ஆமா ஜி : வணக்கம் ஜி, சீக்கிரம் வாங்கோ. நல்ல செய்தி உங்ககிட்ட சொல்லாம்னு பார்த்தா ஆடி அசஞ்சு வறீங்க
மாமாஜி: சொல்லுங்க ஜி என்ன விஷயம் ?
ஆமா ஜி: இனி மாடு பின்னாடி சொம்பை தூக்கிட்டு சுத்த வேண்டாம். பொருளாதாரம் உயரப்போகுது ஜி
மாமா ஜி : நல்ல விஷயமாச்சே எப்படி ஜி சொல்றீங்க ?
ஆமா ஜி : நிம்மி ஜி கார்பொரேட் கம்பெனிக்கு வருமான வரி விலக்கு கொடுத்தாங்களே, அது பண்டிகை அதுவுமா ஒர்க் அவுட் ஆகப்போகுது
மாமா ஜி : என்ன ஜி முட்டாள் தனமா பேசிட்டு ?
ஆமா ஜி : முட்டாள் கிட்டாள்னு சொன்னீங்கன்னா கடுப்பாயிடுவேன், ட்விட்டர்ல இப்படியே தான் சொல்றானுங்கனு பார்த்தா நீங்களுமா ?
மாமா ஜி : நிம்மி ஜியாவே போட்டு பொளந்துக்கிட்டு இருக்கானுங்க நீங்க எல்லாம் பொருளாதாரம் பேசலாமா ஜி ?
ஆமா ஜி : நீங்க தான் விவரமான ஆளாச்சே நீங்க சொல்லுங்க பொருளாதாரம் ஏன் உயராது?
மாமா ஜி : எதுனால பொருளாதார மந்த நிலை சொல்லுங்க ஜி?
ஆமா ஜி : உற்பத்தியான எந்த பொருளும் விக்க முடியல
மாமா ஜி : அதனால என்ன ஆச்சு ஜி ?
ஆமா ஜி : நிறைய பொருள் தேங்குச்சு ஜி அதனால் உற்பத்தியை கொறச்சாங்க
மாமா ஜி : ஏன் யாராலையும் பொருளை வாங்க முடியல ?
ஆமா ஜி : எவண்டயும் காசு இல்ல ஜி, இருந்தா தான் தேவை இருக்கோ இல்லையோ. எதிர் வீட்டுல இருக்கு, மாடி வீட்டுல இருக்குனு இவனும் ஒன்னு வாங்கி போடுவானே
மாமா ஜி : அப்பறம் வரி சலுகையை காசு இல்லாதவனுக்கு கொடுப்பீங்களா? இல்ல கார்பொரேட் காரனுக்கு கொடுப்பீங்களா ஜி ?
ஆமா ஜி : கம்பெனிகாரனுக்கு கொடுத்தா இன்னும் தொழில் தொடங்குவான் ஜி
மாமா ஜி : இருக்க பொருளே விற்க முடியலையாம் புதுசா கிழிப்பானா ஜி ? வாங்கறவன் கிட்ட காசை குடுங்க அவனுக்கு சேர்க்க தெரியாது பொருளை வாங்கி செலவு செய்வான் ஜி
ஆமா ஜி : வெட்டி பேச்சு பேசற உங்களுக்கே இவ்வளவு விஷயம் தெரிஞ்சா, இது நிம்மி மேடத்துக்கு தெரியாதா ஜி ?
மாமா ஜி : நல்லாவே தெரியும் ஜி, பொருள் வாங்கறவன் பொது ஜனம். அவனை ஏமாத்துறதுக்கு ராமர் கோவில், பாகிஸ்தான் தீவிரவாதி, பசு மாடு போதும். ஈசியா ஏமாத்திடலாம் ஜி. கார்பொரேட்காரனுக கத்திகிட்டே இருப்பாங்க அவங்கள சமாளிக்கிறது தான் கஷ்டம்
ஆமா ஜி : நீங்க சொல்றது கரெக்டாவும் தெரியுது தப்பாவும் தெரியுதே ஜி
மாமா ஜி : பேட்டியை பாருங்க, கேள்வி கேட்டதும் “அடி போடி”னு சொல்லறாங்க நிம்மி ஜி
ஆமா ஜி : பாவம் அவங்களும் வாராவாரம் முட்டு குடுத்து பார்க்கறாங்க ஒன்னும் நடக்க மாட்டேனுது. சரி ஜி இந்த PMC வங்கியில் ஏதோ ஊழலாமே
மாமா ஜி : அதை ஏன் கேட்கறீங்க ஜி, டெபாசிட் பணம் மொத்தம் 11 ஆயிரம் கோடி, ஒருத்தனுக்கு மட்டும் 6 ஆயிரம் கோடி கடன் கொடுத்திருக்கானுக அவனும் கம்பியை நீட்டிட்டான்
ஆமா ஜி : இது என்ன ஜி புதுசா ? பேசாம நேரு தான் கடன் கொடுத்ததுனு ஒரு பிட்ட போட வேண்டியது தானே.
