துவைக்காத சாக்ஸ் என்று சவுக்கில் எழுதப் பட்ட ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்பவர் கைது செய்யப் பட்டு இன்று சிறையில் உள்ளார்.
எப்படி இருந்த நான்….
சக்சேனா கைது செய்யப் பட்டதை சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். சன் டிவியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களைக் கேட்டால், அத்தனை பேரும் “அவன் வெளியிலேயே வரக் கூடாது சார்” என்கிறார்கள். இத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதிக்க சக்சேனா அப்படி என்னதான் செய்தார் ?
இப்படி ஆயிட்டேனே…
அவரின் நடத்தை அப்படி….. அவர் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல. பேசிய பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சன் டிவி ஊழியர்களானாலும் சரி… சன் பிக்சர்சிடம் திரைப்படத்தை விற்க வரும் தயாரிப்பாளர்களானாலும் சரி… அவ்வளவு மோசமாக தரக்குறைவாக பேசியுள்ளார்.
கலைஞர் டிவி தொடங்கப் பட்ட காலத்தில், ஏறக்குறைய 150க்கும் அதிகமான ஊழியர்கள் கலைஞர் டிவிக்கு சன் டிவியிலிருந்து இடம் பெயர்ந்தனர். அவ்வாறு இடம் பெயர்ந்த ஊழியர்களை அவ்வளவு மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார்.
கேடி சகோதரர்கள் நடத்தும் எந்தத் தொழிலும் அவர்கள் நேர்மையைக் கடைபிடித்ததில்லை என்பது ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ளது. தங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதற்கெடுத்தாலும், அடாவடி செய்தே தொழில் செய்து பழகியுள்ளனர். இதற்கு அடியாளாக இருந்து மாறன்கள் இட்ட காரியத்தை செய்து பழகியவர்தான் இந்த சக்சேனா…
நேற்று வரை சக்சேனா வாழ்ந்த வாழ்க்கை எப்படிப் பட்ட வாழ்க்கை தெரியுமா ?
லா வாட்டரினா பார், காஸ்மாபாலிட்டன் கிளப், கொட்டிவாக்கம் ரிசார்ட் என்று ராஜபோக வாழ்க்கை தான். சென்னை நகரின் விலை உயர்ந்த நட்சத்திர விடுதிகளின் பளபளக்கும் பார்களில் இரவு முழுக்க கண்ணாடிக் குவளைகளில் சரக்கு ஊற்றி அவற்றில் ஐஸ் க்யூபை போடும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர், இன்று புழல் சிறையில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதற்கு அவர் முற்பகல் செய்ததே ஒழிய வேறல்ல…. கைது செய்யப் பட்ட ஞாயிற்றுக் கிழமைக்கு முதல் நாள் இரவு, ஐதராபாத்தில், ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா… அதை சன் டிவியில் ஒளிபரப்பு செய்ய உரிமம் பெற்றிருந்தார்கள். அந்த விழாவில் கலந்து கொண்டு, சினிமா நட்சத்திரங்களோடு, சனிக்கிழமை இரவு முழுக்க சக்சேனா ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம். ஞாயிறு பிற்பகல் சென்னை திரும்பினால் ஆட்டம் கண்டது சக்சேனாவின் ‘பாட்டம்’.
இந்த சக்சேனாவின் திமிருக்கு திரைப்படத் துறையில் ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்கிறார்கள். சன் பிக்சர்ஸின் தலைமைச் செயல் அதிகாரி என்ற முறையில் எந்திரன் படத்தின் தயாரிப்பாளர் சாக்ஸ் தான். அந்தப் படத்தின் ஷுட்டிங் நடந்து கொண்டிருந்த போது, அப்படத்தின் இயக்குநர் ஷங்கருக்கு போன் செய்திருக்கிறார் சாக்ஸ். ஷுட்டிங் வேலையில் பிசியாக இருந்ததால் ஷங்கரால் அந்த அழைப்பை உடனடியாக அட்டென்ட் செய்ய முடியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த சாக்ஸ், மூன்று நாள் ஷுட்டிங்கை கேன்சல் செய்ததாக கூறுகிறார்கள். யோசித்துப் பாருங்கள். சூப்பர் ஸ்டார் படத்துக்கே இந்த கதி என்றால் சாக்ஸின் செல்வாக்கை.
இது போன்ற மற்றொரு நிகழ்வு தான், செக்கர்ஸ் ஹோட்டல் மீது நடத்தப் பட்ட தாக்குதல். ஒரு பெண்ணோடு ஏற்பட்ட வாய்த் தகராறு காரணமாக, ஒரு ரவுடிக் கும்பலை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலை அடித்து நொறுக்கும் அளவுக்கு சாக்ஸுக்கு செல்வாக்கு இருந்தது. இன்று உளவுத்துறையில் கூடுதல் டிஜிபியாக இருக்கும் கண்ணாயிரம் அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர்.
நேர்மையாக இருந்தால் கண்ணாயிரம் என்ன செய்திருக்க வேண்டும் ? சக்சேனாவை கைது செய்திருக்க வேண்டுமா இல்லையா ? கைது செய்யப் பட்ட பிறகு குண்டர் சட்டத்தில் அல்லவா அடைக்கப் பட்டிருக்க வேண்டும் ?
எம் மீனவன் தாக்கப் பட்டால், சிங்கள மாணவன் நடமாட முடியாது என்று மேடையில் பேசிய ஒரு பேச்சுக்காகத் தானே சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது ? சீமான் மீது வழக்கு பதிந்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது இதே கண்ணாயிரம் தானே ? செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய ரவுடிக்கு பாதுகாப்பு அளித்து விட்டு, மேடையில் பேசியவரை சிறையில் தள்ளியவர்தானே இந்தக் கண்ணாயிரம் ?
இன்று கைது செய்யப் பட்டுள்ள இந்த சக்சேனாவை அன்றே கைது செய்திருக்க வேண்டாமா இந்தக் கண்ணாயிரம் ? இப்படி கடமை தவறிய கண்ணாயிரம், இன்றும் அதிகாரம் உள்ள பதவியில் அமர்ந்து கொண்டிருப்பது வேதனையான விஷயமே…
இத்தனை அயோக்கியத்தனங்களையும் அரங்கேற்றியுள்ள சக்சேனா என்பவர் யார் ? பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருப்பவரா ? திமுக மாவட்டச் செயலாளரா ? மந்திரியாக இருந்தவரா ? கருணாநிதியின் பெரிய்ய்ய்ய குடும்பத்தில் ஒருவரா ?
இது போல அடாவடி செய்யும் துணிச்சலை சாக்சுக்கு அளித்தது கலாநிதி என்ற ஷு அல்லவா ? அந்த ஷு கொடுத்த துணிச்சலில் தானே, இந்த துவைக்காத சாக்ஸ் இந்த ஆட்டம் போட்டது ?
அந்த ஷுவை பிய்த்துப் போட வேண்டாமா ? இத்தனை தயாரிப்பாளர்களை ஏமாற்றியுள்ள சக்சேனா, கலாநிதியின் கண்ணசைவு இல்லாமலா இதைச் செய்திருப்பார் ?
சக்சேனாவை பின்னால் இருந்து இயக்கிய கலாநிதி எப்போது சிறை செல்வார் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு. சவுக்கின் எதிர்ப்பார்ப்பும்.