்கைக்கு செட்டாகாது, பேசாம அஜித்தை வளச்சு போடலாம்னு முடிவு பண்ணினோம் ஜி
ஆமா ஜி : நல்ல முடிவு ஜி, பாதி பயலுக அவர் பாலக்காடு நாயர்னும் மீதி பேரு தேவருனும் நெனச்சுட்டு இருக்கானுங்க. ரெண்டு சைடுலயும் வண்டி ஓட்டலாம்.
மாமா ஜி : நல்ல பிளான் போட்டுட்டு இருக்கும் போது நம்ம அவரச குடுக்கை அக்கா பேட்டி கொடுத்து எல்லாம் நாசமா போச்சு
ஆமா ஜி : அக்கா ஜி நல்லா தானே பேசிருக்காங்க
மாமா ஜி : நல்லா பேசினாங்க சும்மா இருங்க ஜி, ரைமிங்கா பேசுறேன்னு டைமிங் விட்டுட்டாங்க. பேசி வாயை மூடறதுக்குள்ள, அஜித் எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை, ரசிகர்கள் குழந்தை குட்டியை நல்லா படிக்க வைங்கன்னு அறிக்கையே விட்டுட்டாரு
ஆமா ஜி : என்ன ஜி அதிசயமா இருக்கு, 15 வருசமா அறிக்கை விடாம இருந்த மனுஷன் பாஜகவோட தன்னை இணைச்சு பேசறாங்கனு தெரிஞ்சதும் தெறிச்சு அறிக்கை விடறார்னா நம்ம கட்சி ஒரு பீடை புடிச்ச கட்சியா ஜி ?
மாமா ஜி : பதறி போய் ராஜா ஜி கிட்ட போனா, ஒருவேளை அஜித்தோட உண்மையான பேரு ஆப்ரஹாம் அஜித்தா இருக்குமோனு கேக்கறாரு ? இந்த அக்கா வேற விடாம பேட்டி குடுத்து உயிரை வாங்கறாங்க
ஆமா ஜி : ஜி எனக்கு ஒரு சந்தேகம். அக்கா மருத்துவரா இருந்த போது குழந்தையை காப்பாத்த அஜித் உதவி செஞ்சார்னு சொல்றாங்களே, ஒருவேளை அக்கா கிட்ட இருந்து அந்த குழந்தையை காப்பாத்தி நல்ல டாக்டர்கிட்ட சேத்திருப்பாரோ?
மாமா ஜி : சும்மா இருங்க ஜி. நடுவுல அக்கா இப்படி சொன்னார் அப்படி சொன்னார்னு போட்டோஷாப் பண்ணி இவனுகளா ஃபேக் நியூஸ் போட்டு பரப்பி விடறானுக
ஆமா ஜி : என்ன ஜி போட்டோஷாப்பில் நமக்கே மரண பயத்தை காட்றானுங்க. ஆமை குஞ்சையும் பகைச்சாச்சு, அணில் குஞ்சையும் பகைச்சாச்சு இப்போ அஜித்தும் இல்லாட்டி தமிழ்நாட்டில் தாமரையை எப்படி மலர வைப்பது
மாமா ஜி : இந்தா இதை வச்சு தான்
ஆமா ஜி : ஜி இது ஒரு டம்மி பீசு ஜி இது முகத்தை பார்த்தாலே கண்டுபிடிச்சிடுவானுகளே
மாமா ஜி : ஒண்ணுமில்லாததுக்கு இதை வச்சு ஆரம்பிப்போம் பின்னாடி எவனாவது கங்கை அமரன் மாதிரி மாட்டாமையா போயிடுவான் ?
ஆமா ஜி : பாவம் நம்ம கங்கை ஜி, இடை தேர்தல்னு ஒவ்வொரு முறை அறிக்கை வரும் போதும் ஹாஸ்பிட்டலில் போய் படுத்துகிறார், மெடிக்கல் சர்டிபிகேட் எல்லாம் ரெடி பண்றாரு
மாமா ஜி : எப்படியும் தேர்தல் நடக்காதுனு தெரியும் அப்பறம் ஏன் இப்படி பயந்து சாகறார் ?
