தேசியவாதக் “கோபத்திற்கு” எதிரான பிரதமரின் வேண்டுகோள், உடைந்த தலையைச் சீராக்கத் தைலம் தேய்ப்பதற்கு ஒப்பானது.
முதலில் ரத்தம் சிந்துதல் பிறகு ஏமாற்று வேலை. காஷ்மீரிகள் மீதான தாக்குதல், தவறான பேச்சு, இழிவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் தேசிய உணர்வு கொட்டித் தீர்க்கப்பட்ட பிறகு, ஊடகங்கள் வெகு நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்தார். கருணையுடன் ஒரு பிரசங்கத்தை நிகழ்த்தினார். காஷ்மீரின் குழந்தைகளைக் காயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அது மட்டுமல்ல. அவர்களை நம் குழந்தைகளைப் போலப் பாதுகாக்க வேண்டும் என்று நெக்குருகினார்.
பிரதமரின் ஆட்கள் தங்கள் வேலைகளைச் செய்த பிறகு, அவர் வெள்ளைக் கொடியுடன் வெளியில் வந்தார். காஷ்மீரிகளுக்கு எதிராகப் போதுமான அளவு வெறுப்பை உருவாக்கிய பின்னர், உடைந்த தலையை ஆற்றுவிக்க ஒரு தைலத்துடன் வந்தார்.
இந்தியாவில் காஷ்மீரிகள் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? “உங்கள் இதயங்களில் எரியும் நெருப்பு எனக்குள்ளும் எரிகிறது”, என்று கோபம் கொண்ட இந்தியர்களுடன் ஒற்றுமையாக நின்றார்.
தொண்டர்களுகும் தலைவருக்குமான ஒரே வித்தியாசம், கோபத்தைத் தீர்த்துக்கொள்ளத் தலைவரால் தெருவில் இறங்க முடியாது. 1992, டிசம்பர் 5 அன்று அடல் பிஹாரி வாஜ்பாயி இருந்த நிலையைப் போன்றது இது. மக்கள் மனதில் கனலும் “நெருப்பை” நியாயப்படுத்திய அவர், தன் நிலையை அவர்கள் உணர வேண்டும் என்று விரும்பினார்.
காஷ்மீரிகள் மீது கருணை காட்டுங்கள் என்ற பிரதமரின் வேண்டுகோள் காலம் கடந்த காசோலையைப் போன்றது. தேவையில்லாத சமயத்தில் வந்த அந்தச் சொற்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
தி வயரில் வெளியான ஒரு கட்டுரையில் ராம லட்சுமி சரியாகச் சொன்னார்:
“நரேந்திர மோடி கவனமாகப் பயன்படுத்தும் உத்தி இப்படி அமைகிறது: முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள் காலூன்ற அனுமதிப்பது, விஷம் பரவக் காத்திருப்பது. முரட்டுத்தனம் மிக்கவர்களும், நியாயத்தை வலியுறுத்துபவர்களும் எல்லாத் தளங்களிலும் மோதிக்கொள்ள அனுமதிப்பது. அதன் பிறகு அந்த விவகாரத்தில் தலையிட்டு, சமரச சன்மார்க்க போதனையுடன் கூடிய செய்தியைத் தெரிவிப்பது. வெறுப்புக் குற்றங்கள் தொடர்பான அவரது எதிர்வினை நன்கு பயிற்சி எடுக்கப்பட்டு, திட்டமிட்டுத் தாமதிக்கப்படுவது. முந்தைய பாஜக ஆட்சியில் அத்வானியும் வாஜ்பாயியும் ஆடிய ’நல்ல போலீஸ் – கெட்ட போலீஸ்’ ஆட்டத்தை விட இது மிகவும் நுட்பமானது.
துவேஷம் வீதிகளிலிருந்து எழுச்சி பெற்று, ஷாஷ்டேகுகளாக மாறி விமர்சிப்பவர்களைக் களைப்பாக்கும் வரை அவர் காத்திருக்கிறார். மக்கள் ஒரு தலைவரின் குரலுக்காக எதிர்பார்த்திருப்பதைக் கைவிடும்போது அல்லது அது ஒரு பொருட்டல்ல என ஆகிவிடும்போது அவர் பேசுகிறார்.”
