பாப்ரி மசூதி இடிப்பு சம்பவம், இந்தியாவின் தன்மையையே மாற்றியது. அதற்கு முன்பு வரை, பெருமளவில் மத வெறி இல்லாமல் இருந்த ஒரு நாட்டின் முகத்தையே மாற்றியமைத்தது ராமர் கோவில் விவகாரம். எண்பதுகளில் வெறும் 2 எம்.பிக்களை மட்டுமே வைத்திருந்த பிஜேபியை இரு முறை அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்த்ததில், ராம் ஜென்ம பூமி விவகாரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மசூதி இடிப்பு, பட்டப் பகலில் தொலைக்காட்சிகள் பார்வையில் நிகழ்ந்த ஒரு கோர சம்பவம். அதற்கு இப்போது உச்சநீதிமன்றம் அங்கீகாரம் கொடுத்துள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை 40 நாட்கள் தொடர்ந்து விசாரித்தது. இந்திய மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஆயிரக்கணக்கான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. உதாரணத்துக்கு ஒன்றை சொல்ல வேண்டுமென்றால், ஒரு சட்டப்பேரவை அல்லது, பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கு உத்தரவிட, உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என்ற வழக்கு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இன்று பல மாநிலங்களில், தமிழகம் உட்பட, ஆளும் கட்சியை சேர்ந்த சபாநாயகரகள், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக, சட்டவிரோதமாக பல உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். கர்நாடகாவிலும் இது நடந்தது. இந்த வழக்கில் வெளிவரும் தீர்ப்பு, இந்தியாவின் சட்டமன்ற ஜனநாயகத்தின் போக்கை தீர்மானிக்கும் ஒரு வழக்கு. ஆனால் இதற்கான அரசியல் சாசன அமர்வு இது வரை அமைக்கப்படவேயில்லை. தமிழகத்தின் 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, உள்நோக்கத்தோடு பட்டியிலடப்படாமலேயே உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வால் தடை விதிக்கப்பட்டு, ஏறக்குறைய ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது. ஆனால் அவ்வழக்கு விசாரணைக்கே வரவில்லை. ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை வென்றது செல்லாது என்று அப்பாவு தொடர்ந்த வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டு, வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. அந்த வழக்கும் விசாரணைக்கு வரவில்லை. இது போல பல முக்கிய வழக்குகள் ஆண்டுக்கணக்காக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
ஆனால், இந்த வழக்கை முக்கியமானதாக கருதி 40 நாட்கள் தொடர்ந்து விசாரித்தது உச்சநீதிமன்றம்.
பாபர் மசூதி இடிப்பு உலகின் கண் முன்னால் இந்தியா தலைகுனிந்து நின்ற ஒரு தேசிய அவமானம். 500 ஆண்டுகளாக இருந்த ஒரு மசூதியை, காவி ரவுடிகள், அத்வானி தலைமையில் தகர்த்தனர். அத்வானியே முன்னின்று மசூதி தகர்ப்பை வேடிக்கை பார்த்தார். அத்வானியின் ரதயாத்திரை அமைதி யாத்திரை அல்ல. அத்வானி, தன் கையில் வாளையும், திரிசூலத்தையும் வில் அம்பையும், கோடரியையும் ஏந்தி புகைப்படங்களில் தோன்றினார். அத்வானியின் ரத யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் கலவரம் மூண்டது. பீகாரில் லல்லு பிரசாத் யாதவ்தான், சமஸ்திபூரில் அத்வானியின் ரத யாத்திரையை அக்டோபர் 1990ல் நிறுத்தினார். அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து மசூதி இடிக்கப்பட்டது.
மசூதி இடிப்பு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் சாட்சியமளித்த அத்வானியின் பாதுகாப்பு அதிகாரி அஞ்சு குப்தா, இவ்வாறு தனது சாட்சியத்தில் தெரிவிக்கிறார்.
“6 டிசம்பர் 1992 அன்று (மசூதி இடிக்கப்பட்ட தினம்) மசூதியில் இருந்து 150-200 மீட்டர் தொலைவில், அத்வானி வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். மசூதி இடிக்கப்பட தொடங்கியதும், அத்வானியோ, அவரோடு இருந்த மற்ற பிஜேபி தலைவர்களோ, கரசேவகர்களை தடுப்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. மசூதி இடிக்கப்பட்டதும், பிஜேபி தலைவர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்” என்று சாட்சியம் அளித்துள்ளார்.
