பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு வேலையின்மை விகிதம் 6.1 சதவீதத்துக்கு மேல் அதிகமாகியுள்ளது!
தற்போதைய வார நிலை அணுகுமுறைபடி பார்த்தால், 2017-18இல் வேலையின்மை 8.9 சதவீதமாக இருப்பதாக வெளியிடப்படாத என்.எச்.எஸ்.ஓ தகவல் தெரிவிக்கிறது.
இந்திய வேலைவாய்ப்பு சந்தை மீது, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றின், தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் கசிந்த அறிக்கை உணர்த்துவதை விட இன்னும் மோசமானதாக இருக்கலாம் என பிஸ்னஸ் ஸ்டாண்ட்ர்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.
2017-18இல் வேலையின்மை எப்படிம் 45 ஆண்டுகாலம் இல்லாத அளவு 6.1 சதவீதமாக அதிகமாக இருந்தது எனும் செய்தியின் தொடர்ச்சியாக, பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு, வேலைவாய்ப்பைக் கணக்கிடுவதற்கான தற்போதைய வார நிலை அணுகுமுறை அடிப்படையில், இந்த விகிதம் 3 சதவீதப் புள்ளி அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது.
வழக்கமான நடப்பு நிலை அணுகுமுறைதான் (ஓராண்டு காலத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வேலையின்மை 6.1 சதவிதம் என உணர்த்தியது) பொதுவாக வேலையின்மைக்கான தலைப்புச் செய்தியைத் தீர்மானிக்கப் பயன்படுகிறது. இருப்பினும், தற்போதையை வார நிலை அணுகுமுறை- ஒரு வார கால தகவல்களை அடிப்படையாக கொண்டது- பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகான நிலையை கச்சிதமாக உணர்த்தக்கூடியது என்கிறது பிசினஸ் ஸ்டாண்டர்டு.
வார நிலை அணுகுமுறை அடிப்படையில் கணக்கிட்டபோது, 2017-18இல் இந்தியாவின் வேலையின்மை 8.9 சதவீதமாக இருப்பதாக வெளியிடப்படாத என்.எஸ்.எஸ்.ஓ. தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த தரவுகளின்படி, பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 9.1 சதவீதம், ஆண்களுக்கு 8.8 சதவீதம் என இந்த நாளிதழ் தெரிவிக்கிறது.
“2017 ஜூன் முதல் 2018 ஜூலை வரை மக்களின் வேலைவாய்ப்பு நிலை தெரிய வந்துள்ளதால, வார நிலை அடிப்படை, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை வேலைவாய்ப்பின் மீது செலுத்திய தாக்கத்தைச் சிறப்பாக அளவிட உதவுகிறது. வழக்கமான நிலை, பணமதிப்பு நீக்கத்தின் பகுதி அளவு தாக்கத்தையே உணர்த்துகிறது என முன்னாள் தலைமைப் புள்ளியியல் வல்லுனர் நாளிதழிடம் கூறினார்.
கசிந்த என்.எஸ்.எஸ்.ஓ. அறிக்கையின் அடிப்ப்டையில் பிசினஸ் ஸ்டாண்டர்டு தனது முதல் செய்தியை வெளியிட்ட பிறகு, நிட்டி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், குழப்பம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கசிந்த தரவுகளை 2011-12 அறிக்கையுடன் ஒப்பிடக் கூடாது என்றும் கூறினார்.
பிசினஸ் ஸ்டாண்டர்டு இதழில் இந்தச் செய்தியை வெளியிட்ட இதழாளர் சோமேஷ் ஜா இதை மறுத்துள்ளார். “என்.எஸ்.எஸ்.ஓ. அறிக்கையில் இருந்து “… முந்தைய சுற்றுகளுடன் ஒப்பிடும்போது, 2017-18இல் ஆண்கள் மற்றும் பெண்களில் வேலையின்மை அதிகம் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது” என அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான அவரது டிவீட் விவரம்:
நிட்டி அயோக் தலைவர் ராஜீவ் குமார், என்.எஸ்.எஸ்.ஓ.வின் முந்தைய வேலைவாய்ப்பு எண்ணிக்கை ஒப்பிடக்கூடியதல்ல என்று கூறியுள்ளார். ஆனால், அவர் என்.எஸ்.எஸ்.ஓ அறிக்கையின் 84 ம் பக்கத்தை பார்க்கலாம். அதில், முந்தைய சர்வேயின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது”.
சரி பார்க்கப்பட்ட பிறகும், அறிக்கை அரசால் வெளியிடப்படாததால், தேசிய புள்ளியியல் கமிஷனில் இருந்து விலகிய முன்னாள் பொறுப்பு தலைவர் பி,சி.மோகனன், இந்த அறிக்கையை வரைவு என ராஜீவ் குமார் கூறியது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.
“இந்த அறிக்கை இறுதி வடிவாகும். நடைமுறைபடி, தேசிய புள்ளியியல் கமிஷன் அறிக்கையை ஏற்றுக்கொள்கிறது. நாங்கள் அங்கீகரித்த பிறகு வேறு எந்த உயர் அமைப்பும் அனுமதி தர வேண்டியதில்லை. என்.எஸ்.எஸ்.ஓ. அறிக்கை வெளியிடப்பட்டு அனைத்து அலசல்களும் அதன் பிறகு நிகழும்” என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரசிடம் கூறினார்.
நன்றி: தி வயர்
https://thewire.in/labour/unemployment-after-demonetisation-gst-was-even-more-than-6-1-report
Your book is reading sir..very impressive