சவுக்கு தளம் தொடங்கியது முதல் எத்தனையோ ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் சிலவற்றில் விசாரணை நடைபெற்றுள்ளது. சிலவற்றில் நீதிமன்ற விசாரணையின் மூலம் புலனாய்வு தொடங்கப்பட்டுள்ளது. அப்படி அம்பலப்படுத்தப்பட்ட விசாரணையில் ஒன்றுதான் விஜிஎன் கட்டுமான நிறுவனத்தின் ஊழல். ஊழலே உன் விலை என்ன ?
இக்கட்டுரை, எழுதப்பட்ட நாள், 17 நவம்பர் 2014. அதன் பின் இந்த ஊழல் தொடர்பான ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகள் வசம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்த விசாரணையும் தொடரவில்லை.
விஜிஎன் நிறுவனம், கிண்டியில் உள்ள அதன் VGN FAIRMONT என்ற கட்டுமானம் தவிர்த்து, அதன் இதர கட்டுமானங்களுக்காக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு அளித்த லஞ்சப் பட்டியல் அடங்கிய கோப்பு ஒன்று விஜிஎன் அலுவலகத்தில் இருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து 28 டிசம்பர் 2016 அன்று இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வழக்கமாக சிபிஐ வழக்கு பதிவு செய்தால் உடனடியாக சோதனைகள் நடைபெறும். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த சோதனைகளும் நடத்தப்படவில்லை. இந்த வழக்கின் புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சென்னை சிபிஐ இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் இதில் சம்பந்த்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும், இவ்வழக்கு தொடர்பாக ஒருவரை கூட கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார் என்ற தகவல் அறிந்து அந்த லஞ்சப் பட்டியல் முழுமையாக சவுக்கு தளத்தில், சிபிஐ எனும் சிறகொடிந்த கிளி என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிடப்பட்டது.
அதன் பிறகும் நாகேஸ்வர ராவ், இவ்வழக்கின் புலனாய்வை ஒழுங்காக நடத்த விடாமல் தொடர்ந்து தடை செய்து வந்த காரணத்தால், நாகேஸ்வர ராவ் மீது ஒரு புகார் சிபிஐ இயக்குநருக்கு அனுப்பப்பட்டத்து. இந்த புகார் அனுப்பப்பட்ட பின்னர், வழக்கை நாகேஸ்வர ராவ் கட்டுப்பாட்டில் இருந்து பெங்களூரு பிரிவு சிபிஐக்கு மாற்றி அப்போதைய சிபிஐ இயக்குநர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, விஜிஎன் நிறுவனத்தின் 115 கோடி மதிப்பிலான கிண்டி சொத்தை அட்டாச் செய்து இணைப்பு உத்தரவை வெளியிட்டது.
இதை தொடர்ந்து, இது வரை சிபிஐ இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றத் தவறிய 500 பக்கங்களுக்கும் அதிகமான ஆவணங்கள் பெங்களூரு சிபிஐ பிரிவு அதிகாரி ஒருவரிடம் அளிக்கப்பட்டது. இந்த கட்டத்தில், நாகேஸ்வர ராவ், கூடுதல் இயக்குநராக பதவி உயர்த்தப்பட்டு டெல்லிக்கு மாற்றப் படுகிறார். பெங்களூரு சிபிஐ பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களில் முக்கியமான ஒரு ஆவணம், தமிழக நிதித் துறையின் கோப்பு ஒன்று. அந்த கோப்பில், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை, விஜிஎன் தமிழக அரசிடமிருந்து வாங்கிய நிலத்தின் விலையில் சந்தை மதிப்பில் 10 சதவிகிதத்தை விஜிஎன் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை முடிவுகள் தயார் செய்யப்படுகையில், சந்தை மதிப்பில் 10 சதவிகிதத்துக்கு பதிலாக, ஸ்டேட் பாங்குக்கு கொடுக்க வேண்டிய கடன் போக, மீதம் உள்ள தொகையில் 10 சதவிகிதம் கொடுத்தால் போதும் என்று மாற்றப்பட்டது தொடர்பானது.
இது மிக முக்கியமான ரகசிய ஆவணம். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை எடுத்த முடிவை மாற்றுவது என்பது மிக மிக மோசமான குற்றம். இவ்வாறு மாற்றப்பட்டதால் மட்டும் தமிழக அரசுக்கு விஜிஎன் செலுத்த வேண்டிய 38 கோடி செலுத்தாமல் தவிர்க்கப்பட்டது. யார் இந்த திருத்தங்களை செய்தது என்று விசாரணை நடத்தியிருக்க வேண்டிய பணி சிபிஐ உடையது.