ஆமா ஜி : வாங்கின அடி அப்படி ஜி
மாமா ஜி : அதை விடுங்க ஜி , நல்லா தொக்கா அந்த லயோலா கல்லூரி விவகாரம் மாட்டுச்சு அதை வச்சு ஒரு வாரம் செய்யலாம்னு பார்த்தா அக்கா நடுவுல ஓடிட்டாங்க
ஆமா ஜி : நானும் கேக்கணும்னு நெனச்சேன் அதை வரைஞ்ச முகிலனுக்கும் சகாயத்துக்கும் ஏதோ தொடர்பாமே
மாமா ஜி : உங்களை எல்லாம் கட்சியில் சேர்த்ததுக்கு பிஞ்ச செருப்பாலேயே என்னைய அடிக்கணும்
ஆமா ஜி : இந்தாங்க அடிச்சிட்டு சீக்கிரம் சொல்லுங்க
மாமா ஜி : நக்கலா ? பின்ன என்ன ஜி அணு உலை எதிர்ப்பாளர் முகிலனுக்கும் ஓவியர் முகிலனுக்கும் வித்தியாசம் தெரியாதா? போன வாரம் கமலாலயத்துக்கு வர சொன்னா கமலா தியேட்டர் போன ஆளு தானே ஜி நீங்க
ஆமா ஜி : விடுங்க ஜி கோவிச்சுக்காதீங்க. சரி நம்ம மோடி ஜி டீ வித்ததா பொய் சொல்லிட்டாராம் ஜி, அவரோட ஜிகிடி தோஸ்த் பிரவீன் தொகாடியா சொல்லிருக்கார்
மாமா ஜி : இதையே இப்போ தான் கண்டுபிடிச்சு இருக்காங்களா? மோடி ஜிக்கு பிடிக்காத ரெண்டு விஷயம் ஒண்ணு ‘டீ’, இன்னொண்ணு ‘பொண்டாட்டி’
ஆமா ஜி : சரி ஜி இது மாதிரி வேற என்ன பொய் எல்லாம் மோடி ஜி சொல்லிருக்கார் ?
மாமா ஜி : ஒரு நாளைக்கு 10, 12 சொல்லுவார் எல்லாத்தையும் சொல்ல முடியுமா ஜி
ஆமா ஜி : இதுவரைக்கும் கேள்வி படாத புருடா ஏதாவது இருந்தா சொல்லுங்க ஜி கேட்போம்
மாமா ஜி : அப்போ மோடி 8 ஆவது படிச்சிட்டு இருந்தார்
ஆமா ஜி : இப்போ வரைக்கும் அவ்வளவு தானே ஜி படிச்சிருக்கார்
மாமா ஜி : குறுக்கால பேசாம கேளுங்க ஜி. தினமும் டீ வித்து முடிச்சதும் மோடி ஜி குளிக்கறதுக்கு 29 முதலை இருக்கும் குளத்துக்கு தான் போவாராம்.
ஆமா ஜி : இது என்ன ஜி 40 ஆயிரம் டன் அரிசி கப்பல் கதையை விட பெரிய கதையா இருக்கு, மேல சொல்லுங்க
மாமா ஜி : அப்படி ஒரு நாள் குளிக்கும் போது ஒரு முதலைக்கும் மோடி ஜிக்கும் சண்டை வந்து, அவர் சிறு காயத்தோட தப்பிச்சிட்டு வந்துட்டார்
ஆமா ஜி : ஒரு டவுட் ஜி . ஒருவேளை முதலை பாலில் டீ போட தான் குளத்துக்கு போயிருப்பாரோ
மாமா ஜி : பேசாம அடுத்த கதையை கேளுங்க ஜி
ஆமா ஜி : சொல்லுங்க ஜி
மாமா ஜி : 17 வயசு இருக்கும், என்ன பண்றதுனு தெரியாம வாழ்க்கையை வெறுத்து சுத்திகிட்டு இருந்திருக்கார்
ஆமா ஜி : இப்பவும் அப்படி தானே ஜி சுத்திகிட்டு இருக்கார்
மாமா ஜி : மூடிட்டு கேளுங்க ஜி
ஆமா ஜி : சாரி ஜி சாரி ஜி
மாமா ஜி : இமயமலைக்கு போய் கங்கையில் குளித்து தியானம் செஞ்சிருக்கார், அதுக்கு அப்பறம் அவருக்கு வாழ்க்கையில் ஒரு தெளிவு ஏற்பட்டு நாட்டுக்கு சேவை செய்ய முடிவு பண்ணியிருக்கார்
ஆமா ஜி : அதே இமையமலைக்கு போட்டோ எடுக்கறவரும் வாழ்க்கையை வெறுத்து சுத்திகிட்டு இருந்தாராமா?
மாமா ஜி : ஏன் ஜி அப்படி கேட்கறீங்க?
ஆமா ஜி : இல்ல எல்லாம் கலர் போட்டோவா இருக்கேனு கேட்டேன்
மாமா ஜி : என்ன ஜி கேள்வி எல்லாம் கேட்கறீங்க?
ஆமா ஜி : கோவிச்சுக்காதீங்க ஜி மேல சொல்லுங்க
மாமா ஜி : புதுசா இப்போ ஒரு உருட்டு உருட்டிருக்கார் கேளுங்க. தீபாவளி சமயம் வருஷா வருஷம் 5 நாள் காட்டில் போய் தனியா தங்கி இருப்பாராம் ஜி
ஆமா ஜி : ஓ அதுக்கு தான் மோடி ஜி காட்டுக்குள்ள குப்பற கிடக்கற மாதிரி மீம் போட்டானுகளா.
