நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்களின் முடிவுகள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஆளுங்கட்சி பெற்ற பெரும் வெற்றி, இம்முடிவுகளை ஆராய வைக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, இடைத் தேர்தல்கள் பணத்தால் வெல்லப்படுபவைதான் என்பது நாம் அறிந்ததே என்றாலும், இந்த இடைத்தேர்தல்களில் ஆளும் அதிமுகவுக்கும், திமுக கூட்டணிக்கான வாக்கு வித்தியாசம் ஒரு உரத்த செய்தியை அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் உணர்த்துகிறது.
நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரை விட 31,813 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். விக்கிரவாண்டியில், அதிமுக வேட்பாளர், திமுக வேட்பாளரை விட 44,924 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், ஜெயலலிதா ஆர்கே.நகரில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை விட வெறும், 39,545 வாக்குகள் மட்டுமே என்பதை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
பிப்ரவரி 2017ல், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றபோது, எத்தனை நாட்களோ / எத்தனை மாதங்களோ என்றுதான் பரவலாக பேச்சு இருந்தது. திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர், ஆட்சி ஓரிரு மாதங்களில் கலையும் என்று தொடர்ந்து பேசி வந்தனர். எடப்பாடி அப்போது மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்தார். அவரின் ஆட்சியை கலைக்க அவர் கட்சியையே சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் நடத்தி, கடும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் அத்தனை சவால்களையும் சமாளித்ததோடல்லாமல், பாராளுமன்றத் தேர்தலில், அதிமுக-பிஜேபி கூட்டணி படு தோல்வியை சந்தித்தாலும், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று, அரசியல் தனக்கு புதிதல்ல என்பதை நிரூபித்தார். பாராளுமன்றத் தேர்தலோடு, 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் ஒன்றாக வந்தது.
எடப்பாடியின் கவனம், தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மீது மட்டுமே இருந்தது. யார் எம்.பியாக ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என்று அசிரத்தையாகவே இருந்தார். பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போது, ஒரே நேரத்தில் தேமுதிக, திமுகவுடனும், அதிமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது பொது வெளியில் அம்பலமானபோதும், தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்து 2 சதவிகிதத்துக்கு கீழே சென்று விட்டது என்று தெரிந்தபோதும், எடப்பாடி தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்தார். ஏனெனில், இடைத்தேர்தல் முடிவுகள் சில நூறு வாக்குகள் வேறுபாட்டில் முடிவு செய்யப்படும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி நன்கு உணர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். சாதுர்யமான அவர் காய் நகர்த்தல்களின் பலனை, இடைத்தேர்தல்களில் அதிமுக பெற்ற 9 தொகுதிகளின் வெற்றி தெளிவாக்கியது.
முரண்டு பிடித்த பன்னீர்செல்வத்தை, பணிய வைத்து துணை முதல்வராக்கி, அவர் அதிகாரத்தை பறித்து, அவர் ஆதரவாளர்களை ஓரம் கட்டி, அவரை முடக்கியதாகட்டும், மாநிலங்களவை வேட்பாளர் தேர்வில் அவருக்கு எந்த பங்கும் இல்லாமல் பார்த்துக் கொண்டதாகட்டும், டிடிவி தினகரனின் அணியில் இருந்து, வரிசையாக கட்சியினரை விலக்கி, அவரை பலவீனமாக்கியதாகட்டும், பிஜேபியோடு நெருக்கமாக இருந்த பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி பிஜேபியிடம், தமிழ்நாட்டின் “பாஸ்” யார் என்பதை தமிழகத்துக்கே உரக்கச் சொல்லி விட்டார்.
திமுக தொடக்கம் முதலே மிதப்பில்தான் இருந்தது. இந்த இடைத் தேர்தலை அவர்கள் ஒரு பெரிய சவாலாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி, திமுகவுக்கு கிடைத்த வாக்காகத்தான் திமுக தலைமை பார்த்தது. குறிப்பாக ஸ்டாலின் அப்படியே பார்த்தார்.