மாமா ஜி : நேருவை ரொம்ப யூஸ் பண்ணிட்டோம். கொஞ்ச நாளைக்கு அவங்க அப்பா மோதிலால் நேருவை யூஸ் பண்ணிக்கலாம்.
ஆமா ஜி : அவங்க அப்பா எப்படி ஜி காரணமா ஆவாரு ?
மாமா ஜி : அவங்க அப்பா நேருவை பெக்கலன்னா நேரு பிரதமராவே ஆயிருக்க மாட்டாரு. நாடு நல்லா இருந்துருக்கும்ல ?
ஆமா ஜி : அருமையான ஐடியா ஜி.
மாமா ஜி : ஆனா PMC வங்கி ஊழல்ல நம்ப லிங்கை நோண்டி எடுத்துட்டானுங்க
ஆமா ஜி : என்ன ஜி லிங்க்?
மாமா ஜி : அந்த வங்கியோட இயக்குநர் ராஜ்நீட் சிங் பாஜக MLA வின் மகன், கடன் வாங்கின பக்கி நம்ம கட்சிக்கு ரெகுலரா டொனேஷன் தர்றவன்.
ஆமா ஜி : இப்போ டெபாசிட் பண்ணவங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே ?
மாமா ஜி : பிரச்சனையா? பட்ட நாமம் தான். நமக்கு ஓட்டு போட்டவன் எல்லாம் போர்டு புடிச்சுட்டு தர்ணா பன்றான் ஜி
ஆமா ஜி : இப்படி நம்ம ஆளுங்களே கொடி புடிச்சா என்ன ஜி பண்றது
மாமா ஜி : வேற என்ன ? ரெண்டு தீவிரவாதி உள்ள வந்துட்டான்னு சொல்ல வேண்டியது தான் ஜி ஐயெஸ் தீவிரவாதிகளால ஆபத்துன்னு சொல்ல வேண்டியதுதான்.
ஆமா ஜி : அதுவும் சரி தான். ஜி இந்த போட்டோவை பாருங்க நம்ம யோகி ஜி கூட நிக்கற பொண்ணை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு
மாமா ஜி : உங்களுக்கு தெரியல? நம்ம நீரா ராடியா?
ஆமா ஜி :2G ராடியாவா? நம்ம கர்ம யோகி அவ கூட என்ன ஜி பன்றாரு?
மாமா ஜி : அந்த அம்மா ஒரு ஆஸ்பத்திரி கட்டிருக்கு அதை திறந்து வச்சிட்டு இருக்கார் ஜி
ஆமா ஜி : என்ன அக்கிரமம் ஜி இது
மாமா ஜி : 2G ய வச்சு ஆட்சியை காலி பண்ணியாச்சு அப்பறம் என்ன ஜி நொன்ன ஜின்னு.
ஆமா ஜி : அப்போ நாம காட்டியும் குடுக்கறோம், கூட்டியும் குடுக்கறோமா ஜி ?
மாமா ஜி : டெபினிட்லீ. அதை பண்ணாத்தானே நாம உண்மையான பக்தா.
ஆமா ஜி : சரி ரெண்டு பேரோட வீடியோ இருக்கா ஜி ?
மாமா ஜி : யோவ்.
ஆமா ஜி : பதினோராவது ஜின்பிங வர்றாரே. அதுக்கு ஏற்பாடெல்லாம் பண்ணியாச்சா ஜி ?
மாமா ஜி : அது என்ன பதினோராவது ஜின்பிங்?
ஆமா ஜி : அதான் ஜி XI Jinping
மாமா ஜி : உன் வாயில் வசம்பு வச்சு தேய்க்க, எவன் யா உனக்கு தமிழாக்கம் பண்ணி கொடுத்தது
ஆமா ஜி : எல்லாம் நம்ம ஆளுங்க தான் ஜி
மாமா ஜி : அவனுக தான் ஏற்கனவே ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டினு மானத்தை வாங்குனானுக, அவன்ட்ட ஏன் ஜி போனீங்க?
ஆமா ஜி : அப்படி என்ன தப்பை கண்டுபிடிச்சுடீங்க?
