காந்தியோடு எனக்கு அறிமுகம், நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்டது. நான் திருச்சியில் பெரியார் மணியம்மை பள்ளியில் படித்து வந்தேன். என் தந்தை திருச்சி ரம்பா தியேட்டரில் ஓடிய ‘காந்தி’ என்ற ஆங்கில படத்துக்கு அழைத்து சென்றார். ஒரு எழவும் புரியவில்லை. ஆனால், தியேட்டருக்கு செல்வது அந்த வயதில் குதூகலம் அல்லவா. மகிழ்ச்சியாக சென்றேன். சண்டை காட்சி வருமா என்று பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒரு சண்டை காட்சி கூட வரவில்லை. மாறாக, காவல் துறையினர் லத்தி கொண்டு தாக்குகையில், கூட்டம் கூட்டமாக சென்று காவல் துறையினரிடம் அடி வாங்கும் காட்சியே வந்தது. தாக்குதலுக்கு உள்ளானவர்கள், தலையில், துணி கொண்டு கட்டு போட்டுக் கொண்டு திரும்பவும் அடி வாங்க வந்தது எனக்கு வருத்தத்தையே ஏற்படுத்தியது. குறைந்தது கல்லைத் தூக்கியாவது அடிக்க வேண்டாமா…. இப்படியா வரிசையில் சென்று அடி வாங்குவார்கள் என்றே தோன்றியது. பின்னர் அத்திரைப்படத்தில் நடந்த எதுவும் எனக்குப் பிடித்தமானதாக இல்லை.
அதன் பிறகு என் வாழ்வில் காந்தி தாக்கத்தை ஏப்ற்படுத்தவில்லை. பின்னாளில், பெரியார் மற்றும், அம்பேத்கர் நூல்களை படிக்கையில், காந்தியோடு அவர்களுக்கு ஏற்பட்ட முரண்களால், காந்தி என்ன தான் சொல்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அப்போதுதான் வாசிக்கத் தொடங்கினேன். காந்தியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அதனை அவர் எதிர்கொண்ட விதம் என இவற்றில் பலவற்றை என்னால் நம்ப முடியவில்லை. இப்படியெல்லாம் இருக்குமா என்ன என்றே என்ன தோன்றியது. பெரியார் நூல்கள் ஒருசேர எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தருணம் அது.
காந்தியைப் பற்றி எனக்கு ஈடுபாட்டையும், புரிதலையும் ஏற்படுத்திய நூல், காந்தி எழுதிய நூல் அல்ல. “நள்ளிரவில் சுதந்திரம்” என்று, டொமினிக் லேப்பியர் மற்றும், லாரி காலின்ஸ் என்ற இருவர் எழுதிய புத்தகமே காந்தியை பற்றி மேலும் படிக்க எனக்கு படிக்க தூண்டுதலாக இருந்தது.
அந்த இரு எழுத்தாளர்களும், அவர்கள் நூலில், காந்தியை பற்றி வியப்போடு எழுதியிருந்தது, எனக்கு மிக பிரமிப்பாக இருந்தது. இருந்தாலும், அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்த காலம் என்பதால், காந்தியை குறை சொல்பவர்களையும், அத்தகைய கருத்து சார்ந்திருந்த நூல்களும் மட்டுமே விருப்பம் ஏற்படுத்தின. அரசு ஊழியர் சங்கத்தின் ஒரு மாநாட்டில், தோழர் கங்காதரன், இந்திய சுதந்திர போராட்டத்தில், கம்யூனிஸ்டுகளின் பங்கு என்ற தலைப்பில், நான்கு மணி நேரம் பேசினார்.
அதை முழுமையாக கேட்டோர், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில், காங்கிரஸ் கட்சியினரை விட, கம்யூனிஸ்டுகளே அதிக பங்கு வகித்தனர் என்று நம்பத் துவங்குவர். அப்போது, நான் காந்திதான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்று இத்தனை நாள் நம்ப வைக்கப்பட்டேன், ஏறக்குறைய ஏமாற்றப்பட்டேன் என்றே நம்பினேன்.
