உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார், இந்தியாவின் நீதித் துறையையே உலுக்கிப் போட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று ஒரு புறம். இது நீதித் துறையை முடக்க நடைபெறும் சதி என்று மற்றொரு புறம். இந்த புகார் உண்மையா இல்லையா என்று விசாரணை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், தலைமை நீதிபதியை மிரட்டுவதற்காக ஒரு பெரிய கார்ப்பரேட் அதிபர் மற்றும், தாவூத் இப்ராஹிம் சார்பில், தான் அணுகப்பட்டதாகவும், அதற்காக 1.50 கோடி தனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சிக்கப்பட்டதாகவும், வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
முதலில் அந்த பெண்ணின் புகாரில் என்ன உள்ளது என்பதை பார்ப்போம்.
மே 2014ல், ஒரு பெண், இளநிலை நீதிமன்ற உதவியாளர் என்ற பதவியில் உச்சநீதிமன்றத்தில் பணியில் சேர்கிறார். அவரது கணவர் டெல்லி காவல் துறையில் காவலர். உச்சநீதிமன்ற நூலகத்தில் அவருக்கு பணி ஒதுக்கப்படுகிறது. 2015ல், மீரட் நகரில் உள்ள பல்கலைகழகத்தில், அப்பெண் சட்டப் படிப்பில் சேர்கிறார். 2015ம் ஆண்டில், உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் அலுவலகத்தில் பணியமர்த்தப்படுகிறார். அங்கே அவர் 10 மாதங்கள் பணியாற்றுகிறார்.
அக்டோபர் 2016ல் ரஞ்சன் கோகோய் நீதிமன்றத்தில் நீதிமன்ற உதவியாளராக நியமிக்கப்படுகிரார் அந்த பெண். 2018 வரை அவர் நீதிமன்றத்திலேயே பணியாற்றுகிறார். ஜனவரி 2018ல், அந்த பெண் தேர்வு எழுதுவதற்காக 10 நாட்கள் விடுமுறையில் செல்கிறார். அவர் பணியில் மீண்டும் சேர்ந்தவுடன், முதல் முறையாக ரஞ்சன் கோகோய் அவரை தன் அறைக்கு அழைக்கிறார். அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே எப்படி குடும்பத்தையும் சமாளிக்கிறீர்கள் என்று விசாரிக்கிறார். குடும்பத்தை பற்றியும் விசாரிக்கிறார். கூடுதலாக பொறுப்புள்ள பணியை அளித்தால் செய்ய முடியுமா என்றும் கேட்கிறார். ஜனவரி 2018 முதல் மே 2018 வரை, அந்த பெண்ணுக்கு ஒரு வழக்கின் சாராம்சத்தை (Case Summary) தயார் செய்யும் பணியை அளிக்கிறார். இந்த பணியை செய்ய அந்த பெண் பொருத்தமான நபர் அல்ல. ஏனெனில், சட்டம் படித்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கென்று உச்சநீதிமன்ற்த்தில் உள்ளனர். மனதில் பட்டதை வெளிப்படையாக தன்னிடம் பேசுமாறு அந்த பெண்ணிடம் கோகோய் கூறுகிறார்.
உச்சநீதிமன்றம் கோடை விடுமுறைக்கு செல்வதற்கு முன், தன்னிடம் பணியாற்றும் பணியாளர்களுக்கு மதிய உணவு அளிக்கிறார். 19 மே 2018 அன்று அந்த பெண்ணும் மதிய உணவு விருந்தில் கலந்து கொள்கிறார். உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
மே 2018ல், கோடை விடுமுறை நாளில், தன் வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். மேலும், டெல்லியில் நடைபெறும் ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவர் கணவரோடு வருமாறு அழைப்பு விடுக்கிறார். சில நாட்கள் கழித்து மீண்டும் அழைப்பு விடுக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அந்த பெண்ணும் அவர் கணவரும் கலந்து கொள்கின்றனர். 2 ஜூலை 2018 அன்று கோடை விடுமுறை முடிந்து நீதிமன்றம் திறக்கிறது. அந்த பெண்ணுடைய மகளுக்கு இனிப்புகள் தருமாறு அந்த பெண் ஊழியரிடம் இனிப்புகளை கொடுத்த கோகோய், 31 ஜூலை 2018 அன்று அப்பெண் தன் கணவரை அழைத்துக் கொண்டு தன்னை வந்து சந்திக்குமாறு கூறுகிறார்.
