தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஹப்பிங்டன் போஸ்ட்டின் தொடர் கட்டுரைகளின் இறுதி பாகம்.
பிப்ரவரி 2017ல் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்திய அருண் ஜெய்ட்லி, தனது முடிவை இவ்வாறு கூறி நியாயப்படுத்தினார். “நன்கொடை அளிப்பவர்கள், காசோலை மூலமாகவோ, அல்லது வேறு வழி மூலமாகவோ தங்கள் அடையாளங்கள் வெளியாவது குறித்து தயக்கமும் அச்சமும் தெரிவித்தனர்” என்று ஜெய்ட்லி தனது முடிவை நியாயப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து பிஜேபி தலைவர்கள், இதே பல்லவியை பாடினர். கடந்த வியாழனன்று, ஹப்பிங்டன் போஸ்டில் தேர்தல் பத்திரம் தொடர்பான கட்டுரைகள் வெளியானதை அடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல். அவர் சந்திப்பு முடிந்த பிறகு, பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட பத்திரிக்கை செய்தியில், ஜெய்ட்லியின் அதே கருத்து எதிரொலித்தது. “பின்விளைவுகளுக்காக அஞ்சி நன்கொடை அளிப்பவர்கள் தங்கள் அடையாளங்களை வெளியிட தயங்கினர்” என்று கூறியது அந்த செய்தி.
Electoral Bonds: Government has taken a decisive step to promote electoral funding in a transparent and accountable manner. pic.twitter.com/9r6s9EB6at
— Piyush Goyal (@PiyushGoyal) November 21, 2019
ஜெய்ட்லி இவ்வாறு பேசிய மூன்று வருடங்களுக்கு பிறகு, 6,108.47 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனையான பிறகு, தற்போது நிதி அமைச்சகம், நன்கொடை அளிப்பவர்களில் ஒருவரும் இது போன்ற திட்டத்தை உருவாக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை என்று கூறுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட ஒரு கேள்விக்கு, பதிலளித்துள்ள நிதி அமைச்சகம், “அரசியல் கட்சிகளுக்கு ரகசியமாக நிதி வழங்கும் பொருட்டு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டு எந்த ஒரு விண்ணப்பமோ, கோரிக்கையோ வரவில்லை” என்று நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் அனுப்பிய வெங்கடேஷ் நாயக் கூறுகிறார்.
வெங்கடேஷ் நாயக்குக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இவர் ஜூலை 2017ல் விண்ணப்பம் அனுப்புகிறார். விண்ணப்பம் கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும். ஆனால் எந்த தகவலும் வராததால் வெங்கடேஷ் மேல் முறையீடு செய்கிறார். நிதி அமைச்சகம் இவர் விண்ணப்பத்தை ஐந்து மாதங்களுக்கு ஒவ்வொரு துறையாக மாற்றி அலைக்கழித்தது.
ஜனவரி 2018ல், வெங்கடேஷ், மத்திய தகவல் ஆணையத்தை அணுகுகிறார். தகவல் ஆணையம் இவர் கேட்ட தகவலை நிதி அமைச்சகம் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதற்கு பிறகு ஒரு வருடம் 10 மாதம் கழித்துத்தான் வெங்கடேஷ் நாயக்குக்கு நிதி அமைச்சகம் மேற்கூறிய பதிலை அளித்தது.
நாயக்கின் தகவல் விண்ணப்பம் இந்த தகவலை வெளிக் கொணர்ந்தது என்றால், முன்னாள் கப்பல் கேப்டனும், தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளருமான லோகேஷ் பத்ராவின் விண்ணப்பம் மற்றொரு அம்சத்தை வெளிக்கொணர்ந்தது. ஒரு கையொப்பமிடாத, யாருடைய கோரிக்கை என்றே தெரியாத ஒரு வெள்ளைத் தாளில் தேர்தல் பத்திரங்களுக்கான கோரிக்கையை விடுத்துள்ளது தெரிய வருகிறது. அரசு அலுவலகங்களின் நடைமுறைகளை அறிந்தவர்களுக்கு, அங்கே கையொப்பம் இல்லாமலோ, சீல் இல்லாமலோ கோப்புகளில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பது தெரியும்.
