இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலை அடித்தாலும் தமிழ்நாட்டில் ஒரு துளி ஈரம் கூட இல்லை. பாஜக தமிழ்நாட்டில் ஒரு சக்தியே கிடையாது, தனித்து போட்டியிடுமேயானால் நிச்சயம் நோட்டாவுக்கு கீழ் தான். ஆனால் இந்த முறை சாதிய சமன்பாட்டின் படியும், வாக்கு சதவிதத்தின் படியும் ஒரு வலுவான கூட்டணி தான் அமைத்திருந்தது. அப்படி இருந்தும் இந்த கூட்டணியை வீழ்த்தியதற்கு என்ன காரணம்? முதலில் வெற்றி தோல்விக்கு இடையிலான வாக்கு வித்தியாசத்தை பார்ப்போம்
1 லட்சத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 3 (சிதம்பரம், தருமபுரி, திருப்பூர்)
1 – 2 லட்சத்திற்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 11 (கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, மதுரை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் , சேலம் , தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர்)
2 – 3 லட்சத்திற்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 9 (ஆரணி , சென்னை கிழக்கு , ஈரோடு , காஞ்சிபுரம் ,கன்னியாகுமரி ,மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் ,நாமக்கல் ,நீலகிரி )
3 – 4 லட்சத்திற்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 8 (அரக்கோணம் , மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், வல்லூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை )
4-5 லட்சத்திற்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 4 (சென்னை வடக்கு, கரூர், பெரம்பூர், திருச்சிராப்பள்ளி)
5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 2 (திண்டுக்கல், ஸ்ரீபெரம்பூதூர் )
10 தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்கு முதல் 5 லட்சம் வாக்கு வித்தியாசம் வரை வென்றுள்ளனர். இதில் திமுகவின் கூட்டணி கட்சிகளும் அதிமுகவும் நேரடியாக போட்டியிட்ட தொகுதி 8, சிதம்பரம் தொகுதியை தவிர அனைத்து இடங்களிலும் பெருவாரியான வாக்கு சதவிகிதத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் எனக்கு ஆச்சரியம் ஊட்டுவது கொங்கு பெல்ட் என்று அறியப்படும் திருப்பூர், கோவை, கரூர் தொகுதிகள். கவுண்டர் சமுதாயம் அதிகமாக இருக்கும் இந்த பகுதிகள் அதிமுகவின் கோட்டையாக அறியப்படும், பத்தாத குறைக்கு முதல்வர் அந்த சமுகத்தை சேர்ந்தவர்.
கோவை அதிமுக வாக்கு வங்கி மட்டும் அல்ல 98ல் நடந்த குண்டுவெடிப்பிற்க்கு பின் ஹிந்து முன்னணி அசுர வளர்ச்சி பெற்ற தொகுதி, பாஜகவின் வாக்கு வங்கி அதிகம். அங்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நடராஜன் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சிபி.ராதாகிருஷ்ணனை தோற்கடித்து இருக்கிறார்.
திருப்பூர் தொகுதி அமைச்சர் செங்கோட்டையனின் இரும்புக் கோட்டை அங்கே சுப்புராயன் 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
கரூர் தொகுதி பணம், பதவி, அந்தஸ்து என்று வலிமையான நிலையில் உள்ள தம்பிதுரையை, காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து வந்த ஜோதிமணி 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.
இந்த புள்ளி விபரத்தில் இருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் கூட்டணி அமைப்பதில் மட்டும் அல்ல வெற்றி, கூட்டணி கட்சிகளின் வாக்கு சிதறாமல் கைமாறினால் மட்டுமே வெற்றி. கூட்டணி கட்சிக்காக மற்ற கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை போராடி இருக்கிறான் என்பது அப்பட்மாக தெரிகிறது.
கருணாநிதி இல்லாமல் திமுக சந்திக்கும் முதல் தேர்தல் இது, ஸ்டாலின் மீது எதிர்மறை விமர்சனம் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது. எதிர்க்கட்சியாக இருந்து வெளிநடப்பை தவிர ஒன்றும் செய்யவில்லை என்றும், மேடை பேச்சில் அவர் செய்த பிழைகளை மீம் ஆக்கி கேலி செய்வது, கட்சியில் எவனாவது தகராறு செய்தால் அதை செய்தியாக்கி திமுகவை தவறான லைம் லைட்டில் வைத்துக்கொண்டே இருந்தது. இத்தனையும் தாண்டி இந்த முறை திமுக அடைந்த வெற்றி ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்பதை சொல்ல எந்த தயக்கமும் இல்லை.
கூட்டணிக்கு அதிக இடங்களை ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார் என்ற விமர்சனம் கட்சிக்குள் இருந்தாலும் திமுகவின் வாக்குகள் அப்படியே கூட்டணிக் கட்சிக்கு சென்று இருக்கிறது. இல்லையென்றால் நேருவின் கோட்டை திருச்சியில் “வாக்குகளை போட சொன்னால் அள்ளி கொட்டியதற்கு நன்றி” என்று திருநாவுக்கரசு சொல்வாரா? இந்த வெற்றி ஒவ்வொரு கூட்டணி கட்சி தொண்டனுக்கும் உரித்தான வெற்றி.