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இத்தேர்தல் முடிவுகள் குறித்து கூறுகையில், “திமுகவுக்கு விக்கிரவாண்டியில் கிடைத்துள்ளது ஒரு அதிர்ச்சிகரமான தோல்வி. 2016 பொதுத் தேர்தலில், வெற்றி பெற்ற ஒரு தொகுதியில் திமுக இப்படி படு மோசமாக தோற்றிருப்பது அதிர்ச்சிகரமானதே. நாங்குநேரியில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளிடையே நிலவிய ஒத்துழையாமையை அதிமுக வலுவாக பயன்படுத்திக் கொண்டது” என்றார்.
டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் இது குறித்து கருத்து கூறுகையில், “நாங்குநேரி மற்றும், விக்கிரவாண்டியில் திமுகவுக்கு கிடைத்துள்ள படுதோல்வி, திமுக தனது அரசியல் செயல்பாடுகளில் முழுமையாக இல்லை என்பதையே காட்டுகிறது. திமுகவிடம் ஒரு திட்டமோ, தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்ற உத்தியோ இல்லை. உதயநிதியை அடுத்த தலைவராக காட்டுவதில் திமுக காட்டிய ஆர்வத்தில் பாதியை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு காட்டியிருந்தால், இப்படி மோசமாக திமுக தோற்றிருக்காது. 2021க்குள், திமுக தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், மோசமான தோல்வியை சந்திக்க நேரிடும்” என்றார்.
இவர் கூறுவது போல, உதயநிதியே திமுகவின் எதிர்காலம் என்ற சித்திரத்தை கட்டுவதில் ஸ்டாலினே முன்னிற்கிறார். உதயநிதி இளைஞர் அணித் தலைவராக பதவியேற்ற நாள் முதலாகத்தான் திமுகவில் இளைஞர் அணி என்ற ஒரு அணியே உருவானது போல ஒரு பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. எனக்கு அடுத்து உதயநிதிதான் என்பதை கட்சியில் மூத்தவர்களுக்கு உணர்த்தும் விதமாகவே, ஸ்டாலின் உதயநிதி பதவியேற்ற பிறகு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வழக்கம் போல அறிவாலயத்தில் நடத்தாமல், இளைஞர் அணித் தலைமையகமான அன்பகத்தில் நடத்தினார். இது கட்சியில் மூத்தவர்களுக்கு என்ன மாதிரியான செய்தியை உணர்த்தும் ?
மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியம் பேசுகையில், “உதயநிதியை தொடர்ந்து கட்சி முன்னிறுத்துவது ஒரு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளது என்ற கருத்தை மறுக்க முடியாது.
2021ல் தேர்தலில் வெல்ல வேண்டுமானால், உள்ளாட்சித் தேர்தல்களில் வெல்ல வேண்டுமானால், திமுக கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால், மராட்டியத்தில் சரத்பவாரைப் போல ஸ்டாலின் கடுமையாக போராடுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது” என்றார்.
உதயநிதியை முன்னிறுத்தும் முயற்சிகள் எந்த அளவுக்கு சென்றுள்ளன என்றால், தற்போது திமுகவின் மகளிர் அணியில் உள்ள 35 வயதுக்குட்பட்ட பெண்களை மகளிர் அணியிலிருந்து விலகி, உதயநிதி தலைமையில், “இளம்பெண்கள்” அணியில் இணைய வேண்டும் என்று ஒரு நகர்வு திமுகவில் முன்னெடுக்கப்படுகிறது என்று வரும் செய்திகள் திமுகவை ஸ்டாலின் தன் குடும்ப சொத்தாகவே பார்க்கிறாரோ என்று எண்ண வைக்கிறது. உதயநிதி ஒரு மாபெரும் பேச்சாளரும் அல்ல. பெரும் எழுத்தாளரும் அல்ல. சினிமாவில் சூப்பர் ஸ்டாரும் அல்ல. அவர் ஒரு தோல்வியடைந்த நடிகர். அவ்வளவே. அதுவும், பெரும்பாலான படங்களை அவரே தயாரிக்காமல் இருந்திருந்தால் அவர் இத்தனை படங்களில் கூட நடித்திருக்க முடியாது.