இவ்வாறான மாற்றத்தை செய்ததில், தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் ராம் மோகன ராவ், நிரஞ்சன் மார்டி, மற்றும் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோருக்கு தொடர்பு இருந்த விபரமும், பெங்களூரு சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
பெங்களூரு சிபிஐயில் அப்போது பணியாற்றிய தன்ரியால் என்ற அதிகாரியிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எஸ்பிஐ அதிகாரிகள் லியோன் தெராட்டில் மற்றும், ராமதாஸ் ஆகியோருக்கு, விஜிஎன் நிறுவனம் சார்பில், எஸ்பிஐ வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற கணேஷ் ராஜ் என்பவர் மூலம் 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டது என்ற விபரமும், விசாரணை அதிகாரி தன்ரியாலிடம் தெரிவிக்கப்பட்டது. தன்ரியால், வங்கி ஆவணங்களை பரிசீலித்து விட்டு, 2 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்ட விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
இதற்குள், நாகேஸ்வர ராவ், நள்ளிரவில் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்கிறார். தன்ரியால், பெங்களுரு சிபிஐ பிரிவில் இருந்து மாற்றப் படுகிறார்.
உச்ச நீதிமன்றம், நாகேஸ்வர ராவை இயக்குநர் பதவியிலிருந்து மாற்றினாலும், அவர் இன்னும் சிபிஐயில் கூடுதல் இயக்குநராக தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், இரு நாட்களுக்கு முன்னர் இவ்வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை மூடும் இறுதி அறிக்கையை சிபிஐ சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கடந்த வருடம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர் சம்பந்திக்கு எப்படியெல்லாம் நெடுஞ்சாலை ஒப்பந்த்தங்களை வழங்கினார், அது எப்படி சட்டவிரோதம், எப்படி தண்டனைக்குறிய குற்றம் என்று ஆதாரங்களை திரட்டி, திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி லஞ்ச ஒழிப்புத் துறையில் இணை இயக்குநராக உள்ள முருகன், தன்னை எடப்பாடி விசாரணையில் இருந்து காப்பாற்றினார் என்ற காரணத்துக்காகவும், அரசுக்கு விசுவாசமாகவும், எடப்பாடி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என்று அறிக்கை அளித்தார்.
திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று ஒரு வழக்கு தொடுத்தது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கின் ஆவணங்களை முழுமையாக பரிசீலித்து, ஒரு விரிவான தீர்ப்பின் மூலம், எடப்பாடி பழனிச்சாமி மீதான விசாரணையை சிபிஐ விசாரிக்கும் என்று தீர்ப்பு வழங்கினார்.
லஞ்ச ஒழிப்புத் துறையும், எடப்பாடி பழனிச்சாமியும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றனர். வழக்கு, தற்போது தன்னை நேர்மையின் சிகரம் என்று அழைத்துக் கொள்ளும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை 2 நிமிடம் நடந்தது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் திமுக சார்பில் ஆஜரானார். திமுக சார்பில்தானே வழக்கு தொடர்கிறீர்கள் ? சிபிஐ விசாரணைக்கு தடை என்று வழக்கு கட்டை தூக்கிப் போட்டார் ரஞ்சன் கோகோய்.
வழக்கு என்ன, எந்த வகையில் ஊழல் செய்யப்பட்டுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம் ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது என்று ஒரு வாதத்தையும் கேட்க ரஞ்சன் கோகோய் தயாராக இல்லை. சிபிஐ விசாரணைக்கு காலவரையின்றி தடை விதித்தார். அந்த வழக்கு என்றைக்கு விசாரணைக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது. மறைமுகமாக, எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கொள்ளையடிக்க ரஞ்சன் கோகோய் உதவி உள்ளார்.
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கோடிக் கணக்கில் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து சவுக்கில் விரிவான கட்டுரை வெளிவந்தது.
உத்தமர் பன்னீரின் ஊழல் சாம்ராஜ்யம் இது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரும் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. பன்னீர்செல்வம், தன் மகன் வெற்றிக்காக தேனி தொகுதியில் 120 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார். மேலும், கோடிக் கணக்கில் தினந்தோறும் கொள்ளையடித்து வருகிறார்.
ஒரு தனி நபராக, ஒரு ஊழலை வெளிக் கொணர்வதே எளிதான காரியம் அல்ல. அதுவும், பல நூறு கோடி சம்பந்தப்பட்ட, பல உயர் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஒரு ஊழலை வெளிக் கொணர்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. இப்படி செய்வதால், ஒருவர் ஏராளமான எதிரிகளை மட்டுமே சந்திக்க வேண்டி இருக்கும். இதனால் வேறு எந்த பயனும் விளையப் போவதில்லை. அப்படி எதிரிகளையெல்லாம் சந்தித்து தொடர்ந்து ஊழல்களை வெளியிடுவதன் காரணம், எப்படியாவது முறையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்களா நம்பிக்கையே.