சென்ற முறை திமுகவின் வெற்றியை தட்டிப் பறித்ததில் மக்கள் நல கூட்டணி ஒரு காரணியாக இருந்தது. இந்த தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மையம் அந்த வேலையை செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நடந்தது என்னவோ திமுகவிற்கு சென்ற வாக்குகளை கமல் பிரிக்கவில்லை. மாறாக அதிமுக வாக்குகளை பிரித்திருக்கிறார். இரண்டு கட்சிகளையும் பிடிக்காத, நோட்டாவிற்கு போட விரும்பாத வாக்காளர்களுக்கு இந்த தேர்தலில் இரண்டே மாற்று தான் ஒன்று மையம் மற்றொன்று நாம் தமிழர்.
நாம் தமிழர் கட்சியின் தத்துவத்தில் தீவிர உடன்பாடு இருந்தாலொழிய மாற்று அரசியல் தேடும் ஒருவரால் அந்த கட்சிக்கு ஓட்டு போட முடியாது. இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம், அரசியலே எனக்கு பிடிக்காது. ஆனால் ஓட்டு போடுவேன் என்று இருக்கும் வாக்காளர்கள் மக்கள் நீதி மையத. திற்கு வாக்கு அளித்ததாக கருதுகிறேன் குறிப்பாக பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர்.
சீமானின் வசீகரிக்கத்தக்க பேச்சு நிச்சயம் முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்களை பெருவாரியாக ஈர்த்திருப்பது அவர் பல இடங்களில் 3ஆவது இடத்தில் இருப்பதிலிருந்து தெரிகிறது. சீமான் ஒரு சிறந்த கதை சொல்லி. டைரக்டர் சங்கர் படம் போல பிரமாண்டமாக, நம்பிக்கை விதைப்பதை போல இருக்கும். ஆனால் எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல், நடைமுறை சாத்தியமற்று இருக்கும். இதை அவரின் அபிமானிகள் உணர்வதுக்கு 2-3 வருடங்கள் ஆகும். உணர்ந்தவுடன் அவர்கள் மாற்றுப்பாதையில் செல்ல தொடங்குவார்கள். அதற்குள் புது ஆட்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டு அந்த வெற்றிடத்தை நிரப்புவார்கள். ஏறக்குறைய சீமானின் வாக்கு வங்கி இதே அளவு தான் இருக்கும்.
என்ன தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், தேசிய கட்சிகளினால் மாநிலத்துக்கு ஏற்படும் கேடுகளை கணிசமான இளைஞர்கள் மனதில் கொண்டு சென்றதற்கு சீமானை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இந்த தேர்தலில் மிகவும் ஏமாற்றம் அளித்தது TTV தினகரனின் படு தோல்வி. RK Nagar வெற்றிக்கு பின் அதிமுகவை எப்படியும் கைப்பற்றி விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. பொது தேர்தலில் இல்லாவிட்டாலும், இடைத்தேர்தலில் ஓரிரு இடங்களில் வென்று மற்ற இடங்களில் அதிமுக வாக்குகளை பெருமளவு பிரிப்பார் என்ற எண்ணம் இருந்தது. தாக்கம் இருந்ததே ஒழிய அது ஆட்சி மாற்றம் நடக்குமளவுக்கானதாக இல்லை. இன்னும் இரண்டு வருடங்களில் அவரோடு இருக்கும் கட்சியினர் அதிமுகவிற்கோ, திமுகவிற்கோ செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தமிழ்நாட்டில் பாஜகவின் வீழ்ச்சிக்கு இது மட்டும் அல்ல காரணம். தமிழ்நாடு முன்னெடுக்கும் மாநில உரிமைக்கான குரலும், தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களும், பிரச்சாரங்களும் தான். மோடி என்ற பிம்பத்தை உடைப்பது அவ்வளவு எளிதல்ல. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பாஜகவை அம்பலப்படுத்தும் எண்ணற்ற தனி நபர்களும் , பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை மக்கள் இடம் எடுத்து சென்ற மே 17 போன்ற அரசியல் சாரா அமைப்புகளின் பங்கும் மிக அதிகம்.
நடந்து முடிந்த தேர்தல் நிலை வேண்டுமானால் இப்படி இருக்கலாம், இனி வரும் தேர்தலில் பாஜக இன்னும் வீரியமாக செயல்படும். எந்த ஒரு மாநிலத்தில் வெற்றிடம் இருக்கிறதோ அங்கே பாஜக எளிதில் நுழைந்துவிடும். மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் வீழ்ச்சி பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வலுவாக இருப்பதால் பாஜக காலூன்ற முடியவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக அழிவை சந்தித்தால் இன்னும் 2 தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுக்கலாம்.
