ஆமா ஜி : ஜி சீக்கிரம் வாங்க, சீக்கிரம் வாங்க
மாமா ஜி : வந்ததும் வராததுமா என்ன ஜி இவ்வளவு பதட்டம்
ஆமா ஜி : மோடி ஜி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கார் போல, நீங்க இங்க அசமந்தம் மாதிரி உக்காந்து இருக்கீங்க?
மாமா ஜி : வாய்ப்பே இல்ல ஜி , நமக்கு தெரியாம எப்படி ஜி வருவார் ?
ஆமா ஜி : நீங்க வேணும்னா இத பாருங்க, #GoBackModi ட்ரென்ட் ஆகுது
மாமா ஜி : அட ஆமா ஜி, ஒருவேளை கட்சியை விட்டு நம்மள தூக்கிட்டானுகளா? அதான் நமக்கு சொல்லலையோ
ஆமா ஜி : அப்படி எல்லாம் இருக்காது ஜி, இருக்க நம்மளையும் துரத்திட்டா அப்பறம் சாரணர் தேர்தலில் கூட ஓட்டு விழாது
மாமா ஜி : அதுவும் சரி தான் நியூஸ் பேப்பர் எடுங்க பார்ப்போம்
ஆமா ஜி : இந்தாங்க ஜி நம்ம கட்சி பேப்பர் “உண்மையின் உரை கல்” அதுல தான் சரியா போட்டிருப்பானுக
மாமா ஜி : யோவ் அது வேணாம் யா, அது பழைய பேப்பர் வீட்டுல தண்ணி பிரச்னைனு நேத்து தான் எடுத்துட்டு வந்தேன். நீ டிவி போடு அதுல பார்ப்போம்
ஆமா ஜி : அட ஜி, அவர் ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்துக்கு போயிருக்கார், நாம தான் டென்ஷன் ஆயிட்டோம்
மாமா ஜி : யோவ் என்னய்யா அவன் அவன் ஆரம்பிச்சுட்டான், இது இப்படியே போனா சரி வராதே ஜி
ஆமா ஜி : சரியா சொன்னீங்க ஜி, நான் பதட்டத்துல இங்க வரவரைக்கும் #TNWelcomesModiJi ட்வீட் போட்டுட்டு வரேன்
மாமா ஜி : யோவ் உன்னைய மாதிரி ஆளுங்களால் தான் கட்சிக்கே அசிங்கம்
ஆமா ஜி : சும்மா என்னையவே சொல்லாதீங்க ஜி, யாரோ நம்ம கட்சி ஆடிட்டராம் அவரை போட்டு பொளந்துட்டு இருக்கானுங்க அது தெரியுமா உங்களுக்கு
மாமா ஜி : என்ன ஜி யாரோ ஆடிட்டர்னு சொல்றீங்க, அவரை தெரியாதா உங்களுக்கு ?
ஆமா ஜி : சாத்தியமா தெரியாது ஜி, பெரிய ஆளா ஜி
மாமா ஜி : அந்த 2000 ரூபாய் நோட்டில் சிப் இருக்குனு சொன்னாரே, மறந்துடீங்களா ?
ஆமா ஜி : அட fake நியூஸ் போட்டு செம காமெடி பண்ணுவாரே அவரா, இப்போ நியாபகம் வருது ஜி
மாமா ஜி : எது செம காமெடி பண்ணுவாரா? ரிசர்வ் வங்கி இயக்குனர் ஜி அவரு, சரி அவரை ஏன் கலாய்க்கறாங்க?
ஆமா ஜி : நம்ம OPSஐ பார்த்து, நீ ஒரு ஆம்பளையானு கேட்டுட்டாராம் ஜி
மாமா ஜி :ஒருத்தரை பார்த்து நீ பசியோட இருக்கியா அப்படினு கேட்டா, சோறு போட போறாருனு அர்த்தம்
ஆமா ஜி : கரெக்ட் ஜி
மாமா ஜி : நீ வேலை இல்லாம இருக்கியா அப்படினு கேட்டா, வேலை வாங்கி கொடுக்க போறார்னு அர்த்தம்
ஆமா ஜி : அப்ஸல்யுடிலி ஜி
மாமா ஜி : ஒரு ஆம்பளை இன்னோரு ஆம்பளையா பார்த்து ஆண்மை இருக்கானு கேட்டா
ஆமா ஜி : ஜி என்ன இவ்வளவு டீப்பா போறீங்க
மாமா ஜி : அது இல்ல ஜி நம்ம கட்சிக்குனு ஒரு வரலாறு இருக்குல்ல அதன் டவுட் ஆயிடுச்சு
ஆமா ஜி : நல்ல டவுட் ஆச்சு ஜி உங்களுக்கு, எதுக்கும் ஒரு ரெண்டடி தள்ளி உக்காருங்க ஜி பயமா இருக்கு, சரி ஜி இந்த மஹாராஷ்டிராவில் என்ன தான் நடக்குது ஜி
மாமா ஜி : யாருக்கு ஜி தெரியும், அமித் ஜி என்ன முடிவு பணறாரோ அது தானே ஜி நடக்கும்
ஆமா ஜி : அதுக்குன்னு இப்படியா ஜி, தூங்க போறதுக்கு முன்னாடி உத்தவ் தாக்கரே தான் முதல்வர்னு நியூஸ் வந்துச்சு , விடிய காலையில் ஒண்ணுக்கு போலாம்னு எந்திரிச்சிட்டு தூக்கம் வராம நியூஸ் பார்த்தா. பட்னாவிஸ் பதவி ஏத்துக்கறார்.
