பல ஆயிரம் கோடிகளைப் பற்றி நாம் பேசியிருக்கிறோம்…. இது என்ன ? வெறும் 45 கோடி என்று யோசிக்கிறீர்களா ?
45 கோடியை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார் ஒரு அதிகாரி என்று ராசாத்தி அம்மாள் புலம்பியிருக்கிறார்.
2010 தொடக்கத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரணை தீவிரமடையப்போகிறது என்று ஊடகங்களில் அரசல் புரசலாக செய்திகள் வெளியே கசிந்த ஒரு நேரம். அந்த நேரத்தில், குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத் தானே செய்யும். அவ்வாறு குறுகுறுத்த கனிமொழியின் தாய், எங்கே தன் மகளுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று பரபரத்தார். பயந்தார்.
அந்த நேரத்தில், அந்த அதிகாரி “ஒன்றும் கவலைப் படாதீர்கள்…. டெல்லியில், சிபிஐ, உள்துறை, அமலாக்கத் துறை என எல்லாத் துறைகளிலும் இருப்பவர்கள் எனது பேட்ச் மேட்….. அனைவரையும் கரெக்டிங் செய்து, கனிமொழியின் பெயர் எந்த ஆவணத்திலும் வராதது போல செய்து விடுகிறேன்…” என்ற பந்தாவாக கூறியுள்ளார்.
இதை நம்பிய ராசாத்தி அம்மாள், எவ்வளவு செலவாகும் என்று கேட்டுள்ளார்….. அவர் கூறிய படி, ஒவ்வொரு முறை டெல்லி செல்லும் போதும், 15 கோடியைப் பெற்று, மூன்று தவணைகளில் 45 கோடியை பெற்றுச் சென்றுள்ளார் அந்த அதிகாரி.
இப்போது அந்த இந்த விவகாரம் வெளியே வருவதற்கான காரணம், ராசாத்தி அம்மாள், 15 நாட்களுக்கும் மேலாக டெல்லி சென்று, தங்கியிருந்து, எப்படியாவது தனது மகளை வெளியே எடுத்து விடலாம் என்று முயற்சித்து முடியாமல் போனதால், இப்போது இது குறித்து புலம்பியிருக்கிறாராம்.
சரி இது குறித்து புலம்புவது இருக்கட்டும். உச்ச நீதிமன்றத்தின் வழி காட்டுதலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு விசாரணையில், எந்த அதிகாரியாவது தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா ? அப்படியே அவர் முயற்சித்தாலும், எந்தக் குற்றாவாளியின் பெயரையாவது குற்றப் பத்திரிக்கையிலிருந்து நீக்க முடியுமா ? இது சாதாரண மனிதருக்குக் கூட புரிந்த விஷயமாயிற்றே….. ராசாத்தி அம்மாளுக்கு எப்படி புரியாமல் போனது ? இப்போது புலம்பி என்ன ஆகப் போகிறது…. ?
அந்த அதிகாரி யார் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றும்…. நீங்கள் தான் சவுக்கு வாசகர்களாயிற்றே… உங்களுக்குத் தெரியாததா ?
is that photo rasathi ammal who is mother of kanimozhi? i don’t know who is this?
is that officer jabershet?