ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சி,இ.ஓ சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீதான விசாரணையில் தொழில்முறை தன்மை காண்பிக்க வேண்டும் என விரும்பிய அருண் ஜேட்லி, சாகச முயற்சியில் ஈடுபட வேண்டாம் என சிபிஐயை எச்சரித்துள்ளார்.
அண்மைக் காலம் வரை நிதி அமைச்சராக இருந்து, இப்போது இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லி, நாட்டின் முன்னணி வர்த்தக வழக்கறிஞர்களில் ஒருவர். ஆனால், தனது சட்ட அறிவை மீறி, ஒரு இதழின் ஆசிரியராக தனது துறையின் திறனை அவர் தவறவிட்டிருக்கிறார்.
அவருக்கு நல்ல எழுத்தாற்றல் இருப்பதாக நினைக்கிறேன். ஜேட்லியைப்போல, பொருளை மாற்றும் திறன் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இருக்காது.
தனது அத்தனை திறன்களையும் பிரயோகித்து, ஜேட்லி, மோடி அரசின் அபிமான ஊடகமான டிவிட்டர் வாயிலாக, சிபிஐக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
முன்னாள் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கோச்சார் வழக்கில் தொழில்முறைத்தன்மையை வெளிப்படுத்துமாறும், சாசக விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் சிபிஐயைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னாள் இயக்குனர் அலோக் வர்மாவுக்கு எதிராக நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட கவிழ்ப்பின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளாத சிபிஐ அதிகாரிகள், ஜேட்லி ஏன் இந்த பகிரங்க எச்சரிக்கையை விடுக்க வேண்டும் என குழம்பிவிட்டனர். இமெயில் அல்லது, சிறப்பு பொறுப்பில் இருக்கும் அதிகாரியிடம் வாழிமொழியாக உத்தரவிடும் வாய்ப்புகள் இருந்தும்கூட அவர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கத் தீர்மானித்தார்.
நிதியமைச்சராக ஜேட்லியிடன் சிபிஐ அறிக்கை சமர்பிப்பதில்லை எனும் நிலையில் ஏன் இந்தக் கருத்து?
மிகவும் மதிக்கப்படும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஐசிஐசிஐ விதிகளை மீறியதாக சந்தா கோச்சார் மீது குற்றம்சாட்டியுள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வங்கி அவருக்கு வழங்கப்பட்ட போனஸ், ரூ.10 கோடி அளவிலானது, மற்றும் கோடிக்கணக்கில் மதிப்புள்ள பங்கு வாய்ப்புகளையும் திரும்ப பெற உள்ளது. இப்போது ஜேட்லி, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவை சாகசப் பிரியர் என்று கூறுவாரா?
இங்கு தான் விஷயமே இருக்கிறது. மோடி அரசு, நான்கரை ஆண்டுகளில், தனக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் மற்றும் அவர்கள் நலனைக் காக்க, அனைத்து அமைப்புகளையும் தகர்த்துள்ளது.
சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தத்தில் சிபிஐ ஆரம்ப விசாரணையைப் பதிவு செய்ய இருந்தபோது அதன் இயக்குனர் நள்ளிரவில் நீக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் மீண்டும் அவரை நியமித்த நிலையில், அவர் ஒரு நாள் மட்டுமே அந்தப் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டார். மோடி அரசின் சக்திவாய்ந்த அமைச்சரால் சாகச முயற்சிகளில் ஈடுபடுவதாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட, சிபிஐ இதுதான்.
ஆனால் இதே சிபிஐ, உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியுடனான கூட்டணியை சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் அறிவித்த அன்று, அவர் மீது ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அது தொழில்முறைச் செயல் எனக் கூறப்பட்டது.
ஜனவரி 31இல், அமலாக்கப் பிரிவு மாயாவதிக்கு எதிராக ரெய்டு நடத்தியது.
மாயாவதிக்கு எதிரான வருமானத்திற்கு மீறிச் சொத்து சேர்த்த வழக்கு, அவ்வப்போது, அவர் அரசியல் காய் நகர்த்தும் போதெல்லாம், தூசு தட்ட்ப்படுகிறது. அண்மையில் மத்தியப் பிரதேசம் மற்றும் சதீஸ்கர் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இப்படி தான் நடந்தது.
