ஆமா ஜி : என்ன ஜி எங்க போயிருந்தீங்க பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு ?
மாமா ஜி : அத்தி வரதர் 40 வருஷம் கழிச்சு வந்திருக்கார் ஜி அதான் பார்க்க போயிருந்தேன்
ஆமா ஜி : 30 நாள் அங்கேயே தங்கி தினமும் தரிசனம் பண்ணற அளவுக்கு பக்தியா? நல்ல விஷயம் தான் ஜி
மாமா ஜி : பின்ன பெரிய சிலை ஆச்சே ஜி, நோட்டம் பார்க்கணும்ல
ஆமா ஜி : நோட்டம் பார்க்கணுமா ? என்னையா சொல்ற ?
மாமா ஜி : உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன, நம்ம ஜி கூப்பிட்டிருந்தார். வயசாயிகிட்டே போகுது, சின்ன சிலையா தூக்கினாலும் சிலையை காணோம்னு கண்டு பிடிச்சிடறாங்க அதுனால இந்த தடவ அத்திவரதரை குளத்தில் போட்டதும் தூக்கிடுவோம், அடுத்த 40 வருஷம் எவனும் கேட்க மாட்டானுகனு சொன்னாரு
ஆமா ஜி : எதுவும் பிரச்னை ஆயிடாதே ஜி
மாமா ஜி : அப்படியே ஆனாலும் காவி வேட்டி கட்டி கசாப்பு கத்தியோட பிகில் போஸ்டர் வந்திருக்கு அதை வச்சு டைவர்ட் பண்ணிரலாம் கவலையை விடுங்க ஜி
ஆமா ஜி : சரி ஜி பங்கு சந்தை சரிஞ்சிக்கிட்டே வருதே என்ன நினைக்கறீங்க ?
மாமா ஜி : சரிஞ்சிடுச்சா? அது பாய் போட்டு படுத்து பல நாள் ஆச்சு. அது சரி பக்தா எல்லாம் பங்கு சந்தை பத்தி பேச கூடாது அப்பறம் மூளை வளந்துடுச்சுனு கட்சியை விட்டு தூக்கிட்டா சோத்துக்கு என்ன பண்ணுவ ? பங்குச் சந்தையில நிறைய கருப்புப் பணம் இருக்கு. அதை ஒழிக்கிறதுக்குதான் மோடி ஜி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பண்ணிருக்காருன்னு அடிச்சு விடணும். புரியுதா ?
ஆமா ஜி : ஸாரி ஜி ஸாரி ஜி. மூன்றாவது இடத்துல இருந்த இந்திய பொருளாதாரம் இப்போ 7 ஆவது இடத்துக்கு போய்டுச்சாம்?
மாமா ஜி : ஜி உங்கள மாதிரி ஆளுங்க கோயிலுக்கு வெறுங்கையை வீசிட்டு போய்ட்டு வந்தா அப்பறம் இப்படி தான். தட்டுல 2 ரூபாய் போடணும் ஜி அப்போ தான் பூசாரி மிட்டாய் வாங்குவான், வியாபாரம் பெருகும், பொருளாதாரம் வளரும்
ஆமா ஜி : அப்போ நான் தட்டில் போடற 2 ரூபாயில தான் நாட்டோட பொருளாதாரமே இருக்குனு சொல்றீங்க.
மாமா ஜி : சும்மாவா சொல்ராங்க “Hindu Rate Of Growth”னு, எதிர் கேள்வி கேட்காதீங்க ஜி அப்பறம் கட்சியில் வளர்ச்சி இருக்காது. நிர்மலா மேடத்தை பாருங்க ஓட்டு வாங்கலைன்னாலும் நிதி அமைச்சரா இருக்காங்க
ஆமா ஜி : சரி ஜி. நீங்களாவது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ஜி ஆர்டிகிள் 370னா என்ன
மாமா ஜி :இந்த சர்தார் படேல் கொண்டு வந்த ஆர்டிகிள் 369 இருக்கு இல்ல அத தன்னிச்சையா மாத்தி நேரு கொண்டுவந்தது தான் ஆர்டிகிள் 370
ஆமா ஜி : உங்களுக்கே என்னன்னு தெரியலையே சும்மா சமாளிக்காதீங்க ஜி இப்படி எல்லாம் முட்டு கொடுத்தா அடி வெளுத்திருவானுக.
மாமா ஜி : இல்ல ஜி. சரியாத்தான் சொல்றேன். இப்போ நாடு நாசமானதுக்கு யாரு காரணம் ?
