தேர்தல் காலம் என்பதால், பிரதமர் நரேந்திர மோடி திடீரென அவர் தீவிரவாதம் எனக் கூறுவதை எதிர்த்துச் சண்டையிடுவதற்கான புதிய நெறிமுறைகளை மீண்டும் கண்டறிந்திருப்பதில் வியப்பில்லை. தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான புதிய நீதியும் (கொள்கை) ரீதியும் (பாரம்பரியம்) இந்த இந்த அணுகுமுறைதான் என்கிறார் பிரதமர். 2016இல் அரசு துல்லியத் தாக்குதல் (Surgical Strike) எனக் குறிப்பிட்ட சம்பவத்தின்போது இந்த அணுகுமுறை முதலில் சுட்டிக்காட்டப்பட்டது.
முதலில் கேட்கப்பட வேண்டிய கேள்விகளைப் பார்க்கலாம். துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பின் நவம்பரில், நக்ரோட்டாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 2 அதிகாரிகள், 5 ஜவான்களைக் கொன்றபோது அரசு என்ன செய்தது என்பது முதல் கேள்வி. எதுவும் இல்லை என்பது பதில்.
துல்லியத் தாக்குலுக்குக் காரணமான உரி தாக்குதலைவிட இது மிகவும் முக்கியமானது. இந்திய ராணுவத்தின் 16 கார்ப்ஸ் பிரிவின் தலைமையகம் இது. 2017 முதல் 2018இல் அதிக அளவிலான தாக்குதல்கள் எல்லைக்கு அந்தப் பக்கத்திலிருந்து நடத்தப்பட்டுள்லன. 2018 பிப்ரவரியில் 11 ஜவான்கள் பலியான ஜம்மு அருகே உள்ள சுஞ்சுவன் முகாம் தாக்குதலும் இதில் அடங்கும். இருந்தும் இதற்கு எதிர்வினையாக எந்தத் துல்லியத் தாக்குதலும் நடக்கவில்லை.
செயல்படாத கொள்கைகள்
ஆக, மோடி பேசும் நீதி, ரீதியின் பொருள் என்ன?
அடிப்படையில் இது தோல்வி அடைந்த கொள்கைகளின், பொய் முழக்கங்களின் கலவையாகும். மோடி அரசு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள், தில்லியில் மட்டும் அல்ல, ஸ்ரீநகரிலும் அதிகாரம் பெற்றிருந்தது. எனவே, மாநிலத்தில் தீவிரவாதம் ஆதிக்கம் செலுத்தினால், நிச்சயம் அதற்கான பொறுப்பை அவரும் அவரது கட்சியும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அது மோடியின் வழகக்ம் அல்ல.
இந்தப் புதிய கொள்கை பதன்கோட் தாக்குதலுக்கு பின் உருவானது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைக் கட்டித் தழுவிக்கொண்டால், அந்நாட்டை காஷ்மீர் தீவிரவாதத்துக்கான ஆதரவைக் கைவிடச்செய்யலாம் எனும் மோடியின் தவறான புரிதலின் விளைவாக உண்டான நிகழ்வு இது.
இந்தியாவில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடும் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஷெரீஃப் ஒரு பொருட்டு அல்ல என்பதை, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான குழுவால் அவருக்குப் புரிய வைக்க முடியவில்லை: தீவிரவாத நடவடிக்கைகள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பால் வழிநடத்தப்படுபவை. பாகிஸ்தான் ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு ஷெரீஃபின் அந்தஸ்தை உயர்த்துவதற்கான அவசர முயற்சி காரணமாக, மோடி உண்மையில், ஷெரிப்பின் வீழ்ச்சிக்கே வித்திட்டார். இதனால் இந்தியா – பாகிஸ்தான் சமரசத்திற்கான கதவுகளையும் அடைக்கப்பட்டன.
ஆனால், தான் உண்டாக்கிய விளைவுகள் குறித்து சிந்தித்துப்பார்க்காமல், அவர் புதிய பாதையில் செல்லத் துவங்கினார். இதில் அவர், பாகிஸ்தானை தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு என அடையாளப்படுத்த முயற்சி செய்து (இந்தியா உலக அரங்கில் இவ்வாறு அறிவிக்க மோடி ஏற்பாடு செய்ய மாட்டார் என்பது வேறு விஷயம்), சர்வதேச தீவிரவாதம் தொடர்பான விரிவான மாநாட்டின் (சிசிஐடி) ஒப்பந்தத்தை அமல் செய்ய வலியுறுத்தினார்.
பிரச்சினை என்ன?
தீவிரவாதம் என்றால் என்ன என்னும் எனும் வரையறையில் இருந்து பிரச்சினை துவங்குகிறது. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை என்பது, அரசியல் நோக்கங்களுக்காக சிவிலியன்கள் மீதான தாக்குதல் என்பதாகும். அரசு மற்றும் இதர அமைப்புகளைக் குறி வைக்கும் மற்ற வகையிலான தாக்குதல்களும் இதன் கீழ் வருகின்றன. காஷ்மீர் தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள் ஆகியோர் இந்த வகையில்தான் வருகின்றனர்.
முக்கிய வேறுபாடு என்ன என்பது புரிதலில்தான் இருக்கிறது. ஒரு தரப்பு தீவிரவாதி எனக் கருதும் ஒரு நபர் இன்னொரு தரப்புக்கு சுதந்திரப் போராட்ட வீரர். பொதுவாக அரசுகள் தீவிரவாதிகள் என்பவர்களோடு பேச்சு நடத்த முயற்சிக்கிறது, பயங்கரவாதிகளுடன் அல்ல.