சிபிஐ குற்றப் பத்திரிக்கையில், அத்வானி, டிசம்பர் 6 கரசேவையானது, வெறும் கீர்த்தனை பஜனைகளால் மட்டும் ஆனது அல்ல. ராமர் கோவில் கட்டும் பணியும் சேர்ந்தே நடைபெறும் என்றார்.
மசூதி இடிப்புக்கு பின்னர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, 28 வருடங்களாக நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் 2017ல், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர், கூட்டுச் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இரண்டு வருடங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றப்படக் கூடாது என்றும் உத்தரவிட்டது. அந்த இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் வழக்குதான் இன்னும் முடியவில்லை.
ரத யாத்திரை, அதைத் தொடர்ந்து மசூதி இடிப்பு, அதற்கு பின் வட இந்தியா முழுக்க நடந்த கலவரங்களுக்கெல்லாம் யார் காரணம் என்பதை தெரிந்தும், அந்த கலவர கும்பலுக்கு ஆதரவளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
மசுதி இருந்த 2.77 ஏக்கர் இடம் யாருக்கு சொந்தம் என்பதை 40 நாட்கள் தொடர்ந்து விசாரித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்துக்கு மசூதியை இடித்தவர்கள் மீதான கிரிமினல் வழக்கு 28 ஆண்டுகளாக முடியாமல் இருக்கிறதே என்ற அக்கறை இல்லை. அவமானம் இல்லை.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கோகோய் முன்பாக தொடங்கியபோதே இது எப்படி முடிவடையும் என்று தெரிந்தது. இஸ்லாமியர்கள் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதாடுகையில், மசூதியை இடித்த காவி கூட்டத்தை,
“இந்து தாலிபான்கள்” என்று கூறினார். ஆப்கானிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான புத்தர் சிலைகளை தாலிபான்கள் இடித்ததோடு இதை ஒப்பிட்டு பேசினார். உடனடியாக ஆட்சேபம் தெரிவித்த நீதிபதிகள், அந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று ராஜீவ் தவானை கண்டித்தனர் ? மசூதியை இடித்த காவி ரவுடிகளை தாலிபான்கள் என்று அழைக்காமல், தேவதூதர்கள் என்றா அழைக்க முடியும் ?
இவ்வழக்கு விசாரணையின் இறுதி நாளன்று, இந்து தரப்பில் வாதாடிய ஒரு வழக்கறிஞர் 1996ம் ஆண்டு வெளியான ஒரு புத்தகத்தில் இருந்த ஒரு வரைபடத்தை எடுத்து ஆதாரமாக சமர்ப்பிக்க முயன்றார். அதை தலைமை நீதிபதி தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதை ரசித்தார். இதனால் கடும் கோபமடைந்த மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், அவருக்கு கொடுக்கப்பட்ட புத்தகத்தை கிழித்தார். இப்படித்தான் இந்த விசாரணை நடந்தது.
உச்சநீதிமன்றம் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம் என்கிறது. இஸ்லாமியர்கள் அங்கே தொடர்ந்து தொழுகை நடத்தி வந்தார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறது. டிசம்பர் 1949ல் ஒரு நாள் இரவு மசூதிக்குள் சட்ட விரோதமாக ராமர் சிலை வைக்கப்பட்டது உண்மை என்று ஒப்புக் கொள்கிறது. 1934, 1949 மற்றும் 1992ல் மசூதி இடிக்கப்பட்டது ஆகியவை சட்ட விரோதம் என்கிறது. மசூதிக்கு முன்பாக ராமர் கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறது.
“இஸ்லாமியர்களுக்கு மசூதியின் மீதான உரிமையை நிராகரித்தால், ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாத வகையில் அவர்களிடமிருந்து மசூதி பறிக்கப்பட்டதை நிராகரித்தால், அது நீதி பரிபாலனம் ஆகாது” என்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது.
இவ்வளவு வக்கணையாக பேசி விட்டு, இடித்தவர்களுக்கே இடம் சொந்தம் என்று தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.
இஸ்லாமியர்கள், இம்மண்ணின் பூர்வகுடிகள் அல்ல. வந்தேறிகளே. இன்று இந்தியாவில் உள்ள பல மசூதிகளின் கீழே கோவில்கள் இருந்திருக்கலாம். உச்சநிதிமன்றத்தின் தீர்ப்பின்படி, அனைத்து மசூதிகளும் இடிக்கப்பட வேண்டுமா ? எத்தனை மசூதிகளை இடிப்பார்கள். தாஜ்மஹாலே கோவிலை இடித்துத்தான் கட்டப்பட்டது என்று பல பிஜேபி தலைவர்கள் பேசுகிறார்கள். இதற்கு எங்கே முடிவு ?