காந்தி மீதான விமர்சனங்கள் என்னுள் இன்னும் தீவிரமாகின. அதன் பின்னர், தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி மற்றும், பெரியாரிய, கூட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்தேன். காந்தி பற்றி விமர்சனம் செய்யும் எந்த நூல்களானாலும் எடுத்து படிக்கத் தொடங்கினேன். கர்நாடகாவைச் சேர்ந்த தலித் எழுத்தாளர் வி.டி.ராஜசேகர் என்பவர், காந்தி தலித்துகளுக்கு துரோகம் இழைத்தார் என்று பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவரின் நூல்கள், எனது எண்ணங்களுக்கு வலு சேர்த்தன.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அடிப்படைவாதிகள், காந்தியை இத்தனை தீவிரமாக ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை உணரத் தொடங்கியபோதுதான், ஒரு தீவிர இந்து மதப் பற்றாளராக இருந்தாலும், பிற மதங்களின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையும், நேசமுமே, அவர் மீது இந்து அடிப்படைவாதிகளுக்கு தீவிர எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தியது என்பது புரிந்தது.
இந்த வெறுப்புணர்வே, இறுதியில் காந்தியை சுட்டுக் கொல்வது வரை சென்றது. காந்தியை சுட்டுக் கொன்றதோடு அல்லாமல், அவரின் கொலையை நியாயப்படுத்தும் செயலை இன்று வரை இந்து அடிப்படைவாதிகள் செய்து வருகின்றனர்.
2014ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தது முதல், இன்று வரை, அவரைத் திட்டமிட்டு சிறுமைப்படுத்துவது, இந்திய சுதந்திரப் போரில் அவரின் பங்கை குறைத்துக் காட்டுவது, அவரை ஒரு தீவிர இஸ்லாமிய ஆதரவாளராகவும், “பாரத தேசத்தின்” விரோதியாகவும் சித்தரிப்பது என அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கோட்சேவுக்கு சிலை வைப்பதும், கோட்சேவை புகழ்பவர்களை, மக்களவை உறுப்பினர்களாக்கி அழகு பார்ப்பதும் வழக்கமாகி வருகிறது.
மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை போல கேமராவுக்காக நடிக்காமல், அல்லாமல், தலித்துகளின் குடியிருப்பில் சென்று அவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்தவர் காந்தி. அவர் மனைவியையும் அவ்வாறு செய்யுமாறு பணித்தவர். சொல்லும் செயலும் வேறாக அல்லாமல், சொல்லையே செயலாக வாழ்ந்து காட்டியவர்.
பாகிஸ்தான் காஷ்மீர் மீது தாக்குதல் தொடுத்த காரணத்தால், இந்தியா பிரிவினை நேரத்தில் கொடுப்பதாக வாக்களித்திருந்த 55 கோடியை கொடுக்க மறுத்தது. அவர்கள் வாக்கு தவறலாம். ஆனால் நாம் கொடுத்த வாக்கை மீறக் கூடாது என்று கூறி, உண்ணாவிரதம் இருந்து இந்திய அமைச்சரவையை 55 கோடியை கொடுக்க வைத்தவர்.
இன்று, காஷ்மீர் மக்கள் 54 நாட்களை கடந்து சிறைப்படுத்தப் பட்டுள்ளனர். மற்றொரு நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதிக்காக உண்ணாவிரதம் இருந்தவர், இன்று தன் சொந்த நாட்டு மக்களை துப்பாக்கி முனையில் தகவல் தொடர்பின்றி சிறை வைத்திருப்பதை ஏற்றுக் கொண்டிருப்பாரா ? கோடிக்கணக்கான காஷ்மீர் மக்களை, 55 நாட்களாக, முள் வேலிக்குள்ளும், துப்பாக்கி முனையின் பின்னாலும் சிறை வைத்திருக்கும் நேரத்தில், 150வது பிறந்தநாளான இன்று காந்தியை அவர் கல்லறையில் புரள வைத்திருக்கும்.
தன் வாழ்வையே ஒரு நாட்டுக்காகவும், அதன் மக்களுக்காகவும் அர்ப்பணித்தவர் மகாத்மா காந்தி. அவர் பிறந்த மாநிலத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக மட்டும் “தேசத் தந்தை” ஆகி விட முடியுமா என்ன ? மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் கொலைக்கு காரணமான ரத்தக் கறை படிந்த கரங்களைக் கொண்ட ஒருவர் தேசத் தந்தை ஆகி விட முடியுமா என்ன ?
அப்படிப்பட்ட ஒரு நபரை, கூச்சமேயில்லாமல், மேடைகளில் தேசத் தந்தை என்று புகழ்வதும், அதை அந்த நபர் அசூயையில்லாமல் ஏற்றுக் கொள்வதும் ஆபாசத்தின் உச்சம். இன்னும் ரூபாய் நோட்டில் மோடியின் படத்தை போடுவது மட்டுமே பாக்கி.