இந்த வேறுபாடு முக்கியம் ஏனெனில், மோடி அரசு ஜம்மு காஷ்மீரில் தனது கொள்கைகளை எதிர்க்கும் எல்லோரையும் தீவிரவாதிகள் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக, காஷ்மீர் சிக்கலிலிருந்து விடுபடுவதற்கான வழி கடினமாகியுள்ளது.
பேச்சு வார்த்தை நடத்த யாரும் இல்லை எனில், இருக்கும் ஒரே வழி ராணுவ ஆற்றலைப் பயன்படுத்துவதுதான். இதுவே மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. தெற்காசிய பயங்கரவாத இணையதளம் (http://www.satp.org/about-satp) தரும் தகவலின்படி, 2014க்குப் பிறகு சிவிலியன்கள் பலியாவது மூன்று மடங்கு அதிகமாகியுள்ளது. பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் பலியாவதும் இரு மடங்காகி உள்ளது.
உண்மையில், மோடி அரசின் செயல்பாடுகள், காஷ்மீரில் தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது. பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை காரணமாக, ஜே.கே.எல்.எப். மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கங்களை ஒடுக்கிய பிறகு இப்போது, உள்ளூரில் புதிய தீவிரவாதிகள் உருவாவதைப் பார்க்கிறோம்.
இந்தப் புதிய தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு நிகரானவர்கள் இல்லை. அவர்களிடம் இருப்பது போன்ற ஆயுதங்களும் இவர்களிடம் இல்லை. தீவிரவாதச் செயலில் இவர்கள் அதிகம் நீடிப்பதில்லை என்றாலும், இவர்கள் தீவிரவாதிகளாக உருவாவது தில்லியின் கொள்கைக்கான பதிலடியாகும்.
தீவிரவாதம் என்பது அரசியல் நோக்கங்களுக்காக சிவிலியன்கள் மீதான தாக்குதல் என்றால் இந்தியாவில் அது கணிசமாக குறைந்துள்ளது. 21 பேர் பலியாகி, 141 பேர் காயமடைந்த 2011 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடைபெறவில்லை. அதே ஆண்டு. தில்லி நீதிமன்ற வளாகத்திலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்து, 11 பேர் பலியானார்கள், 75 பேர் காயமடைந்தனர். நாட்டில் அங்கும் இங்கும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தாலும் அவை பெரும்பாலும் கிரிமினல் தன்மை கொண்டவை. .
தீர்வுக்கு வழி இல்லை
தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொண்டதன் மூலமாக மோடி அரசு, இரண்டு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக்கூடிய தனது ஆற்றலைச் சிக்கலாக்கிக்கொண்டுள்ளது. இதற்குக் காரணம் அறியாமை அல்ல. தீவிரவாதத்தை அரசியல் நோக்கிற்காகப் பயன்படுத்தும் எண்ணமே காரணம். 2004 முதல் 2014 வரை காஷ்மீரில் வன்முறையைக் குறைக்க உதவிய உத்திகள் கண்டுகொள்ளப்படவில்லை.
உண்மையான தீவிரவாதத்தைப் பொறுத்தவரை, அதை எதிர்கொள்ள அரசு விஷேச ஆற்றலை உருவாக்கிக் கொண்டுள்ளது என நினைக்க எந்தக் காரணமும் இல்லை. 2008 மும்பை தாக்குதலில் சிக்கிய பிறகு, நாட்டில் தீவிரவாதத் தூண்டுதலுக்கு முக்கியப் பங்காற்றிய பாகிஸ்தானியர்கள் தங்கள் உத்தியை மாற்றிக்கொண்டுவிட்டனர். அவர்களின் ஜிகாதிகள், ராணுவத்திற்கும், காவல் துறைக்கும் எதிராகத் தாக்குதல் நடத்துகின்றனர். அதிலும் குறிப்பாக காஷ்மீர் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் காஷ்மீரில் இப்படித்தான் நிகழ்கிறது.
ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பாக அடிக்கடி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பதற்கானவை மட்டுமே. அண்மை மாதங்களில் ஐ.எஸ். அமைப்பின் எழுச்சி என்பது, கடந்த காலங்களில் அல்கொய்தா மற்றும் சிமி இயக்கங்களின் தாக்கத்திற்கு நிகராக இருக்கிறது.
அல்கொய்தா நிலைக்கவில்லை. ஐ.எஸ். அமைப்பும் குழப்பமான, தவறாக வழிநடத்தப்பட்ட அடிப்படைவாதிகளால் திண்டாடிக்கொண்டிருக்கிறது. பலரும் சிறிய குற்றங்களுக்காகக் கீழ் நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டு, தீவிர விசாரணைக்கு உள்ளாகும் மேல் நீதிமன்றங்களில் விடுதலை ஆகின்றனர்.
தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் கவனமாக வேறுபடுத்தி, மாறுபட்ட அணுகுமுறைகளுடன் கையாள்வதே நிலைமையைச் சீராக்கும் வழி. ஆனால், புதிய நீதி, புதிய ரீதி என்று பேசும் மோடி, இதுபோன்ற வேறுபாடுகளை அழித்துக்கொண்டிருக்கிறார்.
மனோஜ் ஜோஷி
மனோஜ் ஜோஷி, தில்லி அப்சர்வர் ரிசர்ச் பவுடேஷன் அறிஞர்.
நன்றி; தி வயர்
https://thewire.in/security/narendra-modi-kashmir-terrorism-militancy