புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்லூரிகளிலும் சுற்றுப்பகுதிகளிலும் குறி வைக்கப்பட்டு, சீண்டல் தாக்குதலுக்கு உள்ளாகத் துவங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. மேகலாயா கவர்னர் தத்தகட்டா ராய், காஷ்மீரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என டிவிட்டரில் தெரிவித்தார்.
இவ்வளவு நடந்த பிறகே, டிவிட்டர் பரிச்சயம் மிக்க, அதில் துடிப்பாக இயங்கும் பிரதமர் நரேந்திர மோடி, தனது கருத்தை வெளியிட்டார். ஒரு வார காலமாக ஒவ்வொரு பொறுப்புள்ள குடிமகனும் கூறிவருவதை அவரும் தெரிவித்தார். ராஜஸ்தானின் டாங்கில் பேசியபோது, “காஷ்மீரின் புதல்வர்களையும் புதல்விகளையும் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் பொறுப்பாகும். இந்தியா முழுவதும் இளம் காஷ்மீரிகளுக்கு எதிரான செயல்கள் சின்னதா பெரியதா என்பது முக்கியம் அல்ல. இந்தச் சம்பவங்கள் நடந்திருக்கவே கூடாது. நம்முடைய போர் காஷ்மீருக்கானதே தவிர, காஷ்மீரிகளுக்கு எதிரானது அல்ல” என்றார்.
அந்த வாரத்தில் இது அவரது முதல் பேச்சு என்பதல்ல விஷயம். ஆனால், ஒரு தலைவர்போலச் செயல்பட்டு பதில் அளிக்க மோடிக்கு ஒரு வார காலம் தேவைப்பட்டிருக்கிறது. மோசமான சூழலில் துணிச்சல் மிக்கதாக, தலைமைப் பண்புக்கு உரியதாகக் கருதப்படக்கூடிய அடிப்படையான, மனிததன்மை மிகுந்த கருத்தைச் சொல்ல அவருக்கு ஒரு வார காலம் ஆனது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான சம்பங்கள் சிறியதா, பெரியதா எனும் விவாதத்தை அறிந்திருக்கிறார் என்பதையே அவரது பேச்சு உணர்த்துகிறது. ஆனால் அவர் மவுனமாக இருந்தார்.
மோடி கூறிய கருத்துக்களைவிட, இப்படித் திட்டமிட்டு தாமதமாக பேசுவது என்பது மோடி கடைப்பிடிக்கும் ஒரு உத்தியாகவே அமைந்துள்ளது.
மோடியின் உத்தி
நரேந்திர மோடி கவனமாகப் பயன்படுத்தும் உத்தி இப்படி அமைகிறது: முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள் காலூன்ற அனுமதிப்பது, விஷம் பரவக் காத்திருப்பது. முரட்டுத்தனம் மிக்கவர்களும், நியாயத்தை வலியுறுத்துபவர்களும் எல்லாத் தளங்களிலும் மோதிக்கொள்ள அனுமதிப்பது. அதன் பிறகு அந்த விவகாரத்தில் தலையிட்டு, சமரச சன்மார்க்க போதனையுடன் கூடிய செய்தியைத் தெரிவிப்பது. வெறுப்புக் குற்றங்கள் தொடர்பான அவரது எதிர்வினை நன்கு பயிற்சி எடுக்கப்பட்டு, திட்டமிட்டுத் தாமதிக்கப்படுவது. முந்தைய பாஜக ஆட்சியில் அத்வானியும் வாஜ்பாயியும் ஆடிய ’நல்ல போலீஸ் – கெட்ட போலீஸ்’ ஆட்டத்தை விட இது மிகவும் நுட்பமானது.
துவேஷம் வீதிகளிலிருந்து எழுச்சி பெற்று, ஷாஷ்டேகுகளாக மாறி விமர்சிப்பவர்களைக் களைப்பாக்கும் வரை அவர் காத்திருக்கிறார். மக்கள் ஒரு தலைவரின் குரலுக்காக எதிர்பார்த்திருப்பதைக் கைவிடும்போது அல்லது அது ஒரு பொருட்டல்ல என ஆகிவிடும்போது அவர் பேசுகிறார்.
அக்லக் கொலையும் மோடி குரலும்
2015இல் முகமது அக்லக் மீதான கொடூரமான கும்பலின் தாக்குதலுக்குக் கருத்து தெரிவிக்க அவருக்கு ஒரு வார காலம் ஆனது. உத்தரப் பிரதேசத்தில் தாத்ரியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அக்லக் மாட்டிறைச்சி சாப்பிட்டார் எனும் வதந்தி அடிப்படையில் கிராம இந்துக்கள் அவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவத்தால் திகைத்த தேசம் மோடி அமைதி காப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியபோது, அவர் தனது அமெரிக்கப் பயணம், சீன தேசிய தினம், பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பற்றி எல்லாம் டிவீட் செய்துகொண்டிருந்தார். பசு அடிப்படைவாதம், கும்பல் வன்முறை, இந்தக் கொலையை ’எதிர்வினை’ என பாஜக அரசியல் தலைவர்கள் கூறியது ஆகியவை பற்றியெல்லாம் மக்கள் விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் இவ்வாறு நடந்துகொண்டார். பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம், முசாபர்நகர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இந்துயிசத்திற்கு ஆபத்து எனும் கோஷத்தை எழுப்பியிருந்தார்.
