2010ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங், சூரிய மின்சக்தியில் இந்தியாவை உலக அளவில் முன்னணி நாடாக உருவாக்குவதற்கான, ஜவகர்லால் நேரு தேசிய சோலார் மிஷின் திட்டத்தை (ஜேஎன்என்எஸ்எம்) அறிமுகம் செய்தார். நாட்டில் சூரிய மின்சக்தி பரவுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், 2022 வாக்கில் 20 கிகாவாட் சூரிய மின்சக்தித் திறனை நிறுவ இலக்கு கொண்டுள்ளதாக அரசு தெரிவித்தது. 2015இல், பிரதமராகப் பதவியேற்ற ஓராண்டுக்குள் நரேந்திர மோடி இந்த இலக்கை ஐந்து மடங்காக , 2022இல் 100 கிகாவாட்டாக, உயர்த்தினார். 2016இல், மோடி மீண்டும் சூரிய மின்சக்திக்கான ஈடுபாட்டை உறுதி செய்தார்.
அப்போது இந்தியா, புவி வெப்பமாதலை எதிர்கொள்வதற்கான சர்வதேச மாநாடான பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது. இதன் கீழ், கரியமில வாயு வெளியேற்றத்தை இந்தியா 33 முதல் 35 சதவீதம் வரை குறைக்க ஒப்புக்கொண்டது. அதன் பிறகு மோடி அரசு, படிம எரிபொருள் மீதான சார்பைக் குறைப்பதற்காக சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில், 121 நாடுகள் கொண்ட சர்வதேச சூரிய சக்தி கூட்டணியை (ஐஎஸ்ஏ) அறிவித்தது. “சர்வதேச கச்சா எண்ணெய் உற்பத்தியில் 40 சதவீத அங்கம் வகிக்கும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு ஆற்றும் பணிக்கு நிகரான செயலை எதிர்காலத்தில் ஐஎஸ்ஏ செய்யும் என, 2018 அக்டோர்பரில் ஐஎஸ்ஏ முதல் கூட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் கூறினார்.
மோடியின் பிரம்மாண்டமான அறிவிப்புகளை மீறி, சர்வதேச சூரியமின் சக்தி முயற்சியில் இந்தியாவின் முன்னணி நிலை மற்றும் ஜேஎன்என்எஸ்எம். ஆகியவை அண்மைக் காலக் கொள்கை முடிவுகளால் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. சர்வதேச ஆலோசனை அமைப்பான கிரிசில் 2018 ஆகஸ்ட்டில் வெளியிட்ட அறிக்கையில், இந்தக் கொள்கை மாற்றங்களால் இந்தியா 2022 இலக்கை, ஐந்தில் ஒரு பங்கு தவறவிடும் எனத் தெரிவிக்கிறது.
2018 ஜூலை, நிதி அமைச்சகம், பாதுகாப்பு வரியை அறிவித்தது. சூரிய மின்சக்தி பேனல்களுக்கு முக்கியமான சோலார் செல்கள், மாட்யூல்கள் ஆகியவற்றின் விலை குறைந்த இறக்குமதி காரணமாக உள்ளூர் தொழில்கள் நலிவடைவதைத் தவிர்ப்பதற்கான இறக்குமதி வரியாக இது அமைந்தது. ரூபாய் மதிப்பின் சரிவுடன் சேர்ந்து, இந்த இறக்குமதி வரி சூரிய மின்சக்தி திட்டங்கள் செலவை 20 சதவீதம் அதிகரிக்கசெய்ததாக கிரிசில் அறிக்கை தெரிவிக்கிறது. அதானி குழுமத்தின் சூரிய மின்சக்தி நிறுவனமான முந்த்ரா சோலார் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்த வரி விதிக்கப்பட்டது. மேலும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை பலமுறை வேண்டுகோள் விடுத்தும், நிதி அமைச்சகம், உள்ளூர் சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியம் அல்லது ஊக்கத்தொகை அளிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இந்த முடிவுகள் இந்தியாவை சூரிய மின்சக்தி வல்லராசக்குவதில் அரசுக்கு உள்ள ஈடுபாட்டைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