தமிழ்நாட்டின் நலனுக்காகவாவது அதிமுக வலுவடைய வேண்டும் அப்படி இல்லையென்றால் மாற்று கட்சி உருவெடுக்க வேண்டும். அது வெறுப்பரசியல் பேசும் நாம் தமிழர் கட்சியாக இல்லாமல் இருக்க வேண்டும். ஒரே ஆறுதலான விஷயம் மாநில பிரச்சனைகளை தேசிய பிரச்சனையாக எடுத்து செல்ல தமிழகத்தில் பாஜக தலைவர்கள் யாரும் லாயக்கற்று இருப்பதும், மக்களின் தொடர்புக்கு எட்டா உயரத்தில் இருந்து கொண்டு “ஒரு நாட்டுக்காக இந்த மாநிலத்தை தியாகம் செய்வது தப்பு இல்லை ” என்ற திமிர் பேச்சுமே காரணம்.
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த ஒரு வலுவான தேசிய தலைவர் வேண்டும். அல்லது பல வலுவான மாநில காட்சிகள் உருவாவது அவசியம். இதற்கான சாத்தியக்கூறுகள் இப்பொழுது இருப்பதாக தெரியவில்லை இன்னும் 5 ஆண்டுகள் இருக்கிறது. காங்கிரஸ் தங்களின் வீழ்ச்சியை சுயபரிசோதனை செய்துகொண்டு மீண்டு வர வாய்ப்பு இருக்கிறது.
2011 ஆம் ஆண்டு அடுத்த தலைமுறை காங்கிரஸ் தலைவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது. அதில் தெரிவுசெய்யப்பட்டவர் தான் கேரளாவை சேர்ந்த ரெம்யா. விவசாய தினக்கூலியாக வேலை செய்யும் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர், மெல்ல மெல்ல சிறிய பதவிகள் கொடுத்து அவரை மெருகேற்றி இன்று 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை தோற்கடித்து இருக்கிறார். மக்களோடு மக்களாக களமாடும் 300 ரம்யாகளும், ஜோதிமணிகளும் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளில் வெற்றி வாய்ப்பாளர்களாக உருவாக்க வேண்டும். காங்கிரஸ் முதல்வர்கள், காரிய கமிட்டி உறுப்பினர்கள் , மூத்த தலைவர்களின் மகன்களுக்கு வாய்பளிக்காமல் அடையாளம் காணப்பட்ட 300 வேட்பாளர்களுடன் இணைத்து பயணித்து அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்.
மம்தா, மாயாவதி பிரதமர் தங்களின் அகந்தையை விட்டொழித்து நாட்டு நன்மைக்காவது ஒரு திசையில் பயணிக்க வேண்டும். நம்பிக்கையோடு காத்திருப்போம்.
சென்னை கிழக்கா ?
சங்கர் அண்ணனின் கட்டுரைகளை படித்து அதனால் உண்டான அறிவால் இக்கட்டுரை யை ஆராய்ந்தால் சில கருத்துக்களை என்னால் ஏற்க முடியவில்லை.
குறிப்பாக ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்பது மக்கள் அவருக்கு கொடுக்க நினைத்தது கிடையாது மாறாக அதிமுக லும்பன்களின் ஆட்சியையும் அவர்களின் திமிர் பிடித்த பேச்சையும் மற்றும் மோடி என்ற அய்யோக்கியனின் காலை நக்கும் போக்கையும் பார்த்து வெறுத்து அதிமுக வுக்கு கொடுக்க நினைத்த சம்மட்டி அடிதானே தவிர ஸ்டாலின் மீதான பாசம் இல்லை..
எழுதனது யாருன்னு பாருங்கப்பா ☺
அட ஆமா… சங்கர் அண்ணன் இல்லை வேறு ஒருவர் எழுதியிருக்கிறார்.. நன்றி நண்பரே.. ஆனால் என் கருத்தில் ஒன்றுபடுகிறீர்கள்தானே..?
கிழ குண்டன் மோடி வாயால் குசு விடத்தான் லாயக்கு
savukku enbathu oru DMK pathirikkai, DMK ethira yaar yaar irukkirargalo, avargalai pattri mattum thaan vimarsippargal………….
அ.தி.மு.க. மீண்டெழ வாய்ப்பேயில்லை. பா.ஜ.க.வின் பிடியை உதற எடப்பாடியோ… ஓ.பி.எஸ்.ஸோ முயற்சி செய்தால் அவர்களை வழக்கின் பிடிக்குள் கொண்டுவரும். வழக்கை எதிர்கொண்டாலும் பரவாயில்லை என அ.தி.மு.க.வினர் ஒற்றுமையாகச் செயல்பட்டு பிடியை உதறினாலொழிய அக்கட்சிக்கு மீட்பில்லை. மாறாக, அவர்களின் பிடிக்குள் இருந்தாலோ… ஆட்சிசெய்ய லாயக்கில்லாத கட்சி என சொந்தக் கட்சிக்காரர்களே நினைக்குமளவுக்கு பா.ஜக. திரைக்கதை, இயக்கத்தை வகுக்கும். அவர்களுக்கு வேண்டியதும் அதுதான். அ.தி.மு.க. வலுவிழக்கும் இடத்தில் பா.ஜ.க. தன்னை வளர்த்தெடுக்கும்.