அவரது சகோதரருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. சிபிஐ, பாஜகவின் சகா போல உள்ளது. ஜேட்லியைப் பொறுத்தவரை, ராகுல், சோனியா, லாலு, அரவிந்த் கேஜ்ரிவல் போன்ற எதிர்கட்சித் தலைவர்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்தால், இந்த நடவடிக்கைகள் பிரதமர் அலுவலகம் வாயிலாக அமித் ஷா உத்தரவிட்டு நடைபெற்றாலும், அது தொழில்முறையானது.
ஆனால், விதிமீறல்கள் தொடர்பாக அரசின் கோடிஸ்வர நண்பர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தும்போது, பிரதமர் அலுவலகம் அழைத்து, அதன் சாகசத்தன்மையைக் கட்டுப்படுத்த உத்தரவிடுகிறது.
கூண்டுக்கிளி எனும் பரிதாபமான சுய வர்ணையில் திருப்தி அடையாமல், வர்மாவை மீறி உத்தரவுகளை நிறைவேற்றுவதற்காக சர்ச்சைக்குரிய ராகேஷ் அஸ்தானா, சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார். அஸ்தானா மீது அவரது அமைப்பே ஊழல் குற்றச்சாட்டு சொல்லும் நிலை வந்தது.
நீக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் வர்மா மற்றும் அவர் கீழ் வழக்குகளை விசாரிக்கும் மோடி அரசால் தூக்கி அடிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் சாகசத் தன்மை கொண்டவர்கள் என ஜேட்லி நினைக்க வேண்டும். ஆனால் சட்ட விரோத இரும்புத் தாது அகழ்வில், ஏற்றுமதியில் ரெட்டி சகோதர்களுக்கு எதிராக, மலையெனக் குவிந்த ஆதாரங்களை கர்நாடக தேர்தலுக்கு முன் சிபிஐ கண்டுகொள்ளாமல் இருந்தால் அது தொழில்முறைத்தன்மை. இத்தகைய இரட்டை நிலைப்பாடுகளைத் தொடர்ந்து பட்டியலிடலாம்.
ஜேட்லியின் கீழ் நேரடியாக வரும் மற்றொரு அமைப்பான, அமலாக்கப் பிரிவு, மோடி அரசின் கீழ் இதே விதமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. 2014 தேர்தலில் மோடி பிரதானமாக முன்வைத்த 2ஜி வழக்கில், சர்ச்சைக்குரிய அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலைகுலைய வழிவகுத்தார். இதே அதிகாரி அதிக அளவிலான ஹவாலா பண தடுப்பு நோட்டீஸ்களை வழங்கினார். அவர் சாகசக்காரர் என மோடி அரசு உணரும் வரை தொழில்முறையானவராக அந்த அதிகாரி இருந்தார்; இப்போது அவரை மோடி அரசு பணியில் இருந்து நீக்க முயல்கிறது.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பல முன்னாள் அதிகாரிகள் மீது அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த முயன்றபோது அது தொழில்முறை மிக்கதாகத் தெரிகிறது. அதே அமலாக்கப் பிரிவு, ஆயுத பேர டீலர் சஞ்சய் பண்டாரியுடனான தொடர்புக்காக முன்னணி நாளிதழ் ஆசிரியரை விசாரிக்க முற்படும்போது, மோடி அனுமதி மறுத்து தொழில்முறை தன்மை குறித்துப் பாடம் எடுத்தார்.
ஆக பாஜக எதிரிகள் என்றால் இந்த அமைப்புகள் ‘தொழில்முறை’ தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் நெருக்கமானவர்கள் மீதான நடவடிக்கை என்றால், அரசு இந்த சாகசத்தைப் பொறுத்துக்கொள்ளாது.
ஆக, குஜராத் மாதிரி இன்று தேசிய மாதிரியாகி இருக்கிறது.
நன்றி: தி வயர்
ஸ்வாதி சதுர்வேதி
https://thewire.in/politics/the-hypocrisy-behind-jaitleys-professionalism-adventurism-remark