அரசு நிர்ணயித்திருந்த சூரிய மின்சக்தி இலக்கு, தரை மீதான சூரியசக்தி திடங்கள் மற்றும் கூரை மீதான சூரிய மின் திட்டங்கள் என, முறையே 60 கிகாவாட் மற்றும் 40 கிகாவாட் கொண்டவையாக பிரிக்கப்பட்டன. தற்போது, 100 கிகாவாட் சூரிய மின்சக்தித் திறனில் 24 கிகாவாட் அளவுக்குப் பெற்றுள்ளது. இதில் 2017-18இல் 9.3 கிகாவாட் அமைக்கப்பட்டது. 2018-19இல் 2.6 கிகாவாட் மட்டுமே அமைக்கப்பட்டன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சக தகவல்படி, 2018ஆம் ஆண்டில் அந்த ஆண்டு இலக்கான 1 கிகாவாட்டுக்கு பதில் 156 மெகாவாட் கூரை மீதான சூரிய மின் பேனல்கள் பதிக்கப்பட்டன. மொத்த அளவு இலக்கான 40 கிகாவாட்டில் ஆறு சதவீதம்தான் தற்போதைய மொத்த அளவு உள்ளது. 2018 மே மாதம், இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்தி திறன், 20 கிகாவாட் இலக்கில் 3 கிகாவாட்டாக மட்டுமே உள்ளது.
அண்மைக் காலக் கொள்கை முடிவுகளின் பாதிப்பை ஏற்கனவே உணர முடிகிறது. சூரிய மின்சக்தித் திறனை மேம்படுத்துவதற்கான பெரிய அளவிலான டெண்டர்கள் தோல்வி அடைந்துள்ளன. நிபந்தனைகளையும் கெடுவையும் பலமுறை மாற்றி அமைத்தும், ஜேஎன்என்எஸ்எம். திட்டத்தைச் செயல்படுத்தும் இந்திய சூரிய மின்சக்தி ஆணையம் (எஸ்.இ.சி.ஐ.) வெளியிட்ட 10 கிகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்களுக்கான டெண்டர் கோரப்படவில்லை.
இந்திய சூரிய மின்சக்தித் துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு, சோலார் செல்கள் மற்றும் மாட்யூல்கள் மீதான இறக்குமதி வரியை ஒரு காரணமாக கொள்ளலாம். 2018 ஜூலை வரை, இந்தியாவின் 85 சதவீத சோலார் செல்கள் மற்றும் மாட்யூல்கள் சீனா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. சூரிய மின்சக்தி ஆலையை அமைக்கத் தேவையான 50 சதவீதப் பொருட்களை சோலார் செல்கள் பூர்த்தி செய்கின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் தேசிய சூரிய மின்சகதிப் பிரிவு, 2017 ஆகஸ்ட் மாத அறிக்கைப்படி, 2017 மே மாதத்தில் இந்தியாவில் 20 சோலார் செல் உற்பத்தியாளர்கள் மட்டுமே இருந்தனர். மொத்த செயல்பாட்டு திறன் 1.66 கிகாவாட்டாகும், 5.5 கிகாவாட் திறன் அளவில் 117 சோலார் மாட்யூல் தயாரிப்பாளர்கள் இருந்தனர். அதானி குழுமத்தின் முந்த்ரா சோலார், நாட்டின் மிகப்பெரிய சோலார் செல்கள் மற்றும் மாட்யூல்கள் உற்பத்தி நிறுவனம் 2017 மே மாதம் செயல்படத் துங்கியபோது, 1.2 கிகாவாட் திறனைச் சேர்த்தது.