இத்தனை ஆண்டுகளாக இல்லாமல், இன்று காந்தியின் தேவையை உணர்கிறேன். இன்று நாட்டில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும், பாசிசத்தின் கோரப் பிடியில் இருந்து, தலித்துகளையும், சிறுபான்மையினரையும் இஸ்லாமியர்களையும், காப்பாற்ற அண்ணல் தன் போராட்டத்தை எப்போதோ தொடங்கியிருப்பார். அவர் வழியில், அதே உணர்வோடும், உத்வேகத்தோடும், பாசிசத்துக்கு எதிராக போராடுவது மட்டுமே, காந்திக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலி.
காந்தியை மிகச் சரியாக கணித்தவர், விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மட்டுமே.
காந்தியின் எழுபதாவது, பிறந்த தினத்துக்கு வாழ்த்து சொன்ன அவர்,
“காந்திக்கு பின்னால் வரும் தலைமுறைகள் ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதன் இந்த பூமியில் வாழ்ந்துள்ளார் என்பதை நம்ப மறுப்பார்கள்” என்றார்.
இப்படி மறக்கடிக்கப்படும் வேலையை ஆட்சியாளர்களே திட்டமிட்டு செய்வது தான் காலத்தின் கொடுமை!!!
ஒரு பக்கமாகவே பார்க்காமல் வலதுசாரிகள் படைப்புகளை வெறுப்பின்றி படியுங்கள்.
அது சரி…
இதையும் படியுங்கள் காந்தியைத் தெரிந்து கொள்ளுங்கள் மிகச் சிறப்பாக. http://ellamputhumai.blogspot.com/2014/08/blog-post.html
தேசப்பிதாவை பற்றி அவதூறாக நீங்கள் எழுதி இருக்கும் கட்டுரை கொஞ்சம் கூட அடிப்படை வரலாறோ, உண்மையை அறியும் ஆவலோ, அல்லது உண்மையான தகவலின் அடிப்படையிலோ இல்லாத மூன்றாந்தர எழுத்தாக உள்ளது. உங்கள் ஒவ்வொரு குற்றசாட்டிற்கும் ஆதாரத்தோடு நீங்கள் சொல்வது தவறு என்று நிரூபிக்க முடியும். ஆனால் பொது கழிப்பறையில் ஆபாசமாக கிறுக்கும் விடலை பையனின் வசனம் போன்ற உங்கள் கட்டுரை, விளக்கம் எதிர் பார்க்கும் தகுது கூட இல்லாதது. போற்றப்படுபவர்களை, தூற்றுவது சுலபமாக பிரபலமாகும் ஒரு யுக்தி. அதை முயன்று தோற்று போயிருக்கிறீர்கள்.
காந்தியின் கோட்பாடுகள் பல நல்லவை. கிராம சுய ராஜ்யம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை போன்றவைகள். ஆனாலும் அவர் போதித்த அகிம்சை என்ற கொள்கை இன்றைய நவீன உலகில் காலாவதியான ஒன்று. இலங்கை தீவில் திலீபன் உண்ணா விரதம் இருந்து என்ன ஏற்பட்டது?.
அதே சமயம் காந்தியிடம் கம்யூனிஸ்ட் பார்வை இல்லை என்பது குறிப்பாக கூற வேண்டும். மாவீரன் பகத் சிங்கை தூக்கில் ஆங்கில அரசு போட்டதற்கு காந்தியின் சதித்திட்டம் காரணம். சுப. வீரபாண்டியன் எழுதிய பகத்சிங்கும் இந்திய அரசியலும் என்ற நூலில் ஆவணங்கள் மூலமாக ஆதாரங்கள் பல இடங்களில் திரட்டி நிரூபிக்கப்பட்டுள்ளது.
சங்கர் அவர்கள் அந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.
கோவையில் இருந்து வழக்கறிஞர் சம்பத்.
காந்தி என்கிற முற்றுமுழுதான சுயநலவாதியால் தான் மாவீரன் பகத் சிங் தூக்கில் தொங்க நேரிட்டது என்கிற உண்மை, சரித்திரம் காலவோட்டத்தில் மறைக்கப்படுகிறது.
நீங்கள் சங்கி மங்கி தானே
நீங்கள் எல்லாம் மூளை மங்கிகள் என்று தெரிகிறது
மகாத்மா காந்தியின் இன்னொரு பக்கம் என்ன? வாசியுங்கள் இதையும். இதற்கு மேல் எதுவும் தேவையில்லை என நினைக்கிறேன்.
https://ta.quora.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D