மாமா ஜி வீட்டுக்கு வருகிறார் ஆமா ஜி
ஆமா ஜி : ஜி வாங்க படத்துக்கு போகலாம்
மாமா ஜி : இன்னைக்கு பட்ஜெட் ஜி, எங்கயும் போக கூடாது உக்காருங்க பார்க்கலாம்
ஆமா ஜி : அது தான் வருஷா வருஷம் பட்ஜெட் தாக்கல் பண்றாங்களே அதை போய் என்ன ஜி பார்த்துட்டு
மாமா ஜி : சும்மா இருங்க ஜி இது தான் நமக்கு கிடைச்ச கடைசி வாய்ப்பு, இன்னைக்கு விடப்போற கதையை கேட்டு அடுத்த 20 வருசத்துக்கு நாம தான் ஆட்சியில் இருக்கனும்
ஆமா ஜி : இடைக்கால பட்ஜெட்ல எப்படி ஜி வாக்குறுதி எல்லாம் குடுக்க முடியும்?
மாமா ஜி : என் கிட்டயே எகனாமிக்ஸ் பேசறீங்களா ஜி ? சுப்ரீம் கோட்லயே பொய் சொல்ற ஆளுங்க ஜி நாம, பட்ஜெட் எல்லாம் ஜுஜுபி
ஆமா ஜி : அதுவும் சரி தான் ஆனா 4 வருசமா ஒன்னும் கிழிக்காம இப்போ வாக்குறுதி குடுத்தா மக்கள் நம்புவாங்களா ஜி ?
மாமா ஜி : இப்போவே எல்லாம் செய்யறோம்னு சொல்ல கூடாது ஜி, இந்த பட்ஜெட்ல எல்லாத்தையும் அறிவிச்சிட்டு அடுத்து ஆட்சிக்கு வந்தா இதை செயல்படுத்துவோம்னு சொல்லணும் ஜி.
ஆமா ஜி : நீங்க சொல்றதும் சரி தான் ஜி
மாமா ஜி : இங்க பாருங்க இந்தியா கடந்த 5 வருசத்துல முக்கிய பொருளாதார நாடாக முன்னேறி இருக்காம்
ஆமா ஜி : நிரவ் மோடி, மல்லையானு தொடர்ந்து இங்க ஆட்டைய போட்டுட்டு ஓடிகிட்டு இருக்கானுங்க , வேணும்னா முக்கிய பொருளாதார குற்றவாளிகள் உள்ள நாடா வேணும்னா முன்னேறி இருக்கும்
மாமா ஜி : இங்க பாருங்க 2022குள் விவசாயி வருமானம் இரட்டிப்பாக்கப்படுமாம்
ஆமா ஜி : அவன் அவன் வருமானமே இல்லாம தூக்குல தொங்கிட்டு இருக்கானுங்க, சரியா பாருங்க ஜி விவசாய வருமானத்தை இரட்டிப்பு ஆக்கறாரா இல்ல விவசாய தற்கொலையவா?
மாமா ஜி : இங்க பாருங்க ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் 3 தவணையில் விவசாயிக்கு குடுக்க போறோம், அப்போ வருமானம் வந்திடும்ல அதை 2022ல இரட்டிப்பாக்குவோம் ஜி
ஆமா ஜி : என்ன ஜி பித்தலாட்டம் வருசத்துக்கு 6 ஆயிரம்னா ஒரு நாளைக்கு 16 ரூபாய் வருது அதை வச்சிட்டு அவன் எப்படி ஜி உயிர் வாழறது ?
மாமா ஜி : இப்போ ஒன்னும் இல்லாததுக்கு 16 ரூபாய் தாறோம்ல அப்பறம் என்ன ஜி ? அதை வச்சிக்கிட்டு பக்கோடா போட முடியலன்னாலும் திங்கலாம்ல ?
ஆமா ஜி : ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துல எவ்வளவு ஜி சம்பளம் கொடுக்கறாங்க ?
மாமா ஜி : ஒரு நாளைக்கு 300
ஆமா ஜி : 100 நாளைக்கு வேலை நிச்சயம் அப்படினா 30000 ரூபாய். அதுவே 365 நாளைக்கு கணக்கு பண்ணினா கூட ஒரு நாளைக்கு 82 ரூபாய் வருதே ஜி. நாம 16 ரூபாய் தானே தரோம்
மாமா ஜி : அய்யய்ய நீங்க என்ன ஜி கேள்வி எல்லாம் கேக்கறீங்க? 6 ஆயிரம் குடுக்கறோம்னு சொல்லுங்க ஏன் 16 ரூபாய்னு சொல்லறீங்க?