மக்களைத் தாக்கக் கூடாது என்று சொல்வது மிகவும் சாதாரணமானது. ஆனால், இதைச் சொல்வதற்கு அந்த மனிதருக்கு ஒரு வாரம் ஆகிவிட்டது.
ஆனால், அவர் இதை ஒரு காரணத்துடன் செய்கிறார். ஏனென்றால், வார்த்தைப் போர் உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட வேண்டும். நம் போர் காஷ்மீருக்கானது என்று அவர் சொல்கிறார், நாம் தலையசைக்கிறோம். நாம் எப்போதாவது நம் சண்டை நாகாலாந்துக்கானது என்றோ மிசோராமுக்கானது என்றோ உத்தரப் பிரதேசத்துக்கானது என்றோ சொல்கிறோமா? காஷ்மீர் எதிரிகள் கைகளிலா இருக்கிறதா? அங்குள்ள அரசுடன் சில மாதங்களுக்கு முன்பு இவர் இருக்கவில்லையா? இவருடைய நபர் அங்கு ஆளுநராக ஆட்சி செய்துகொண்டு இருக்கவில்லையா?
காஷ்மீரின் ஆழமான காயத்தை ஆற்றுவது
காஷ்மீரிகள் தீவிரவாதத்திற்கு இலக்காகிறார்கள் என்று சொல்கிறார், ஆனால், இந்தியாவிலிருந்தும் பயங்கரவாதம் நடத்தப்படுகிறது என்று அவர் சொல்வார் என்று எதிர்பார்க்க முடியாது. இந்திய தேசியவாதத்தின் கடைசி அபிலாஷையின் காயத்தைக் காஷ்மீர் பெற்றிருக்கிறது. அது ஆழமான காயம். அந்தக் காயத்தை ஆற்றுவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
மோடியும் ஆர்எஸ்எஸ்ஸால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அவர் கூட்டத்தினரும், காஷ்மீர்தான் இந்துக்களுக்காக இந்தியா கைப்பற்ற வேண்டிய கடைசிக் கோட்டை என்று சித்தரித்துக்கொண்டிருக்கின்றனர். சட்டப் பிரிவு 370, 35 A ஆகியவற்றை நீக்க வேண்டும் எனும் வேண்டுகோள் பாஜகவுடையது.
இந்தப் பிரிவுகள்தான் காஷ்மீரை இந்தியாவுடன் பிணைத்து வைத்திருக்கின்றன. அவை காஷ்மீருக்கான இந்தியாவின் வாக்குறுதிகளில் ஒன்று. ஆனால், பிரதமரின் கட்சி அவற்றை நீக்குவதற்கான வேண்டுகோளை இன்னும் விட்டுவிடவில்லை. காஷ்மீரிகள் இவர்கள் நோக்கத்தின்மீது ஏன் சந்தேகம் கொள்ளக் கூடாது? பிரதமரையும் அவர் கட்சியையும் நம்புவதற்கு அவர்களுக்கு என்ன காரணம் இருக்கிறது?
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் எதிர்வினையானது, காஷ்மீர் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா அவர்களுக்கு ஏற்படுத்திய காயத்தையும் அவமானத்தையும் மறப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.
மதம் சார்ந்த அமைப்புகளின் பங்கு
அவர்கள் தேசியவாத “நெருப்பின்” தாக்குதலைக் காஷ்மீரிகள் தாங்கிக்கொண்டு இருந்தபோது, இந்த அரசால் மிகவும் வெறுக்கப்படும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், காஷ்மீரிகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருந்தனர். காஷ்மீரிகளுக்கு இந்தியா மீது சிறிதளவு ஒட்டுறவேனும் இருக்கிறது என்றால், அது “தேசத்துரோகிகள்” என்று ஒதுக்கப்பட்ட இவர்களால்தான் இருக்கும். இவர்களைப் பற்றித்தான் பிரதமர் நீதித் துறைக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்.