Mirpurkhas police on late Monday registered a blasphemy case against a veterinary doctor in Phuladiyon and took him into custody.
The doctor, who is from the Hindu community, was accused of blasphemy after a man alleged that he had provided medicines wrapped in paper that he claimed “had Quranic verses printed on them”.
The man who had received these medicines for his livestock informed a local cleric Mohammad Ishaq Nohri, who then registered a complaint with Phuladiyon police in Sindhri police station, said Mirpurkhas DIG Saqib Ismail Memon. In his statement to the police, Nohri claimed that he found damaged pages of Islamic books at the vet’s clinic.
DIG Memon said that a first investigation report was registered against the doctor under sections 295-A (deliberate and malicious acts intended to outrage religious feelings of any class by insulting its religion or religious beliefs) and 295-B (defiling, etc., of Holy Quran) of the Pakistan Penal Code.
ஆமா சவுக்கு சங்கர் தெரியாமத்தான் கேட்கிறேன். இப்ப ஏன் திமுக சொம்பா ஏன் மாறினீர்கள். திமுக காரங்களால தானே ?. உங்க வேலையும் போச்சு. அப்புறம் தானே சவுக்கையும் ஆரம்பிச்சீங்க.அப்புறம்.
சரியாக சொன்னீர்கள் பாலு கனிமொழி ராஜா தயாநிதி மாறன் இவர்கள் ஊழலில் திளைத்து பணபலத்தால் வெளியில் வந்து இன்று அதே பணபலத்தால் வெற்றி பெற்றவர்கள் , இவர்களை சவுக்கு ஆதரிக்கிறார் undefined பச்சமுத்து எனும் பாரிவேந்தர் ஜெகத்ரக்ஷகன் இவர்கள் எல்லோரும் கல்வியை ஒரு வியாபார பொருளாகி விற்று கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் எல்லோரும் திமுக undefined சவுக்கு வேலை இழந்ததும் திமுக ஆட்சி காலத்தில் தான்.
மோடி தான் எங்களுக்கு வேண்டும். திராவிட கட்சிகளே தமிழ் நாட்டுக்கு வேண்டாம். இன்று இல்லையேல் நாளை நீச்சயம் பாஜக தமிழ்நாட்டில் காலடி ஆழ பதிய வைக்கும்.
இந்த கட்டுரையில் சுட்டிக்காட்ட பட்ட தலைவர்கள் அனைவருமே
தனி மனித வழிபாட்டு விரும்பிகல் .தனிமனித வழிபாடு சர்வாதிகரத்திற்கும் அடிமைத்தனத்திற்கும்
இட்டு செல்லும் . .ஆகையால் கட்டுரை யாளர் மோடியை வெல்வதற்கு ரோகன் வதேரா
வரும்வரை காத்திருக்க்க வேண்டும்.
மோடி சரியான தலைவர் இல்லையென்றால்
மோடியை விட நேர்மையானவரி முன்னிறுத்த வேண்டும்.
மோடியைவிட செயல் வேகம் உடையவரை முன்னிறுத்த வேண்டூம் அதை விடுத்து
கொள்ளைக்கரனையும், கொள்ளைக்காரியும் லுச்சா பசாங்களை முன்னிறுத்தி
உங்களால் மோடியின் மயிரைக்கூட அசைக்க முடியாது.
இன்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டிருக்க்ம் திருடர்களை
மோடி தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பார்.
ஏனெனில்…. உங்களுக்கு புரியாது…. எங்கள் குடி மூத்தகுடி. நீங்கள் ஓசைகளில் இருந்த போதே நாங்கள் இலக்கணத்தை உருவாக்கிவிட்டோம். அது கொடுத்த அறிவு யாருக்கும் அஞ்சி நிற்காது. உங்கள் இயக்க மூதாதையர்கள் வரலாறு எல்லாம் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து விசுவாசம் காட்டி வாழ்ந்த வகையறா. ஆனால் இங்கே போடா புண்ணாக்கு என தூக்கு மேடை ஏறி நின்றவர்கள்.///
உங்களது மூதையர்கள்
ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு சென்றுவிட்டால் பேருந்து,தொடர் வண்டி இயங்காது,
விஞ்ஞானம் அழிந்துவிடும், தனக்கு வயாக்ரா கிடைக்கமல் போய் விடும் என்று
தீர்மானம் போட்டு புலம்பியதை வசதியாக மறைத்துவிட்டிர்
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த ஒரு வலுவான தேசிய தலைவர் வேண்டும். அல்லது பல வலுவான மாநில காட்சிகள் உருவாவது அவசியம்.///
சவுக்கு
ஆலன் ஆக்டேவியன் ஹுயும் என்ற காங்கிரஸ்ன் நிறுவனர் ஒருவரின் கொள்ளுப்பேரன் அல்லது
எள்ளுப் பேரன் எவனாது லண்டன்லா இருந்தான கூட்டிட்டு வா அவந்தான் காங்கிரஸ் கட்சிக்கு
புத்துயிர் ஊட்டுவான்.