ஆமா ஜி : மோடி தான்.
மாமா ஜி : யோவ் என்ன திமிரா ? கட்சியில உனக்கு ஒரு நல்ல பதவி குடுக்கலாம்னு உன்னை அடிமையா வச்சுருந்தா என்ன நீ. திமிரா பேசற ?
ஆமா ஜி : அய்யோ ஜி. மன்னிச்சிருங்க. நேருன்னு சொல்றதுக்கு வாய் தவறி, மோடின்னு வந்துருச்சு ஜி.
மாமா ஜி : அப்படி சொல்லுங்க ஜி. 370ஐ நேரு கொண்டு வந்தாரா. அதனால அதை நீக்குறோம். எப்பவும் சொல்ற மாதிரி நேருவால் காஷ்மீர் வீணாச்சுன்னு சொல்றோம்.
ஆமா ஜி : வட கிழக்கு மாநிலங்களுக்கு இதே மாதிரி ஒரு பிரிவு 371 இருக்கே. அதையும் நீக்க போறோமா ஜி.
மாமா ஜி : என்ன ஜி. லுச்சாத்தனமா பேசறீங்க. முஸ்லீம்கள் எங்க அதிகமா இருக்காங்க ?
ஆமா ஜி : காஷ்மீர்ல.
மாமா ஜி : அதனாலதான் அதுல மட்டும் கை வைக்கிறோம். இதெல்லாம் மோடி ஜியோட ராஜ தந்திரம் ஜி. அதுக்கு புதுசு புதுசா காரணத்தை சொல்றோம். வேலை வாய்ப்பை உருவாக்குவோம்னு சொல்லுவோம்
ஆமா ஜி : என்ன பகோடா கடை போடறதா ?
மாமா ஜி : அதுவும் நல்ல யோசனைதான் ஜி. ஆனா காஷ்மீர்ல ரொம்ப குளிருன்றதால, அங்க பக்கோடா போட்டா சீக்கிரம் நமுத்து போயிடும். அதனால, வாய்க்கு மென்மையா மெது வடை கடை போட்டு பொழைக்கலாம்னு அறிவுரை குடுப்போம். கூடவே தீவிரவாதம் ஒழிஞ்சுடும்னு சொல்லுவோம்.
ஆமா ஜி : ஜி நாம பணமதிப்பிழப்பு செஞ்ச போது என்ன சொன்னோம்
மாமா ஜி : தீவிரவாதம் ஒழிஞ்சிடுச்சுனு சொன்னோம்
ஆமா ஜி : பால்கோட்ல போர் போட்டு, தரை எல்லாம் நிரவி மொற வாசல் செஞ்சுட்டு 400 தீவிரவாதிகள் பூண்டோடு அழிந்தார்கள்னு சொன்னோமே ஜி.
மாமா ஜி : மேஜர் மாலனே சொன்னாரே ஜி.
ஆமா ஜி : இப்போ திரும்ப தீவிரவாதிகளை ஒழிக்கிறதுக்காக 370 நீக்கம்னு சொன்னா நம்புவாங்களா ஜி ? திரும்ப திரும்ப அடிச்சாலும் உயிர் பிழைச்சு வந்தா அவனுக தீவிரவாதி இல்ல ஜி கரப்பான் பூச்சி
மாமா ஜி : சரி அதை விட்ருவோம், நம்ம பயலுகளுக்கு புரியற மாதிரி ஏதாவது சொன்னா தான் முட்டு குடுப்பானுக
ஆமா ஜி : இங்க பாருங்க ஜி கே.டீ. ராகவன், காஷ்மீரில் இனி நாம இடம் வாங்கலாம்னு சொல்றார். அதையே சொல்லுவோமா
மாமா ஜி : அதுக்குத்தானே ஜி இதை பண்ணுனதே.
ஆமா ஜி : ஜி இது சரிப்படாது ஜி. இனிமேல் காஷ்மீர் பொண்ணுகளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுங்க. வெறித்தனமா முட்டுக்குடுப்பானுங்க நம்ப ஆளுங்க.
மாமா ஜி : இதையே நூல் விடாம புடிச்சு முட்டு குடுங்க ஜி
ஆமா ஜி : சரி ஜி இந்த மேன் vs வைல்ட் னு ஏதோ டிஸ்கவெரி சானலில் வருதாமே அதுல மோடி ஜி வந்தாராம் பார்த்தீங்களா?
மாமா ஜி : பாத்தேன் பாத்தேன். அந்த வடக்கத்தானுக ஏதோ பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கறானுக, நம்ம ஆளுங்க புலிகேசி லெவெலுக்கு இறங்கி அடிக்கறாங்க
ஆமா ஜி : அப்படி என்ன ஜி பண்ணாரு?
