உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாடுகளின் பாதுகாப்பிற்கு மற்றுமொரு சேவை செய்தத்தாக நினைத்துத்தான் புதிய மாட்டு வரியை மாநிலத்தில் கொண்டுவந்தார், ஆனால் அவர் இதனால் மாடுகளுக்கும் விவசாயிகளுக்கும், மாநிலப் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், உத்தரப் பிரதேச அரசாங்கம் கௌ கல்யாண் (மாட்டு நலன்) வரியாக 0.5% வரியை மதுபானங்களுக்கும் சுங்கச் சாவடிகளிலும் விதித்துள்ளது. மேலும், ஏற்கெனவே இருக்கும் மொத்த வியாபார சந்தைப் பொருட்களில் இருக்கும் 1% வரியை இரட்டிப்பாக்கியுள்ளது. இதன்மூலம், பசுமாடுகளுக்குப் புதிய கொட்டகைகளைக் கட்டவும் பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், தெருவில் இருக்கும் அனைத்து மாடுகளையும் மாட்டுக் கொட்டகைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று மாநில அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்றால், சில மாவட்டங்களில், அரிதாகக் காணப்படும் பள்ளி மற்றும் சுகாதார நிலையங்கள் மாட்டுக் கொட்டகைகளாக மாறிவிட்டன. ஏழ்மை, மோசமான ஆட்சி மற்றும் மனித உரிமைகளை அவமதித்தல் ஆகியவற்றுக்குப் பெயர் போன ஒரு மாநிலத்தில் அதிகமான நிதி மற்றும் நிர்வாக வளங்கள் மாடுகளின் நலனுக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
யோகி ஆதித்யநாத் பசுக்களை வெட்டுவதையும் அந்தக் கடைகளையும் அமைப்புகளையும் தடை செய்வதன் மூலம், பசுக்கள் மற்றும் காளைகளைப் பராமரிப்பது சம்பந்தமான பிரச்சினையை மட்டுமே உருவாக்கியுள்ளார். இப்போது, மாநில நிர்வாக எந்திரங்கள் மற்றும் வளங்களை மிகவும் பயனற்ற வழிகளில் உபயோகித்துவருகிறார்.
நாட்டிலேயே மிகவும் குறைந்த அளவு மனித வளக் குறியீடுகளைக் கொண்ட மாநிலம் இதுதான். ஆரோக்கியம், கல்வி ஆகியவற்றுக்கு மிகவும் குறைந்த பணத்தை ஒதுக்கும் மாநிலமும் இதுதான். இந்த மாநீலத்தில் மாடுகளின் நலனுக்காக வளங்கள் உருவாக்கப்படுகின்றன. மாடுகளின் உற்பத்தி வயது முடிந்ததும் அவற்றைப் பாதுகாக்க முடியாத விவசாயிகள், கிராமங்களிலும் தெருக்களிலும் மாடுகளை விட்டுவிடுகிறார்கள். சிலர், பொதுச் சுகாதார மையம், பள்ளிகள், பிற அரசு அலுவலகங்கள் ஆகியவற்றின் அருகில் விட்டுச் செல்கின்றனர்.
மாடுகளை வெட்டுவது தடை செய்யப்பட்டதால் மட்டும் உத்தரப் பிரதேச தெருக்களில் மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவில்லை. நீர்ப்பாசனம், உழுதல் ஆகிய வேளாண்மை சார்ந்த வேலைகள் அதிக அளவில் யந்திரமயமாக்கப்படுவதும், செயற்கைக் கருவூட்டல் முறையும் காளைகளைத் தேவைக்கதிகமாக இருக்கச் செய்கின்றன.
வறட்சி, இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படுகிறது. தங்கள் விளைச்சலுக்குக் குறைந்த விலை, கடனுக்கு அதிகமான வட்டி ஆகியவற்றாலும் விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படுகிறது. உற்பத்தி வயதிற்குப் பிறகும் கால்நடைகளை வைத்துப் பரமரிக்க வேண்டியிருப்பதால் அவர்களுடைய பொருளாதாரச் சுமை மேலும் கூடுகிறது.
விவசாயிகளின் பொருளாதாரச் சீர்குலைவை சமாளிக்க நினைத்த யோகி ஆதித்யநாத்தின் திட்டம், மாநிலத்தின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், உத்தரப் பிரதேசத்தில் 25 லட்சம் கால்நடைகள் ஓய்வு பெறுகின்றன. இவற்றை அரசுதான் பார்த்துக்கொள்ள வேண்டும். விரைவிலேயே, பள்ளி மற்றும் மருத்துவமனைகளைவிட அதிகமான மாட்டுக் கொட்டகைகள் அம்மாநிலத்தில் இருக்கப் போகின்றன. பாஜக அரசின் சமநிலை தவறிய முன்னுரிமைகளின் ஒரு அடையாளம்தான் இது.
பிற மாநில அரசுகள், பாஜக அரசுகள் உட்பட, என்ன செய்யக் கூடாது என்பதை ஆதித்யநாத்திடமிருந்து, கற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி: டெக்கான் ஹெரால்டு
https://www.deccanherald.com/opinion/second-edit/yogi-s-cow-mess-715242.html
முட்டாள்கள்