Savukku is a Pure DMK Sombu
I think savukku only reflected the feelings of Tamil Nadu people. You failed to express the feelings of the other states
And thhe elections commission was biased towards BJP.
🤣
நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பாராளுமன்ற மேல்சபையில் அவர்களுக்கு இருப்பிடம் அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப் படவேண்டும். அப்பொழுதுதான் சீமான் போன்றவர்களின் குரல் பாரளுமன்றத்திலும் கேட்கும். அவர் கத்தாமல் அமைதியாய் பேச வேண்டும் என்பது நமது விருப்பம். ஆனால் பேசவே முடியாத நிலைதான் இப்பொது அவர் போன்றவர்கள் நட்த்தும் கட்சிகளுக்கு. அது மாறும் போதுதான் உண்மையான ஜன நாயகத்துக்கான ஒரு வழி பிறக்கும்.
சவுக்கு இதற்கு வழி வகை செய்ய முடியுமா? எந்தக் கட்சியும் பெறும் வாக்குகள் வீண் போக வில்லை என்ற நிலை இருப்பதுதான் உண்மையான ஜன நாயகம்.
Rajya Sabha was formed to get the opinion of people from various sectors in the society who wont be able to contest and win elections . Since Government needs voices apart from politicians Rajya Sabha was formed and as a check point for LokSabha . Later it became a place for party members who have lost elections and the ones who were not given seat for Lok Sabha . If we change it based on Loksabha percentage then better we can shut down it .
சீமானின் வசீகரிக்கத்தக்க பேச்சு நிச்சயம் முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்களை பெருவாரியாக ஈர்த்திருப்பது அவர் பல இடங்களில் 3ஆவது இடத்தில் இருப்பதிலிருந்து தெரிகிறது. சீமான் ஒரு சிறந்த கதை சொல்லி. டைரக்டர் சங்கர் படம் போல பிரமாண்டமாக, நம்பிக்கை விதைப்பதை போல இருக்கும். ஆனால் எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல், நடைமுறை சாத்தியமற்று இருக்கும். இதை அவரின் அபிமானிகள் உணர்வதுக்கு 2-3 வருடங்கள் ஆகும். உணர்ந்தவுடன் அவர்கள் மாற்றுப்பாதையில் செல்ல தொடங்குவார்கள். அதற்குள் புது ஆட்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டு அந்த வெற்றிடத்தை நிரப்புவார்கள். ஏறக்குறைய சீமானின் வாக்கு வங்கி இதே அளவு தான் இருக்கும்.
yenya shankar, seeman kathai udraru seri… dmk admk bjp congress lam apdiye unmaya pesranungala?? Seri Seeman enna kathai vidrar sollunga?
Seeman voters will go to new party after 2yrs haan? yov in 2016 their vote share was 1% and now its 4%, think you have failed in maths and yet to clear ur +1
சொல்லியபடியே மிகச்சரியாக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அசுர பலத்தோடு ஆட்சியில் மீண்டும் ஏறுகிறீர்கள்.வாழ்த்துகள். இந்த வாழ்த்தை சொல்ல என் மாநிலம் எனக்கு ஒரு தகுதியை கொடுத்திருக்கிறது. நாடெங்கும் மோடி அலை வீசிய போது இங்கு வீசவில்லை, ஒர் சாரணர் இயக்க தேர்தலில் கூட உங்கள் தேசிய செயலர் 50 ஓட்டுகள் கூட வாங்க முடியவில்லை, சட்டமன்ற தேர்தலிலும் அப்படியே, இப்போது நாடாளுமன்ற தேர்தலில் அப்படியே. வாக்களிக்காமல் விட்டதால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க வாய்ப்பிலை என்கிறார்… அப்படியா ?இது தான் உங்கள் கட்சி புரிந்து வைத்திருக்கும் அரசியல் சட்டமா ? தனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் செயல்பட சொல்லியிருக்கிறதா ? கடந்த ஐந்தாண்டுகள் அப்படித்தான் செயல்பட்டீர்களா ? பாருங்கள் உங்கள் கட்சியே உங்கள் நிர்வாக லட்சணத்தை இப்படி காட்டிக்கொடுக்கிறது. இது ஒரு சாம்பிள் இது போல இவர் உளறிக்கொட்டியது இவரை போன்றவர்கள் உளரிக்கொட்டியது அதிகம். இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என்பது…