2017 டிசம்பரில், இந்திய சூரிய மின்சக்தி சங்கம் அல்லது ஐ.எஸ்.எம்.ஏ (23 சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்கள் சங்கம்) பாதுகாப்பிற்கான டைரக்டர் ஜெனரலிடம் (டிஜிஎஸ்) மனு ஒன்றை சமர்பித்தது. நிதி அமைச்சகம் கீழ் இயங்கும் கட்டுப்பாட்டு அமைப்பான டிஜிஎஸ், பாதுகாக்கும் வரி விதிப்பு தொடர்பாக பல்வேறு துறைகளில் ஆய்வு நடத்துகிறது. 2018 மே மாதம், டிஜிஎஸ், ஆண்டி டம்பிங் அண்ட் அலைட் டியூட்டிஸ் பிரிவுடன் இணைக்கப்பட்டு, டைரக்டர் ஜெனரல் ஆல் டிரேட் ரெமடிஸ் உருவாக்கப்பட்டு, வர்த்தக அமைச்சர் கீழ் கொண்டு வரப்பட்டது. ஐ.எஸ்.எம்.ஏ, முந்த்ரா சோலார், ஜூபிடர் சோலார் பவர், வெப்சால் எனர்ஜி சிஸ்டம்ஸ், இண்டோசோலார் லிட், ஹில்யோஸ் போட்டோவோல்டிக் ஆகிய ஐந்து நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்தது. மலிவு விலை இறக்குமதி காரணமாக உள்ளூர் நிறுவனங்கள் நஷ்டமடைகின்றன எனும் வாதத்தின் அடிப்படையில் இறக்குமதி மீது வரி விதிக்க வேண்டும் என மனுவில் வாதிடப்பட்டிருந்தது. அதிகரிக்கும் இறக்குமதியால் உண்டாகும் தீவிர பாதிப்பை எதிர்கொள்ள இந்தப் பாதுகாக்கும் வரி உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவில் குறிப்பிடப்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்திய டிஜிஎஸ் 2018 ஜனவரி 5 அன்று அறிக்கை வெளியிட்டது. அதில் சீனா மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் செல்கள் மீது 70 சதவீத வரி விதிக்கப் பரிந்துரை செய்தது. சூரிய மின்சக்தி உற்பத்தியாளர் ஷபூர்ஜி பல்லோஞ்ஜி இன்பிராஸ்டக்சர் தாக்கல் செய்த மனுவைல் சென்னை உயர் நீதிமன்றம் இந்த அறிக்கைக்குத் தடை விதித்தது. டிஜிஎஸ், டிஜிடிஆருக்குள் இணைக்கப்பட்ட பிறகு விசாரணை மீண்டும் நடைபெற்றது. 2018 ஜூலை இந்த அமைப்பு தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் இரண்டு ஆண்டுகளுக்கு இறக்குமதி வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டது. முதல் ஆண்டு 25 சதவீதம், அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்கு 20 சதவீதம் மற்றும் அதன் பிறகு 15 சதவீதம் என பரிந்துரைக்கப்பட்டது. இந்த புதிய இறக்குமதி வரிக்கு எதிராக ஹிரோ பியூட்டர் எனர்ஜிஸ், ஏ.சி.எம்.இ. சோலார் மற்றும் விக்ரம் சோலார் ஆகிய மூன்று நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில் ஒரிசா நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது. எனினும், 2018 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் அறிக்கை நிலை நிறுத்தியது.
இந்திய சூரிய மின்சக்தி டெவலப்பர்கள் மற்றும் சங்கங்கள், சோலார் பவர் டெவலப்பர் அசோசியேஷன் (எஸ்டிபிஏ) தலைமையில் , 2018 ஜூன் 26ஆம் தேதி டிஜிடிஆர் ஏற்பாடு செய்திருந்த கருத்து கேட்பு கூட்டத்தில் இறக்குமதி வரி விதிப்புக்கு எதிராக வாதிட்டது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பவதால் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுவதை இந்த அமைப்பு எதிர்த்து வாதிட்டது. மொத்த உற்பத்தி, கொள்திறன் பயன்பாடு, உள்ளூர் விற்பனை மற்றும் தொழிலாளர் வேலை வாய்ப்பு ஆகி அமசங்களின் அடிப்படையில் ஐஎஸ்எம்ஏ நஷ்டம் என கூறுவதாகவும், ஆனால் இது ஏற்கத்தக்கதல்ல என்றும், நஷ்டம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள் அந்த நோக்கில் தயாரிக்கப்பட்டவை எனவும் எஸ்டிபிஏ தெரிவித்தது. ஐந்து மனுதாரர்களில், இண்டோசோலார் நிறுவனம், 2017ல் நஷ்டம் குறைந்திருப்பதாக தெரிவித்தது. (ரூ.83 கோடி). வெஸ்பால் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து ரூ.86 கோடி லாபம் ஈட்டியது. ஜூப்பிடம் ரூ.40 கோடி லாபம் ஈட்டியது. ஜீலியோஸ் கடன் சீரமைப்பு காரணமாக நஷ்டம் அடைந்தது. மிகவும் விநோதம் என்னவெனில் ஐந்து மாத செயல்பாடுகளை மட்டும் கொண்ட முந்த்ரா சோலார் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறியதுதான்.
