தோழர் சங்கரசுப்புவின் மகன் கடந்த 7ம் தேதி முதல் காணாமல் போனார். இவரை தொடர்ந்து காவல்துறையினர் தேடி வந்தனர். எப்படியும், இவர் உயிரோடு கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் சவுக்கு உட்பட பெரும்பாலான வழக்கறிஞர்கள் இருந்தனர். இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் ஏரியில், தோழர் சங்கரசுப்புவின் மகன் திரு.சதீஷ் குமார் அவர்களின் சடலம், கைப்பற்றப் பட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளது என்பதை சவுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. மனித உரிமைகள் எங்கு மீறப்பட்டாலும், உடனடியாக களத்தில் இறங்கக் கூடியவர் தோழர் சங்கரசுப்பு… அவரின் இழப்பை, சவுக்கு தனக்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட இழப்பாகவே பார்க்கிறது. தோழர் சங்கரசுப்புவுக்கு சவுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது.