வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவது தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேறாமல்போய்விட்டதால் தோல்வியை சத்தம் போட்டு மறைக்க அரசு நினைக்கிறது.
2016-17 முதல் இந்திய நிதியமைச்சகம் தனது ‘பட்ஜெட்: ஒரு பார்வை’ என்கிற ஆவணத்தில் ஒரு ரூபாய் எப்படி வருகிறது (வருவாய்) மற்றும் அது எப்படிச் செலவாகிறது (செலவினம்) இரண்டையும் காட்டும் பை விளக்கப்படங்களைத் தர ஆரம்பித்தது. உற்றுப் பார்த்தால் இவ்வரைபடங்களால் மறைக்கப்படும் பொது நிதி தொடர்பான சில காரணிகளைப் புரிந்துகொள்ளலாம்.
2016-17ஆம் ஆண்டு ஒரு ரூபாய் வருவாயில் 30 காசுகள் மறைமுகவரி மூலம் (சேவை/பிற வரிகள், மத்திய சுங்கவரி/கலால் வரி உட்பட) வருவதாகக் கணக்கிடப்பட்டது. 2018-19இன் பட்ஜெட் மதிப்பீடுகளில் மறைமுக வரிகளின் (ஜி.எஸ்.டி./பிற வரிகள், சுங்க/கலால் வரிகள்) பங்கு 35 காசுகளாக அதிகரித்து விட்டது. ஆனால் பட்ஜெட்டில் ஒரு ரூபாய் வருவாய் மதிப்பீட்டில் 2016-17இல் 9 காசுகளாக இருந்த சுங்கவரி 2018-19இல் 4 காசுகளாகக் குறைந்து விட்டது. ஜி.எஸ்.டி. வருவாயைக் கொண்டு கடந்த இரண்டாண்டுகளாக மறைமுக வரி மூலமான வருவாயை அதிகரிக்க அரசு முயன்றது இதிலிருந்து தெரிகிறது.
உண்மை நிலவரம் என்ன?
ஜிஎஸ்டி மூலம் மாதமொன்றுக்கு ரூ.1.12 டிரில்லியன் வருமானம் வருமென அதீதமாக 2018-19 பட்ஜெட் மதிப்பீட்டில் காட்டப்பட்டது. நிஜத்தில் ஏப்ரல்-செப்டம்பர், 2018 வரையிலான காலத்தில் ஜிஎஸ்டி வருமானம் அக்டோபர் வரை ஒருமுறை கூட மதிப்பிட்ட அளவை எட்டவில்லை. 2018 செப்டம்பரில் ரூ.0.94 டிரில்லியனாக மிகக்குறைந்த வருமானமே வந்தது. விழாக்காலமான அக்டோபரில் ரூ.1.01 டிரில்லியனாக உயர்ந்தது; நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் வருமானம் பட்ஜெட் மதிப்பீட்டிலிருந்து 13% ஒட்டுமொத்தமாக குறைந்தது. நவம்பரிலும் வருவாய் அதிகரிக்காமல் ஒட்டுமொத்த குறைபாடு 10%-ஆகவே இருந்தது. ஆண்டில் மீதமிருக்கும் 3-4 மாதங்களில் இவ்விழப்பு ஈடுகட்டப்பட முடியுமா என்பது சந்தேகம்தான்.
மாநில அளவிலான விவரங்களைப் பார்த்தால் குறைபாட்டின் உண்மையான நிலவரம் புரியவரும். தொழில் வளர்ச்சி பெற்ற குஜராத், மகாராஷ்டிரா, கோவா, பஞ்சாப், தமிழ்நாடு, தில்லி மாநிலங்களீல் குறைபாடு அதிகரித்துக் கொண்டுபோகிறது (அ) அதே அளவில் இருக்கிறது. நவம்பரில் பஞ்சாப், கோவா, தில்லி மாநிலங்களில் இக்குறைபாடு முறையே 37%, 25% மற்றும் 21% என இருந்தது. குறைபாடுகளுக்கான காரணங்களை ஆராய மாநில நிதி அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைக்க புத்தாண்டில் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் முதல் ஐந்தாண்டுகளில் மாநில அரசுகளின் இழப்பை சரிசெய்வதகாக வாக்கு தந்துள்ள மத்திய அரசின் செலவு எதிர்காலத்தில் அதிகரிக்கும் சமயத்தில் காலம் கடந்த ஒரு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் விளைவுகள் என்ன?