31 ஜூலை 2018 அன்று அந்த பெண்ணும் அவர் கணவரும், கோகோயை சந்திக்கின்றனர். இரண்டு மணி நேரம் அவர்களோடு உரையாடுகின்றார் கோகோய். அவர் கணவரிடம், அந்த பெண் மிக சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், அவர் வாழ்வில் சீக்கிரம் முன்னேறி விடுவார் என்றும், ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவரை அணுகுமாறும் கூறுகிறார்.
ஆகஸ்ட் 2018ல், தன் அறைக்கு அந்த பெண்ணை அழைத்த கோகோய், அவர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார். சில நாட்கள் கழித்து, அவரை அழைத்து, ஏன் தன் தொலைபேசி அழைப்புகளை ஏற்பதில்லை என்று திட்டுகிறார். அந்த பெண், தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்பதில்லை என்று தெரிவித்ததும், அவர் போனை வாங்கி பார்க்கிறார். அவரே ஒரு முறை அழைத்து சோதிக்கிறார். அந்த பெண் சொன்னது உண்மை என்று புரிந்பிரததும், தன் எண்ணை சேமித்துக் கொள்ளுமாறு உடனடியாக அவர் எண்ணை சேமிக்க வைக்கிறார்.
மேலும் இரண்டு எண்களை கொடுத்து அதில் ஒரு எண் வாட்ஸப் எண் என்றும், இந்த எண்ணை வேறு யாரிடமும் பகிரக் கூடாது என்றும், பல ரகசிய தகவல்களை அவர் அந்த எண்ணில் பகிர்வார் என்றும் தெரிவிக்கிறார். அதன் பிறகு அடிக்கடி தொலைபேசியில் அந்த பெண்ணை கோகோய் அழைக்கிறார். தினமும் காலையில் அவரை தொலைபேசியில் அழைத்து, அன்றைய தினம் என்ன வேலை என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வெண்டும் என்றும் கூறுகிறார்.
அந்த பெண்ணை அவர் அறைக்கு மீண்டும் அழைத்த கோகோய், சில நாட்களில் அவர் தலைமை நீதிபதி ஆகப் போவதாகவும், அதனால் நம்பிக்கையான பணியாளர்கள் வேண்டும் என்றும், அந்த பெண்ணை தன் வீட்டில் பணியாற்றுமாறும் கூறுகிறார். கோகோயின் செயலர் எச்.கே.ஜுனேஜா என்பவரிடம், இது தொடர்பான உத்தரவுகளை பெற்றுக் கொள்ளுமாறும் கூறுகிறார் கோகோய்.
11 ஆகஸ்ட் 2018 முதல் அந்த பெண், கோகோய் இல்லத்தில் பணியாற்றத் தொடங்குகிறார். ஏற்கனவே அவர் இல்லத்தில் பணியாற்றிய ஊழியர், உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப் படுகிறார். அந்த பெண்ணின் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான். ஆனால் அவர் காலை 8 மணிக்கே வருமாறு பணிக்கப்படுகிறார். கோகோய் வீட்டில் காலை ஷிப்டில் பணியில் இருந்த வேறு இரண்டு உச்சநீதிமன்ற ஊழியர்கள் மதியம் 3 மணி ஷிப்டுக்கு மாற்றப்படுகிறார்கள். காலை 8 மணிக்கே பணிக்கு செல்லும் அந்த பெண்ணை கோகோய் பல முறை நேரில் அழைத்து பேசுகிறார்.