ஏற்கனவே இந்த கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் குறிப்பிட்டபடி, தேர்தல் பத்திரங்களுக்கான கோரிக்கை ஒரு கையெழுத்திடப்படாத அனாமதேய குறிப்பின் அடிப்படையில்தான் எடுக்கப்பட்டது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மத்திய அரசு அதிகாரி அந்த குறிப்பு குறித்து, “யாரோ ஒருவர் கையெழுத்திடாமல் இந்த தேர்தல் பத்திரங்களுக்கான ஆலோசனையை கூறுகிறார். பொருளாதார விவகாரங்கள் துறை இது குறித்து வருவாய் துறையை கலந்தாலோசிக்கவில்லை. ஆனால் வருவாய் துறை இது குறித்த பணிகளை உடனே தொடங்கியது. இந்த திட்டம் யாருடைய யோசனையால் தொடங்கப்பட்டது. யார் இதில் இறுதி முடிவு எடுத்தது என்ற விபரங்கள் இன்றும் வெளிவரவில்லை” என்றார்.
இந்த விபரங்கள் இந்த அளவுக்கு வெளி வந்ததற்கு காரணமே தகவல் அறியும் உரிமைச் சட்டம்தான். அதனால்தான் இந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு மோடி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது என்கிறார் லோகேஷ் பத்ரா. “தேர்தல் நிதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துகிறோம் என்று கூறும் பிஜேபி, இதர அரசியல் கட்சிகளோடு சேர்ந்து, அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தினுள் கொண்டு வருவதை எதிர்த்தது.
அரசியல் கட்சிகள் இச்சட்டத்தினுள் வராத காரணத்தினால்தான், நன்கொடை தொடர்பாக நிதி அமைச்சகத்திலிருந்து இந்த தகவல்களை பெற்றேன்” என்கிறார் லோகேஷ் பத்ரா.
இது வரை இத்தொடர் கட்டுரைகளில் வெளியான விபரங்களில் இருந்து கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன
1) தேர்தல் பத்திரங்களுக்கான யோசனையை தெரிவித்தது யார் ? நிதி அமைச்சகத்தில் இதற்கான கருத்துரு யார் உத்தரவில் உருவாக்கப்பட்டது ?
2) தேர்தல் பத்திர திட்டம் உருவான சமயத்தில் சட்ட அமைச்சகம் கலந்தாலோசிக்கப்பட்டதா ?
3) தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், பின்னர் அந்த எதிர்ப்புகளை கைவிட்டது ஏன் ? கடிதம் எழுதி ஒரு வருடமாகியும் நிதி அமைச்சம் பதில் அனுப்பாமல் இருந்தது குறித்து தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் ?
4) தேர்தல் ஆணையம் எதிர்ப்பே தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு, கூசாமல் பொய் கூறியது ஏன் ?
தற்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஏறக்குறைய முழுமையாக நீர்த்துப் போகச் செய்து விட்டது மோடி அரசு. இந்த கேள்விகளுக்கான விடையை நாம் ஒருபோதும் அறியப் போவது இல்லை.
கட்டுரையின் ஆங்கில மூலம்.
No, I disagree with the comment! We like these translations of very important work and big impact items. The malpractices and illegal activities are important – but this Electoral Bonds is a much much bigger piece! Thank you very much for translation! Keep doing the great work!
From number of comments you saw on this series , you should have understood what is the the response from your blog readers. We still value you very highly and request to write articles on praising or cursing on people who does mal practices and illegal activities with proof. Don’t translate the articles into Tamil and publish, we as your blog readers never like this.