அதிக எண்ணிக்கையில் உள்ள 18 வயது முதல் 35 வயது வரை உள்ள வாக்காளர்கள், ஒரு நாளும் உதயநிதியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. திமுகவினரே மாற்றி வாக்களித்தாலும் வியப்பில்லை.
உள்ளூர் திமுக பிரமுகரான அந்நியூர் சிவாவை புறக்கணித்து, பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணியின் நண்பன் என்பதற்காகவும், உதயநிதி நற்பணி மன்றம் தொடங்கியவர் என்ற ஒரே காரணத்துக்காகவுமே, விக்கிரவாண்டியில் புகழேந்தியை வேட்பாளராக நிறுத்தியதன் பலன் தான் இந்த படு தோல்வி.
பிஜேபி மற்றும் சங் பரிவார அமைப்புகள், தமிழகத்தை குறி வைத்திருக்கும் நிலையில், அதை எதிர்த்து உறுதியாக நிற்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் குறிப்பிட்டதை போல, 2021 தேர்தல் அத்தனை எளிதாக அமையப் போவதில்லை. மாநில பிரச்சினைகள், மாநிலத்தில் நடைபெறும் ஆட்சி ஆகியவை ஒரு முக்கிய அம்சமாக சட்டப்பேரவை தேர்தலில் அமையும் என்பதையே ஹரியாணா மற்றும் மராட்டிய மாநில தேர்தல் முடிவுகள் விளக்குகின்றன. பிஜேபி இந்த இரு மாநிலங்களிலும், தேர்தலுக்கு முதல் நாள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதையும், காஷ்மீரில் 370 பிரிவை நீக்கியதையும் வைத்து பிரச்சாரத்தை கையாண்டாலும், கடந்த தேர்தலை விட அது குறைவான இடங்களை பெற்றுள்ளது, மாநில தேர்தல்களை மக்கள் வேறு கோணத்தில் அணுகுகிறார்கள் என்பதையே உணர்த்துகிறது.
அதனால், தமிழகத்தில் நிலவும், மோடி எதிர்ப்பு – பிஜேபி எதிர்ப்பு மட்டுமே பாராளுமன்றத் தேர்தலில் கைகொடுத்தது போல சட்டப்பேரவை தேர்தலில் கைகொடுக்காது என்பதை மற்ற எல்லோரையும் விட ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுக கூட்டணி 2021 தேர்தலில் அப்படியே தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஸ்டாலின் குறைத்து மதிப்பிட்டதை போல, எடப்பாடி அனுபவம் இல்லாத அரசியல்வாதி இல்லை என்பதையும் ஸ்டாலின் உணர வேண்டும்.
2021 தேர்தல் மேலும் சில போட்டியாளர்களையும் தேர்தல் களத்துக்கு எடுத்து வரக் கூடும். ரஜினி போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஒதுக்கி விட முடியாது. அப்படிப்பட்ட சூழலில், வெறும் சமூக வலைத்தளத்தில் எழுதும் திமுக கும்பலையும் – தன் மகனையும் மட்டுமே நம்பி 2021ல் ஸ்டாலின் களமிறங்குவாரேயென்றால், அவர் தோல்வியை சந்திக்கக் கூடும்.
ஜெயலலிதா இல்லாத அதிமுகவிடமும், ஸ்டாலின் ஒரு பொதுத் தேர்தலில் தோற்பாரேயானால், அது அவர் அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதும். சமூக வலைத்தளங்களையும், திமுக ஐ.டி. விங்கையும் மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல், இப்போதிருந்தே ஸ்டாலின், திமுக போட்டியிடும் தொகுதிகளை தேர்ந்தெடுத்து பணியை தொடங்க வேண்டும். கூட்டணி கட்சிகளை அனுசரித்து, கூட்டணி 2021 வரை உடையாமல் பாதுகாக்க வேண்டும்.