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி, இத்தீர்ப்பு குறித்து சொல்லியிருக்கும் கருத்து முக்கியமானது.
“500 வருடங்களுக்கு முன்னர் ஒரு நிலம் யாரிடம் இருந்தது என்பது யாருக்காவது தெரியுமா ? வரலாற்றை மீண்டும் எழுத முடியாது. நீதிமன்றத்தின் வேலை, இப்போது உள்ள உரிமைகளை பாதுகாப்பதே. வரலாற்றை திருத்தி எழுதுவது நீதிமன்றத்தின் வேலை அல்ல. 5 நூற்றாண்டுகளுக்கு முன்னால் என்ன இருந்தது என்பது நீதிமன்றத்துக்கு தெரியாது. அந்த இடத்தில் மசூதி இருந்தது மறுக்க முடியாத உண்மை. அது வரலாற்று உண்மை அல்ல. நம் கண் முன்னால் உள்ள உண்மை. அது இடிக்கப்பட்டதை அனைவரும் பார்த்தோம். அது மீண்டும் கட்டப்பட வேண்டும். அவர்களுக்கு மசூதி கட்ட உரிமை இல்லையென்றால் எதற்காக அவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும். எதற்காக ?”
சட்டத்தையும், ஆவணங்களையும், சாட்சியங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம், நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியிருப்பது உச்சநீதிமன்றம், எந்த அளவுக்கு காவி மயமாகியுள்ளது என்பதையே காட்டுகிறது. நெருக்கடி நிலை காலத்தில் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லை என்று தீர்ப்பளித்த அரசியல் சாசன அமர்வில் கூட ஒரு எச்.ஆர்.கண்ணா எதிர்த்து குரல் எழுப்பினார். ஆனால், அயோத்தியா போன்ற ஒரு சட்டத்துக்கு புறம்பான தீர்ப்பில் ஒரே ஒரு நீதிபதி கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது, நம் நீதித் துறை எவ்வளவு மோசமாக மாறியுள்ளது என்பதையே உணர்த்துகிறது.
திருவனந்தபுரத்தை சேர்ந்த, பத்திரிக்கையாளர் இது குறித்து பேசுகையில், “நீதிபதி கோகோய் போன்ற ஒரு தலைமை நீதிபதியிடமிருந்து இப்படியொரு தீர்ப்பு வருவதில் வியப்பேதுமில்லை. வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதே, அயோத்தியாவில் கோவில் கட்டுவோம் என்ற முழக்கத்தை பிரதமர் உட்பட அனைவரும் கூறி வந்தார்கள். அதையெல்ல்லாம் உச்சநீதிமன்றம் கண்டுகொள்ளவேயில்லை.
அடுத்த நான்கு வருடங்களுக்கு, கோவில் கட்டுகிறோம், நிதி தாருங்கள் என்று இந்தியா முழுக்க பிரச்சார இயக்கத்தை முன்னெடுக்கப் போகிறது. 2024 தேர்தலை சந்திக்க இதுவே அவர்களுக்கு அடித்தளமாக அமையும். அதன் முதல் படியே ராமர் கோவில்.
நாடு முழுக்க மதவெறியை பரப்பி, இஸ்லாமியர்களை மேலும் ஒடுக்க பிஜேபி கடுமையாக முயற்சி செய்யும். கடந்த ஐந்தாண்டுகளாகவே, மாட்டுக்கறி உண்பது, மாடு கடத்துகிறார்கள் என்று அடித்து கொலை செய்வது, முத்தலாக், காஷ்மீர் என்று இஸ்லாமியர்களை ஒடுக்கி வருகிறார்கள். இனி அனைத்து இஸ்லாமியர்களும், இந்தியாவின் இரண்டாம் தர குடிமகன்கள் என்று வெளிப்படையாகவே தாக்கப்படுவர்.” என்றார்.