ஆமா ஜி : இனி மேல் எல்லாம் எதுக்கு ஜி தேர்தல் நேர்காணல் நடத்தி, பிரச்சாரம் பண்ணி, தோத்து அப்பறம் ஆட்சி அமைக்கணும்? போட்டி போடணும்னு நினைக்கிறவன் போடட்டும் நாம விலகிக்கலாம் ஜி, ரிசல்ட் வந்ததும் ஜெயித்தவனை வாங்கி ஆட்சியை பிடிச்சிடனும். என்ன சொல்றீங்க ஜி ?
மாமா ஜி : நீங்க சொல்றதும் சரி தான் ஜி, இருந்தாலும் தேர்தலில் நின்னா தான் ஜி வசூல் பண்ண முடியும்
ஆமா ஜி : போன வாட்டி கூட தாவூத் ஆளுங்க கிட்ட வசூல் பண்ணுனமாம்? ஒரே மீம்ஸ் பறந்துச்சு
மாமா ஜி : எல்லாம் ராச தந்திரம் ஜி
ஆமா ஜி : எங்க சொல்லுங்க கேட்போம்
மாமா ஜி : தாவூத் கையில பணம் இருந்தா என்ன பண்ணுவான்?
ஆமா ஜி : நாலு எடத்துல குண்டு வைப்பான்
மாமா ஜி : அவன்கிட்ட இருக்க பணத்தை நாம வாங்கிட்டா அப்பறம் எப்படி ஜி வைப்பான்
ஆமா ஜி : இப்பெல்லாம் இந்த மாதிரி பல ரைட் அப் சுத்துது ஜி, எது நம்ம ஆளுக எழுதினது எது வேற ஒருத்தன் எழுதினதுனே தெரியல. பங்கம் பண்றங்க ஜி
மாமா ஜி : விடுங்க ஜி இதுக்கெல்லாம் நாம அசராம முட்டு குடுக்கணும்
ஆமா ஜி : சரி ஜி இந்த சுப்ரீம் கோர்ட் வேற 24 மணி நேரத்தில் பெரும்பான்மை நிரூபிக்கணும்னு சொல்லுதே என்ன ஜி ஆகும்?
மாமா ஜி : அஜித் பவார் நம்ம கையில் இருக்கார் ஜி, அவர் தான் கொறடானு சொல்லுவோம் அப்பறம் அவர் சொல்றதை கேட்காட்டி தகுதி நீக்கம் செய்வோம்
ஆமா ஜி : அவர் சரத் பவாரோட மச்சான் ஜி அவரை எப்படி நம்ப முடியும் ?
மாமா ஜி : அவர் மேல இருக்க 70 ஆயிரம் கோடி ஊழல் வழக்கை நேத்து தான் ஜி முடிச்சு வச்சோம், சொன்னா கேட்பாரு ஜி
ஆமா ஜி : எதுக்கு ஜி இவ்வளவு சிரமப்படணும்? வோட்டு மெஷின் வச்சு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தணும்னு சட்டம் கொண்டு வரச்சொல்லுங்க ஜி அப்பறம் எப்படி எதிர் கட்சி ஜெயிக்குதுன்னு பாக்கலாம்.
மாமா ஜி : தெள்ளவாரி தனம் பண்ணினாலும் கொஞ்சம் சூதனமா பண்ணனும் ஜி
ஆமா ஜி : அதெல்லாம் பண்ணியும் பட்னாவிஸ் மண்ணை கவ்விட்டாரே ஜி. ரெண்டு பவாரும் சேந்து நம்பளை கவுத்துட்டாங்களே. அமித் ஷா சாணக்கியத்தனம்னு பெருமை பீத்துனீங்க. இது சாணக்கியத்தனமா ? சாணிநக்கியதனம்.
மாமா ஜி : பொறுமையா இருங்க ஜி. அமித் ஷா ஏதாவது ஒரு ஐடியா வச்சிருப்பாரு. கர்நாடகா மாதிரியே கலைச்சு விடுவாரு.
ஆமா ஜி : கிழிச்சாரு. அங்க 10 சீட்டு இடைத் தேர்தல்ல ஜெயிக்கலன்னா ஆட்சி நக்கிட்டு போயிடும். ஏற்கனவே இப்பவோ அப்பவோன்னுதான் இருக்கு.