தமிழக மக்களுக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை என்று ஸ்டாலின் நினைத்து மிதப்பில் இருப்பாரேயானால், காலம் அவருக்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுக்கும். அப்போது காலம் கடந்து போயிருக்கும்.
Stalin never worked for people of TN (not even for the people of his own party. He always cared for his family (only his family in power).
He will never change his mindset.
TN people are stupid and they decide based on money given to them at the time of voting.
No one can save TN for next 20 years – after that TN won’t be TN anymore.
சவுக்கு சங்கர் அவர்களே ஒரு ஆக்க பூர்வமான கட்டுரையை உங்களிடம் இருந்து சவுக்கு வாசகர்கள் எதிர்பார்க்கிறோம் திமுக உறுப்பினர்போலவோ அனுதாபிப்போலவோ எழுதாமல் ஒரு பத்திரிக்கையாளராக எழுதுங்கள் திமுக பாராளுமன்ற தேர்தலில் ஜெயிச்சது மக்கள் யார் வர கூடாது என்று வோட்டு போட்டதற்காக , கண்டிப்பாக திமுக வரவேண்டும் என்பதற்காக அல்ல அதே போல் ஒவ்வவுறு தேர்தலிலும் ஏன் நடந்தது என்பதை விழா என்ன நடக்க வேண்டும் என்பதில் உங்களால் எழுத முடியும். இன்று தமிழ்நாடு ஒரு இரு நூற்று இருபது பில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது குறிப்பு இருக்கிறது. இதையே யார் முன்னேற்ற பாதையில் எடுத்து கொண்டு செல்ல முடியும். கண்டிப்பாக ஸ்டாலின் தலைமை செய்யுமா என்றால் செய்யாது , எடப்பாடி தலைமை செய்யுமா என்றல் இப்போது செய்து கொண்டு இருக்கிறது. அதாவது அதை தக்க வைத்து கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு செயல் படும் அரசு தமிழகத்திற்கு வேண்டும். அதன் இளைஞர் திறனை மேம்படுத்த மற்றும் தொழில்கள் முன்னேற வேலை வாய்ப்புகள் உருவாக பல தொழில் முனைவோர் உருவாக. சவுக்கு இதைத்தான் வாசகர்கள் தங்களிடம் இருந்து வழிகாட்டுதல் கட்டுரையை எதிர் பார்க்கிறார்கள்.
இன்னுமா இந்த ஊரு நம்மல நம்பிக்கிட்டு இருக்கு…!
Just a question to you and the journalists who have given views about this election in this article . How many times you have discussed about the real issues of Nanguneri and Vikravandi in last three weeks . Most of you diverted the real issues and brought Seemans statement to the debate topic and then why DMK is weak . ADMK has won elections when its conducted in few places , in general elections they have failed . This is mainly due to money and ruling power , DMK should realize this and work hard in local body elections to win massively . At the same time Media should focus on real issues instead of focusing your full energy on DMK
i agreed with you
நான் DMK அனுதாபி, இருந்தாலும் உதயநிதி யை ஏற்று கொள்ள முடியவில்லை ….விக்கிரவாண்டி யில் ADMK வும் …நாங்குநேரி யில் காங்கிரஸ் வரணும் னு எதிர் பார்த்தேன் ….அடிச்சு தூக்கிட்டாங்க …
சீனியர் க்கு மதிப்பு ….உண்மை தொண்டனுக்கு மதிப்பு கிடைச்சா DMK வளரும் இல்லையேல் அம்மாவாசை இருளை நோக்கி பயணம் தொடரும் …
திரு. சங்கர் அவர்களே!
