வடிவேலுவின் வண்டு முருகன் காமெடி மிகப் பிரபலமானது. “உங்களுக்குத் தெரியாத செக்ஷன் இல்லை மைலார்ட்” என்று கூறுவார். அதே போலவே ஒரு வண்டு முருகன், தற்போது பேசியுள்ளார்.
அந்த வண்டு முருகன் வேறு யாருமல்ல…. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான் அது. சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற சிதம்பரம் தான் இப்படிப் பேசியுள்ளார்.
நேற்றைக்கு முன்தினம், தில்லியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, “2009 ஆம் ஆண்டுத் தேர்தலில் ப. சிதம்பரம் வெற்றி பெறவே இல்லை. சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். சிதம்பரம் வென்றது மோசடிதான். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப. சிதம்பரம் விலக வேண்டும்” என்று கூறினார்.
இதற்கு பதிலாக அறிக்கை வெளியிட்ட, ப.சிதம்பரம், Jayalalitha has a habit of starting on the wrong foot. She has always had utter contempt for court proceedings and hence her statement today is not at all surprising, She knows that her candidate Rajakannappan has filed an election petition in the Madras High Court, and that is pending since September 2009. Her statement is therefore in gross contempt of court.” என்று கூறினார்.
அதாவது, ஜெயலலிதாவுக்கு எப்போதுமே தவறாக தொடங்கும் பழக்கம் உள்ளது. அவர் நீதிமன்றத்தை எப்போதுமே மதித்ததில்லை. அதனால், அவரது பேட்டி ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. அவரது வேட்பாளர் ராஜகண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது தெரிந்தும், அது செப்டம்பர் 2009 முதல் நிலுவையில் உள்ளது என்பது தெரிந்தும், இவ்வாறு பேசியுள்ளது, தெளிவான நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
1971ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா ?
“Criminal contempt” means the publication (whether by words, spoken or written, or by signs, or by visible representation, or otherwise) of any matter or the doing of any other act whatsoever which-
Prejudices, or interferes or tends to interfere with the due course of any judicial proceeding , or
(iii) Interferes or tends to interfere with, or obstructs or tends to obstruct, the administration of justice in any other manner.
ஒருவர், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கின் போக்கை மாற்றும் நோக்கத்தோடு, அதில் தலையிட்டோ, தலையிட முயற்சியோ செய்தாலோ அல்லது, நீதிமன்றத்தின் பணியில் தலையிட்டாலோ, தலையிட முயற்சித்தாலோ, அது நீதிமன்ற அவமதிப்பாகும்.
இப்போது, ஜெயலலிதா தனது பேட்டியில் என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம். 2009 ஆம் ஆண்டுத் தேர்தலில் ப. சிதம்பரம் வெற்றி பெறவே இல்லை. சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். சிதம்பரம் வென்றது மோசடிதான். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ப. சிதம்பரம் விலக வேண்டும்
இதில் நீதிமன்ற அவமதிப்பு எங்கே உள்ளது ? இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றுதானே சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவின் இந்தப் பேட்டியை நீதிமன்ற அவமதிப்பு என்று எப்படிக் கருத முடியும் ? செட்டிநாட்டுச் சீமானுக்கு என்ன ஆயிற்று ? ஏன் இப்படி வக்கீல் வண்டு முருகன் ஆனார் ?