அந்த பெண்ணை அழைத்து, தினமும் அவருக்கு வாட்ஸப்பில் குட்மார்னிங் மெசேஜ் அனுப்புமாறு கூறுகிறார். அந்த பெண்ணும் வேறு வழியில்லாமல் காலை 6 மணிக்கே குட்மார்னிங் மெசேஜ் அனுப்புகிறார். ஒரு நாள் குட்மார்னிங் அனுப்ப தவறியபோது, ஏன் அனுப்பவில்லை என்று மெசேஜ் அனுப்ப்புகிறார் கோகோய்.
ஒவ்வொரு நாளும், காலை அந்த பெண் பணிக்கு வந்ததும் அவர் போனை வாங்கி, அனைத்து மெசேஜ்களையும் டெலிட் செய்கிறார் கோகோய். தலைமை நீதிபதியாக பதவியேற்க இருந்த கோகோய், தனக்கு வாழ்வில் மூன்று சொத்துக்கள் என்றும், அவை தனது, மனைவி, மகள் மற்றும், அந்த பெண் என்றும் கூறியதோடு, எனது பதவியேற்பு அழைப்புக்கு அந்த பெண்ணை குடும்பத்தோடு அழைப்பதாக கூறுகிறார். அந்த பெண்ணை, அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இறக்கி விடுவதற்காக ஒரு வாகனத்தையும் ஏற்பாடு செய்கிறார் கோகோய்.
பின்னர், கோகோய் அந்த பெண்ணிடம், வேலை முடிந்து வீட்டுக்கு சென்று வர சிரமமாக இருந்தால், கோகோய் வீட்டின் அருகிலேயே ஒரு வீட்டுக்கு ஏற்பாடு செய்வதாக கூறுவதோடு, மீண்டும், எந்த உதவி வேண்டுமானாலும் செய்வதாக கூறுகிறார். அந்த பெண், உடல் ஊனமுற்ற, தனது மைத்துனருக்கு ஒரு வேலை வேண்டும் என்று கூறுகிறார். தான் தலைமை நீதிபதி ஆகி விட்டால் எந்த நியமனம் வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும், தலைமை நீதிபதி ஆனதும் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறுகிறார்.
அக்டோபர் 2018ல், கோகோய், தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். அந்த பெண்ணும் அவர் கணவரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். பதவியேற்ற மறு நாளே, அந்த பெண்ணின் மைத்துனரின் பயோடேட்டாவை கேட்கிறார் கோகோய். 10 அக்டோபர் 2018 அன்று, அந்த பெண்ணை தன் அறைக்கு அழைத்த கோகோய், அந்த பெண்ணின் மைத்துனர் வேலைக்கு மருத்துவ ரீதியாக தகுதியில்லாதவர் என்றும், இருந்தாலும் அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கிறார். “நீ அழகாக இருக்கிறாய்” என்றும் கூறுகிறார்.
எதிரே அமர்ந்திருந்த அந்த பெண்ணை தன் அருகில் வந்து நிற்குமாறு கூறுகிறார். அந்த பெண் அருகில் வந்து நின்றதும், அந்த பெண்ணின் கையை பிடித்து, அவர் கை வாசனையாக இருப்பதாக கூறிவிட்டு, “எனக்காக என்ன செய்வாய்” என்று கேட்கிறார்.
அந்த பெண், எங்கள் குடும்பமே உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று கூறுகிறார். அவர் முதுகில் கை வைத்த கோகோய், அப்படியே அந்த பெண்ணின் பின்புறத்தை தடவுகிறார். அந்த பெண்ணின் உடலில் பதற்றத்தை கண்டதும், அவர் கன்னத்தை கிள்ளி, தன் மகள் போல அவரை கருதுவதாக கூறுகிறார்.