இஸ்லாமியர்கள் மீதான பிஜேபியின் ஒடுக்குதல், அவர்களின் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. அதை பிஜேபி முழுமையாக செயல்படுத்தி வருகிறது. இந்தியா பிரிவினை கண்டபோது, இந்த தேசம்தான் எங்கள் தாய்நாடு, இந்தியா நேரு மற்றும் காந்தியின் கீழ் மதச்சார்பற்ற தேசமாக இருக்கும். நாம் இங்கே பாதுகாப்பாக இருப்போம் என்ற இஸ்லாமியர்களின் நம்பிக்கையை பிஜேபி உடைத்து தவிடுபொடியாக்கி விட்டது.
இது குறித்து பேசிய, மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்கள், “சிபிஎம், திமுக போன்ற கட்சிகள், வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த தீர்ப்பை வரவேற்று பேசுகின்றன. தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கூறுகின்றன. திருமாவளவனை தவிர்த்து, எந்த கட்சியும், இந்த தீர்ப்பை விமர்சிக்க மறுக்கின்றன.
தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்தான். அது நியாயமான தீர்ப்பாக இருந்தால். ஒருதலைப்பட்சமான தீர்ப்பாக இருந்தால், அது நிச்சயம் விமர்சிக்கப்பட வேண்டும்.
தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால் கலவரம் உருவாகி இருக்கும் என்ற கருத்தை நான் ஏற்க மாட்டேன். கலவரம் உருவாவதை தடுக்க இயலவில்லை என்றால் அரசாங்கம் எதற்கு ? காவல் துறை எதற்கு ?
இந்த நிலத்தை இந்துக்கள் தரப்பில் ஒப்படைத்ததற்கு, கற்றறிந்த ஐந்து நீதிபதிகளும் சொல்லும் காரணம் வியப்பாக உள்ளது. வேறு இடத்தில் 5 ஏக்கர் இடம் இஸ்லாமியர்களுக்கு என்றால் எங்கே நிலம் ஒதுக்குவார்கள் ? வங்காள விரிகுடாவிலா ? இந்த தீர்ப்பு, ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை, மேலும், சரிவுக்கு உள்ளாக்கும்.
இஸ்லாமியர்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில் முதலீடு செய்ய எந்த வெளிநாட்டவரும் தயாராக இருக்க மாட்டார்கள்” என்றார்.
ஆர்.கே சொல்வது போல, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தீர்ப்பு ஆதரவு நிலைபாடு வியப்பாக உள்ளது. வெளிப்படையாக, ஒரு தரப்பினருக்கு அநியாயம் செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிடுவது உள்ளபடியே வருத்தத்திற்குறியது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவனும், வாக்கு வங்கி அரசியலை நம்பித்தான் உள்ளார். ஆனால் தீர்ப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையே சரியான பார்வை. சரியான விமர்சனம்.
“இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் ஒதுக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நீதி பரிபாலனம் அல்ல. சமரச முயற்சியே. இஸ்லாமியர்கள் அந்த நிலம் தங்களுக்கானது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. அப்போது நிலம் தங்களுக்கானது என்பதற்கான எந்த ஆதாரத்தை இந்து தரப்பு சமர்ப்பித்தது என்ற கேள்வி எழுகிறது.
ராமர் கோவில் கட்ட ஒரு அறக்கட்டளையை அமைக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், மசூதி கட்ட எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்” என்றார் திருமாவளவன்.
தீர்ப்பு குறித்து பேசிய, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், இவ்வாறு கூறினார்.
“இந்த வழக்கில் இந்து தரப்பினரின் வழக்குதான் பலவீனமானது. இடம் இந்துக்களுக்குதான் சொந்தம் என்று ஒரு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மூலமாக 1989ம் ஆண்டுதான் விஷ்வ இந்து பரிஷத் வழக்கு தொடுத்தது. சர்ச்சை எழுந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்துதான் வழக்கு தொடுக்கப்பட்டது. இது போன்ற வழக்குகள் தொடுக்க உள்ள காலக் கெடுவான 12 ஆண்டுகள் முடிந்து 28 ஆண்டுகள் கழித்தே வழக்கு தொடுக்கப்பட்டது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின்போது, இந்த கால தாமதம் சுட்டிக்காட்டப்பட்டது. வினோதமாக, உயர்நீதிமன்றம், வழக்கை தொடுத்த பாலகன் ராமன் மைனர் என்பதால் காலக்கெடு பொருந்தாது என்று நீதிபதிகள் கூறினர். உயிருடன் உள்ள மைனர் வயதுடையவர்களுக்கு பொருந்தும் இந்த விதியை, கடவுளுக்கு நீதிமன்றம் எப்படி பொருத்தியது என்று புரியவில்லை. கால தாமதத்தை மட்டுமே வைத்து இந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால் வழக்கை ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல், மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் வழங்கியது.