சீனாவின் டம்பிங் உத்தி காரணமாக இறக்குமதி அதிகரித்தது எனும் ஐஎஸ்எம்ஏ வாதத்தையும் எஸ்பிடிஏ எதிர்த்தது. 2016-17இல் இந்திய சூரிய மின்சக்தித் துறை 80 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. ஐஎஸ்எம்ஏ சொல்வதற்கு மாறாக, ஜேஎன்என்எஸ்எம். உருவாக்கிய தேவை, மாநில அரசுகள் மற்றும் எஸ்.இ.சி.ஐ. போன்றவற்றின் டெண்டர்கள் காரணமாக இந்த வளர்ச்சி உண்டானதாக எஸ்பிடிஏ தெரிவித்தது. “உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் உள்ளூர் நிறுவனங்களின் திறன் மற்றும் உண்மையான தேவைக்கும் உள்ள இடைவெளியே, மனுதாரர் உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களின் சந்தைப் பங்கு குறையக் காரணம்” என எஸ்பிடிஏ வாதிட்டது.
எஸ்பிடிஏ தகவலின்படி, பாதுகாக்கும் இறக்குமதி வரி, திட்டச் செலவுகளை உயர்த்தி, விநியோக நிறுவனங்கள் மின்சக்திக் கட்டணத்தை உயர்த்த வைக்கும். இந்த உயர்வை வாடிக்கையாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்தியாவில் சூரியம் மின்சக்திக் கட்டணம் 2010 ல் 80 சதவீதம் குறைந்தது. 2017 மே மாதம் இது யூனிட்டுக்கு ரூ.2.44 ஆக இருந்தது. 12 முதல் 15 சதவீத இறக்குமதி வரி, கட்டணத்தை ரூ.4 ஆக உயர்த்தும். விநியோக நிறுவனங்கள் மின்சக்தியை ரூ.3க்கு மேல் விலை கொடுத்து வாங்காது என அஞ்சுவதாக எஸ்பிடிஏ தெரிவித்தது. இது ஏற்கனவே உள்ள 28,000 கோடி மதிப்பிலான 9 கிகாவாட் மின் திட்டங்களைப் பாதிக்கும். இந்த வாதத்தை டிஜிடிஆர் நிராகரித்தது. நிதி அமைச்சகம் இறக்குமதி வரி விதிப்பை 2018 ஜூலை 30 அன்று ஏற்றுக்கொண்டது.
2012இல் ஐஎஸ்எம்ஏ இதே மனுவுடன் டிஜிஎஸ்-ஐ அணுகியது. இரண்டு ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு, வர்த்தக அமைசகம், அமெரிக்கா, சீனா, மலேசியா மற்றும் தைவான் இறக்குமதிகளுக்கு 8 முதல் 11 சதவீத வரி விதிக்கப் பரிந்துரைத்தது. புதுப்பிக்கத்தக்க எரிச்கதித் துறை அமைச்சகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. வரி விதிக்கக்கூடிய நிலையை இந்தியத் துறை எட்டவில்லை என்னும் அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போதைய மின் சக்தி அமைச்சரான பியூஷ் கோயலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பசுமை எரிசக்தி வழிகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான இலக்கை அடைய இந்தியாவில் போதிய உள்ளூர் உற்பத்தி கொள்திறன் இல்லை என அவர் கூறினார். 2014 ஜூலை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதிம் கட்காரி, அப்போதைய நிதி இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார்:“இந்த வரி சூரிய மின்சக்தி செலவை 100 சதவீதம் உயர்த்தும். விலை உயர்வு காரணமாக, 4000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டங்கள் முடங்கிவிடும்.” அதன் பிறகு, அருண் ஜேட்லி தலைமையிலான நிதி அமைக்கம் இந்த வரி விதிப்பை செயல்படுத்த மறுத்துவிட்டது.