உங்கள் ஆட்சியில் தமிழகத்தில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 18 ரைடுகள் நடந்தன. தலைமை செயலகத்தில் தலைமைச் செயலர் அலுவகலம் முதல் கடைசியாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் வீடு வரை.. ஆனால் எத்தனை வழக்குகள் பதிவாகின மோடி அவர்களே ? எண்ணிக்கூட பார்க்க வேண்டிய அவசியமில்லை. எல்லாமே மிரட்டல் அல்லது கமிசன் வாங்கதானே அந்த ரைடு எல்லாமே ? இது இந்தியா முழுமைக்கும் நடந்தது. உங்கள் ஆட்சியில் இது ஊழலில் சேராதா… ஊழல் கேவலம் எனில்.. ஊழலில் கமிஷன் மகா கேவலமில்லையா ? இது போன்ற ஊழல்களை வைத்து மெஜாரிட்டி இல்லாத அரசை நீங்கள் ஆண்டிர்கள். ஆள மட்டுமா செய்தீர்கள். கல்வியை கெடுத்து, விவசாயத்தை கெடுத்து மாநில ஒற்றுமையை கெடுத்து… எங்கள் உரிமைகளை பறித்து…. இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என…
உங்கள் கட்சியின் தேசிய செயலர் நீதிமன்றமாவது மயிராது என்றார்.உங்கள் கட்சியின் விசுவாசி ஒருவர் மீடியாவில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் படுத்துதான் வாய்ப்பை பெறுகிறார்கள் என்றார்…. இவர்கள் இருவர் முன்னும் கைகட்டி நின்ற நீதிமன்றம், தூத்துகுடியில் ஏன் எங்கள் மக்களை கொன்றீர்கள் என கேட்டவளை விரட்டியது… ஒரு குற்றவாளி போல… அவர் பாஸ்போர்டை முடக்கியது… கைது செய்தது… இது மட்டுமா…. இதே கேள்வியை கேட்ட முகிலனை இதுவரை காணவில்லை… உங்கள் நாசகார திட்டங்களை முன்கூட்டியே அறிவித்து வந்த திருமுருகன் காந்தியை வளைத்து வளைத்து கைது செய்தது, எட்டு வழிச்சாலை வேண்டாம் என்ற மக்களை அடித்து விரட்டியது. தூத்துக்குடியில் மக்களை விரட்டி சுட்டுக்கொன்றது. தஞ்சையில் மிரட்டியது. இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என…
இரண்டு பெரும் புயல்களை சந்திதது தமிழகம். அப்போது டிவிட்டரில் கூட நீங்கள் பெரிதாக கேட்கவில்லை. ஏதோ ஒரு நடிகையின் திருமணத்தில் பிசியாக இருந்துவிட்டீர்கள். ஆனால் அதற்கான நிதியை கூடகொடுக்கவில்லை என நான் சொல்லவில்லை… உங்கள் தமிழக ஏஜெண்ட் ஒபிஎஸ் சட்டமன்றத்தில் சொன்னார்…. அதுவும் பதினெழாயிரம் கோடி என சொன்னதாக நினைவு… இது ஒரு பக்கமெனில்.. எங்கள் தமிழக மீனவர்களை உங்கள் இந்திய கடற்படையினர் சுட்டுக்கொன்றனர்… ஆமாம் எங்கள் குண்டுதான் என காவற்படையினர் சொல்ல…. இல்லை என உங்கள் குறுக்குவழி அமைச்சர் நிர்மலா சீதாராமன் .. கடைசிவரை அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை இன்று வரை…இது போக புயலில் சிக்கிய மீனவர்களை காக்க கப்பற்படை விமாங்கள் கேட்ட போது வரவில்லை ….அவர்கள் உப்பு நீரில் உடல் உப்பி மிதந்தார்கள்… நிங்கள் மெதுவாக வந்து அந்த புகைப்படங்களை பார்த்தீர்கள்… இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என.
நீங்கள் வேண்டுமானல் இப்போது தான் பல மாநிலங்களுக்கு மின்சார கொடுத்திருக்கலாம் சாலை போட்டிருக்கலாம், மருத்துவகல்லூரி கனவுகளை கொடுத்திருக்காலம் ( அப்படியேதும் இல்லை அது வேறு விசயம் ) ஆனால் நாங்கள் அதையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம். உங்கள் குஜராத்தைவிட கல்வியில் வேளாண்மையில், சட்ட ஒழுங்கில், மருத்துவத்தில், சுற்றுலாவில் குறிப்பாக மத ஒற்றுமையில் நாங்கள் பலமடங்கு மேல். ஒன்றை தவிர. அதானியின் நலனுக்காக நீங்கள் கொண்டுவந்த சோலர் பிளாண்டுகள் வகையில் மட்டுமே உங்கள் மாநிலம் முதன்மை. ஆனால் இதுவும் இப்போது இல்லை… இங்கே சுயமாகவே பலர் சோலர் நோக்கி நகர்கிறார்கள்… காரணம் அடிப்படை அறிவு…. உங்களைவிட எங்களுக்கு அது அதிகம். யாரை எங்கே வைப்பது என எங்களுக்கு தெரியும். உங்கள் நடிப்பையெல்லாம் நாங்கள் அதிகம் சினிமாவில் பார்த்துவிட்டோம்..அந்த சினிமா கூட பார்க்க முடியாத மக்களை உங்களால் ஏமாற்ற முடிந்தது. எங்களை முடியவில்லை. இப்போது தெரிகிறதா
உயர்திரு பாரதப்பிரதமர் மோடி அவர்களுக்கு,
வணக்கம். நீங்கள் அரியானவில் சொல்லியபடியே மிகச்சரியாக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அசுர பலத்தோடு ஆட்சியில் மீண்டும் ஏறுகிறீர்கள்.வாழ்த்துகள். இந்த வாழ்த்தை சொல்ல என் மாநிலம் எனக்கு ஒரு தகுதியை கொடுத்திருக்கிறது. நாடெங்கும் மோடி அலை வீசிய போது இங்கு வீசவில்லை, ஒர் சாரணர் இயக்க தேர்தலில் கூட உங்கள் தேசிய செயலர் 50 ஓட்டுகள் கூட வாங்க முடியவில்லை, சட்டமன்ற தேர்தலிலும் அப்படியே, இப்போது நாடாளுமன்ற தேர்தலில் அப்படியே. இப்படி தெளிவாக உங்களை தள்ளி வைத்த அந்த தகுதியே என் தகுதி.