11 அக்டோபர் 2018 அன்று, கோகோய் தன் வீட்டுக்கு அந்த பெண்ணை அழைக்கிறார். “நீ இன்னும் கொஞ்சம் குண்டானால் அழகாக இருப்பாய்” என்று கூறுகிறார். சரி மீண்டும் கேட்கிறேன். எனக்காக என்ன செய்வாய் என்று கேட்கிறார். எனக்கு என்ன தருவாய் என்பதை எழுத சொன்னேனே, எழுதினாயா என்று கேட்கிறார். அந்த பெண் ஒரு காகிதத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
‘Your Lordship is a blessing to me; words cannot describe how thankful I am; I will always be grateful for all that Your Lordship is doing for me; my entire family is grateful; I am grateful for your support.”
“என் தேவன் என்னை ஆசிர்வதித்துள்ளீர்கள். என் நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் தேவனாகிய நீங்கள் எனக்காக செய்த உதவிகளுக்கு என் குடும்பமே நன்றிக் கடன் பட்டுள்ளது”
உடனடியாக எழுந்த கோகோய், அந்த பெண்ணின் அருகில் சென்றதும், அந்த பெண்ணும் எழுந்து நிற்கிறார். அவர் கன்னத்தை கிள்ளி விட்டு, அவரை கட்டிப் பிடித்து, எனக்கு இதுதான் வேண்டும் என்று கூறுகிறார். அவர் உடல் முழுக்க தழுவுகிறார். “என்னை கட்டிப் பிடி” என்று கூறுகிறார். அதிர்ந்து போன அந்த பெண், கோகோயை தள்ளி விடுகிறார். கோகோய் தன் தலையை பின்னால் இருந்த அலமாரியில் இடித்துக் கொள்கிறார். அந்த பெண் உடனடியாக வெளியேறி விடுகிறார்.
சில மணி நேரம் கழித்து அந்த பெண்ணை மீண்டும் அழைத்த கோகோய், “இந்த விஷயம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது” என்று கூறி விட்டு, ஒரு பேப்பரில், “என்னை கட்டி அணையுங்கள். உங்கள் கவுரவத்தை குறைக்கும் வகையில் நடக்க மாட்டேன்” என்று எழுத சொல்கிறார். அந்த பெண்ணும் அவ்வாறே எழுதுகிறார். அந்த பெண் உடனடியாக விடுப்பு எடுத்துக் கொண்டு வெளியே சென்று விடுகிறார்.
அந்த பெண் வீட்டுக்கு செல்வதற்குள் உச்சநீதிமன்றத்தின் மூத்த அதிகாரிகள் அவரை அழைத்து, அவருக்கும் அவர் கணவருக்கும் ஏதும் பிரச்சினையா என்று விசாரிக்கிறார்கள். இனி உங்கள் வீட்டில் பணியாற்ற முடியாது என்பதை தெரிவிப்பதற்காக அந்த பெண் கோகோயை அழைத்தபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. கோகோயின் உதவியாளர், இனி தலைமை நீதிபதியை அழைக்க கூடாது என்று கூறியதாக தெரிவிக்கிறார்.
இதற்கிடையே, திலக் மார்க் காவல் நிலைய ஆய்வாளர், அந்த பெண்ணுக்கும் அவர் கணவருக்கும் சண்டை நடந்ததா என்று விசாரித்ததாக அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.