தற்போது உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் இழைத்த தவறை உறுதிப்படுத்தியதோடு, தகுதியில்லாத இந்து தரப்புக்கு மொத்த நிலத்தையும் வழங்கியுள்ளது.
19ம் நூற்றாண்டு முதல் இந்த வழக்கை நடத்தி வரும், நிர்மோகி அகாராவுக்கும், சன்னி வக்ப் போர்டுக்கும் ஒரு செண்ட் நிலம் கூட ஒதுக்கப்படவில்லை. இதை விட ஒரு நீதிப் பிறழ்வு இருக்க முடியுமா ?” என்றார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஆராய்ந்தோமானால், அதே நீதிமன்றத்தின் பல தீர்ப்புக்களுக்கு முரணாக இது அமைந்துள்ளது. மிகச் சிறப்பான பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், முதல் முறையாக பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையில், சட்டத்தையும், விதிகளையும், சாட்சிகளையும் காற்றில் பறக்க விட்டு ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், இது பற்றி பேசுகையில், “இந்தியாவில் அமைதி நிலவ வேண்டும். ஒற்றுமை நீடிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், சட்டத்தின்படி அல்லாமல், ஒரு தரப்பின் மத நம்பிக்கையை மட்டும் அடிப்படையாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது, மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. வலது சாரி அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கி வந்திருந்த சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருப்பது ஒரு வகையில் நிம்மதியாகவே உள்ளது. அதே நேரத்தில், மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி, அமைதியை குலைக்க இவர்கள் முயலுவார்கள் என்ற சந்தேகமும் இந்த தீர்ப்பினால் ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமிய தரப்பை பொறுத்தவரை, அவர்களின் எதிர்ப்பார்ப்பு நிலம் சம்பந்தமானது அல்ல. இடிக்கப்பட்ட மசூதிக்கு அவர்கள் நீதி எதிர்ப்பார்த்து காத்திருந்தார்கள். இந்த தீர்ப்பு அவர்களுக்கு நீதி வழங்கியுள்ளதா என்பதை விளக்கி சொல்ல வேண்டியதில்லை.
இஸ்லாமியர்களுக்கு சொந்தமான இடம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருந்தாலும், அயோத்தியாவிலேயே, அவர்களுக்கு ஐந்து ஏக்கர் மாற்று இடம் ஒதுக்கப்பட்டிருப்பது ஒரு நம்பிக்கை அளிக்கிறது. இது வலது சாரிகளுக்கு உவப்பான செய்தி அல்ல. மீண்டும் பாபரின் பெயரில் ஒரு மசூதி உருவாவதை அவர்கள் அத்தனை எளிதாக சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
இஸ்லாமியர்கள் ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொண்டார்களேயானால், அந்த இடத்தில் ஒரு மசூதி கட்டுவதோடு, மத நல்லிணக்கத்தை உருவாக்கும் ஒரு சமூக கூடமும் கட்டப்பட வேண்டும். அது அனைத்து இந்தியர்களுக்கும் அமைதிக்கான செய்தியை உணர்த்த வேண்டும். அதன் கட்டுமானத்தில், அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் பங்கெடுக்க வேண்டும். நாடு முழுக்க மதவெறி தாண்டவமாடும் இந்த நேரத்தில், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் இந்த நேரத்தில், அது ஒரு முக்கிய செய்தியை உணர்த்தும்” என்றார்.
30 ஆண்டுகால சிக்கல் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. அது நியாயமான முடிவா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. ஒரு தரப்பினரின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமையை பறித்து, பெரும்பான்மையினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரிவினையின்போது, இந்தியா பாகிஸ்தானுக்கு தர ஒப்புக் கொண்ட 75 கோடியில் 20 கோடி முதல் தவணையாக கொடுக்கப்பட்டது. இரண்டாவது தவணையான 55 கோடியை தருவதற்குள், பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்தது. இதையடுத்து, நேரு தலைமையிலான மத்திய அரசு, 55 கோடியை தராமல் நிறுத்தியது. கொடுத்த வாக்குறுதியை மீறுவது தவறு என்று காந்தி, மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டார். மத்திய அரசு பணிந்து 55 கோடியை பாகிஸ்தானுக்கு அளித்தது.