கல்சா உதவிக் குழு போன்ற உதவி செய்பவர்களை விட்டால், எந்தவொரு மத நிறுவனமோ, மதம் சார்ந்த நிறுவனமோ, மனிதத்தின் மறுவடிவமான சத்குரு, ராம்தேவ், மொராரி பாபு ஆகியோரோ இது குறித்த தங்கள் அருளுரையை வழங்கவில்லை. “ஆவேசத்துடன்” இருக்கும் தேசியவாதிகளுக்கு அன்பைப் போதிக்கவில்லை. எந்த ஒரு இந்து, ஜைன, பௌத்த மத அமைப்புகளும் காஷ்மீரிகளின் உதவிக்கு வரவில்லை என்பதைச் சொல்லவே வேண்டாம்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து எழுந்த கோபம் தன்னிச்சையானது அல்ல. இயற்கையானது அல்ல. அது உருவாக்கப்பட்டது, நிகழ்த்தப்பட்டது. சங்கப் பரிவாரங்கள் தொடர்ந்து செயலில் இருந்தன. அந்நெருப்பை அவர்கள் அணைய விடவில்லை.
நம் அரசியல் வர்க்கமும் காஷ்மீரைக் கைவிட்டது. பிரதமரின் அமைதி புரிந்துகொள்ளக்கூடியதே. ஏனென்றால், அவர்தான் இக்கூட்டத்தின் தலைவர். ஆனால், இரண்டு காஷ்மீர் கட்சிகள் மட்டுமே இந்தியாவில் காஷ்மீரிகளின் பாதுகாப்பு குறித்துப் பேசின. வேறு யாருமே பேசவில்லை.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து நிகழ்ந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலும், காஷ்மீரிகளுக்கு எதிரான தாக்குதல் நடத்துபவர்களை எச்சரிக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை. காங்கிரஸ் கட்சி தன் உறுப்பினர்கள் காஷ்மீரிகளுடன் இருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று ஒரு ட்வீட்கூடப் போடவில்லை.
பிரதமர் பெரும்பான்மையானவர்களின் “கோபத்துடன்” தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். ஆனால், காஷ்மீரிகளின் பயத்தையும் அச்சத்தையும் புறக்கணித்துவிட்டார் (இல்லை மகிழ்ந்தாரா?) என்று மனோஜ் மிட்டா சொன்னது மிகவும் சரியாக உள்ளது.
தாமதமாக வந்த பிரதமரின் வேண்டுகோளைக் கண்டு நிம்மதியடைந்த ஊடகம், அது வந்த நேரத்தைக்கூடப் பார்க்கவில்லை. உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகே இது வந்தது. ஊடகம், குறிப்பாக இந்தி ஊடகங்கள், மனிதத்தைத் தனக்குள் தேடிப்பார்க்க வேண்டும். அது இன்னும் அங்கே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
புல்வாமா தாக்குதல் இந்திய அரசியலிலின், சமூகத்தின் மோசமான முகத்தை வெளிக் கொண்டுவந்துள்ளது. இதிலிருந்து வெளியேறும் வழிகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
அபூர்வானந்த்
நன்றி: தி வயர் (https://thewire.in/politics/modis-appeal-to-protect-kashmiris-is-lapsed-speech)
தமிழில்: ஆசிஃபா
//நம் தெரு முனையில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டாலும், ஐயோ… சாக்கடை அடைப்புக்கு மோடிதான் காரணம்…//
Of course, yes, we will have to blame him only. That is how a leadership should work. Here leader is only there to take credit for good and does not take credit for wrongdoing.
There were days when leaders behaved like leaders and took blame and resigned from their job/position but now, they blame someone else for their own mistake.
It is because of people like you, who blindly support people who are not eligible.
You GROW UP KG Srinivasan….
என்ன சங்கர்… ஜக்கி பற்றி Latest ஒன்றும் article இல்லையா? நாட்டின் முதல் குடிமகன் ஜக்கி கூட்டத்திற்கு வருகிறாராமே
என்ன சங்கர்… ஜக்கி பற்றி Latest ஒன்றும் article இல்லையா? நாட்டின் முதல் குடிமகன் ஜக்கி கூட்டத்திற்கு வருகிறாராமே !!
நம் தெரு முனையில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டாலும், ஐயோ… சாக்கடை அடைப்புக்கு மோடிதான் காரணம்… என்று ஒருவர் சொல்வதும், அதற்கு அறிவுஜீவிகள் என்று தன்னைத்தானே நினைத்துக் கொள்ளும் ஊழல்வாதிகள், நாளை 4/2/2019 காலை வரும் டெக்கான் கிரானிக்கல் இதழில் ஆர்டிகல் 370 பற்றியும் அம்பேத்கர் 370ஐ எதற்காக எதிர்த்தார் என்பது விரிவாக வருகிறது… படியுங்கள்…