12 அக்டோபர் 2018 முதல், தலைமை நீதிபதி கோகோயின் நடவடிக்கைகள் தலைகீழாக மாறுகின்றன. அலுவலக அறைக்கு வந்தாலும், வேறு ஊழியர் யாராவது அறையில் இருப்பது போல பார்த்துக் கொண்டார். ஒரு வாரம் கழித்து அந்த பெண், இனி தலைமை நீதிபதியின் வீட்டில், பணியாற்ற முடியாது என்பதை தெரிவிக்கிறார். 22 அக்டோபர் 2018 அன்று அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டில் இருந்து, உச்சநீதிமன்ற ஆராய்ச்சி பிரிவுக்கு மாற்றப் படுகிறார். அந்த பிரிவுக்கு நீதிபதிகள் போப்டே மற்றும் ரமணாவோடு வருகை தந்த கோகோய், அந்த பெண்ணை அந்த இரு நீதிபதிகளுக்கும் அறிமுகப்படுத்தி, “சிறப்பாக பணியாற்றக் கூடியவர்” என்று கூறுகிறார். அக்டோபர் இறுதியில், அந்த பெண்ணை தன் அறைக்கு அழைத்து, “மீண்டும் என் அலுவலகத்தில் பணியாற்ற விருப்பமா” என்று கேட்டபோது, அந்த பெண் மறுத்து விடுகிறார்.
ஒரே மாதத்தில், மீண்டும் வேறு இடத்துக்கு மாற்றப் படுகிறார் அந்த பெண்.
17 நவம்பர் 2018 அன்று தன் மகளின் பள்ளியில் ஒரு நிகழ்ச்சி இருப்பதால், அதில் கலந்து கொள்வதற்காக, அலுவலகத்துக்கு தாமதமாக வர அனுமதி வேண்டும் என்று கேட்கிறார். அது ஒரு சனிக் கிழமை. பள்ளி விழா 12.15 வரை நடக்கிறது. சனிக்கிழமை உச்சநீதிமன்ற ஊழியர்களுக்கு அரை நாள்தான் வேலை நாள். உடனடியாக, விபரத்தை சொல்லி, அலுவலகம் வர முடியாத விபரத்தை தெரிவிக்கிறார்.
19 நவம்பர் 2018 அன்று ஒழுங்கீனமான நடத்தை என்று கூறி அந்த பெண்ணுக்கு குற்றப் பத்திரிக்கை தரப்படுகிறது. உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு எதிராக கேள்வி எழுப்பியதாகவும், அனுமதியின்றி விடுப்பு எடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அந்த பெண் அந்த குற்றச் சாட்டுகளை மறுத்ததோடு, இனி எந்த தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக விளக்கம் அளிக்கிறார். மீண்டும் அவரை நூலகப் பிரிவுக்கு மாற்றுகிறார்கள். ப் ஒரே மாதத்தில் இது மூன்றாவது மாறுதல்.
27 நவம்பர் 2018 அன்று ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, அவர் பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார். அன்றுதான் முதல் முறையாக, அவர் கணவரிடம் நடந்த விபரங்களை தெரிவிக்கிறார்.
அதே நாளன்று, டெல்லி காவல் துறையில் பணியாற்றிய அவர் கணவர், மத்திய குற்றப் பிரிவிலிருந்து மாற்றப் படுகிறார்.
6 டிசம்பர் 2018 அன்று, அந்த பெண் அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படாமல் அவர் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப் படுகிறது. பதிவாளர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
அந்த பெண், 15 டிசம்பர் 2018 அன்று விசாரணைக்கு உதவியாக, தன் சக ஊழியர் சூர்ய பிரதாப் சிங்கை நியமித்துக் கொள்ள அனுமதி கோருகிறார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
17 டிசம்பர் 2018 அன்று விசாரணை. காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்க உள்ளது. அந்த பெண் காத்திருக்கிறார். பதற்றத்தில் அவர் திடீரென்று மயக்கம் போட்டு விழுகிறார். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
18 டிசம்பர் 2018 அன்று, அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக பதிவாளர் அறிக்கை அளிக்கிறார். 20 டிசம்பர் 2018 அன்று அந்த பெண்ணின் கணவர், குற்றச்சாட்டுகளுக்கான விளக்க அறிக்கையையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கிறார். மறுநாள் 22 டிசம்பர் 2018 அன்று, அந்த பெண்ணை பணி நீக்கம் செய்ததற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அந்த பெண்ணின் கணவரும், அவர் சகோதரரும் டெல்லி காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். 29 டிசம்பர் 2018 அன்று அவர்கள் இருவருமே பணி இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். அதே நாளன்று, விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட, அந்த பெண்ணின் கணவர், தலைமை நீதிபதியின் செயலரை தொடர்பு கொள்கிறார். அவர் பேச மறுக்கிறார்.