உங்கள் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சொல்கிறார்… மோடிக்கு வாக்களிக்காமல் விட்டதால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க வாய்ப்பிலை என்கிறார்… அப்படியா ?இது தான் உங்கள் கட்சி புரிந்து வைத்திருக்கும் அரசியல் சட்டமா ? தனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் செயல்பட சொல்லியிருக்கிறதா ? கடந்த ஐந்தாண்டுகள் அப்படித்தான் செயல்பட்டீர்களா ? பாருங்கள் உங்கள் கட்சியே உங்கள் நிர்வாக லட்சணத்தை இப்படி காட்டிக்கொடுக்கிறது. இது ஒரு சாம்பிள் இது போல இவர் உளறிக்கொட்டியது இவரை போன்றவர்கள் உளரிக்கொட்டியது அதிகம். இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என்பது…
உங்கள் ஆட்சியில் தமிழகத்தில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 18 ரைடுகள் நடந்தன. தலைமை செயலகத்தில் தலைமைச் செயலர் அலுவகலம் முதல் கடைசியாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் வீடு வரை.. ஆனால் எத்தனை வழக்குகள் பதிவாகின மோடி அவர்களே ? எண்ணிக்கூட பார்க்க வேண்டிய அவசியமில்லை. எல்லாமே மிரட்டல் அல்லது கமிசன் வாங்கதானே அந்த ரைடு எல்லாமே ? இது இந்தியா முழுமைக்கும் நடந்தது. உங்கள் ஆட்சியில் இது ஊழலில் சேராதா… ஊழல் கேவலம் எனில்.. ஊழலில் கமிஷன் மகா கேவலமில்லையா ? இது போன்ற ஊழல்களை வைத்து மெஜாரிட்டி இல்லாத அரசை நீங்கள் ஆண்டிர்கள். ஆள மட்டுமா செய்தீர்கள். கல்வியை கெடுத்து, விவசாயத்தை கெடுத்து மாநில ஒற்றுமையை கெடுத்து… எங்கள் உரிமைகளை பறித்து…. இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என…
உங்கள் கட்சியின் தேசிய செயலர் நீதிமன்றமாவது மயிராது என்றார்.உங்கள் கட்சியின் விசுவாசி ஒருவர் மீடியாவில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் படுத்துதான் வாய்ப்பை பெறுகிறார்கள் என்றார்…. இவர்கள் இருவர் முன்னும் கைகட்டி நின்ற நீதிமன்றம், தூத்துகுடியில் ஏன் எங்கள் மக்களை கொன்றீர்கள் என கேட்டவளை விரட்டியது… ஒரு குற்றவாளி போல… அவர் பாஸ்போர்டை முடக்கியது… கைது செய்தது… இது மட்டுமா…. இதே கேள்வியை கேட்ட முகிலனை இதுவரை காணவில்லை… உங்கள் நாசகார திட்டங்களை முன்கூட்டியே அறிவித்து வந்த திருமுருகன் காந்தியை வளைத்து வளைத்து கைது செய்தது, எட்டு வழிச்சாலை வேண்டாம் என்ற மக்களை அடித்து விரட்டியது. தூத்துக்குடியில் மக்களை விரட்டி சுட்டுக்கொன்றது. தஞ்சையில் மிரட்டியது. இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என…
இரண்டு பெரும் புயல்களை சந்திதது தமிழகம். அப்போது டிவிட்டரில் கூட நீங்கள் பெரிதாக கேட்கவில்லை. ஏதோ ஒரு நடிகையின் திருமணத்தில் பிசியாக இருந்துவிட்டீர்கள். ஆனால் அதற்கான நிதியை கூடகொடுக்கவில்லை என நான் சொல்லவில்லை… உங்கள் தமிழக ஏஜெண்ட் ஒபிஎஸ் சட்டமன்றத்தில் சொன்னார்…. அதுவும் பதினெழாயிரம் கோடி என சொன்னதாக நினைவு… இது ஒரு பக்கமெனில்.. எங்கள் தமிழக மீனவர்களை உங்கள் இந்திய கடற்படையினர் சுட்டுக்கொன்றனர்… ஆமாம் எங்கள் குண்டுதான் என காவற்படையினர் சொல்ல…. இல்லை என உங்கள் குறுக்குவழி அமைச்சர் நிர்மலா சீதாராமன் .. கடைசிவரை அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை இன்று வரை…இது போக புயலில் சிக்கிய மீனவர்களை காக்க கப்பற்படை விமாங்கள் கேட்ட போது வரவில்லை ….அவர்கள் உப்பு நீரில் உடல் உப்பி மிதந்தார்கள்… நிங்கள் மெதுவாக வந்து அந்த புகைப்படங்களை பார்த்தீர்கள்… இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என.