இந்நாட்டில் ஊழலை எதிர்த்து போராடுவதும், குரல் கொடுப்பதும், புகாரளிப்பதும் விழலுக்கு இறைத்த நீரே. ஊழல் வாதிகளை எதிர்ப்பதில் எந்த பயனும் இல்லை. எங்கே எதை கொடுத்து, யாரை சரிக்கட்ட வேண்டும் என்பதை ஊழல்வாதிகள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர்.
பணபலமும் அதிகாரமும் பொருந்தியவர்கள் மீது எந்த விசாரணையும் நடத்தப்படாமல் அவர்களை, இந்த புலனாய்வு நிறுவனங்களும், நீதிமன்றங்களும் தொடர்ந்து காப்பாற்றும் என்றால் எதற்காக, சமூக ஆர்வலர்கள், ஊழல் பேர்வழிகளை எதிர்க்க வேண்டும் ? எதற்காக பலம் வாய்ந்த எதிரிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் ?
இந்த ஊழல்களைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இருந்தால் குறைந்தது மன உளைச்சலாவது மிஞ்சும்.
பேய்கள் அரசாண்டால், சாத்திரங்கள் பிணங்களைத்தானே திண்ணும் !
சங்கர், உங்கள் போராட்ட குணம், துணிவு, எழுத்தாற்றல் போன்றவை மிகுந்து காணப்படுகிறது. உங்களைப் போன்ற ஒரு தனி மனிதர் ஊழலுக்கு எதிராக போராடி உங்கள் அன்றாட வேலைகளுக்கு இடையே இதுபோன்ற செயல்களில் கவனத்தையும் நேரத்தையும் செலவிடுவது பெரிய பயனளிக்காது. இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
எங்க சார் ஆள கானேம் இன்னைக்கு தேதி 22 ஆகுது எந்த தகவலும் இல்லை
And now VGN started giving advertisement for the Guindy Property . Who knows like Aadarsh Scandal even all the fraudsters will get an apartment each apart from the bribe they got for this case ? Like you said Ignorance is Bliss sometimes ,
ஊழலுக்கு எதிரான போர் ,,,,,! சிரிப்புதான் வருகிறது வேதனையுடன் — ஊழல் செய்தவர்கள் என்று ரைடுகள் நடக்கும் — அமலாக்கத்துறை வரிந்துகட்டும் — சிபிஐ வேகமாக — விரிவான விசாரணை என்று மும்முரம் காட்டும் — தனி நீதிமன்றம் – அது -இது என்று பல ஆண்டுகளுக்கு மக்கள் பணம் வீணாகும் … இறுதியில் சிபிஐ தனி நீதிமன்றம் ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை ஊத்திமூடும் — ஊழல் — லஞ்சம் வாங்கி கொழுத்த ” பெருச்சாளி ” மீண்டும் பதவிக்கு வந்து நமக்கு பெப்பே காட்டும் …!!! ஊழல் பற்றி பேச இங்குள்ள ஒரு அரசியல்வாதி — அலுவலர்கள் — கட்சிகள் என்று எவனுக்காவது யோக்கியதை இருக்கா ..? இவன் – அவனை சொன்னால் … அவன் – இவனை சொல்லி திருப்பியடித்து சந்தி சிரிக்கும்படி இவனுங்களின் வண்டவாளத்தை பறைசாற்றி கொண்டு திரிவனுங்க — இது தான் ஊழல் நாட்டின் எதார்த்தமோ …?
சங்கர்
தவறுகளை வெளியுலகில் அறியச் செய்வதற்கு, உங்கள் சாதுர்யம், திறமை மற்றும் தொடர்புகள் என அனைத்தையும் செய்து,
கடைசியில் என்ன மிச்சம் என்று பார்த்தால், பெரிய சூன்யமே மிஞ்சும்.
அதிகார வர்க்கம், சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் எல்லாம் எளியவர்களை தண்டித்து, வளியவர்களுக்கு விளக்குப்பிடிக்கும் என்று பச்சையாகக் கூடச் சொல்லலாம்,நாகரீகம் கருதி, வளியவர்களுக்கு வளைந்து கொடுக்குமென்று கூறி.
இதற்குண்டான தீர்வு தான் என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்..
நன்றி
பேயாலும் ஊரில் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
Savukku,
In our nation all departments are corrupted from the Peon to Director level. But God is spreading the bold and courageous people some where. When they are come to the power they will take some actions definitely. For that we have to share this to all and wait upto for that.
Nallavanga ellaarum kannai moodikkitta appa yaaru thaan kutravaalinkalukku nee panrathu thappunu suttik kaatturathu???