9 ஜனவரி 2019 அன்று, அந்த பெண்ணின் கணவர், சட்ட விரோதமான சூதாடிகளுக்கு உதவியதாக அவர் மீது துறை நடவடிக்கை எடுக்கப்படுக்கிறது. அவர் கணவர் மற்றும் அவர் சகோதரர் மீது, 2012ல் ஒரு புகார் இருந்ததாகவும், அதன் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் அறிவிக்கை அளிக்கபடுகிறது. 2012 புகார், 12 ஜனவரி 2017ல், மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மறுநாள், 10 ஜனவரி 2019 அன்று, திலக் மார்க் காவல் நிலைய ஆய்வாளர் அந்த பெண்ணின் கணவரை அழைத்து, தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டால், அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்று கூறுகிறார். எதற்கு மன்னிப்பு என்று கேட்டதற்கு, அதெல்லாம் எனக்கு தெரியாது என்று கூறுகிறார்.
மறுநாள், அப்பெண்ணும், அவர் கணவரும் அழைக்கப்படுகிறார்கள். இருவரையும், திலக் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சன் கோகோய் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கே உச்சநீதிமன்ற பதிவாளர் தீபக் ஜெயின் இருக்கிறார். அந்த வரவேற்பறையில் கோகோயின் மனைவி இருக்கிறார். அந்த பெண் ஊழியரை கண்ட கோகோயின் மனைவி, தரையில் அவர் மூக்கை தேய்க்குமாறு கூறுகிறார். அந்த நீதிமன்ற பெண், கோகோயின் மனைவி காலில் தன் மூக்கு படுமாறு விழுந்து வணங்குகிறார்.
மீண்டும் அனைவரும் திலக் மார்க் காவல் நிலையத்துக்கு திரும்புகிறார்கள். அங்கே அந்த காவல் நிலைய ஆய்வாளர் சோலங்கி, என்னதான் நடந்தது என்று அந்த பெண்ணிடம் விசாரிக்கிறார். அந்த பெண், நடந்தவை முழுவதையும் கூறுகிறார். இந்த உரையாடல் முழுவதையும் அந்த பெண் ரகசியமாக பதிவு செய்கிறார். ஆய்வாளர், பதிவாளரிடம் பேசி, நல்ல தீர்வை பெற்றுத் தருவதாக கூறுகிறார்.
தொல்லை இதோடு நிற்கவில்லை. தலைமை நீதிபதி கோகோயின் பரிந்துரையின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் பணி நியமனம் பெற்ற அந்த பெண்ணின் மைத்துனர் எவ்வித காரணமும் இன்றி 14 ஜனவரி 2019 அன்று பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
மார்ச் மாதத்தில், திலக் மார்க் காவல் நிலைய ஆய்வாளர் சோலங்கி மாற்றப்பட்டு, அவர் இடத்துக்கு தேவெந்திர குமார் என்பவர் வருகிறார். 8 மார்ச் அன்று, அந்த பெண்ணும்,. அவர் கணவரும், ராஜஸ்தானில் உள்ள அவர்கள் சொந்த கிராமத்தில் இருக்கின்றனர். அன்று இரவு அங்கே வந்த டெல்லி காவல் துறையினர், அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். என்ன புகார் என்றால், ஹரியானாவை சேர்ந்த நவீன்குமார் என்பவருக்கு உச்சநீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 50 ஆயிரம் பணம் பெற்று அந்த பெண் ஏமாற்றி விட்டார் என்பதுதான் அந்த புகார். இருவரையும் அழைத்துக் கொண்டு டெல்லி காவல் துறை திலக் மார்க் காவல் நிலையத்துக்கு வருகிறது. அந்த பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லை என்றதும், அவர் கணவர் கோரிக்கையை ஏற்று, அந்த பெண் மட்டும் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.