திமுகவுக்காக ஏன் இப்படி அக்கறை கரிசனம்? அதிமுக & திமுக – இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஏதாவது கொள்கை , நேர்மை இருக்கிறதா?. இவர்கள் அனைவரும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்க தான் அரசியலை தொழிலாக வைத்துள்ளார்கள். இதில் திமுகவின் இரண்டாம் கட்ட உடன்பிறப்புகள் ரெளடியிசத்தை கடைப்பிடிப்பவர்கள். பலரின் நிலங்களை ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அபகரித்து அட்டூழியம் நடத்தியவர்கள். இப்படி இருக்கும் போது அதிமுக பரவாயில்லை என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். வேளாண்மை, நீர் மேலாண்மை, சுற்று சூழல் பாதுகாப்பு, கல்வி மருத்துவம் , மாநில உரிமை, மொழி கலாச்சாரம் போன்ற சித்தாந்த அரசியல் பேசிய சீமானின் தோல்வி பற்றிய எந்தவித ஆதங்கமும் உங்களுக்கு வரவில்லை என்றால் உங்கள் மீதான எனது மதிப்பு !!!!!!!!!! சுத்தமாக போய் விட்டது!. இறுதியில் நான் கூறுவது தேர்தல் அரசியல் போலி ஜனநாயகம் என்ற கருத்து மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. மணிப்பூர் மாநில தேர்தலில் போட்டியிட்ட இரோன் ஷர்மிளா டெபாசிட் இழந்த சம்பவம் மறக்க முடியாது.! வாக்களிக்கும் பொது மக்கள் தங்களுக்கான சரியான, நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் வகையில் அரசியல் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் சூழலை ஊடகங்கள், அரசுகள் , கல்வி கூடங்கள் கவனமாக திட்டமிட்டு உருவாக்கி உள்ளன. எதற்கும் ஒரு முடிவு வரும். காலம் இப்படியே போய்விடும் என கூறமுடியாது.
மிக சரியான கருத்து undefined ஸ்டாலின் ஏதோ நாட்டுக்காக ஐவரும் இவர் குடும்பமும் பெரிய தியாகம் செய்தது போல் பேசுவதும் அதை ஊடகங்கள் திமுக ஒரு அப்பழுக்கற்ற ஊழல் இல்ல கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றன திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சிகள் என்பதற்கு சாட்சிகளும் வழக்குகளும் இருக்கின்றன ஒரு நேர்மையான எளிமையான பெரியவர் ஐயா அப்துல் கலாமை இரண்டாவது முறை ஜனாபதிக்கு பரிந்துரையை கருணாநிதி நிராகரித்தது அனைவரும் அறிந்ததே காமராஜரும் தேர்தலில் டெபாசிட்டை இழக்க வைத்தது தமிழக மக்களே , இப்போது அது பொற்காலம் என்றும் அது வேண்டும் என்று கேட்பது என்னவென்று சொல்ல
மக்களின் மனநிலை யாருககும புரியவில்லை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் ஆனால் இந்த பத்திரிக்கையாளர்கள் மட்டும் திமுக வெற்றி பெற்றால் அதனை சாதாரண வெற்றி போல் சித்தரிப்பதும் தோல்வி அடைந்தால் மிக படுகேவலமாக எழுதுவதும் என்ன வென்று சொல்ல
தேர்தலின் மீது நம்பிக்கையே இல்லை, EVM Machines வந்தது முதல்
சதுரங்க காய்களை நகர்த்துவதாகவே உள்ளது தேர்தல்
HeHeHe …. copy paste the same article in 2021 also …
If askd to choose between dmk & admk, I’ll go with admk. Reason – admk means corruption
Dmk means rowdiysm ,corruption & ugly politics to gain minority votes.
Absolutely correct
உதய்ண்ணா உதயம்தான் உதயசூரியன் மறைவுக்குக் காரணமா..??
உங்களுக்கு 200 ஒவாயிலேறுந்து 300 ஓவை
Well Said.