ஆமா ஜி : சரி சரி ஜி
மாமா ஜி : பார்த்தீங்களா 98% கிராமம் திறந்தவெளி கழிப்பிடமில்லாமல் ஆக்கிட்டோம்
ஆமா ஜி : என்ன ஜி இது பித்தலாட்டம், நம்ம ஆளுங்க கட்டின கழிப்பிடத்தை பத்தியா தெரியாம பேசறீங்க
மாமா ஜி : பொது கழிப்பிடம்னா அப்படி தான் ஜி இருக்கும், ஜாலியா பேசிகிட்டே போகலாம் பாருங்க
ஆமா ஜி : ஜாலியா பேசிட்டு போக இது என்ன டூரா ஜி ? அதுவும் இல்லாம நம்ம மந்திரிகளே செவுத்துல கோலம் போட்டு மாட்டிக்கறாங்களே ஜி
மாமா ஜி : செவுத்தோட பலத்தை பரிசோதனை செய்றாங்கன்னு ஏதாவது சொல்லிக்கலாம் ஜி
ஆமா ஜி : ஜி இங்க பாருங்க மார்ச் மாசத்துக்குள் மின்சாரம் இல்லாத வீடே இல்லாத நிலைய உருவாக்குவோம்னு சொல்லறாரு ஜி
மாமா ஜி : நல்ல விஷயம் தானே ஜி ஏன் பதர்றீங்க?
ஆமா ஜி : ஏப்ரல் 2018ல மோடி ஜி எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுத்தாச்சுனு அறிக்கை விட்டு பெருமையா பேசினாரே ஜி
மாமா ஜி : எல்லா கிராமத்துக்கும் கொடுத்தாச்சு ஜி இப்போ எல்லா வீட்டுக்கும் கொடுக்க போறோம்
ஆமா ஜி : அடுத்த வருஷம் ஏன் டா இன்னும் எங்க வீட்டுக்கு மின்சாரம் வரலைனு யாராவது சட்டையை பிடிச்சா என்ன ஜி பண்றது ?
மாமா ஜி : இப்போ தான் எல்லா தெருவுக்கும் கொடுத்திருக்கோம்னு சொல்லுங்க ஜி அடுத்து ஒவ்வொரு ரூமா செஞ்சிடுவோம் ஜி
ஆமா ஜி : சரி ஜி மீனவர்களுக்கு நன்மை செய்ய மீன்வளத்துறை அமைப்போம்னு சொல்றாரே
மாமா ஜி : ஆமா மீனவர்கள் தான் ஜி நம்ம தேசத்தோட அறிவிக்கப்படாத கடற்படை
ஆமா ஜி : இதுவரைக்கும் அவங்களுக்கு நாம என்ன நல்லது செஞ்சிருக்கோம் ஜி ?
மாமா ஜி : என்ன இப்படி கேட்டுடீங்க, ஞாயிறு ஆனா மீன் வறுவல் இல்லாம சாப்பாடே இல்ல ஜி
ஆமா ஜி : என்ன ஜி கவிச்சி சப்படறீங்க ?
மாமா ஜி : மீன் அசைவம் இல்ல ஜி, நீர் வாழைக்காய்னு எங்க பாட்டி சொல்லுவாங்க
ஆமா ஜி : அது சரி. இப்போ இந்த அமைச்சகம் எதுக்கு ?
மாமா ஜி : புயல் வருது, மழை வருது கடலுக்குள் போகாதீங்கன்னு சொல்ல தான் ஜி
ஆமா ஜி : அதை தான் தமிழ்நாடு வெதர்மேன்னு ஒரு தம்பி சொல்லுதே
மாமா ஜி : ஜி அந்த தம்பி பேர் தெரியுமா? அப்பறம் அவர் சொல்றதை கேட்க சொல்றீங்க ?
ஆமா ஜி : ஆமா ஜி. பேரை மறந்துட்டேன்.
ஆமா ஜி : அப்போ மழை வருதுன்னு சொல்றதுக்கு ஒரு அமைச்சர். இலங்கைகாரன் துப்பாக்கியில் சுட்டா, வலையை அத்தா அதெல்லாம் கேட்க மாட்டாரா ?