மாமா ஜி : அவர் பேரு ஜி ஜின்பிங்
ஆமா ஜி : ஒருத்தன் அப்பவும் சொன்னான் ஜி ஜின்பிங்னு, நான் தான் பேருக்கு முன்னாடி எதுக்கு ஜி சேர்த்துத்துட்டு, பதினோராவது ஜின்பிங் ஜினு போடுங்கனு சொன்னேன்
மாமா ஜி : நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் எல்லாம் நான் பார்த்துக்கறேன்
ஆமா ஜி : சரி ஜி சீனா அதிபர்கூட மோடி ஜி சந்திப்பு சென்னையில் தான் நடக்கபோகுதே அதுக்குள்ள ஐஐடி பட்டமளிப்பு விழாவுக்கு வராட்டி என்ன?
மாமா ஜி : சீன அதிபர் வர நேரம் உலக மீடியா பூரா இங்க தான் பார்ப்பானுங்க அப்போ போய் இவனுக Go Back Modi ட்ரெண்ட் அடிச்சா அசிங்கமா போய்டும் ஜி
ஆமா ஜி : அதுக்கு?
மாமா ஜி : இப்போ ஒரு வாட்டி வந்தா அடிச்சு ஒஞ்சிடுவாங்க, போர் அடிச்சிடும் ஜி
ஆமா ஜி : ஜி நீங்க நினைக்கற மாதிரி எல்லாம் இல்ல, இப்போ தான் பார்த்தேன் இப்படி ஒன்னு ட்ரெண்ட் ஆயிட்டு இருக்கு #回到莫迪
மாமா ஜி : இது என்ன ஜி மாட்டு சாணியை புடிச்சு வச்ச மாதிரி?
ஆமா ஜி : சீனத்துல Go Back Modiயாம்
மாமா ஜி : என்ன ஜி இவ்வளவு உக்கரமா இருக்கானுங்க? இந்த வாட்டியும் ட்ரெண்ட் பண்ணிட்டாங்க போல இருக்கே.
ஆமா ஜி : ஹெவியா ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்கானுங்க ஜி.
மாமா ஜி : அதுக்குத்தான் டைம்ஸ் நவ் ஊடகமெல்லாம் இந்த ட்ரெண்ட் பாகிஸ்தான்ல இருந்து பண்ணப் பட்டதுன்னு நியூஸ் போட வச்சுட்டோமே ஜி.
ஆமா ஜி : அதையும் பொய் நியூஸ்னு துப்பிட்டாங்க ஜி. இதை படிங்க
மாமா ஜி : இப்படி எல்லா பக்கமும் கேட்டு போட்டா நாம எப்படி ஜி பொழப்பை நடத்துறது ?
ஆமா ஜி : இவ்வளவு நாள் எவ்வளவு துப்பு வாங்கிருக்கோம் ? தொடைச்சிகிட்டு வேலை பாக்கலையா ஜி ? அது மாதிரிதான்
மாமா ஜி : நம்ப ஜீ எப்படி வேட்டி கட்டி கலக்கிட்டாரு பாத்தீங்களா ?
ஆமா ஜி : எந்த வேலையும் உருப்படியா பாக்கறது இல்ல. போற இடமெல்லாம் வேசம் கட்டுறது புதுசா என்ன நம்ப ஜி க்கு ?
மாமா ஜி : டக்குன்னு ஒரு இடத்துல புள்ளிங்கோ ஸ்டைல்ல ஹேர்ஸ்டைல் வச்சாரு கவனிச்சீங்களா ?
ஆமா ஜி : பாத்தேன் ஜி. நானும் யூத்துன்னு நிரூபிக்கிறதுக்காக அப்படி வச்சாரா ஜி ?
மாமா ஜி : அங்கதான் தப்பு பண்றேள். அதுக்கு பின்னாடி ஒரு சூட்சமம் இருக்கு. சீனா இந்தியா சந்திப்பு அறிவித்த உடனே DRDOக்கு ரகசிய உத்தரவு சவுத் ப்ளாகில் இருந்து பிறப்பிச்சாங்க. IIT மும்பை நானோ டெக்னாலஜி பிரிவு பேராசிரியர் உருவாக்கிய ராடார் இலைகள் செம்பில் செய்யப்பட்டது அதை ஜியின் தலையில் முடியுடன் பின்னப்பட்டது. உளவு சாட்டிலைட் மறைவு பகுதியில் இந்த புகைப்படம் எடுக்கும் படி திட்டமிடப்பட்டது சமயம் பார்த்து ராடார் இலைகள் செய்யல்படுத்தப்பட்டது, இதன் மூலம் சீன அதிபரின் போனில் இருந்த Nuclear launch code hack செய்யப்பட்டு மோடி ஜியின் ஜியோ செல்லுக்கு பதிவிறக்கப்பட்டது. இனி இந்தியா பாகிஸ்தான் அனு போர் மூண்டால் சீனாவின் அணுகுண்டை கொண்டே பாகிஸ்தானை தீர்த்துக்கட்ட முடியும். எப்படி நம்ப ஜியோட ராஜதந்திரம் ?