அப்படிப்பட்ட இந்தியாதான் இன்று, கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளது. இந்த காயம் அத்தனை எளிதில் ஆறாது.
உச்சநீதிமன்றம் அயோத்தியா வழக்கில் வழங்கியுள்ளது தீர்ப்பு அல்ல. கட்டப் பஞ்சாயத்தே. இந்திய நீதித் துறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை முழுவதுமாக தகர்ந்துள்ளது. இதிலிருந்து நீதித் துறை மீண்டு வருவது அத்தனை எளிதல்ல.
அருமையான கட்டுரை.முன்னர் இருந்த படியே வரலாறு திருத்தி அமைக்க முடியுமா?அதற்கு எந்த வருடம் என்று அமைத்துக்கொள்ளமுடியுமா?அசோக மன்னரின் ஸ்தூபிகள் இடிக்கப்பட்டு இந்து கோவில்கள் கட்டினார்களே…திருப்பியும் அந்தகாலத்திற்கு செல்லமுடியுமா?
அருமையான கட்டுரை.முன்னர் இருந்த படியே வரலாறு திருத்தி அமைக்க முடியுமா?அதற்கு எந்த வருடம் என்று அமைத்துக்கொள்ளமுடியுமா?அசோக மன்னரின் ஸ்தூபிகள் இடிக்கப்பட்டு இந்து கோவில்கள் கட்டினார்களே…திருப்பியும் அந்தகாலத்திற்கு செல்லமுடியுமா?
இனிமேல் நான் வீடு கட்டும் போது கட்டப்படும் கட்டிடத்திற்கு கீழே மண்டையோடுகளோ பொம்மைகளோ சானிடரி நாப்கின் போன்ற இத்யாதிகள் எதுவும் காணப்படவில்லை என பில்டிங் அப்ரூவல் வாங்கும் போது கேட்கபோறேன்..
இப்பவே பயமா இருக்ு சாமி
ஒரு வரலாற்று தவறு சரி செய்யப்பட்டுள்ளது. In 1951, Muslims were 9.2% of Total. Hindus were 85%. Today 17% Muslims, while Hindus are at 75%. What Mughal empire did not acheive was achieved in Sonia Congress rule. It is high stop this so that Hinduism is savrd. Jai Hind..
In 1951, Muslims were 9.2% of Total. Hindus were 85%. Today 17% Muslims, while Hindus are at 75%. What Mughal empire did not acheive was achieved in Sonia Congress rule. It is high stop this so that Hinduism is savrd. Jai Hind..
Seeman also condemned this judgement but you have mentioned as if only 2 seats joker thiruma has condemned this…
yen ya savukku unnaku ivalo complex
Savuku Ku sattam theriyum… Athanalthan notta vuku keela pogum seeman sona karuthai suttikatala…athula satta kuraipadu iruku…
//தீர்ப்பு குறித்து பேசிய, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், இவ்வாறு கூறினார்.//
Unn macchan Sashikaanth thaane 😀
Will the strategy be followed in Criminal case of Babri Masjid Demolition which is nearing judgement ? Will they quote same Article 142 to free the culprits or will they punish the culprits who paved the way for Riots through out country ?
It should
Whoever did the demolition of Babri Musjid ,went against law must be punished and ensure this doesn’t happen again.
உண்மையை சொல்ல தற்போது பயமாக உள்ள நிலையில் தங்களின் கருத்துகள் நன்று மதங்களை தோற்றுவித்த மகான்கள் யாரும் தம் மதம் மட்டும் சிறந்தது என கருதவில்லை கடவுள் என்று ஓன்று இருந்தால் அதனை அடைய பல வழிகளில் ஓருவழியே என கூறினர்
இஸ்லாமியர்கள் வந்தேறிகளே என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் – அது திருத்தப்பட வேண்டும் அல்லவா? மற்றபடி – நல்ல பார்வை
Sir, almost 90% of Indian Muslims are converted from Hinduism by 15th century. Never call them as “வந்தேறி”. Same rule applies to today’s Christians too.
தெளிவான கட்டுறை. இந்த தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்தே. எந்த நடுநிலையாளரும் இதை ஏற்க மாட்டார்.
உண்மையை உறக்க சொன்ன பதிவு நன்றி சவுக்கு சங்கர் அவர்களுக்கு#வாழ்த்துக்கள்
archeological survey of india has clearly said there was some temple earlier on which only mosque has come .