2014 முதல் 2018 ஜூலை வரை, இறக்குமதி வரியை நிராகரிப்புக்கான சூழலில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், சந்தையின் தேவையில் 15 சதவீத கொள்ளலவை தான் துறை பெற்றிருந்தது. ஒரே மாற்றம் என்னவெனில் அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலையை அமைத்து, மனுதாரர்களுடன் இணைந்திருந்தது. தற்போதைய எரிசக்தி துறை இணை அமைச்சர் ஆர்.கே,சிங், 2017 டிசம்பரில் புதுப்பிக்கத்தக்க எர்சக்தி துறை அமைச்சகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குறிப்பி தயாரித்தும் கூட இப்போது மவுனம் காக்கிறார்.
முரண் என்னவெனில், இறக்குமதி விதிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து, ஐஎஸ்எம்ஏ நிதி அமைச்சகத்தை அணுகியது, மனு செய்த ஐந்து நிறுவனங்களும், அவை கோரிய இறக்குமதி வரியில் இருந்து விலக்கு கோரின. ஐந்தில் மூன்று நிறுவனங்கள், முந்த்ரா சோலார், வெப்சால் மற்றும் ஹிலியோஸ் ஆகியவை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செயல்படுகின்றன. இண்ட்சோலார் ஏற்றுமதியை மையமாகக் கொண்டது. சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட நிறுவனங்கள் உள்ளூர் வரி, அதாவது டிடிஏவுக்கு வெளியே இருப்பவை. இவை பல வகை இந்திய வரிகள் மற்றும் நிதி அல்லாத சட்டங்களிலிருந்து விலக்கு பெற்றவை. சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் 2005, சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனங்கள் டிடிஏவில் ஒரு பொருளை விற்பனை செய்தால், பாதுகாக்க வரி உள்ளிட்ட இறக்குமதித் தீர்வுகளை செலுத்த வேண்டும்.
சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட நிறுவனங்களுக்கான இறக்குமதி வரி தொடர்பான இரண்டு அறிக்கைகளும் – டிஜிஎஸ் மற்றும் டிஜிடிஆர் வெளியிட்டவை – முரணாக இருப்பதே குழப்பத்திற்கு காரணம். டிஜிஎஸ் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தது. டிஜிடிஆர் அறிக்கை இந்நிறுவனங்களை உள்ளூர் நிறுவனங்களின் பிரிவிலிருந்து விலக்கியது. இறக்குமதி வரி பொருந்தும் எனத் தெரிவித்தது. டிஜிடிஆர் அறிக்கைபடி, டிடிஏவில் சோலார் மையங்கள், ஆண்டுத் தேவையான 10.57 கிகாபைட்டில் 1.16 கிகாபைட் மட்டுமே பூர்த்தி செய்வதால், இந்தியாவில் தயாரிக்கப்படும் 90 சதவீத சோலார் செல்கள் மற்றும் மாட்யூல்களுக்கு இறக்குமதி வரி பொருந்தும்.
சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட நிறுவனங்களின் கோரிகையை ஏற்றால், நிதி அமைச்சகம், சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தின் 30ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டத்திலிருந்து டிடிஏவுக்கு அகற்றப்படும் எந்த பொருளும் ஆண்டி டம்பிங், கவுண்டர் அவைலிங் மற்றும் பாதுகாக்கும் வரி உள்ளிட்ட சுங்க வரிகளுக்கு உட்பட வேண்டும் என இந்தப் பிரிவு குறிப்பிடுகிறது. இது வர்த்தகக் கொள்கையில் முக்கிய மாற்றமாக அமையும். எஸ்பிடிஏ சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர், தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல், “இறக்குமதி வரி ஒரு சில பெரிய நிறுவங்களுக்கு மட்டும் பலன் அளிக்கும். ஆனால், சிறிய மற்றும் நடுத்தர டெவலப்பர்களையும் நுகர்வோரையும் இது மிகவும் பாதிக்கும் என என்னிடம் கூறினார்.
இந்த கொள்கைக் குளறுபடி தவிர, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சூரிய மின்சக்தித் திட்டத்தை நிதி அமைச்சகம் தொடர்ந்து அலட்சியம் செய்துவருகிறது. 2017 டிசம்பரில், அமைச்சகம், சூரிய மின்சக்தி உற்பத்தியின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்துவதற்கான கொள்கைக் குறிப்பை வெளியிட்டது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஏற்ப, பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்படக்கூடிய ஒருங்கிணைந்த கொள்கையை வெளியிட்டு, இறக்குமதி தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. விரிவாக்கம், தற்போதைய ஆலை மேம்பாடு, சர்வதேச சோலார் தயாரிப்புகளுடன் உள்ளூர் நிறுவனங்கள் போட்டியிட புதிய உற்பத்தை ஆலைகளை அமைக்க, சோலார் செல்கள் மற்றும் மாட்யூல்கள் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு அளிக்க பரிந்துரைத்தது. ஆனால், இதற்காக சோலார் பேனல் தயாரிப்பாளர்களுக்கு 30 சதவீத மானியம் பரிந்துரைத்தபோது நிதி அமைச்சகம் அதை நிராகரித்தது. தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஆதரித்தது.
2018 ஜூலையில், மோடி அரசு, விவசாயிகளுக்கு சூரிய மின்சக்தி பம்ப்களை அளிக்கும் கிசான் உர்ஜா சுரக்ஷா இவாம் உத்தான் மகாஅபியான் திட்டத்தை அறிவித்தது. 10 ஆண்டு காலத்தில் இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடாக ரூ.49,000 கோடி ஒதுக்கப்பட்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் முதல் கட்டமாக் ரூ.28,000 கோடி கோரியபோது, நிதி அமைச்சகம் இந்தப் பெரிய தொகையை அளிக்க முடியாது என தெரிவித்தது. 18 சதவீத ஜிஎஸ்டி வரியும் சூரிய மின்சக்தி துறைக்கு பலமான அடியாக அமைந்தது. அமைச்சகம் அனைத்து சூரிய மின்சக்தி ஆலைப் பொருட்களுக்கும் 5 சதவீத வரியைப் பரிந்துரைத்தது.
உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவு இல்லாத தன்மை மற்றும் அதானி குழும ஆதரவு பெற்ற நிறுவனங்களுக்கான ஆதரவு இந்திய சூரிய மின்சகதி துறையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாக்கும் வரி எனும் போர்வையில், சர்வதேச நிறுவனங்களுடன் நியாயமாக போட்டியிடாமல் அதானி வகை நிறுவனங்கள் தங்கள் சந்தைப்பங்கை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன என்கிறது எஸ்பிடிஏ. அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஃபார் எனர்ஜு எக்கனாமிக்ஸ் அண்ட் பைனான்சியல் அனாலிசிஸ் என்னும் அமைப்பின் எனர்ஜி பைனான்ஸ் ஸ்டடீஸ் இயக்குனர் டிம் பக்லே, “இந்தியாவின் சூரிய மின்சக்தித் திட்டம் அதை உலக அரங்கில் உயர்த்தியுள்ள நிலையில், இறக்குமதி வரி விதிப்பு என்பது இந்தியா அடித்துக்கொண்ட சொந்த கோலாக அமைகிறது என்கிறார்.
நிலீனா எம்.எஸ்
நன்றி: தி கேரவன்
https://caravanmagazine.in/government/solar-power-targets-adani-mundra-import-duty