மாமா ஜி : பியர் க்ரில்ல்ஸ்னு ஒருத்தன் வருவான், அவன் எப்படா தவளை கிடைக்கும், வெட்டுக்கிளி கிடைக்கும் அடிச்சு திங்கலாம்னு திரிவான் ஜி. அவனை புடிச்சு மொக்க போட்டு விட்டுட்டார்
ஆமா ஜி : என்ன பேசினார் ஜி ?
மாமா ஜி : முதல் 20 நிமிஷம் நான் ஏழைத் தாயின் மகன், நான் சிறுவயதில் டீ விற்றேன், எனக்கு ஆபத்து என்றாலும் பிற உயிருக்கு என்னால் தீங்கு செய்ய முடியாது, நான் பயத்தை உணர்ந்ததே கிடையாது
ஆமா ஜி : இந்த மொக்கையைத்தான் மாசா மாசம் குரங்கு குளியல்ல சொல்றாரே ஜி ?
மாமா ஜி : குரங்கு குளியலா ?
ஆமா ஜி : மங்கி பாத் ஜி.
ஆமா ஜி : வேற என்ன ஜி சொன்னாரு
மாமா ஜி : சின்ன வயசுல இருக்கும் போது விளையாட்டா முதலையை வீட்டுக்கு பிடிச்சுட்டு வந்துட்டேனு சொன்னாரு
ஆமா ஜி : என்ன ஜி சீமான் அண்ணன் ஆமை கதைக்கே ஊற வச்சி அடிக்கறானுக, இதுக்கு எப்படி ஜி முட்டு கொடுக்கறது
மாமா ஜி : ஜி சொல்லாம விட்ட கதை ஒன்னு இருக்கு ஜி.
ஆமா ஜி : சொல்லுங்க கேட்போம்
மாமா ஜி : ஒருதடவை அடர்ந்த காட்டில் ஜி தனியாக மாட்டிட்டாரு, ரொம்ப தூரம் போய்ட்டு குடிக்க தண்ணி இல்லாம களைப்பா இருந்தபோது அங்க ஒரு மாட்டை சிங்கம் வேட்டையாட காத்துட்டு இருந்தது. சிங்கத்தோட சண்டை போட்டு அந்த பசு மாட்டை காப்பாத்தி துரத்தி விட்டுட்டாரு. சிங்கம் சொல்லுச்சாம் “மோடி ஜி நீங்க அந்த மாட்டு பால் குடிச்சிட்டு பசுவை என்கிட்ட குடுத்திருந்தா நான் அடிச்சு சாப்பிட்டு இருப்பேன், ரெண்டு பெரும் பலனடைந்து இருப்போம். இப்போ உங்களுக்கும் இல்லாம எனக்கும் இல்லாம போய்டுச்சுன்னு”
மோடி ஜி சொன்னாராம் “பசு எங்களுக்கு தெய்வம் மாதிரி, பழத்தை தின்னு கொட்டைய போட்டா இன்னோரு பழம் கிடைக்கும், மாட்டை தின்னு அந்த எலும்பை போட்டா இன்னொரு மாடு கிடைக்குமான்னு கேட்டாரு”
ஆமா ஜி : அதுக்கு சிங்கம் என்ன சொல்லுச்சு.
மாமா ஜி : யோவ். இந்த மொக்கையை எல்லாம் கேட்டுட்டு புளகாங்கிதம் அடைய நான் உன் பக்தா இல்ல. என்கிட்டயே பாலை குடிச்சிட்டு போங்கன்னு சிங்கம் பால் குடுத்துச்சாம்
ஆமா ஜி : என்ன ஜி இது, அய்யப்பன் கதையை அட்லீ எடுத்த மாதிரி
மாமா ஜி : நம்பற மாதிரி இல்லையா.
ஆமா ஜி : சுத்தமா இல்ல.
மாமா ஜி : 1988ல, டிஜிட்டல் கேமராவுல போட்டோ எடுத்து இமெயில்ல அனுப்புனேன்னு நம்ப ஆளு அடிச்சி விடலயா. எவன் கேள்வி கேட்டான் ? அதையும் கேட்டுட்டு ஓட்டு போட்டானுங்களா இல்லையா ?
ஆமா ஜி : கரெக்ட் ஜி. வெறித்தனமா போட்டானுங்க.
மாமா ஜி : அப்புறம் இந்த கதையை மட்டும் நம்ப மாட்டானுங்களா என்ன ?