இந்துவத்தின் கோப வெளிப்பாடு நடந்த பிறகு, தாராளவாதம் பேசுபவர்களின் இடம் ஒவ்வொரு விவாதத்திலும் உணர்த்தப்பட்ட பிறகு, மோடி பேசத் தீர்மானித்தார்.
“இது போன்ற அறிக்கைகளைப் பொருட்படுத்த வேண்டாம் எனச் சொல்ல விரும்புகிறேன். நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து முன்னேற வேண்டும். அப்போதுதான் நாம் உலகம் நம்மிடம் எதிர்பார்ப்பதை அடைய முடியும்” என பிஹாரில் பொதுக்கூட்டத்தில் பேசும் போது கூறினார். இத்தகைய அப்பட்டமான உண்மையைக் கேட்கக்கூட ஒரு வார காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
எல்லாம் மோடிமயம்
இறந்த பசு மாட்டின் தோலை எடுப்பதற்காக அவற்றைச் சுமந்து சென்றுகொண்டிருந்த நான்கு தலித்கள் மீது உனாவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகக் கருத்து தெரிவிக்க இன்னும் தாமதமானது. அப்போதுகூட எல்லாவற்றையும் தன்னைப் பற்றியதாக ஆக்கிகொண்டார். ஒரு மாதம் கழித்து, ஐதராபாத்தில் பொதுக்கூட்டத்தில் பேசியவர் இப்படி முழங்கினார்: ’உங்களுக்கு ஒரு பிரச்சினை இருந்தால், யாரையேனும் தாக்க விரும்பினால், என்னை தாக்குங்கள், தலித் சகோதரர்களை வேண்டாம். யாரையேனும் சுட விரும்பினால், என்னைச் சுடுங்கள், என் தலித் சகோதரர்களைச் சுட வேண்டாம்” என்று உணர்ச்சிகரமாக முழங்கினார்.
தாமதம் என்பது எதன் அறிகுறி?
அவர் முதல்வராக இருந்தபோது குஜராத்தில் 2002 கலவரத்தின்போது, இந்திய ராணுவத்திற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்வதில் இதே தாமதம் காணப்பட்டது.
இதில் ஒரு தெளிவான பாணி இருக்கிறது. இது பலவீனம் அல்லது செய்வதறியாத் தன்மையின் அறிகுறி அல்ல. இது நன்கு பரிசோதிக்கப்பட்ட அரசியல் உத்தியாகும். எப்போது முக்கியமோ அப்போது சமூகப் பதற்றத்தை தணிக்க எதையும் செய்யாமல், வலுவான தலைவர் எனும் மாயையைத் தக்க வைத்துக்கொள்ள இது உதவுகிறது. செயல்படுவதற்குப் பதிலாக, விவாதம் மேலும் விஷமாகட்டும், சமூகத்தில் பிளவு ஏற்படட்டும், இந்து அடிப்படைவாதிகளின் வாக்குகள் ஒன்றிணையட்டும், அதன் பின் தலையிடலாம். தலையிடும்போது சமரச சன்மார்க்கவாதியாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளலாம். மாபெரும் தலைவரைப் போலப் பேசலாம். இதுதான் அவருடைய திட்டம். வெறுப்புக் குற்றங்களுக்கு எதிர்வினை ஆற்றும் திட்டமிட்ட பாணி. முரட்டுத்தனத்தை முடிவுக்கு கொண்டுவருவதுதான் நோக்கம் எனில் அவர் முன்னதாகவே பேசியிருக்க வேண்டும்.
எப்படியும், போர்ச்சுகல் காட்டுத் தீ பற்றி பேச அவருக்கு நேரமும் மனதும் இருக்கிறது. சோக நிகழ்வுகளை தெரிந்து கொள்வதில் அவர் அத்தனை கவனமாக இருக்கிறார்.
இங்கு இலக்கு என்னவெனில், தன்னுடைய அரசியல் பிம்பத்தை மேம்படுத்திக்கொண்டு, வீதியில் வன்முறை நிகழ்த்துபவர்களிடமிருந்து அவர் விலகி நிற்பதாகும். இவை எல்லாம் மக்களின் இயல்பான கோப வெளிப்பாடு என நாம் நம்ப வேண்டும் என விரும்புகிறார்.
ஆனால் அவர் வாய் திறக்காமலே இருக்கும் சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன. அப்போதெல்லாம் அவர் மவுனம் காக்கிறார் அல்லது தாமதமாகப் பேசுகிறார். இந்த மவுனமும் தாமதமும் அவருடைய மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்தி.
ரமா லட்சுமி
நன்றி: தி ப்ரின்ட்
https://theprint.in/opinion/the-modi-playbook-delay-in-pm-condemning-attacks-on-kashmiris-is-part-of-a-pattern/197230/?fbclid=IwAR2N3etJdpssUReVXjECPh6gG16Bmxu9SiSvK9gIWdjO8dDLiHJWPVrS4iA
குண்டன் மோடி தின்று விட்டு குசு விடத்தான் லாயக்கு . சீனாவுக்கு டோக்லாமை தானம் கொடுத்துவிட்டு இந்திய வீரர்களை பாகிஸ்தான் தலை அறுப்பதை பார்த்து எல்லா ஓட்டைகளையும் மூடி பார்த்து கொண்டிருப்பானா