ஜிஎஸ்டி வருவாய்க் குறைபாடு மாபெரும் வருவாய்க் குறைபாட்டுக்கு வழிவகுக்கும்; மேலும் நிதிப்பொறுப்பு & பட்ஜெட் நிர்வாகச் சட்டமானது (FRBM Act) அரசின் கைகளைக் கட்டிப்போட்டு விட்டது. சட்டத்தைப் பின்பற்றினால் வேறு ஆதாரங்களிலிருந்து நிதி திரட்டியாக வேண்டும். ரிசர்வ் வங்கியானது ஏற்கனவே அமுக்கப்பட்டு, அடக்கப்பட்டு விட்டது; டிவிடெண்ட், மத்திய ரிசர்வ் நிதியிலிருந்து ஒரு பகுதியை மாற்றுவதால் மட்டுமே பெருமளவு நிதியை அரசால் திரட்ட முடியும்.
அதேபோல், அரசின் செலவினத்தில் பெரும்பகுதி குறையுமென்பதை இடைக்கால பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். ஆயினும், பொருளாதார ரீதியாக பல வகையில் தோற்றுள்ள போதிலும் இது தேர்தல் ஆண்டு என்பதால் ‘உரத்த குரலில்’ சப்தம் எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசு உள்ளது.
பட்ஜெட்டை மீறிக் கடன் வாங்கும் அரசின் போக்கும் அதிகரிக்கக்கூடும். பாராளுமன்றத்தில் கடந்த ஜனவரியில் சமர்ப்பித்த அறிக்கையில் மோடி அரசின் நிதி முதலீடுக்காக்க பட்ஜெட்டை மீறிக் கடன் வாங்கும் போக்கையும் 2016-17ஆம் ஆண்டின் வருவாய் செலவினத்தையும் நிதி/வருவாய் ரீதியான குறைபாட்டை மறைக்க முயற்சித்ததையும் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG) கடுமையாக விமர்சித்திருந்தார். நிதிக்கொள்கையில் ஒளிவு-மறைவற்றா நிலையை அதிகரிக்கும் குறிக்கோள்/காரணம் பற்றி அரசு நிச்சயம் பாராளுமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியது. ஆனாலும் CAGயின் அறிவுரை கண்டுகொள்ளாமல் விடப்பட்டு 2016-17இல் நடந்தது இந்த ஆண்டும் நிகழலாம்.
‘பட்ஜெட்: ஒரு பார்வை’ பை வரைபடத்தில் 2016-17இல் ஒரு ரூபாய் வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டில் 33 காசுகள் நேரடி வரிகளிலிருந்து (நகராட்சி வரி: 19 காசுகள், வருமான வரி: 14 காசுகள்) கிடைக்கின்றன. 2018-19இல் நேரடி வரிக்கான பட்ஜெட் மதிப்பீடு 35 காசுகளாக (நகராட்சி வரி: 19 காசுகள், வருமான வரி: 16 காசுகள்) இருந்தது. நகராட்சி வரி அதிகரிக்கும் என அரசு எதிர்பார்க்கவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது. ‘மேக் இன் இந்தியா’ எனும் அரசின் பெருமையான திட்டம் கடந்த நான்காண்டுகளாக செயல்படா நிலையில் இருப்பதால் அரசின் எதிர்பார்ப்பு நிதர்சனத்தை ஒட்டி இருப்பதாகக் கொள்ளலாம்.
