பூமியிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கவல்ல ஏ-சாட் (A-SAT) எனப்படும் ஆன்ட்டி – சாட்டிலைட் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டதாக மார்ச் 27 அன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மோடியின் இந்த அறிவிப்பை மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாகவும், வியூகப் பார்வையைக் கொண்டதாகவும் கருத வேண்டியுள்ளது.
ஏன் இது மிகவும் முக்கியமானது? ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே செயற்கைக்கோள்களைத் தாக்கும் தொழில்நுட்ப வல்லமை உள்ளது என்ற வகையில், இந்தச் சோதனை அதிமுக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, இம்மூன்று நாடுகளில் சீனாவுடன் இந்தியாவுக்கு நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
விண்வெளி என்பதும் போர் புரிவதற்கான களம் என்கிற அடிப்படையில், எதிர்காலப் போர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராகிவருகிறது என்ற அடிப்படையிலும் இந்தச் சோதனையைப் பார்க்கலாம்.
புவி சார்ந்த தளத்தில்தான் போர்கள் தொடங்கும். ஆனால், விண்வெளியிலும் போர் பற்றிக்கொள்வதற்கான சாத்தியம் உண்டு. நிலத்திலும், கடலிலும், வான்வெளியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்திய ராணுவப் படையினரை இயக்கக்கூடிய இந்திய செயற்கைக்கோள்கள் கண்காணிப்புப் பணிகளைச் செய்தபடி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் வலம் வருகின்றன.
இந்தப் பின்புலத்தில், முக்கியத்துவம் வாய்ந்த ‘மிஷன் சக்தி’ பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ராணுவப் போரின்போது, எந்த எதிரியும் தங்களது விண்வெளிச் சொத்துகளான செயற்கைக்கோள்களுக்கு இந்தியாவை ஓர் அச்சுறுத்தலாகக் கருதும். மேலும், விண்வெளி சார்ந்த கட்டமைப்புகள் மீது எதிரிகள் தாக்குதல் நடத்த யோசிக்கும் வகையில், விண்வெளித் தாக்குதல்களை இ-சாட் தடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பூமியிலிருந்து 300 கி.மீ. உயரத்திற்குச் சென்று ஏவுகணை மூலம் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கவல்ல இந்தியாவின் ஏ-சாட் போலவே, கடந்த 2008 பிப்ரவரியில் கடல் மார்க்க ஏவுகணையை 240 கி.மீ. உயரத்திற்கு அனுப்பி செயற்கைக்கோள்களை அழிக்கவல்ல சோதனையை அமெரிக்காவும் மேற்கொண்டது. அமெரிக்கர்கள் 2008ஆம் ஆண்டிலும், இந்தியர்கள் 2019ஆம் ஆண்டிலும் இந்த உயரத்தில் மேற்கொண்ட சோதனைகள், மற்ற விண்வெளி நாடுகளுக்கு விண்வெளிக் குப்பைகள் சார்ந்த பயத்தை ஏற்படுத்துகின்றன. மிஷன் சக்தி மூலம் வெளியான குப்பைகள் சில வாரங்களுக்கு அல்லது சில மாதங்களுக்கு மேலாக அப்படியே பூமியின் சுற்றுவட்டப் பாதையிலேயே இருப்பதற்கான சாத்தியம் உண்டு.
இதனுடன் ஒப்பிடும்போது, சீனா 2007 ஜனவரியில் நடத்திய ஏ-சாட் சோதனையின்போது வெளியான குப்பைகளின் அளவு மிக மிக அதிகம். ஏனெனில், சீனாவின் செயற்கைக்கோள் எதிர்ப்பு அமைப்பின் இலக்கு என்பது பூமியிலிருந்து 850 கிலோமீட்டர் உயரம் கொண்டது. அத்தனை உயரத்திலுள்ள விண்வெளிக் குப்பைகளைக் களைவதற்கு 50 முதல் 100 ஆண்டுகள் வரை ஆகலாம் என்பது நிபுணர்களின் கருத்து.