விடியற்காலை 2 மணிக்கு, அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற திலக் நகர் காவல் துறையினர், அந்த பெண்ணையும், அவர் உறவினர் பெண்ணையும், ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்கின்றனர். அந்த பெண்ணின் கணவர் கை விலங்கிட்டு அமர வைக்கப்பட்டிருந்தார். அந்த பெண்ணும், கால் விலங்கிடப்பட்டு அமர வைக்கப்படுகிறார். மறுநாள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அந்த பெண், திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

டெல்லி காவல்துறையில் பணியாற்றும் அந்த பெண்ணின் கணவர், கைவிலங்கிட்டு காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார்
மூன்று நாட்கள் கழித்து அவருக்கு ஜாமீன் கிடைக்கிறது.
ஏப்ரல் மாதம், இந்த வழக்கின் விசாரணை, டெல்லி குற்றப் பிரிவுக்கு மாற்றப் படுகிறது. மாற்றப்பட்ட உடனேயே, அந்த வழக்கின் புலனாய்வு அதிகாரி முகேஷ் அண்டில் என்பவர், அந்த பெண்ணின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார்.
24 ஏப்ரல் 2019 அன்று விசாரணைக்கு வந்த ஜாமீன் ரத்து வழக்கு, அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள் ஒரு பிரமாண வாக்குமூலமாக உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, ஆங்கில இணைய இதழ்களில் கட்டுரைகள் வெளியாகின.
இவை உண்மையானவையா என்பது முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே தெரியும். ஆனால் இதன் மீது விசாரணை நடத்த விடாமல் தடுப்பதற்கான வேலைகளை, இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமை நீதிபதி கோகோய் ஈடுபட்டுள்ளார் என்பதுதான் வேதனையான உண்மை.
இது போல ஒரு புகார் வந்ததும் ஒரு நல்ல நீதிபதி என்ன செய்திருப்பார் என்றால், பாலியல் புகார்களை விசாரிப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள ஒரு கமிட்டியிடம் இந்த புகார்களை அனுப்பியிருப்பார். ஆனால் கோகோயோ, ஒரு விடுமுறை நாளில், அவரே மேலும் இரண்டு நீதிபதிகளை தேர்ந்தெடுத்து, சிறப்பு விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணையில், “என்னிடம் நேர்மையை தவிர வேறு எதுவுமே இல்லை. என் வங்கி கணக்கில் வெறும் 6.80 லட்சம் மட்டுமே உள்ளது” என்று கூறினார். அதோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை. “புகார் கூறிய பெண் மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படிப்பட்ட பெண் புகார் கூறலாமா “ என்றும் கூறினார்.
இந்தியாவில், எந்த பதவியிலாவது இருக்கும் ஒரு அதிகாரிக்கோ, அமைச்சருக்கோ, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை தானே விசாரிக்கும் அதிகாரம் கிடைக்குமா ? இது எத்தகைய மோசமான நீதிப் பிறழ்வு என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
Ranjan Gogoi was one of the four judges who gave press conference against government interference . Every one believed all four judges as the events were happening like that at that time but after appointed as CJI he started siding with government , Former Justice Katju raised serious allegations against Gogoi stating Gogoi’s Sambandhi former Delhi HC Judge Valmiki was caught in bribery and to free him from the case Gogoi started siding with government . And also after Gogoi has over ridden the previous Collegium’s decision wrt appointment of SC Judges , earlier collegium in which Justice Chalameshwar was part of has recommended a senior most Delhi HC Judge but Gogoi has over ridden that and after Chalameswar and K Joseph’s retirement and appointed a junior judge from Delhi HC . Even if we ignore all this and the complaints by this woman , Gogoi should not be part of the bench which assembled on Holiday in which he is the main accused by that lady . As per Natural Justice “no-one should be a judge in his own case ” .