ஆமா ஜி : என்ன ஜி. ஆட்டோமொபைல் செக்டார் இப்படி படுத்துருச்சு.
மாமா ஜி : இல்லையே. இங்க வரும்போது கூட ஆட்டோவுலதான் வந்தேன்ன். நல்லாத்தானே ஓடுது.
ஆமா ஜி : விளையாடாதீங்க ஜி. பொருளாதார தேக்க நிலையை பத்தி சொன்னேன்.
மாமா ஜி : கொஞ்சம் கஷ்டமான நெலமதான் ஜி. இதுக்கும் நேருதான் காரணம்னு சொன்னா, புளிச்சுன்னு துப்பிடுவாங்க.
ஆமா ஜி : இப்போ மட்டும் துப்பலயா என்ன ?
மாமா ஜி : எந்த காரணத்தையும் சொல்ல முடியல ஜி. 5 வருசமா, நேரு, மன்மோகன் சிங், சோனியான்னு எல்லா காரணத்தையும் யூஸ் பண்ணிட்டோம். 5 ரூபா பிஸ்கட் கூட விக்க மாட்டுதுன்னு துப்பறானுங்க.
ஆமா ஜி : யாரையாவது அரெஸ்ட் பண்ணி பெரிய ஊழல்னு சொல்லலாமே ஜி.
மாமா ஜி : எதிர்க்கட்சியில முக்காவாசி பேரு, நம்ப கட்சியில சேந்துட்டாங்க. மீதி இருக்கற சிதம்பரம், சிவக்குமாரையெல்லாம் பிடிச்சு உள்ள போட்டாச்சு. அதை வச்சு ஒரு வாரம்தான் ஜி ஓட்ட முடியும். திரும்ப பொருளாதாரம்னு வந்து நிக்கிறானுங்க.
ஆமா ஜி : சந்திரயானை வச்சி ஓட்டலாமே ஜி.
மாமா ஜி : அதை வச்சி ஓட்டலாம்னுதான் மோடி ஜி நேரா பெங்களூரு போனாரு. விடிய விடிய உக்காந்துருந்தாரு. 100 நாள் சாதனையா இதை சொல்லலாம்னு நினைச்சாரு. ஆனா, எதிர்பாராதவிதமா, அது சரியா நடக்கல.
ஆமா ஜி : அதுக்கு பதிலாத்தான், இஸ்ரோ இயக்குநர் சிவனை கட்டிப் புடிச்சி சீன் போட்டாரே ஜி.
மாமா ஜி : அந்த சீனும் கொஞ்ச நேரம்தான் ஜி ஓடுச்சு. அதுக்குள்ள எவன்னோ ஒரு வெளங்காதவன், நைட்டு, மிஷன் தோல்வின்னு சொன்னதும், மோடி ஜி அப்செட் ஆகி உக்காந்து இருந்ததையும், மறு நாள் காலையில, சிவனோட கழுத்தாம்பட்டையை புடிச்சி, இறுக்கி, அவரை அழ வச்சதையும் தனித்தனியா வீடியோ எடுத்து போட்டு, நம்ப ஜி, நடிக்கிறாருன்னு கண்டு புடிச்சிட்டானுங்க ஜி.
ஆமா ஜி : நம்ப ஜி நடிக்கவா செஞ்சாரு.
மாமா ஜி : அவரு பிறவி நடிகன் ஜி. 24 மணி நேரமும், புது புது கதாபாத்திரத்துல நடிச்சிக்கிட்டே இருப்பாரு. அடுத்த பாத்திரம் என்னன்னு சிந்திச்சிக்கிட்டே இருப்பாரு.
ஆமா ஜி : நம்ப ஜிக்கெல்லாம் ஆஸ்கார் விருது குடுக்க மாட்டாங்களா ஜி.
மாமா ஜி : நடிப்பை மதிக்கத் தெரியாத பயலுங்க ஜி. ஜிக்கு விருது குடுக்க ஆரம்பிச்சா, மொத்த விருதையும் அள்ளிடுவாரு.
ஆமா ஜி : வரப்போற நாட்களை எப்படி ஜி ஓட்டப் போறோம்.
மாமா ஜி : எது செஞ்சாலும் முட்டுக் குடுக்க பக்தா இருக்கும்போது நமக்கு என்ன ஜி கவலை ?
ஆமா ஜி : சரி பொயிட்டு வர்றேன் ஜி. அப்புறம் சந்திக்கலாம்.
Thanks a lot Savukku Sankar sir for good comedy and time pass.