இந்த வகையில், சீனாவின் சோதனையின் விளைவாகப் பேரழிவு உருவாக்கத்தக்க அளவிலான குப்பைகளைத் தவிர்த்தது, மோடி அரசின் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
மிஷன் சக்தியில் நேரு அரசின் முன்னோடிப் பங்களிப்பு
மோடியின் கீழ்தான் மிஷன் சக்தி வெற்றி அடைந்துள்ளது என்றாலும், இந்திய விண்வெளித் திட்டங்களில் ஜவர்ஹர்லால் நேரு தொடங்கி வெற்றிகரமான இந்திய அரசுகளின் அர்ப்பணிப்புமிக்க ஈடுபாடுகள் இல்லையென்றால் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) 1969ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கி, 1972இல் விண்வெளித் துறையின் ஒரு பகுதியானது. அதன் முதல் தலைவர் விக்ரம் சாராபாய் உடன் இணைந்து இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேருதான் நாட்டின் விண்வெளித் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தார். 1960களின் துவக்கத்தில் இந்திய விண்வெளித் திட்டங்கள் படிப்படியாக அடியெடுத்து வைக்கத் தொடங்கிய சூழலில், அணுசக்தித் துறையின் (DAE) ஒரு பகுதியாக விண்வெளி ஆய்வுக்கான இந்திய தேசியக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நிர்வகிப்பதற்காக, நேரு தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்பினரால் முக்கியமான முதற்கட்ட இந்திய விண்வெளித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ராக்கெட்டுகளை ஏவும் திட்டங்களுக்கான அடிப்படை நுட்பங்களை அறியவும், தங்களது நிபுணத்துவத்தை அனுபவ ரீதியில் மேம்படுத்திக்கொள்ளவும் இந்தியத் தொழில்நுட்ப நிபுணர்களும் விஞ்ஞானிகளும் வெளிநாடுகளில் பயிற்சி பெறும் திட்டம் ஒன்றை நேரு வெளிநாட்டு நிதியுதவியுடன் உருவாக்கினார்.
அதன் தொடர்ச்சியாக, திருவனந்தபுரத்தில் 1963ஆம் ஆண்டு தும்பா ராக்கெட் ஏவுதளம் (TERL) மையத்தை அரசு அமைத்தது. 1963 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில், தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் முந்நூறுக்கும் அதிகமான ராக்கெட் முன்பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டன.
இதன் மூலம், வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற இந்திய விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப நிபுணர்களும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் சிக்கல்களையும் தேவைகளையும் கையாள்வதற்கு அனுபவபூர்வமான திறன்களைப் பெற்றனர்.
இந்திய விண்வெளித் தொழில்நுட்ப நிபுணர்கள் மிகக் கடினமான சோதனைகளை நடத்துவதற்கு கற்றுக்கொள்ள வழிவகுத்ததன் மூலம் நேருவுக்குப் பின் பிரதமர் ஆனவர்கள் மிகுந்த பலன்களைப் பெற்றனர். முன்னோடியாக விளங்கிய முதல் பிரதமரின் வழியை அவருக்குப் பின் வந்தவர்களும் சிறப்பாகப் பின்பற்றினர். நேருவின் உந்துதல் மட்டும் இல்லையென்றால், இந்திய விண்வெளித் திட்டங்களின் மகத்தான சாதனைகளைக் கற்பனை செய்து பார்ப்பதே கடினம்தான்.
காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுக்கும் பங்கு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தன் ஆட்சிக் காலத்தில், உந்துஏவுகணைப் பாதுகாப்பு (Ballistic Missile Defence – BMD) மீது மிகுந்த கவனம் செலுத்த தொடங்கியதும், 2007 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட சீனாவின் ஏ-சாட் மிஷனின் தன்மை குறித்து அந்த அரசின் தலைமை விழிப்புடன் உணர்ந்து செயல்பட்டதும் ‘மிஷன் சக்தி’ வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் (2004 – 2014) நீட்டிக்கப்பட்ட உந்துஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்திலிருந்துதான் எதிரிகளின் ஏவுகணைகளை அழிக்கும் நுட்பம் நுட்பங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மேம்படுத்தியிருக்கிறது.