நீங்கள் வேண்டுமானல் இப்போது தான் பல மாநிலங்களுக்கு மின்சார கொடுத்திருக்கலாம் சாலை போட்டிருக்கலாம், மருத்துவகல்லூரி கனவுகளை கொடுத்திருக்காலம் ( அப்படியேதும் இல்லை அது வேறு விசயம் ) ஆனால் நாங்கள் அதையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம். உங்கள் குஜராத்தைவிட கல்வியில் வேளாண்மையில், சட்ட ஒழுங்கில், மருத்துவத்தில், சுற்றுலாவில் குறிப்பாக மத ஒற்றுமையில் நாங்கள் பலமடங்கு மேல். ஒன்றை தவிர. அதானியின் நலனுக்காக நீங்கள் கொண்டுவந்த சோலர் பிளாண்டுகள் வகையில் மட்டுமே உங்கள் மாநிலம் முதன்மை. ஆனால் இதுவும் இப்போது இல்லை… இங்கே சுயமாகவே பலர் சோலர் நோக்கி நகர்கிறார்கள்… காரணம் அடிப்படை அறிவு…. உங்களைவிட எங்களுக்கு அது அதிகம். யாரை எங்கே வைப்பது என எங்களுக்கு தெரியும். உங்கள் நடிப்பையெல்லாம் நாங்கள் அதிகம் சினிமாவில் பார்த்துவிட்டோம்..அந்த சினிமா கூட பார்க்க முடியாத மக்களை உங்களால் ஏமாற்ற முடிந்தது. எங்களை முடியவில்லை. இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என.
இன்னும் இருக்கிறது மோடி அவர்களே சொன்னால் நீண்டுகொண்டே போகும். ஆனால் பாருங்கள் சம்மட்டியால் ஓங்கி அடித்திருக்கிறோம் உங்கள் பிஜேபி நடுமண்டையில். இன்னும் புத்தி வரவில்லை உங்கள் சகாக்களுக்கு… ஜனநாயகம் என்றால் என்னவென தெரியாமல், கூட்டாச்சி, மாநில சுயாட்சி என எதுவும் புரியாமல் நீங்கள் திணித்த நீட் போல, ஜிஎஸ்டி போல, பணமதிப்பிழப்பு போல… உங்கள் கட்சி மூடர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அதாவது நாங்கள் உங்களுக்கு ஓட்டுபோடவில்லை அதனால் காவிரி முதல் முல்லைபெரியாறு வரை உங்களிடம் ஏதும் கேட்க கூடாது என்கிறார்கள். என்ன ஒரு அறிவு பாருங்கள்… உங்களை போல…
அதே ரோஷத்தோடு வரியை வேண்டாமென சொல்ல சொல்லுங்கள்.. இந்தியாவில் 40% ஜிடிபி நாங்கள் அல்லவா… சொல்ல சொல்லுங்கள். எங்கள் வரியை வைத்து நாங்களே எங்களை சரி செய்துகொள்கிறோம். இல்லை எனக்கு அதையெல்லாம் தீர்த்து வைக்கும் வக்கில்லை என சொல்லுங்கள் கேட்கிறோம். இல்லை தமிழ்நாடு தனியாக இருந்துகொள்ளட்டும் சொல்லுங்கள். முடியுமா ? வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் பிரதமர். இதை நீங்கள் புரிந்தால்.. அதன் படி தமிழகத்தை வஞ்சிக்காத திட்டங்களை கொண்டுவந்தால் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இல்ல உங்கள் கட்சி மூடர்கள் சொல்வது போலத்தால் என்றால்… தமிழர்கள் எதற்கு துணிந்து நிற்பார்கள்.
ஏனெனில்…. உங்களுக்கு புரியாது…. எங்கள் குடி மூத்தகுடி. நீங்கள் ஓசைகளில் இருந்த போதே நாங்கள் இலக்கணத்தை உருவாக்கிவிட்டோம். அது கொடுத்த அறிவு யாருக்கும் அஞ்சி நிற்காது. உங்கள் இயக்க மூதாதையர்கள் வரலாறு எல்லாம் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து விசுவாசம் காட்டி வாழ்ந்த வகையறா. ஆனால் இங்கே போடா புண்ணாக்கு என தூக்கு மேடை ஏறி நின்றவர்கள்.
உங்களைவிட (?) நன்றாக ஆட்சி செய்த வாஜ்பாய்க்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இனியாவது ஆளுங்கள். ஆள்வதை போல செய்தி பரப்பாதீர்கள்.
good said Mr.Saravanan…
where is savukku sankar?
Vacchhuu Seiranga Pola…