மாமா ஜி : தமிழ்நாட்டு காரன், கேரளா காரன் நமக்கு ஓட்டு போட போறானா? அப்பறம் வலைய அத்தா என்ன அக்காட்டி என்ன? நல்ல தரமான மீன் கிடைக்கும் ஜி சாப்பிடுங்க
ஆமா ஜி : இது என்ன ஜி செல்போன் உதிரி பாகம் உற்பத்தி மூலம் அதிக வேலைவாய்ப்புன்னு சொல்றரே
மாமா ஜி : ஆமா பேஸ்புக்குல போஸ்டுக்கு 10 ரூபாய் வாங்கறீங்க இல்லை அதெல்லாம் வேலைவாய்ப்பு இல்லையா
ஆமா ஜி : உண்மை தான் ஜி, மோடி ஜிய அடிக்கடி தமிழ்நாடு பக்கம் வரச்சொல்லுங்க. நானெல்லாம் TNWelcomesModi போட்டு போன மாசம் வீட்டு வாடகையே கட்டிட்டேனா பார்த்துக்கோங்க
மாமா ஜி : இப்போ தான் சரியா பேசறீங்க.
ஆமா ஜி : என்னது வேலை தேடுவோர் எல்லாம் இப்போ வேலை கொடுப்பவர்களாக மாறிட்டாங்களா ? இது எப்போ ஜி நடந்தது?
மாமா ஜி : எவ்வளவு தேடியும் வேலை எவனுக்கும் கிடைக்கல, அதுனால எங்க வேலைவாய்ப்பு இருக்கு, அங்க எத்தனை மணிக்கு போகணும், பஸ் ரூட் என்னனு ஒரு 5 பேரை வேளைக்கு வச்சு அட்டவணை ரெடி பண்ணி காசுக்கு விக்க ஆரம்பிச்சுட்டாங்க ஜி
ஆமா ஜி : ஓஹோ வேலை தேடறதே ஒரு வேலை ஆக்கிட்டோம்னு சொல்லுங்க
மாமா ஜி : போட்டார் பாருங்க அதிரடி 5 லட்சம் வரைக்கும் வருமான வரி விலக்கு அறிவிச்சிருக்கார் பாருங்க ஜி
ஆமா ஜி : உண்மையாவே இது செம அறிவிப்பு ஜி, வேலைக்கு போகும் மிடில் கிளாஸ் ஓட்டை அள்ளிடலாம் ஜி
மாமா ஜி : உடனே போஸ்ட் போட்டு பரப்புங்க ஜி
ஆமா ஜி : ஜி மோசம் போய்ட்டோம், ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்குளார இருந்தால் தான் விளக்காம்
மாமா ஜி : ஜி இவனுக பட்ஜெட் அறிக்கையை படிச்சு புரிஞ்சிக்கறதுக்குள்ள 4 பேரை விவாத நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு இது எல்லாருக்கும் பொருந்தும்னு குழப்பி அதுக்குள்ள தேர்தலை முடிச்சு விட்டுடனும் ஜி
ஆமா ஜி : ஜி நம்ப வைக்க முடியுமா ஜி
மாமா ஜி : கூச்ச படாம புளுகுனா நம்புவானுக ஜி. இப்போ திருப்பூரில் துறைமுகம் அமைப்போம்னு ஸ்டாலின் சொன்னதா பரப்பினோமே நம்பிட்டாங்க பார்த்தீங்களா ?
ஆமா ஜி : ஜி அப்போ அது பொய்யா? நான் கூட பூனை மேல் மதில் மாதிரி செயல் ஏதோ சொதப்பிட்டார்னு நெனச்சேன் ஜி
மாமா ஜி : கண்டுபிடிச்சிட்டாங்க ஆனா எவ்வளவு பேருக்கு இது பொய்னு தெரிய போகுது, வரவரைக்கும் லாபம் தான் ஜி
ஆமா ஜி : என்ன ஜி. மோடி திடீர்னு உண்மையை பேசிட்டாரு.
மாமா ஜி : உண்மையை பேசுனாரா. வாய்ப்பே இல்லையே.
ஆமா ஜி : ஆமா ஜி. பிரதமர் அலுவலகம் போட்ட ஒரு ட்வீட்ல, காங்கிரஸ் 356 பிரிவை துஷ்பிரயோகம் பண்ணிருக்கு. ஆனா மோடி அமைப்புகளைத்தான் சிதைச்சிருக்காருன்னு ட்வீட் போட்ருக்காங்க.
மாமா ஜி : அதையும் முழுசா நாம பண்ணலையே. இன்னும் குத்துயிருமா கொலை உயிருமா சில அமைப்புகள் உசுரோடத்தானே இருக்கு ?
ஆமா ஜி : சரி வாங்க ஜி. ஞாயிற்றுக் கிழமை மோடி ஜி வர்றாரு. #GoBackModi ட்ரெண்டு பண்ணுவோம்.
மாமா ஜி : யோவ்.
ஆமா ஜி : சாரி ஜி. டங்க் ஸ்லிப் ஆயிடுச்சு.
What will you do after the Lok saba polls?