மேலும், ஏ-சாட் ஒன்றை உருவாக்குவதற்குத் தேவையான அடிப்படைத் தொழில்நுட்பங்கள் 2010ஆம் ஆண்டிலேயே இந்தியா வசமிருந்ததும் ஆதாரபூர்வமான உண்மை. அரசியல் ரீதியில் ஒப்புதல் கிடைத்திருக்கும் பட்சத்தில், 2012ஆம் ஆண்டிலேயே ஏ-சாட் சோதனையை இந்தியா நடத்தியிருக்கும் என்று அப்போதைய டி.ஆர்.டி.ஓ. தலைவர் வி.கே.சரஸ்வத் கூறியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இவ்வாறாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ‘மிஷன் சக்தி’க்கு அடித்தளம் இட்டுள்ளது. ஆனால், சோதனை மேற்கொள்வதற்காக அரசியல் ரீதியில் முன்னெடுக்கவும், முடிவு எடுப்பதில் முன்னுரிமை அளிக்கவும் அந்த அரசால் முடியாமல் போய்விட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அணுமுறையால், ஏ-சாட் வெற்றிப் பலன்களை அறுவடை செய்ய முடியாமல் போய்விட்டது.
அதேவேளையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பங்களிப்பு இல்லை என்றால், மிஷன் சக்தி என்பது சாத்தியமே இல்லை என்பதையும் மக்கள் உணர வேண்டும். இவ்வாறாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இந்த வெற்றியைப் பகிர்ந்துகொள்ளலாம்.
பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்கும், தேசப் பாதுகாப்புக்கும் உரியது என்பதால் காங்கிரஸ், பாஜக இருவருக்குமே மிஷன் சக்தி முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில், அரசைக் குறிப்பிடாமல், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடனடியாக வாழ்த்து கூறியது கவனிக்கத்தக்கது.
கார்த்திக் பொம்மகாந்தி
நன்றி: தி க்வின்ட்
ஆமாம். அசோகரும், இராஜராஜசோழனும் அமைத்த சாலைகளில்தான் நாம் எல்லோரும் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் இல்லையெனில் நாமெல்லாம் வேகமாக பயணம் செய்வது என்பதே சாத்தியமாகி இருக்காது.
Mr Rajendhiran,Have you heard of KALLANAI built by KARIKAL CHOLAN. If only Kallanai was not built by Karikal Cholan,what would have happened to the delta districts.?Nehru was the architect of modern India.During the Second Five Year Plan,he focused on industrialization of India.He rightly called the industries as “Modern Temples”During the First Five Year Plan,he built the huge Bakra-Nangal dam The present politicians are not able to even resolve the river disputes between the States..Before making any comment about Nehru,read the history.Nehru was responsible for Navaratna Public Sector undertakings.Deliberate attempts were not made during his rule to make the PSUs to lose their business(Examples-BSNL Salem Steel Plant and recently HAL and ONGC.Do you know that the coin minting machine in the Salem Steel Plant was installed few years back was not allowed to mint coins and this plant was ordered to supply the sheets meant to mint coins to other mints operating in other States.And BSNL was allowed to use the 4G only this month.He gave “level playing field”to PSUs. But now, the so called intellectuals in Niti Aayog wanted to give “level playing field”to private sector in rail freight earnings.Several passenger trains especially in TN,in which trains the common men travels are being permanently stopped.If you want to go to your home town to be with your near and dear ones during festivals,you have to shell out money thro’ your nose by travelling in Suvidha trains.Are you aware that they charge you around Rs 4000/- in Second A/c to Tirunelveli. If you are a senior citizen and if you cancel your sleeper class ticket,you get back only the booking charges.All because,none of those “experts”in the Committee to review the working of Indian Railways,ever traveled in a sleeper class in their life.You may build even 164 floor Purge Kalifa like building.But,to sustain the huge building there should be a strong foundation. DRDO and ISRO were not started just after 2014 .VARALAARU MUKKIYAM NANBARE!
மிக்க நன்றி திரு. ராஜன். நான் நேருவை பற்றி எதுவும் பேச வரவில்லை. ஆனால் அவர்கள் இல்லாவிட்டால் எதுவுமே நடந்திருக்காது என்பது போல எழுதுவதுதான் பிடிக்கவில்லை. நானும் வரலாற்றை படித்துக்கொண்டேதான் இருக்கிறேன். பொதுத்துறை நிறுவனங்களை முடக்குவது என்பது எப்போதுமே நடந்து கொண்டேதான் இருக்கிறது. ( நேருவின் பெயரைச்சொல்லி ஆட்சி செய்தவர்கள் உட்பட). நான் அரசியல் சார்ந்து பேசவில்லை. மீண்டும் நன்றி.