ஆமா ஜி : பின்னுறாரே..
மாமா ஜி : அதை விடுங்கோ. பீச்சுல குப்பை பொறுக்கி எப்படி அசத்துனாரு பாத்தீங்களா ?
ஆமா ஜி : கவனிச்சேன் ஜி. நம்ப ஆளுங்கள்லாம் அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சு, குதூகலிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
மாமா ஜி : வெளியில இருந்து பாக்கறவங்களுக்குதான் அது குப்பை பொறுக்குற மாதிரி தெரியும். ஆனா உண்மையிலயே நடந்தது வேற.
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க ?
மாமா ஜி : மகாபலிபுரம் கடற்கரையில அணு ஆயுதம் செய்யறதுக்கான எரிபொருளான தோரியம் கிடைக்குதுன்னு நம்ப ஜிக்கு ஒரு ரகசிய தகவல் வந்துச்சு. அதே நேரத்துல, நம்ப விஞ்சானிகள் இடையே பாகிஸ்தான் வெளிநாட்டு உளவாளி இருக்குற தகவலும் வந்துச்சு. டக்குன்னு ஒரு முடிவெடுத்தார். நாமளே நேரா போயி ஆய்வு பண்ணலாம்னு அதுக்காகத்தான் மகாபலிபுரத்தை தேர்ந்தெடுத்தார். காலையில வாக்கிங் போற மாதிரி, நடக்க ஆரம்பிச்சார். குப்பையை பொறுக்குற மாதிரி கீழே குனிஞ்சு அந்த மணலை பாத்ததும் தோரியம் இருக்குறதை கண்டுபுடிச்சிட்டார்.
ஆமா ஜி : கண்ணுலயே எப்படி ஜி கண்டு புடிக்க முடியும். இதுக்கெல்லாம் ஆய்வு பண்ண வேண்டாமா ?
மாமா ஜி : நம்ப ஜியோட கண்ணுல அவ்வளவு சிறப்பு பவர் இருக்கு ஜி. கண்ணுலயே கண்டு புடிச்சிருவார். பத்தாதுக்கு கையில வேற கொஞ்சம் மணலை எடுத்து பாத்தார். கடைசியா ஒருத்தர் கையில ப்ளாஸ்டிக் கவரை கொடுத்தார் தெரியுமா ? அவரை எல்லாரும் ஹோட்டல் ஊழியர்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனா அவர் இந்திய ராணுவத்தோட மூத்த அதிகாரி.
ஆமா ஜி : என்ன ஜி இவ்வளவு விஷயம் இருக்கு ? இது தெரியாம நம்ப ஜியை கிண்டல் பண்றாங்களே….
மாமா ஜி : வெவரம் தெரியாத பசங்க ஜி. நம்ப ஜியோட ஆய்வுனால, இந்த தீபாவளிக்கே நாம பல அணு குண்டுகளை செய்யலாம்.
ஆமா ஜி : ஜி பின்னுறாரே ஜி. இந்த விஷயம் நம்ப ஜிஜிக்கு தெரியுமா ?
மாமா ஜி : அவரை மயக்குறதுக்குதான் இளநீர்ல சரக்கை கலந்து குடுத்துட்டார். அவரு மட்டையான நேரத்துல வேலையெல்லாம் முடிச்சிட்டாரு. நம்ப ஜியோட ராஜ தந்திரம் யாருக்கும் வராது ஜி. நம்பலன்னா இந்த வீடியோவை பாருங்க
ஆமா ஜி : கேட்டா தலையே சுத்துது ஜி. அப்புறமா சந்திக்கலாம். நான் கெளம்பறேன்.
semmaya irukku ji
Savukku Sankar sir,
Your Aaamaji – Maamaji is excellent comedy. Thank you for light moments . we will not take this seriously.
I have two requests placed for more than a month . We as readers of your blog for more than 7 years ,request your help on below two.
1. Requested for Farmer Ayyakannu’s Farming land and his photo doing farming .
2. to bring Schools business to halt, please write about Navodhaya schools whiich is not existing in Tamilnadu alone.