‘Your Lordship is a blessing to me; words cannot describe how thankful I am; I will always be grateful for all that Your Lordship is doing for me; my entire family is grateful; I am grateful for your support.”
“என் தேவன் என்னை ஆசிர்வதித்துள்ளீர்கள். என் நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் தேவனாகிய நீங்கள் எனக்காக செய்த உதவிகளுக்கு என் குடும்பமே நன்றிக் கடன் பட்டுள்ளது”
-மிகவும் தவறான மொழியாக்கம் இது என்று கருதுகிறேன். வழக்குரைஞர்கள் நீதிபதிகளை ‘லார்ட்ஷிப்’, ‘மை லார்ட்’ என்றெல்லாம் அழைப்பது ஒரு சம்பிரதாயம்தான். இதனை வெறுக்கும் பல நீதிபதிகளை நீதித்துறை கண்டிருக்கிறது. சார் என்றே அழைக்கப்படும் ஒரு அதிகாரி, எல்லா இடங்களிலும் அவ்வாறேதான் அழைக்கப்படுவார். அதே பாணியில்தான் அந்தப்பெண்ணிக் கடிதமும் பார்க்கப்படவேண்டும். ” என் தேவனே, என்னை ஆசீர்வதித்துள்ளீர்கள்” என்று அக்கடிதத்தில் இல்லை. “அய்யா, நீங்கள் எனக்கு ஒரு பெரும் பேறு..நான் எவ்வளவு நன்றியுடைத்தவள் என்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. எனக்கு செய்த உதவிக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன். எங்கள் குடும்பமே நன்றிக்கடன் பட்டிருக்கிறது”. -என்றுதான் இருக்கிறது.
அப்பெண்ணின் சொற்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது என்ற கவலையில் இதனை எழுதுகிறேன்.
😳
// நம்பிக்கை ஒளி – அடுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உரை.// BY SAVUKKU · 27/09/2018 … அந்த நம்ம்பிக்கை ஒளி இன்று …? போகப்போக தெரியுமோ …?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. சுதந்திரமான விசாரணை தேவை. அதுவும் எந்த காலதாமதம் இன்றி….
இது அந்த பெண் கெடுத்த புகார் மனு அடிப்படையில் தான் எழத பட்டதா இல்லை உங்களுடைய புழன் விசாரணை யா….?
இந்த நாதரிபய மோடிக்கு எதிரா கூட்டம் போட்டானு நீதாண்டா வானத்துக்கும்
பூமிக்கும் குதிச்சே
ஆமா இவங்களுக்கு ஒரு அல்லேலுயா மாமா ஒருத்தான் இருப்பானே டி ராஜா
அவனையும் உள்ள தள்ளி விசாரிக்கணும்
இது மிகவும் நாகரீகமாக பதிவு இதுதான் இப்பொழுது நாகரிகம்….
முன்னாள் தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து சவுக்கு நியாயமான கேள்விகளையே எழுப்பியிருந்தது. அதுவும் சரியே. அதேபோல குற்றம் சாட்டிய தருண் கோகய் உள்ளிட்டவர்கள் விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் சவுக்கு சொல்லவில்லையே. இந்த வழக்கும் விசாரிக்கப்பட வேண்டும். சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்க வேண்டும். தீபக் மிஸ்ராவாக இருந்தாலும் சரி, தருண் கோகய் ஆக இருந்தாலும் சரி. அதில் அல்லேலூயாவுக்கு என்ன வேலை? (அந்த பின்னூட்டமும் அநாமதேய நபர் என்ற அடையாளத்துடன் பதிகிறீர்களே…அதற்கான தேவை என்ன? உண்மையான பெயருடன் ஆரோக்கியமான விவாதங்களில் கலந்துகொள்ளுங்கள். அறிவுடைய சமூகம் எப்போதும் அதற்குத் தயாராகத்தானே இருக்கிறது!