மாமா ஜி : கேவலப்படுத்தறதுலயே குறியா இருக்கானுகளே ஜி. ஒரு தேச தலைவரை இப்படியா அசிங்கப்படுத்தறது?
ஆமா ஜி : சரி ஜி, இந்த பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்துக்கு தேவையான நிதியில் 56 சதவீதத்தை விளம்பரத்துக்கு செலவு செஞ்சிருக்கோமாமே ?
மாமா ஜி : என்ன தப்புங்கறேன்? விளம்பரம் ரொம்ப முக்கியம் ஜி. தேர்தல் அப்போ திட்டத்தை சொன்னா மக்களுக்கு தெரியணுமா வேண்டாமா ?
ஆமா ஜி : போலியோ சொட்டு மருந்து கையிருப்பு இல்லாம தேதியை தள்ளி வச்சிருக்காங்களே ஜி பேசாம இந்த காசுல சொட்டு மருந்து வாங்கி இருக்கலாமே ஜி ?
மாமா ஜி : போலியோ மருந்தெல்லாம் பக்க விளைவு ஏற்படுத்தும் ஜி கோமியம் குடிக்க சொல்லுங்க, எந்த நோயும் வராது
ஆமா ஜி : நீங்க இப்படி சொல்லறீங்க நம்ம கட்சிக்காரங்களே மாத்தி மாத்தி ஹாஸ்பிடல் போய்ட்டு இருக்காங்க பாருங்க அமித் ஜிக்கு கூட பன்னி காச்சல் வந்திடுச்சு, அருண் ஜெட்லீக்கு கான்செர் வந்திடுச்சு
மாமா ஜி : என்ன ஜி ஆன்ட்டி இந்தியன் மாதிரி பேசிகிட்டு
ஆமா ஜி : ஆனா ஊனா இதை சொல்லி வாயை அடக்கிடுங்க, சரி ஜி காங்கிரஸ் காரனுக சமயம் பாத்து ப்ரியங்கா காந்தியை இறக்கி இருக்காங்களே ஜி
மாமா ஜி : நாம பிரியங்கா சோப்ராவை இறக்குவோம் ஜி ஏன் கவலை படறீங்க
ஆமா ஜி : கேமெராவை கூட பார்க்காம மோடி ஜி அப்படி என்ன யோசனையில் இருக்கார் ஜி ?
மாமா ஜி : ஒருவேளை கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கலாமான்னு யோசிக்கறாரோ என்னமோ
ஆமா ஜி : சரி ஜி இந்த பங்காரு அடிகளாருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கறாங்களாம்
மாமா ஜி : பாருங்க ஜி கையில் உலக உருண்டையோட நிக்கறார், மோடி ஜி அடுத்து எந்த நாட்டுக்கு போகணும்ன்றதை கண்டு பிடிக்கத்தான் உலக உருண்டையோட நிக்கிறார். ஆனா இனிமே மோடிஜி போகாத நாட்டை எவ்வளவோ தேடியும் கண்டுபிடிக்க முடியலன்னு அவரே தோல்வியை ஒப்புக்கிட்டாரு.
ஆமா ஜி : அந்த குரங்கு குளியல் நிகழ்ச்சியிலே பிரதமர் கலக்கிட்டாரு கேட்டீங்களா ஜி ?
மாமா ஜி : அது குரங்கு குளியல் இல்ல ஜி. மோடிஜியின் மனதின் குரல் அது.
ஆமா ஜி : அவரு மனதின் குரலை கேட்டா வெறும் பொய்யும் புரட்டுமாத்தானே ஜி இருக்கும். அந்த எழவை கேட்டு நாம என்ன பண்ணப்போறோம் ?
மாமா ஜி : என்ன ஜி எதிர்கட்சிக்காரன் மாதிரி பேசறீங்க. நாமளே இப்படி பேசுனா எதிர்கட்சிக்காரன் எளக்காரமா பேசுவான் ஜி
ஆமா ஜி : எதிர்கட்சிக்காரன் மட்டுமா துப்பறான். கோ பேக் மோடின்னு உலகமே காறித் துப்புதே. வேர்ல்ட் லெவல்ல ட்ரெண்ட் அடிக்கிறானுங்க. கொல வெறியோட சுத்துறானுங்க ஜி. வாங்க கெளம்புவோம். நம்பளையும் ரெண்டு சாத்து சாத்தப் போறாங்க.
அருமையோ அருமை!
very nice
மாமா ஜி : மூடிட்டு கேளுங்க ஜி
ஆமா ஜி : சாரி ஜி சாரி ஜி
ha ha
சிரிப்பை அடக்க முடியவில்லை 😂🤣😂🤣