It is well known to every one how muslim invaders demolished Hindu temples in that period .
Muslim invaders were involved in demolishing looting hindu temples even in south including srirangam , tanjavur temples etc . many travellers in that era has mentioned that the hindus worshipeed Lord Rama in that period before Babar built mosque in late 1550s .
Mosque was not built on vacant land .
That means it was built on a foundation after demolishing Hindu temple only .
Supreme court has given the best judgement .
Please read the judgment. Nowhere ASI said, there was temple.
Did u see the interview by ASI director KK Muhammed. You would have seen it, but conveniently ignored as it is not in your favour. See the last para in the judgement.
“170. It is thus concluded on the conclusion that faith and belief of Hindus since prior to construction of Mosque and subsequent thereto has always been that Janmaasthan of Lord Ram is the place where Babri Mosque has been constructed which faith and belief is proved by documentary and oral evidence discussed above”
Not mere faith and belief – it is proved with documentary and oral evidence. So stop propagating that the judgement has been given on faith and belief.
“167. The statements noted in all Gazetteers as noticed above published under authority of government categorically and unanimously state that at Janmasthan of Lord Ram, Babri Mosque was constructed in 1528 by Babar. It is true that statements recorded in Gazette is not conclusive evidence but presumption of correctness of statements recorded have to be raised subject to being disproved by leading appropriate evidences. All Gazettes published by the Government authority repeats the same statement that Babri Mosque was constructed at the Janmasthan of Lord Ram. There is no evidence worth name led of the plaintiffs of Suit No.4 to disprove the above statement and further, oral evidence as noticed above clearly supports the faith and belief of Hindus that Lord Ram was born at the place where Babri Mosque has been constructed. The conclusion that place of birth of Lord Ram is the three dome structure can, therefore, be reached”
I think you have not read the judgement. It is available in the supreme court website. Please go through that.
Also what Rajeev Dhavan did on the last day by tearing the map submitted as evidence shows that he has the least respect for the court and his arrogant attitude. Had the same thing done by Mr.Prasaran, you self proclaimed liberals would have jumped. Shame that you are trying to justify his act.
Whenever a judgement comes in favor of self proclaimed liberals, then Supreme court is great, if not then it is bad. When Supreme court convicted JJ and Sasikala, varey va, – supreme court is great. Stop this losers talk henceforth. When CJI Gogoi and justice chandrachud gave a press conference along with 2 more judges, you guys made them a hero. Now if you dont like their judgement they become zeros?
Savukku Shankar ,
Happy to see your response in Comments. You mentioned ASI has never mentioned temple was there. What as per you is temple structure ? In South India itself , if you see Tamilnadu alone, you can see different type of temples based on the culture of King who built it. If you take Kerala, you wont see high rise temples across. Not sure if you visited Kasi, same applies. In that prospective ,Judgement mentioned that a building existed there belong to 12th century and it is not reflecting Islamic Culture or Mosque. If you believe the Mosque was built in 15th century based on ASI’s reports, you need to believe this too.
I have been requesting you for quiet a while on various things including Navodaya schools in Tamilnadu. Not sure why it was never acknowledged. We dont want to criticize you in your blog, but you write articles which is of not related to scams or public problems. You lose your creditability earned over many years from your viewers through this kind of things.
Merely telling the history is not need.we all are know that then where is the evidence of ASI telling some temple debris are there.would u like to share.
Below is a fitting reply.
You mentioned ASI has never mentioned temple was there. What as per you is temple structure ? In South India itself , if you see Tamilnadu alone, you can see different type of temples based on the culture of King who built it. If you take Kerala, you wont see high rise temples across. Not sure if you visited Kasi, same applies. In that prospective ,Judgement mentioned that a building existed there belong to 12th century and it is not reflecting Islamic Culture or Mosque. If you believe the Mosque was built in 15th century based on ASI’s reports, you need to believe this too.
I asking that where ASI mentioned that evidence of temple debris are there in Babri masjid.If so please likely to share it.Judgement should be based on the evidence , not the perspective (you are telling).Are you endorse this judgement ,If so I ashamed to called our country is secular.
Above is the major key points from the Verdict given by Honourable Supremecourt.
https://www.news18.com/news/india/evidence-of-ram-worship-muslim-parties-unable-to-prove-ownership-4-reasons-why-sc-ruled-in-favour-of-temple-2380381.html
😢