நேரடி / மறைமுக வரிகள் மூலமான வருவய் ஒரு ரூபாய் பை வரைபடத்தில் 35 காழுகளாக 2018-19 பட்ஜெட் மதிப்பீட்டில் இருந்தது. நேரடி வரிகள் மூலம் வரும் வருமானம் மறைமுக வரி வருமானத்தை விட அதிகமாக இருப்பதே பொருத்தமான சூழலாகும். பொது நிதி பற்றிய எப்புத்தத்திலும் கூறப்படுவது போல் இதுவே முற்போக்கு வரிக்கட்டமைப்பின் அடையாளமாகும். மறைமுக வரி வசூலிப்பதைல் அழுத்தம் தரப்பட்டால் பணக்காரர்கள், ஏழைகளுக்குத் தேவையான அன்றாடத் தேவைப் பொருட்கள் மீது ஒரே வரிவிகிதம் இருக்கும்; இதனால்தான் முற்போக்கு வரிக்கட்டமைப்பானது பணக்காரர்கள் அதிகம் வரி செலுத்தும் நேரடி வரிவிதிப்பிற்கு முக்கியத்துவம் தருகிறது. ஆக, ஒரு ரூபாய் பை வரைபடமானது முற்போக்கு வரிக்கட்டமைப்பை நோக்கி நகரும் எவ்விதக் குறிப்பையும் தரவில்லை.
வரிச்சுமை 11.6% ஆக இருப்பதும் குறைந்த வரி ஒட்டுமொத உற்பத்தியும் சேர்ந்து நேரடி வரி வசூலிப்பைக் கடினமானதாக ஆக்குகின்றன. மேலும் பொருளாதாரத்தில் கறுப்புப்பணம் இருப்பதும் இதனால் ஊர்ஜிதமாகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கறுப்புப்பணப் பிரச்சினையை சமாளிக்க மோடி அரசு மேற்கொண்ட முயற்சி பேரழிவில்தான் முடிந்தது. எனவேதான் ஒரு ரூபாய் பை வரைபடத்தில் இப்பகுதி இந்த ஆண்டு பட்ஜெட் வந்த பின்னரும் மாறாமல் அப்படியே இருக்கும்.
ஆண்டுக்கு 10 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது போன்ற அரசின் வாக்குறுதிகள் தோல்வி அடைந்து விட்டதால் வரப்போகும் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகள், நடுத்தர குடும்பத்தாருக்கு ஏதுவான பல அறிவிப்புகள் வருமென்பதே பலரது எதிர்பார்ப்பாகும். ஆயினும், தேசிய மாதிரி ஆய்வு நிறுவனத்தின் (NSSO) வெளியிடப்படாத ஆய்வு முடிவின்படி 2017-18இன் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுக் காலத்தில் இல்லாத அளவுக்கு 6.1% என அதிகமாகி விட்டதால் பட்ஜெட்டில் ‘உரத்த குரலில்’ தரப்படும் அறிவிப்புகள் பொருளாதார நிலையைச் சீர்படுத்த நிச்சயம் போதுமானதாக இருக்காது.
அபிஜித் முகோபாத்யாயா
(அபிஜித் முகோபாத்யாயா, அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் பொருளாதார, வளர்ச்சித் திட்டத்தில் சீனியர் ஃபெலோ)
மத்தியில் ஆளும் பிஜேபி அரசு, நிர்வாகத்தில் அரசு வெளிப்படைத்தன்மையை முற்றிலும் ஒழித்து பின்வாசல் வழியாக தங்களது சித்தாந்தத்தை நடைமுறை படுத்த எடுத்துவரும் முயற்சிகளில் அதனது நிதிக்கொள்கையும் வருவதால் இந்திய பொருளாதாரம் தேக்க நிலை அல்லது பின்னோக்கி செல்லும் நிலையை அடைந்துள்ளது . பெரு முதலாளிகளை வளர்த்து தனியார்மயமாக்களை முன்னெடுத்து , அரசு நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தி இடஒதுக்கீடு மூலம் பயன் பெறும் நலிந்த,பிற்படுத்தப்பட்ட , சமூக மக்களை மேலும் வளரக்கூடாது என்ற இந்த அரசின் முயற்சி வெற்றிபெற்றுள்ளது.