ஆமா ஜி : சரி ஜி இந்த உத்தரபிரேதசத்தில் யோகி ஜி அருமையான திட்டம் கொண்டு வந்திருக்கார் பார்த்தீங்களா ஜி?
மாமா ஜி : என்ன திட்டம் சொல்றீங்க ?
ஆமா ஜி : ரொம்ப நாளாக எல்லாரும் காத்துகிட்டு இருந்த திட்டம் ஜி, பெரும் வரவேற்பை கொடுக்கும் இது
மாமா ஜி : ஒருவழியா ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் வாங்கிட்டாரா?
ஆமா ஜி : அதெல்லாம் இல்ல ஜி, குளிரில் மாடு எல்லாம் கஷ்டப்படக்கூடாதுனு மாட்டுக்கு எல்லாம் ஸ்வட்டர் வாங்கறாங்களாம்
மாமா ஜி : என்ன ஜி அக்கிரமமா இருக்கு
ஆமா ஜி : உங்களுக்கு இது நல்ல திட்டமா தெரியலையா?
மாமா ஜி : ஸ்வட்டர் வாங்கினதுக்கு பதிலா டயப்பர் வாங்கி இருக்கலாம்
ஆமா ஜி : எதுக்கு ஜி
மாமா ஜி : அதுங்க பாட்டுக்கு நெனச்ச நேரத்துல போகுது, சொம்பை தூக்கிட்டு பின்னாடியே போக முடியுமா? டயப்பர் இருந்தா டைரக்டா எடுத்து வாயில பிழிஞ்சுக்கலாம் வசதியா இருக்கும்
ஆமா ஜி : சரியா சொன்னீங்க ஜி, இதுக்கு தான் உங்களை மாதிரி மூத்திர அரசியல்வாதி வேணும்ங்கறது
மாமா ஜி : எது?
ஆமா ஜி : சாரி ஜி மூத்த அரசியல்வாதி, நாக்கு ரோலிங் ஆய்டுச்சு
மாமா ஜி : ரொம்ப ரோலிங் ஆயிடும் பார்த்து பேசுங்க
ஆமா ஜி : போலீஸ் மேட்டர் படம் பாக்குறவங்க லிஸ்டெல்லாம் எடுக்குது தெரியுமா ?
மாமா ஜி : என்ன ஜி குண்டை தூக்கி போடுறீங்க. நம்ப கட்சியில அத்தனை பேரோட பேரும் வந்துருமே ஜி. சட்டசபையிலயே மேட்டர் படம் பாத்தவங்க. அத்தனை பேரும் எக்ஸ் வீடியோஸ்தான் முழு நேரமும் பாத்துக்கிட்டு இருப்பானுங்க
ஆமா ஜி : மொத்த கட்சியுமே ஆடிப் போயிருக்கு.
மாமா ஜி : நித்தியானந்தா மேல கற்பழிப்பு புகார் வந்துருக்கு கேள்வி பட்டீங்களா ஜி ?
ஆமா ஜி : கற்பழிப்பு பண்ணாத்தானேங்க அவன் சாமியார். இதை என்னமோ புது நியுசா சொல்றீங்க ?
மாமா ஜி : இல்ல ஜி. இதுலதான் நம்ப பெரிய ஜியோட தந்திரத்தை பாக்கணும். வழக்கமா நம்ப கட்சியிலயோ, இல்ல சாமியாருங்களோ கற்பழிப்பு புகார்ல சிக்குனா, மாலை போடுவோம். அவங்களுக்காக ஊர்வலம் போவோம். இல்ல எம்.பியாக்குவோம்.
இந்த வாட்டி ஜி, நித்யானந்தாவுக்கு ஒரு புது டீல் போட்டு குடுத்துட்டாரு. இந்தியாவை விட்டு தப்பிச்சு போயி, ஒரு புது நாட்டை உருவாக்க சொல்லி ஐடியா குடுத்தாரு.
ஆமா ஜி : அது எதுக்கு ஜி புது நாடு ?
மாமா ஜி : நம்ப பெரிய ஜி இது வரைக்கும் எல்லா நாட்டுக்கும் ரெண்டு வாட்டி பொயிட்டு வந்துட்டாரு. அந்த நாட்டு தலைவர்கள்லாம், உன் தொல்லை தாங்க முடியல. இனிமே வராதன்னு ஓப்பனாவே சொல்லிட்டாங்க.
நம்ப பெரிய ஜிக்கு வாரத்துக்கு ஒரு முறை வெளிநாடு போகலன்னா கையெல்லாம் உதறும். அதனாலதான் நித்யானந்தாவை வெளிநாட்டுக்கு அனுப்பி, ஒரு புது நாட்டை உருவாக்கி அங்க போக ப்ளான் போட்டு இருக்காரு.
ஆமா ஜி : மாஸ்டர் ப்ளானா இருக்கே ஜி.
மாமா ஜி : அதான் நம்ப ஜி.
I could not help stop my laughter. Keep it up.